Home Blog Page 6047

மயக்க ஸ்பிரே அடித்துமூதாட்டியிடம் 20 பவு ன் நகைகள் கொள்ளை

கோவில்பட்டி:கோவில்பட்டியில் நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி செளந்தரபாண்டியன் தெருவைச் சேர்ந்த ராஜாமாணிக்கம் மனைவி மனோன்மணி (70). இவர் வீட்டில் தனியாக இருந்த போது கேஸ் சர்வீஸ் செய்ய வந்திருப்பதாகக் கூறி 25 வயது இளைஞர் வீட்டுக்குள் நுழைந்தாராம். மனோன்மணி பீரோவை திறந்து கேஸ் புக்கை எடுக்க முயலும் போது, அந்த இளைஞர் மயக்க மருந்தை அவர் மீது தெளித்துள்ளார்.அப்போது மூதாட்டி மயங்கி விழுந்தவுடன், பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு அந்த நபர் சென்றுஓடி விட்டாராம். சிறிது நேரம் கழித்து மனோன்மணியின் மகன் தங்கராஜ் வந்து பார்த்த போது மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த தாயிடம் கேட்ட போது, அவர் நடந்ததை கூறினாராம்.இதுகுறித்துகோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். category latest-news செய்தியும் படமும்-வனஸ் 5fa6fa5d0ed1dbc87b3341971a0a28ab - 2026

கிளுகிளுப்பான சீன்… மூடு வர மாட்டிங்குது கூட்டத்தை வெளியேற்றுங்க: நயன்தாரா

nayanthara27ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே ஹிட்டானதால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததால் முன்னணி நடிகையாக மாறி விட்டார். கவர்ச்சிக்கும் எந்த பங்கமும் வைக்காததால் இந்நாள் வரை பல்வேறு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கும் கூட்டம் தன்னையே பார்ப்பது நயன்தாராவுக்கும் பிடிக்காதாம். அதனால் கிளுகிளுப்பான காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் தன்னை சுற்றியிருக்கும் கூட்டத்தை கொஞ்சம் வெளியேற்றுங்கள். அத்தனை கண்களும் என்னை மொய்ப்பதால் என்னால் நடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று இயக்குனருக்கு கட்டளை போடுகிறாராம்.

தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை கொஞ்சம் கவனிக்கலாமே?

புதுக்கோட்டை: தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் எப்போதுமே தங்களிடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது என்பது நிதர்சனம் எந்த சலுகைகளையும் அரசிடம் இருந்து பெறவேண்டும் என்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை கால காலமாக நடந்து வருகிறது முன்பு இவர்களுக்கு ஊதியம் வங்கிகளில் தானாக ஏறிவிடும். ஆனால் இப்போது அந்தந்ந உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மூலமாக ஒவ்வொரு பெயரையும் இணையதளத்தில் ஏற்றி அனுப்பவேண்டும் சில அலுவலங்களில் இணையதளம் இருப்பதில்லை அப்படி இருந்தாலும் கணினிஇயக்கும் பணியாளர்கள் இல்லை அதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் தனியார் இணையதள மையங்களில் போய் ஏற்றி அனுப்பவேண்டிய கட்டாயம் உள்ளது இதனால் ஊதியம் உரிய நேரத்தில் ஏறுவதில்லை அதைவிட சில இடங்களில் உதவித்தொடக்ககல்வி அலுவலகத்தில் சம்பளம் ஏற்றுவதற்கு 200வீதம் ஆசிரியர்களிடம் வசூல் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது பெண் ஆசிரியர் ஓருவர் 6மாதம் மகப்பேறு விடுப்பில் செல்லும் அந்த இடத்தை நிரப்புவதில்லை. இதனால் கற்பித்தலில் பின்னடைவு ஏற்படுகிறது தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் 2.250வீதம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இது கிடையாது நவீன கற்பித்தல் முறையை வகுப்பறையில் மேற்கொள்ளுவதற்கு மடிக்கணினி கிடையாது மற்ற பள்ளிகளுக்கு 200நாட்கள் தான் பள்ளி வேலை நாட்கள் ஆனால் இவர்களுக்கு 220நாட்கள் போன்ற எண்ணற்ற குளறுபடிகளால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர் . இது குறித்து ஓரு தலைமைஆசிரியர் கூறியது: ஓரு குழந்தை தன்னுடைய வாழ்நாளில் எப்படி உருவாகவேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பது தொடக்க கல்விதான். ஆனால் அந்த தொடக்கல்விக்கு என்ன மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை அரசு தவறவிடுகிறது நாங்கள் வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் எப்போது தான் விடிவும் பிறக்கும் என்பது தெரியவில்லை என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. கடந்த சில நாட்களாக விலை ஏற்றம் கண்ட நிலையில், கடந்த ஏப்.22 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.20,336 ஆக இருந்தது. இந்நிலையில் விலை குறைந்து கடந்த 26 ஆம் தேதி சவரன் ரூ.20,184 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.20,224 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் மீண்டும் சவரன் ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.20,424 ஆக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.2,553–க்கு விற்கப் படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.890 உயர்ந்து ஒரு கிலோ ரூ.37,400 ஆகவும், ஒரு கிராம் ரூ.40 ஆகவும் விற்பனை ஆகிறது.

பலாத்காரம் செய்த காவல் ஆய்வாளர்: கைது செய்ய வலியுறுத்தி பெண் உண்ணாவிரதம்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றிய முருகேசனுக்கும், திருச்சி கே.கே.நகர். பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா (35) என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பழக்கம் இருந்துள்ளது. பரிமளா குடும்பப் பிரச்னை காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் முருகேசன், தனது மனைவியை விட்டு பிரிந்து பரிமளாவுடன் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு லஞ்ச வழக்கில் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து முருகேசன் பரிமளாவை விட்டுவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். பின்னர் அவர் நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருச்சிக்கு வந்த முருகேசன் தனது வீட்டுக்கே வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமளா போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பரிமளா திருச்சி அரசு மருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடருவேன். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறி திருச்சி காவல் துறை ஆணையர் அலுவலகத்துகே சென்று உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.

மாட்டுக்கறி உண்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம் ஏற்பட்டது: சாக்‌ஷி மகாராஜின் சர்ச்சைப் பேச்சு

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக்கறி உண்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை போனதால்தான் நேபாளத்திலும் இங்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் பேசி ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தி 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஹரித்துவாரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மகாராஜ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி உண்டுவிட்டே கேதார்நாத் சென்றார். அவர் தன்னை தூய்மையாக வைத்திருக்கவில்லை. இதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார். இந்தப் பேட்டியின் போது விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சியும் உடனிருந்தார். சாக்ஷி மகாராஜின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய பேச்சுகளுக்காக அவர் மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

நாகர்கோயில் பிளாட்பாரத்தில் ரயில் என்ஜின் மோதி விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. யாரும் காயம் அடையவில்லை. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 1ஏ பிளாட்பாரத்தில் திருவனந்தபுரம் அல்லது அந்த வழியாகச் செல்லும் பயணிகள் ரயில்கள் நிற்கும். நேற்று மதியம் 12.30க்கு நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் செல்லும் பயணிகள் ரயில் 1ஏ பிளாட்பாரத்திற்கு வந்தது. தண்டவாளத்தின் கடைசிப் பகுதிக்கு முன்பு ரயிலை நிறுத்தி என்ஜினைக் கழற்றினர். அதை முன்பகுதியில் மாட்ட நகர்த்தப்பட்டபோது என்ஜின் வழக்கத்திற்கு மாறாக வேகமாகச் சென்று தண்டவாளத்தின் தடுப்புக் கட்டையைத் தாண்டி பிளாட்பாரத்தில் மோதியது. இதில் பிளாட்பாரத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. என்ஜின் மோதியபோது பிளாட்பாரத்தில் பயணிகள் யாரும் இல்லைஎன்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிளாட்பாரம் மீது மோதியதில் என்ஜினின் ஒரு சக்கரத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த என்ஜினை நகற்றிவிட்டு கோட்டயம் செல்ல இருந்த ரயிலில் வேறு என்ஜினைப் பொருத்தினர். ஏற்கெனவே இது போல் அண்மைக் காலத்தில் 3 முறை நிகழ்ந்திருக்கிறது.

1ஆம் தேதி 51 இடங்களில் மே தினப் பேரணி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 51 இடங்களில் மே 1 ஆம் தேதி, மே தினப் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓய்வும் மகிழ்வும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு உண்டு என உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற மே முதல் நாள் ஆண்டுதோறும் மே தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உழைப்பின் பெருமையை பறைசாற்றுவதோடு நின்று விடாமல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக அதிமுக அமைப்பு ரீதியாக செயல் பட்டு வரும் தமிழகத்தின் 50 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மே 1-ம் தேதி மே தினப் பேரணி நடைபெறும். அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் வட சென்னையிலும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லிலும், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திலும், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை திருச்சி புறநகரிலும் நடைபெறும் மே தினப் பேரணிகளில் பங்கேற்பர்.

மோசடி முகாந்திரம் இருந்தால் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

kamaraj-ministerசென்னை: தமிழக அமைச்சர் காமராஜுக்கு எதிராகத் கொடுக்கப்பட்ட ரூ.45 லட்சம் மோசடி புகார் மீது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செய்து வருகின்றேன். சென்னை மைலாப்பூரில் 2009ஆம் ஆண்டு வீடு ஒன்று வாங்கினேன். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய மறுத்தார். அப்போது வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவர் தன் உறவினர் அதிமுக ராஜ்யசபா எம்பி என்றும், மைலாப்பூர் வீட்டை காலி செய்து தருவதாக ரூ.15 லட்சத்தை 2 தவணையாக வாங்கினார். ஆனால், சொன்னபடி வீட்டை காலி செய்து தரவில்லை. இதையடுத்து அவரது உறவினரான ராஜ்யசபா எம்பியாக இருந்து தற்போது அமைச்சராக உள்ள காமராஜை சந்திக்க, மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது காமராஜ், வீட்டை காலி செய்து தருவதாகவும், அதே நேரம் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனக்கு நன்னிலம் தொகுதியில் ‘சீட்’ கிடைத்திருப்பதாகவும், தேர்தல் செலவுக்கு ரூ.30 லட்சம் தருமாறும் என்னிடம் கேட்டார். நானும் கொடுத்தேன். அவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார். அதன் பின்னர் அமைச்சர் காமராஜையோ, ராமகிருஷ்ணனையோ என்னால் தொடர்பு கொள்ள முடியாவில்லை. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தேன். என்னுடைய புகார் மீது திருவாரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவானந்தம் விசாரணை நடத்தினார். இதை அடுத்து, அமைச்சரின் ஆட்கள் என்னை வீட்டுக்கே வந்து தாக்கினர். இதனால், உயிருக்கு பயந்து நான் தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். எனவே, அமைச்சர் காமராஜ் மீது நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யும்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்பி., உத்தரவிட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தனது உத்தரவில், ‘மனுதாரர் விசாரணைக்காக வருகிற 30ஆம் தேதி மன்னார்குடி டிஎஸ்பி முன்பு நேரில் ஆஜராக வேண்டும். அப்போது, மனுதாரருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து டிஎஸ்பி விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு அதிமுக வட்டாரத்திலும், அமைச்சர்கள் வட்டாரத்திலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்…

பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாயிகள் அணியான உழவர் பேரியக்கத்தின் தலைவராக இருந்த அன்பு சகோதரர் சடகோபன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் எனக்கு துணையாக இருந்து கட்சிப் பணி ஆற்றியவர். மிகவும் எளிமையானவர். விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காண்பதற்கு பாடுபட்டவர். பலமுறை விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளைத் திரட்டி வந்து என்னை சந்தித்து உழவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விளக்கியவர்.
உழவர்களின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனது தலைமையில் கருத்தரங்குகள் நடத்துவதற்கு காரணமாக இருந்தவர். மிகவும் துடிப்பான வேளாண் தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவர். தமிழகம் முழுவதும் உழவர்கள் மாநாட்டை நடத்துவதற்காக என்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.
உழவர் நலனுக்காகவே தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்ட சடகோபனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உழவர் பேரியக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் –  என்று கூறியுள்ளார்.