Home Blog Page 6048

அம்மா விரைவில் விடுதலை ஆவார்: சீமான்

கன்னியாகுமரி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆவார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். பவானி சிங் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய பலர் விடுதலையாகியுள்ளனர். அப்படி இருக்கையில் ஜெயலலிதாவும் விடுதலை பெறுவார் என கருதுகிறேன். அவர் விடுதலை குறித்துப் பேசுவதால் நான் அவருக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். கடந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவன் நான். அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். வேட்பாளர்களை ஜாதியின் அடிப்படையில் அல்லாமல் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதை பார்த்து தேர்வு செய்து நிறுத்துவோம் என்றார்.

வெளிநாட்டு நிதி பெறும் 8975 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

புது தில்லி: வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 2009–10, 2010–11, 2011–12 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்யுமாறு 10,343 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியதில், 229 நிறுவனங்கள் மட்டுமே அதற்கு பதில் அளித்தன. இதைத் தொடர்ந்து, பதில் அளிக்காத 8,975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில், நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்படாமல் திரும்பி வந்த 510 நிறுவனங்களும் இதில் அடங்கும். வெளிநாட்டு நிதிபெறும் ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமம் அண்மையில் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்த இளம்பெண் போலீஸில் சரண்

ஈரோடு: ஈரோட்டில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்து கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் லாரி மற்றும் ஆட்டோக்களுக்கு சரக்கு ஏற்றும் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவர்கள் பல்லடம் அறிவொளி நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஈஸ்வரன் என்பவர் பல்லடம் டி.கே.டி மில் பேருந்து நிறுத்தம் அருகே மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களும், அறிவொளி நகரில் வசித்து வருன்றனர். தன் கடையில் வைத்து அறிமுகமான வேலுச்சாமியை தனது மனைவி செல்விக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஈஸ்வரன். இவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இரு வாரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக ஈஸ்வரன் ஈரோடு சென்றார். இதை சாதகமாகப் பயன்படுத்திய வேலுச்சாமி, தனியாக வீட்டிலிருந்த செல்வியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதை அடுத்து, அறிவொளி நகர் புறக்காவல் நிலையத்தில் செல்வி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் வேலுச்சாமியை காவல்நிலையத்துக்கு அழைத்து, அவரைக் கண்டித்து அனுப்பி வைத்தனர் போலீஸார். இந்நிலையில், மீண்டும் ஈஸ்வரன் சிகிச்சைக்காக ஈரோடு சென்றதைத் தெரிந்துகொண்ட வேலுச்சாமி, நேற்று அதிகாலை 2 மணிக்கு, குடிபோதையில் செல்வியின் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கினார். தூங்கிக் கொண்டிருந்த செல்வியிடம், பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த மோதலில் போதையிலிருந்த வேலுச்சாமி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்த செல்வி மயங்கிக் கிடந்த வேலுச்சாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர் விடியும் வரை வீட்டினுள்ளேயே இருந்த செல்வி. காலை ஆறு மணிக்கு அரிவாளுடன் சென்று பல்லடம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

நடிகை ஊர்வசி மது போதையில் தகராறு; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

urvasi திருவனந்தபுரம்: இரு தினங்களுக்கு முன்னர் கேரள சட்டப் பேரவையில் பணி புரியும் இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த மகளிர் ஊழியர் சங்கத்தின் ஆண்டு விழா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் சக்தன், நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த ஊர்வசி மது அருந்திவிட்டு, நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார். இதை அறியாத விழா பொறுப்பாளர்கள் மேடையில் ஊர்வசியைப் பேசுமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் போதையில் இருந்ததால் என்ன பேசுவதென்று தெரியாமல் மேடையில் உளறிக் கொட்டியிருக்கிறார். விழா நடத்துபவர் யார் என்று தெரியாத அளவுக்கு அவரது உளறல் இருந்ததால், இதைக் கேட்ட சபாநாயகர் சக்தன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை விழா மேடையிலிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர் மேடையில் இருந்து இறங்க மறுத்ததோடு தொடர்ந்து விடாப்பிடியாக பேசியிருக்கிறார். பிறகு எப்படியோ அவரை ஒருவழியாக மேடையிலிருந்து இறக்கி காரில் ஏற்றி அனுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவரோ காரில் ஏறாமல் விழா பொறுப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனிடையே ஊர்வசி மன அழுத்தத்தில் ஏதோ பேசியுள்ளார். இதை பெரிது படுத்த வேண்டாம் என மலையாள நடிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். [su_youtube url=”https://youtu.be/PU1jbmW4ObQ”]

57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிக்கு கரூர் மாவட்ட வீரர் / வீராங்கனைகள் தேர்வு

வருகின்ற மே மாதம் 7,8 மற்றும் 9 ந் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் 57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டியில் பங்கு பெற சிறந்த அணியை தேர்வு செய்யும் பொருட்டு கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி வருகின்ற 30.04.2015 பரணிபார்க் பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு மாநில போட்டிக்கு தேர்வு பெறுமாறு கரூர் மாவட்ட கேரம் தலைவர் S.மோகனரெங்கன், தேர்வுக்குழு தலைவர் C.ராமசுப்பிரமணியன், செயலாளர் M.சுரேஷ் ஆகியோர் தொ¢வித்துள்ளனர். பங்கு பெற விரும்புவோர் 29.04.2015 க்குள் 9750991014 என்ற எண்ணில் தங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும்.

மணல் அள்ளத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் மண் சரிந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மணல் அள்ளுவதற்காகத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் தொழிலாளி இறங்கியபோது, மண் சரிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியில் 25 அடி ஆழத்துக்குக் கீழே மணலை திருட்டுத்தனமாக எடுக்கும் வேலையில் மாலகுப்பம், கரடிகுறி, பூசாரிப்பட்டி, கல்லுகுறி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே கரடிகுறி அருகிலுள்ள மாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (45) நேற்று காலை மணல் எடுக்கும் வேலையில் ஈடுபட்டார். இதற்காக அங்கே தோண்டப்பட்டிருந்த 25 அடி ஆழ குழியில் கயிறு கட்டி உள்ளே இறங்கினார். குழிக்கு மேலே மணற்பரப்பில் 2 பேர் அவர் எடுத்துக் கொடுக்கும் மணலை வாங்குவதற்காக தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் திடீரென, அந்தக் குழியின் பக்கவாட்டில் உள்ள மண் முழுதாகச் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராமசாமி அலறினார். ஆனால் அதற்குள் அவர் மண்ணில் புதைந்து மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதைக் கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மகராஜகடை காவல் நிலையத்துக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொக் லைன் இயந்திரம் மூலம், குழிக்குள் மூடிக்கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், மண்ணுக்குள் புதைந்து கிடந்த ராமசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகராஜ கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபரேஷன் மைத்ரி: நேபாளத்தில் மீட்புப் பணி தீவிரம்

காட்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் ஆபரேஷன் மைதிரி என்ற பெயரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12 விமானங்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காத்மாண்டுவில் தொடங்கி வோக்காரா பள்ளத்தாக்கு வரையிலான பகுதியில் மீட்புப் பணிகளில் இவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வரை 30 வெளிநாட்டினர் உட்பட 5 ஆயிரத்து 400 பேர் நேபாளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். இதனை வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளும் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவித்த ஜெய்சங்க, இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்புப் பணிகளில் நன்கு பயிற்சி பெற்ற தலா 45 பேர் அடங்கிய 10 குழுக்கள் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும் 6 குழுக்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீட்பு பணிகளுக்காக இந்தியாவில் இருந்து அதிநவீனக் கருவிகள் விமானம் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடரும் நில அதிர்வுகள் காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர். தாற்காலிக முகாம்கள் அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் 3 நாட்களாக திறந்த வெளி முகாம்களில் தங்கியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேகதாது பிரச்னையில்  பேச்சுவார்த்தை தேவை இல்லை: ராமதாஸ்

சென்னை:
மேகதாது அணைப் பிரச்னையில், பேச்சுவார்த்தை தேவையில்லை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை பற்றி இரு மாநில அரசுகளிடமும் பேசித்  தீர்வு காண முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருந்தால் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.
மேகதாது அணைப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதை தனித்துப் பார்க்க முடியாது. அதைக் காவிரிப் பிரச்சினையுடன் ஒருங்கிணைந்ததாகவே பார்க்க வேண்டும். காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால், காவிரியின் குறுக்கே புதிதாக எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதை அவ்வாரியமே கவனித்துக் கொண்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில்  மேகதாது பிரச்சினையே எழுந்திருக்காது. எனவே, மேகதாது அணை உள்ளிட்ட காவிரி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றே அருமருந்தாகும். எனவே, இதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பது தமிழகத்திற்கு காட்டப்படும் சலுகை அல்ல…. அது தமிழகத்தின் உரிமை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மன்றத்திலும், 17 ஆண்டுகள் நடுவர் மன்றத்திலும் போராடித் தான் அந்த உரிமையை பெற்றிருக்கிறோம். காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5&ஆம் தேதி நடுவர் மன்றம் தீர்ப்பளித்த போதிலும், அந்தத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்வதற்கு அப்போதிருந்த அரசு தவறிவிட்டது. 6 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகள் ஆகியும் அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்கப்படவில்லை. இந்த இரு அமைப்புகளும் அமைக்கப்பட்டு விட்டால் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விடும். மேகதாது அணை தொடர்பான பிரச்சினையை காவிரி மேலாண்மை வாரியமே கவனித்துக் கொள்ளும்.
இந்த நேரத்தில் மேகதாது அணை பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுவது போன்று தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் பேச்சு நடத்தப்பட்டால் அது காவிரிப் பிரச்சினையை தொடங்கிய இடத்திற்கே மீண்டும் அழைத்துச் சென்றுவிடும். அதுமட்டுமின்றி, இப்பிரச்சினையில் இத்தனை ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி தமிழகம் பெற்ற வெற்றிகள் வீணாகி விடும். அதுமட்டுமின்றி, மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் அது குறித்து பேச்சு நடத்துவது தமிழகத்தின் நிலையை வலுவிழக்கச் செய்யும். இது தமிழகத்திற்கு செய்யும் தீமையாகும்.
எனவே, மேகதாது அணை உட்பட காவிரி தொடர்பான எந்தப் பிரச்சினை குறித்தும் கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவது தேவையற்றதாகும். காவிரிப் பிரச்சினை குறித்து 40 ஆண்டுகளாக எத்தனையோ முறை பேச்சு நடத்தியும் எந்த பயனும் ஏற்பட்டதில்லை என்பதையும், உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்தின் மூலமாகவே அனைத்து நிவாரணங்களும் பெறப்பட்டன என்பதையும் தமிழகம் கருத்தில் கொள்ள வேண்டும். மேகதாது அணை பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய இரு பிரச்சினைகளுக்கும் உச்சநீதிமன்றத்தில் முறையிடுதல், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய வழிகளில் தான் தீர்வு காண முடியும். அதுதான் சரியான, பயனுள்ள வழிமுறையாக இருக்கும்.
ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யத் தவறியதன் விளைவாகவே இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. எனவே, ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியவாறு, மேகதாது அணை, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் மேகதாது அணை, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் சென்று பிரதமரை சந்தித்து முதல்வர் பன்னீர்செல்வம் வழங்க வேண்டும். – என்று கூறியுள்ளார்.

நிலநடுக்க பாதிப்பு: தனது ஒரு மாத சம்பளத்தை அளித்தார் மோடி

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியில் சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. நேபாளத்தில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகிலான நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் நிலநடுத்தால் 72 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் தன் பங்குக்கு, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார். நிலநடுக்கத்தால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் மற்றும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே வடக்கு மாநிலங்களில் பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் நஷ்டத்துக்கு விவசாயிகளுக்கு உதவ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளப் பணத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

திருப்பூர் வழக்கறிஞர் சங்க நினைவுப் பரிசு

திருப்பூர் பார் அசோசியேசன் (வழக்கறிஞர் சங்கம்) 2014-2015 ம் ஆண்டின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பொருளாளர் பிரகாஷ் வேலுசாமிக்கு மூத்த வழக்கறிஞர் ஜனார்த்தனன் நினைவுப் பரிசு வழங்கினார் செய்தி ; செ.பிரமநாயகம் 6d12351c8b0572618f2f24e7031e8002 - 2026