பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸார் குறும்பலாப்பேரி – மேலப்பாவூர்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நியாயவிலைக் கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சு.நடராஜன்(58), மேலப்பாவூரைச் சேர்ந்த கி.வள்ளிநாயகம்(50) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 68 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.940 ஐ பறிமுதல் செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் போலீஸாரை அவதூறாகப் பேசியதோடு, பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர் இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சாமுவேல் ராஜையா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நடராஜன் மற்றும் வள்ளிநாயகத்தைக் கைது செய்தார். செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி
பாவூர்சத்திரம் அருகே சாட்சிக்கு கொலை மிர ட்டல்
பாவூர்சத்திரம் அருகே முன்விரோதத்தில் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தைச் சேர்ந்தவர் க.மாயாண்டி(40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த மா.மணி என்ற சுப்பிரமணி(43) என்பவருக்கு எதிராக சாட்சி சொன்னாராம். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணி என்ற சுப்பிரமணி மற்றும் அவரது நண்பரான ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்த பா.ஆனந்த்(35) என்பவருடன் சேர்ந்து மாயாண்டியை அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . இதுகுறித்து மாயாண்டி அளித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சாட்சியை மிரட்டிய 2 பேரையும் கைது செய்தார். செய்தியாளர்: செ.பிரமநாயகம், தென்காசி
வெற்றிலை பாக்கு தாம்பூலத் தட்டுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கரூர்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் கீழுர், மேலூர், கெடமலை மற்றும் போதமலை உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப் பகுதிகளில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அதே போல நியாய விலைக் கடை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றும் கூறி இது தொடர்பாக பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை என்றும் மலைவாழ் மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில் இன்று போதமலையைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் உள்ளிட்டோர் வெற்றிலை பாக்கு மற்றும் தேங்காய் வாழைப் பழம் என தாம்பூல தட்டுடனும் மேலும் மா, சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகள் தட்;டுடனும் அதில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வைத்து மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தியை சந்தித்து போதமலைக்கு வருமாறு அழைக்க வந்திருந்தனர்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பிரிவுபசார விழா
திருச்சி: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பிரிவு உபசாரவிழா வெள்ளி சனி திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றன விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார் அறங்காவலாகள் உறுப்பினர்கள் கே.ஆர்.குணசேகரன் கே.ரெங்கசாமி அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முதல் இரண்டு நாட்களில் 6துறைகள் வீதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன கடைசி நாளில் 1துறையும் உதவிப்பேரசிரியர்களுக்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றன அப்போது கல்லூரியின் முதல்வர் ஜானகி சுவாமிநாதன் பேசியது:பெண்களுடைய வாழ்க்கையில் மூன்று கட்டங்களுக்கு பிரிவு என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்வேண்டிய கட்டாயம் உண்டாகிறது பள்ளிப்படிப்பில் படிக்கும் போதோ எதாவது ஓரு நட்பு ஏற்பட்டு ஓரு பிரிவு ஏற்படுகிறது அடுத்தது கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வெளியில் போகும்போது ஒரு பிரிவு அடுத்ததாக திருமணம் வரும்போது பெற்றோர்களை விட்டு கணவன் வீடடிற்கு போகும்போது அப்போது ஓரு பிரிவு இப்படி தன்னுடைய வாழ்நாளில் பிரிவுகளையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது ஆண்களின் நட்பிற்கும் பெண்களின் நட்பிற்கும் அதிகவேறுபாடுகள் அவர்களை பொறுத்தவரைக்கும் பிரிவை தாங்குகின்ற சக்தி அதிகமாக இருக்கும் ஆனால் பெண்களுக்கு சக்தி என்று பெரும் இருந்தும் இந்த விஷயத்தில் மட்டும் சக்தி இல்லாமல் தேம்பி அழுகின்ற நிலைமை உண்டாகிறது இதற்கு முக்கியகாரணம் பெண்களிடம் பாசம்வைக்கும் வீதம் சற்றுவித்தியசாம் என்றே சொல்லவேண்டும் இறுதியாண்டு படித்து வெளியில் போகும் மாணவிகள் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் போது அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் அப்போதுதான் படித்த அறிவோடு சேர்ந்து உலக அறிவு என்ற முக்கியம் உங்களுடைய மனதில் தோன்றும் முன்பு பள்ளிப்படிப்பைக்கூட ஓழுங்காக முடிக்காத பல தலைவர்கள் அறிஞர்கள் இன்றும் பேசப்படுகின்றனர் அதற்கு அவர்கள் படித்த புத்தங்கள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது ஓரு வாக்கியம் உங்கள் வாழ்க்கையே மாற்றும் ஆனால் எந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரியாது இன்றைக்கு பெண்களுக்கு முக்கியப் பிரச்சினை பாதுகாப்பு அதனைக்கருதியே பல பெற்றோர்கள் தங்களுடைய பெண்பிள்ளைகளை இக்கல்லூரியில் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி அரியநாச்சியம்மன் கோவிலில்மே1ல் குடமுழுக்கு
புதுக்கோட்டையில் மிகவும் புகழ்பெற்ற கோவிலிகளில் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவில் அரியநாச்சியம்மன் கோவிலிலும் ஆகும் இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் வந்த காரணத்தினால் திருப்பணிக்குழு மற்றும் நகரமுக்கிய பொருப்பாளர்கள் தேதி குறிப்பிட்டு அறிவித்தனர் இதனைத்தொடர்ந்து கடந்த 25ம்தே;தி சனிக்கிழமை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது நாளை28ம்தேதி காலயாக பூஜைகள் தொடங்கப்படவுள்ளது வரும் 1ம்தேதி குடமுழுக்கு நடைபெறும் இப்போதே இருந்து நகரம் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது செய்தி .பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் சாரிகா
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர்.சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார். ஒளிப்பதிவு – சரவணகுமார் இசை – கனி / எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த் கலை – மோகனமகேந்திரன் / தயாரிப்பு நிர்வாகம் – C.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M.B.ராஜதுரை. தயாரிப்பு – எம்.மனோஜ் குமார், பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம். படம் பற்றி இயக்குனர் M.B.ராஜதுறையிடம் கேட்டோம்… கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர்வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர். சரிகா வேலை முடிந்து நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறான். கண்விழித்து பார்க்கும்போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை உணர்கிறாள். அரை குறை ஆடையுடன், தனது ஆடைகளையும், தப்பிக்க வழியையும் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும்போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அரை குறை ஆடையுடன் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச் சியடைகிறாள். அரைகுறை ஆடையுடன் இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை! ஊட்டியில் பங்களா போன்று அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது என்றார் இயக்குனர்.
எனக்கு முன்பே செயலில் இறங்கிவிட்டார் மோடி: ராஜ்நாத் சிங்
புதுதில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் குறித்த செய்தி எனக்கும் முன்பே அவருக்குக் கிடைத்து செயலில் இறங்கிவிட்டார் மோடி என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்க விரைந்து செயல்பட்டார் மோடி என்றும் அவர் கூறியுள்ளார். நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனைத்துவிதமான உதவிகளும் இந்தியத் தரப்பில் இருந்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார். மேலும் நமக்கும் நேபாளத்துக்கு நெருக்கமான கலாசாரத் தொடர்புள்ளது. நமக்கு நெருங்கிய நட்பு நாடு. நேபாளத்தில் நில நடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் நேபாள மக்களோடு இந்தியா துணை நிற்கும். இயற்கை சீற்றம் ஏற்பட்டவுடன், பிரதமர் மோடி உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இவர் சொல்லித்தான் எனக்கு நில நடுக்கம் குறித்தே தெரிய வந்தது. இந்தியாவில் இது வரை 72 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் வரை காயமுற்றுள்ளனர். நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கோழிப் பண்ணை திட்டத்தின் கீழ் 862 பேர் பயன்: கரூர் ஆட்சியர் ஜெயந்தி
கரூர் மாவட்டம், மணல்மேடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் மணல்மேடு ஊராட்சியில் புறக்கடை கோழிவளர்ப்புத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வளர்க்கப்பட்;டு வருகின்ற கோழிபண்ணைக்குச் சென்று கோழிகள் வளர்க்கப்பட்டு வருவதன் விவரம் குறித்து கேட்டறிந்ததுடன் மேலும் கால்நடைத்துறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயல்படவேண்டும் என பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்தார். பின்னர் கூலி நாயக்கனூர் பகுதிக்குச் சென்று தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளிகள் விவசாய நிலங்களில் மழைத்தூவன் கருவி மூலம் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப்புல் வளர்க்கப்பட்டு வந்ததை பார்வையிட்டதுடன் அங்குள்ள பயனாளிகளிடம் மழைத்தூவன் கருவியை அனைவரும் பயன்படுத்தி அதன்மூலம் நல்ல பயனை பெற வேண்டும். இத்திட்டத்தின் மூலம் குறைந்த அளவு தண்ணீரில் அதிக பரப்பளவில் கால் நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வளர்க்க முடியும். மேலும் இவ்வாறு வளர்க்கப்படும் தீவனப்புல்களில் எவ்வித நோய்களும் தாக்காது. அவ்வாறு தூய்மையான தீவனமாக கிடைப்பதால் அதை கறவை மாடுகளுக்கு பயன்படுத்தும் போது மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதுடன் பால் உற்பத்தித்திறனும் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எனவே கறவை மாடு வளர்ப்போர் கட்டாயம் மழைத்தூவன் இயந்திரத்தை பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி தெரிவித்தார். தொடர்ந்து செய்யப்ப கவுண்டன் புதூர் பகுதியில் பயனாளிகள் கறிக் கோழிப் பண்ணை அமைக்கப்பட்டு செயல்படுத்தி வருவதை பார்வையிட்டதுடன் மேலும் கோழிப்பண்ணையை அதிக அளவில் விரிவுபடுத்திடும் வகையில் பயனாளிகள் செயல் பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி அறிவுறுத்தினார். மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அரசின் திட்டங்கள் செயல்படுத்திவருவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் புறக் கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 440 பயனாளிகளுக்கு ரூ.11.22 இலட்சம் மதிப்பீட்டில் கோழி வளர்ப்பு பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார்கள். மேலும் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி பண்ணை வளர்ப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு ஆண்டுகளில் ரூ.350.10 இலட்சம் மதிப்பீட்டில் 422 பயனாளிகள் கோழிப் பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகிறார்கள். இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு மானியம் 50 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய கால கட்டத்தில் பொது மக்களின் தேவையை உணர்ந்து மிக நல்ல முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் அதிக அளவில் விற்பனை ஆகுவதுடன் தேவையான பொருளாதார முன்னேற்றமும் பெறலாம். அதேபோல் கால்நடை வளர்ப்பிலும் போதிய லாபம் பெறலாம். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கோ-3 , கோ- 4 ரக தீவன புல் வளர்க்க அரசு மானியத்துடன் இத்திட்டம் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ரூ.207 இலட்சம் மதிப்பீட்டில் 1711 ஏக்கர் நிலப்பரப்பில் 5133 பயனாளிகள் தீவனப்புல் வளர்த்து வருவதுடன் மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி மழைத் தூவன் கருவியையும் பயன்படுத்தி அதிக பரப்பளவில் தீவனப்புல் வளர்த்து பயன் பெற்று வருகிறார்கள். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகவும், ஆடு மற்றும் கோழி வளர்க்க கொட்டகைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 180 பயனாளிகளுக்கு கொட்டகை அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. இது மட்டு மின்றி கூலித் தொழிலாளிகள் மற்றும் வறுமையில் உள்ளோர் பொருளாதார முன்னேற்றம் பெற அரசு அறிவித்த திட்டமான விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9673 குடும்பங்களுக்கு 4 ஆடுகள் வீதம் ரூ.12.56 கோடி மதிப்பீட்டில் 38692 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு இவைகள் 62251 குட்டிகளை ஈன்றுள்ளன. இதன் மூலம் பயனாளிகளின் பொருளாதார முன்னேற்றம் உயர்ந்துள்ளன. இது போல் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவது மட்டுமின்றி கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதுடன் அதிக அளவு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அதன் மூலமாகவும் கால் நடைகள் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களின் ஆலோசனையைப் பெற்று இணைப்புத் தொழிலாக கறவைமாடு, ஆடு, கோழி ஆகியவற்றை அதிக அளவில் வளர்த்து பண்ணைகளாக உருவாக்கி அதிக அளவில் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார முன்னேற்றம் பெறுவதுடன் பலருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.இராமநாதன், உதவி இயக்குநர் மரு.குழந்தைச்சாமி, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் மரு.முரளிதரன், பிரதீபா, கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகக் கட்சிகள் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்த விஜயகாந்த்
புது தில்லி: தமிழகத்துக்கான ஐந்து முக்கிய கோரிக்கைகளை மையமாக வைத்து பிரதமரை இன்று சந்திக்கவுள்ளதாகக் கூறி, நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலருடன் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் தில்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தம்மிடம், பிரதமர் தமிழகத்துக்கு நல்லது செய்வதாக உறுதி அளித்தார் என்று கூறினார். மேலும், நிலம் கையகப் படுத்தும் மசோதா விவகாரத்தில், விவசாயிகளுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என பிரதமர் உறுதி அளித்ததாக விஜயகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகக் கூறிய விஜயகாந்த், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டிய அவசியம் எழுந்தது குறித்துக் கூறினார். இந்த விவகாரம் குறித்துக் கூறிய அவர் தமிழர்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்றார். மேலும், தாங்கள் பாமக தரப்புக்கு அழைப்பு விடுத்தும், பாமக அதை ஏற்கவில்லை என்றும், தங்கள் கட்சியின் சார்பில் யாரையும் அனுப்பவில்லை என்றும் கூறினார். இடையில் அவர் வழக்கமான தனது ஸ்டைலில் ஒரு செய்தியாளரை அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
த்ரிஷா கல்யாணம் நின்று விட்டதா? பரபரப்பு தகவல்
த்ரிஷாவிற்கும், தயாரிப்பாளர் வருண் மணியன் இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி, இருவருக்கும் இடையில் பல்வேறு விஷயங்கள் ஒத்து போகவில்லை என்றும் இவர்கள் உறவில் முன்பு போல் சுமுகமாக இல்லாமல் விரிசல் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு தற்போது பல படங்கள் த்ரிஷாவை தேடி வருவதால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம் த்ரிஷா. இது வருண் மணியனுக்கு பிடிக்கவில்லையாம். இதனிடையே சமீபத்தில் வருண் மணியன் வீட்டில் நடந்த விழாவிலும் த்ரிஷா கலந்து கொள்ளவில்லையாம். வருண் மணியன் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்தை கூட த்ரிஷா அணியாமலே இருக்கிறார் என்று தெலுங்கு மீடியா செய்திகளை வெளியீட்டு வருகிறது.

