சென்னை: பவானி சிங்கை சட்டவிரோதமாக நியமித்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பின் மூலம் நீதிப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக சட்டத்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் ஜெயலலிதா நுழைந்தார். 2001 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற பின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியும், சாட்சிகளை மிரட்டியும் இவ்வழக்கிலிருந்து விடுதலையாக முயன்றார். அந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் தான் தலையிட்டு இவ்வழக்கின் விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது. இதன்மூலம் நீதியின் ஆட்சியை உச்சநீதிமன்றம் முதன்முறையாக காப்பாற்றியது. அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதன்மூலம் நீதி மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.எனவே, இந்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று அனைவரும் கருதினர். உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் அளித்த தீர்ப்பிலும் இதையே தெரிவித்திருந்தார். ஆனால், கால தாமதத்தை தவிர்க்கும் நோக்குடன் இவ்வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது. அதேநேரத்தில் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் முன்வைத்த வாதங்கள் எதையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை; தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனும், கருநாடக அரசும் தங்கள் தரப்பு வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமியிடம் நாளைக்குள் எழுத்து மூலம் தாக்கல் செய்ய வேண்டும்; அவர்கள் தரப்பு வாதங்கள் தீர்ப்பில் எதிரொலிப்பதை நீதிபதி குமாரசாமி உறுதி செய்ய வேண்டும்; ஊழல் மிகப்பெரிய சமூகத் தீமை என ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீபக்மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்கும் என நம்பலாம். பவானிசிங் நியமிக்கப்பட்ட விதம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.‘‘ பவானிசிங்கின் நியமனம் சட்டவிரோதமானது; வழக்கை திசை திருப்பும் நோக்கம் கொண்டது. இவ்வழக்கில் அவசர அவசரமாக பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடக அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் இல்லாத குழப்பமான சூழ்நிலையை தமிழக அரசு அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பவானிசிங்கை நியமித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது’’ என நீதிபதிகள் கூறியிருப்பது தமிழக அரசிற்கு கிடைத்த சாட்டையடியாகும். பவானிசிங் நியமனத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்காக அவரது வழிகாட்டுதலில் நடைபெறும் அரசே அரசு வழக்கறிஞரை நியமித்தது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இதற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது சட்டத்தை வளைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். பவானிசிங்கின் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அவரை சட்டவிரோதமாக நியமித்து நீதியை வளைக்க முயன்ற ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்து விட்டார். எனவே, ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக பதவி விலக வேண்டும். – என்று கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு சதி: அன்பழகன் எழுத்துபூர்வ வாதம் தாக்கல்
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நீதிபதி குமாரசாமி கேட்டிருந்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் உள்ளிட்ட தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளதாக, வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை 90 பக்கங்களுக்குள் நாளை ஏப்.28க்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை அன்பழகன் தரப்பு வழக்குரைஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அன்பழகன் தரப்பு எழுத்துபூர்வ வாதம் கர்நாடக நீதிமன்றத்தில் இன்று தாக்கல்!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், பவானி சிங் நியமனம் குறித்த அன்பழகன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், பவானி சிங் நியமனம் செல்லாது என்றும், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதத்தை ஏற்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் தரப்பு தங்களது எழுத்துபூர்வ வாதங்களை ஏப்.28 ஆம் தேதி நாளை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வமான வாதம் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தூக்கி விட்ட தொலைக்காட்சியையே அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்
சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவார்ட்ஸ் வழங்கு விழாவை நடத்தியது. அந்த தொலைக்காட்சியில்தான் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலம் சினிமாவிற்கு வந்து பிரபல நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
அந்த தொலைக்காட்சியில் எந்த விழா நடந்தாலும் சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது அந்த தொலைக்காட்சியின் வாடிக்கை. கடந்தாண்டு விருது விழாவில் சிவகார்த்திகேயன் அழுததை போட்டு போட்டு விளம்பரத்தை தேடி கொடுத்தார்கள். ஆனால் இந்த முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது.
ஏனென்றால், “இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாரும் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள்” என்று மேடையில் பேசினார் சிவகார்த்திகேயன். எப்போதுமே விருது வழங்கும் விழா என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருப்பார். ஆனால், இந்த முறை துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இப்போதான் அவர் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து விட்டாரே இதுக்கு மேல அந்த தொலைக்காட்சியின் உதவி அவருக்கு தேவையில்லை போல…
பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்கக்கூடாது: நீதிமன்றம்
புது தில்லி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசு மற்றும் அன்பழகனின் எழுத்துபூர்வ வாதங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரு தரப்பு வாதங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அன்பழகன் தரப்பு, தனது எழுத்துபூர்வ வாதத்தை நாளைக்குள் கர்நாடக உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க தடை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் நகல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏப்.28 செவ்வாய்க் கிழமை நாளை தாக்கல் செய்யப்படும்.
சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லக்ஷ்மி
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜான்பீட்டர் ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ் நடனம் – தினேஷ் ஸ்டன்ட் – கனல்கண்ணன் எடிட்டிங் – எலிசா தயாரிப்பு நிர்வாகம் – ஜி.செந்தில் வசனம் – ஷாம்மேனன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். இவர் தயாரிப்பு – ஜான்மேக்ஸ் படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்… இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரம் மந்திரவாதி. ராய்லஷ்மி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் முதன் முறையாக ராய்லஷ்மி மாயா என்ற பேய் வேடத்தில் நடிக்கிறார். பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் ஏற்கிறார். படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லக்ஷ்மி
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜான்பீட்டர் ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ் நடனம் – தினேஷ் ஸ்டன்ட் – கனல்கண்ணன் எடிட்டிங் – எலிசா தயாரிப்பு நிர்வாகம் – ஜி.செந்தில் வசனம் – ஷாம்மேனன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். இவர் தயாரிப்பு – ஜான்மேக்ஸ் படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்… இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரம் மந்திரவாதி. ராய்லஷ்மி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் முதன் முறையாக ராய்லஷ்மி மாயா என்ற பேய் வேடத்தில் நடிக்கிறார். பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் ஏற்கிறார். படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர் தற்கொலை: 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்
சென்னை: அதிகாரிகளின் அச்சுறுத்தலால் ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சுமார் 35,000 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் அவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும், தன்னுடைய கடிதம் ஒன்றில் அதிகாரிகள் அளித்த மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார். இளங்கோவன் தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என்று குற்றம்சாட்டியும், அவரது தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் இந்தப் போராட்டம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாகக் குறைவு
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைகளுக்காக கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளில், பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28ஆம் தேதி நீர் திறந்து விடுவது நிறுத்தப்படும். இதே போல் இந்த ஆண்டும் ஜனவரியில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது.
ரஜினி, அஜித்துக்கு அப்புறம் எனக்குதான் ரசிகர்கள் அதிகம்…பவரின் பப்ளிசிட்டி ப்ளான்
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள் தனமான கருத்துகளை அவ்வப் போது கூறி வருவார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஒரு நடிகரை உயர்த்திப் பேசினால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அதை கிண்டலடித்துப் பேசுவார்கள். அதற்கு பதிலளித்து இந்த நடிகரின் ரசிகர்கள் ஸ்டேடஸ் போட என சமூக வலைத்தளங்களில் பவர் ஸ்டார் பெயர் உலா வரும். அதன்மூலம் பவருக்கு இலவச பப்ளிசிட்டி கிடைக்கும். எதைப் பற்றியெல்லாம் பேசினால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவோம் என்று நன்கு தெரிந்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பரபரப்பாகப் பேசப்படுவது, பிரபல தொலைக்காட்சி நேற்று நடத்திய விருது வழங்கும் விழாதான். இந்த விருது வழங்கும் விழாவில் நடந்தவற்றை வைத்துதான், தற்போது பவர் ஸ்டார் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, யார் அவார்டு வாங்குறாங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்னா விசில் சத்தம் கேக்குதுங்கறதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, ரஜினி, அஜித் பெயரை அடுத்து இவருடைய பெயரைக் கூறியுள்ளார். புரியலையா… ரஜினி, அஜித்துக்கு அப்புறம் இவருடைய பெயர சொன்னாதான் அதிக கைத்தட்டல் கேட்கிறதாம்…

