[latest-news] குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும் துனை தலைவராக சுப்பிரமனியன் செயல்பட்டு வந்தனர் இந்நிலையில் பஞ் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால் துனை தலைவர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கும் படி பஞ் வார்டு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இதனை விசாரித்த உயர்நீதி மன்றம் பஞ் துனைத்தலைவர் மீது வட்டாட்சியர் முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தோல்வியடைந்த பஞ் துனை தலைவர் சுப்பிரமணியனை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார் மேலும் பஞ்சாயத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான காசோலையில் கையெழுத்திடும் செக் பவர் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டார் கருணாகரன் வழங்கிய ஆணையில் கீழப்பாவூர் யூனியன், குலசேகரப்பட்டி பஞ் நிர்வாகத்தின் நலன் கருதி பஞ் தலைவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்குவதாகவும், இரண்டாவது நபராக கையெழுத்திட பஞ் நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குலசேகரப்பட்டி வார்டு உறுப்பினர் பேச்சிமுத்து என்பவருக்கு அனுமதி வழங்கியும் இதன் முலம் ஆணையிடப்படுகிறது. என மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் கீழப்பாவூர் வட்டார வளார்ச்சி அலுவலர் மற்றும் குலசேகரப்பட்டி பஞ் தலைவர் இளங்கோவுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் செய்தி ;செ.பிரமநாயகம்-தென்காசி
கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
கீழப்பாவூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் மூலம் சமுதாய பாலிடெக்னிக் திட்டம் மற்றும் கீழப்பாவூர் பேருராட்சி, நெல்லை மாவட்ட பார்வை இழப்ப தடுப்பு சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பேருராட்சி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பொன். அறிவழகன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் தங்கச்சாமி,சமுதாய பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஜெயகுமார், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராஜ் வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் விஸ்வராஜ், டாக்டர் திவ்வா கிஷன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கண்புரை நோயாளிகளுக்கு அரவிந்த் கண்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் இசக்கியப்பா, பேரூராட்சி கவுன்சிலர்கள், சரஸ்வதி சுப்பிரமணியம்,வேல்சாமி, அருணாசலம், தங்கராஜ், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாலிடெக்னிக் பயிற்சியாளர்கள் முருகேசன், முருகன், ஹரிரங்கநாதன், கவிதா, மாரிச்செல்வி, மாரியம்மாள், திராவிட செல்வி, சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், அசோக் ஜெயக்குமார், ஆலோசகர் முத்துகுட்டி, கணபதி ராமசுப்பிரமணியன் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். செய்தி ;செ.பிரமநாயகம் _கீழப்பாவூர்
நேபாளத்தின் துயரம் – நம் துயரம்: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மோடி உருக்கம்
சென்னை: 26.4.15 அன்று வானொலியில் ஒலிபரப்பான மன் கீ பாத் – மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம் எனதருமை நாட்டு மக்களே! வணக்கம். இன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்ய, எனது மனம் இடம் கொடுக்கவில்லை, கனக்கிறது, மனம் கவலையில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது, ஆலங்கட்டி மழை, பருவம் தப்பிப் பெய்யும் மழை, விவசாயிகளின் பெருந்துயரம் ஆகியவை நடைபெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பீஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது, அதில் பல பேர்கள் உயிரிழந்தார்கள், கணிசமான இழப்பு ஏற்பட்டது. நேற்று, சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம்….. இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் சில மாநிலங்களின் பல பகுதிகளில் பல பேர்களின் உயிரைக் குடித்திருக்கிறது. பலரது உடைமைகள் அழிந்து பட்டிருக்கின்றன ஆனால் நேபாளம் சந்தித்திருக்கும் பேரழிவோ படு பயங்கரமானது. நான் 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்தப் பேரழிவு எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நேபாளம் எப்படிப்பட்ட துயரத்தை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது, அவர்களின் குடும்பங்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்ற இவற்றையெல்லாம் என்னால் மனதில் எண்ணிப் பார்க்க முடிகிறது. ஆனால் எனதருமை நேபாள நாட்டு சகோதர சகோதரிகளே, ஹிந்துஸ்தானம் உங்களின் சங்கட காலத்தில் உங்களுக்கு துணை நிற்கிறது. நேபாளத்திலும் சரி, ஹிந்துஸ்தானத்தின் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பிற பகுதிகளிலும் சரி, உடனடி நிவாரணத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. முதன்மையான செயல் rescue operation, அதாவது மீட்பு நடவடிக்கை. இப்போதும் கூட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடக்கும் பல பேர்கள் உயிரோடு இருக்கலாம். அவர்களை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும். வல்லுனர்களின் குழு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே, இந்தப் பணியில் சிறப்புப் பயிற்சி பெற்ற sniffer dogs, மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மோப்ப நாய்கள் இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை மோப்பம் பிடித்துத் காட்டிக் கொடுக்கும். அதிக எண்ணிக்கையில் மக்களின் உயிரைக் காப்பதே எங்களது முழு முயற்சியாக இருக்கும். மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, relief operations, நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டாக வேண்டும். Rehabilitation, மறுசீரமைப்புப் பணிகள் நீண்ட காலம் தொடரக் கூடும். ஆனால் மனிதத்துவத்துக்கென்று ஒரு ஆற்றல் இருக்கிறது. 125 கோடி இந்தியர்களுக்கும் நேபாளிகள் சொந்தக்காரர்கள். அவர்களது துயரம் நமது துயரம். இந்த துயரம் நிறைந்த வேளையில் ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் துடைக்கவும், அவர்களைக் கைபிடித்து கரை சேர்க்கவும், துணை நிற்கவும் பாரதம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். கடந்த நாட்களில் யேமன் நாட்டில் நமது ஆயிரக்கணக்கான இந்திய சகோதர சகோதரிகள் சிக்கியிருந்தார்கள். போரின் கோர தாண்டவத்துக்கு இடையே, குண்டு மழைக்கு நடுவே, இந்தியர்களை மீட்பது, அதுவும் உயிரோடு மீட்பது என்பது ஒரு மகத்தான பணி மட்டுமல்ல, இடர்கள் நிறைந்ததும் கூட. ஆனால் இதை நம்மால் சாதிக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையை மீட்டுக் கொண்டு வந்த போது, மனிதத்துவத்தின் ஆற்றல் வெளிப்பட்டது. குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது, மரணத்தின் கருமை கப்பிக் கிடக்கிறது, இந்த நிலையில் பிறந்த ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருப்பது மனதுக்கு நிறைவை அளிக்கிறது. கடந்த நாட்களில் நான் அயல்நாடுகளில் எங்கு சென்றாலும், ஒரு விஷயத்துக்காக எனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தன. அது, யேமன் நாட்டில் நாம் கிட்டத்தட்ட 48 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது என்பதற்காகத் தான். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், என பல நாட்டு குடிமக்களுக்கும் நாம் உதவி இருக்கிறோம். இதன் காரணமாக, பாரத கலாச்சாரத்தின் மாபெரும் குணமான சேவா பரமோ தர்ம:, அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது. நமது வெளியுறவு அமைச்சகம், விமானப் படை, கடற்படை ஆகியன மிகவும் சாகஸத்தோடும், பொறுப்புணர்வோடும், இந்தப் பணியை நிறைவேற்றி இருக்கும் இந்த நிலையில், இவர்களது இந்த மகத்தான சேவை இனி வரும் காலங்களில் மாறாத ஒரு முத்திரை பதிக்கும் என்று நான் நம்புகிறேன். எந்த ஒரு இழப்பும் ஏற்படாமல் அனைவரும் இதிலிருந்து பாதுகாப்பாக மீள முடிந்திருக்கிறது என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. அண்மையில் நான் ஃப்ரான்ஸ் நாடு சென்றிருந்த போது, முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு. நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது ஒரு பக்கம், இது முதலாம் உலகப்போரில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் சாகஸத்துக்கும் தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்த்துகிறது. மேலும் சேவா பரமோ தர்ம: என்ற உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது; 15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம் செய்தார்கள் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்தியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகஸத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப் போரின் போது கிட்டத்தட்ட நமது 74000 இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதும் கூட பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு gallantry award, சாகஸத்துக்கான விருது அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல, மேலும் 11 வீரர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே நமக்கு கௌரவம் அளிக்கும் விஷயம். குறிப்பாக ஃப்ரான்ஸ் நாட்டில், இந்தப் போர் நடைபெற்ற போது, 1915ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் ஃப்ரான்ஸ் நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான் அங்கே என் அஞ்சலியைச் செலுத்தச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்துக்குத் தலைவணங்கச் சென்றேன். உலகின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், உயிர்த் தியாகமும் செய்கிறது; இதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் பாரதம் தான் முதலிடம் வகிக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா? கடந்த நாட்களில், 2 மகத்தான செயல்களைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நாம் பாபாசாஹேப் அம்பேட்கரின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். பல ஆண்டுகளாகவே, மும்பையில் அவருக்கென்று ஒரு நினைவுச் சின்னம் அமைக்கும் நிலம் தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது. ஆனால் பாபா சாகேப் அம்பேட்கரின் நினைவுச் சின்னம் அமைக்கத் தேவையான நிலத்தை அளிக்க பாரத அரசு முடிவெடுத்திருக்கிறது என்பதை நிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல, உலகம் முழுமைக்கும் இந்த மாமனிதர் பற்றித் தெரிய வேண்டும், அவரது எண்ணங்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், அவரது செயல்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புது தில்லியில் பாபா சாஹேப் அம்பேட்கரின் பெயரில் ஒரு சர்வதேச மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற விஷயம் கூட பல ஆண்டுகளாகவே தீர்மானிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. இதையும் கூட நாம் நிறைவேற்றி இருக்கிறோம், இந்த மையத்துக்கான அடிக்கல்லை நாட்டி இருக்கிறோம். 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத ஒன்றை இருபதே மாதங்களுக்கு உள்ளாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியைப் பூண்டிருக்கிறோம். எனது மனதில் வேறு ஒரு சிந்தனையும் எழுகிறது. இன்றும் கூட தங்கள் தலைகளில் கழிவுகளைச் சுமக்கும் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றதே, இந்த நிலையை நீட்டிப்பது நமக்கு அழகா? பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் 125ம் ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் இப்படிக் கழிவுகளைத் தலையில் சுமக்க வேண்டிய அவல நிலை தொடரக் கூடாது என்று நான் அரசுத் துறைகளிடம் வலியுறுத்திக் கூறினேன். இதை இனிமேலும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அரசும் இதில் தனது கடமையை ஆற்ற வேண்டும். எனக்கு இதில் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்தப் பணியை நாம் செய்தாக வேண்டும். பாபா சாஹேப் அம்பேட்கர் கல்வி கற்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். இன்றும் கூட நமது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் கல்வி சென்று சேரவில்லை. பாபா சாஹேப் அம்பேட்கரின் 125ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நமது கிராமங்களிலும், நகரங்களிலும், நாம் வசிக்கும் பகுதிகளிலும், ஏழையின் எந்த ஒரு குழந்தையும் கல்வியறிவு இல்லாது இருக்கக் கூடாது என்பதை நாம் உறுதி செய்து கொள்வோம். அரசு தன் கடமையை ஆற்ற வேண்டும், சமுதாயம் இதில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இப்படிச் செய்தால் நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும். ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியையும், வருத்தமளிக்கும் வேறு ஒரு தகவலையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டு பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. ஒரு பெண் சைனா நெஹ்வால் பாட்மிண்டன் விளையாட்டில் உலகிலேயே முதலிடம் பெற்றார், இரண்டாவது பெண், சானியா மிர்ஸா டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் நிலையை அடைந்தார். இருவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள். நம்மவர்களின் சாகஸத்தையும் சாதனையையும் நினைக்கும் போது பெருமிதம் பொங்குகிறது. ஆனால் சில வேளைகளில் நாமுமே கூட கோபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில் நாம் ஆஸ்ட்ரேலியாவிடம் தோற்க்க நேர்ந்தது. சில பேர்கள் இந்த தோல்விக்காக நமது ஆட்டக்காரர்களைப் பழிக்கப் பயன்படுத்திய சொற்களும், நடந்து கொண்ட விதமும், கண்ணியமானவையாக இல்லை நாட்டு மக்களே. தோல்வியே இல்லாத ஒரு ஆட்டம் என்பது உண்டா? வெற்றியும் தோல்வியும் வாழ்கையின் அங்கங்கள் தாமே? நமது விளையாட்டு வீரர்கள் தோல்வி காண நேர்ந்தால், இந்த சங்கடம் நிறைந்த வேளையில் நாம் அவர்களுக்கு மனோபலம் அளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு புதிய உற்சாகம் ஊட்ட வேண்டும். இனி வரும் காலங்களில் நாம் தோல்வியிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாட்டின் கௌரவம் தொடர்பான விஷயங்களில் நாம் ஒரு கணப் போது கூட நிதானம் இழந்து வினையாற்றுவதிலோ, எதிர்வினை புரிவதிலோ சிக்கிக் கொள்ள வேண்டாம். யதேர்ச்சையாக நடந்த ஒரு விபத்து தொடர்பான விஷயம் என்றாலும் கூட, உடனடியாக ஒரு கும்பல் கூடி விடுகிறது, வாகனத்தை தீக்கிரையாக்கி விடுகிற நிலைமை எனக்கு கவலை அளிக்கிறது. விபத்துக்கள் நடைபெறக் கூடாது தான். அரசும் கூட அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நாட்டு மக்களே, இது போன்று கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், நாம் லாரியை எரித்தாலோ, பிற வாகனங்களை தீக்கிரையாக்கினாலோ, மாண்டவர் மீண்டு வருவார்களா? நமது மனதின் உணர்வுகளை நிதானமாக வைத்துக் கொண்டு, சட்டம் தன் கடமையை ஆற்றக் கூட வகையில் நம்மால் செயல்பட முடியாதா? இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்!! இன்று எனது மனம் இவை போன்ற நிகழ்வுகளால் மிகவும் கனத்துப் போயிருக்கிறது. குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள் காரணமாக. ஆனால் இவற்றின் மத்தியிலும் கூட, தைரியத்தோடும், திடநம்பிக்கையோடும் நாட்டை முன்னேற்றுவோம்; நாட்டின் குடிமக்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ, சுரண்டப்பட்டவர்களோ, ஏழ்மையில் வாடுபவர்களோ, பழங்குடியினரோ, கிராமத்தவர்களோ, விவசாயிகளோ, சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களோ, அவர்கள் யாராக இருந்தாலும், அனைவருக்கும் நலன் பயக்கும் பாதையில் நாம் உறுதி பூண்டு முன்னேறுவோம். மாணவர்களின் தேர்வுகள் நிறைவடைந்திருக்கின்றன. குறிப்பாக, பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களின் உல்லாசத்துக்கு திட்டமிட்டிருப்பார்கள். உங்கள் விடுமுறைக்காலம் இனிமையாக இருக்க, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். வாழ்கையில் ஏதேனும் புதியவைகளைக் கற்கவோ, தெரிந்து கொள்ளவோ வாய்ப்பு கிடைக்கட்டும்!! ஆண்டு முழுவதும் நீங்கள் கடுமையான உழைப்பில் ஈடுபட்டீர்கள், உங்கள் குடும்பத்தோடு நீங்கள் சில இனிமையும் மகிழ்வும் நிறைந்த கணங்களைக் கழிக்க வேண்டும், இது தான் என் விருப்பமும் கூட! உங்கள் அனைவருக்கும் எனது நல்வணக்கங்கள்! நன்றி!! *** சென்னை வானொலியில் ஒலிபரப்பான மன் கீ பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம்: குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பாவூர்சத்திரத்தில் மனவளக்கலை யோகா பயற்சி
பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சி.டி.எஸ் திருமணமண்டபத்தில் , குற்றாலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை யோகா பயற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு அறக்கட்டளை தலைவர் அண்ணாமலையார் தலைமை வகித்தார். மனவளக்கலை முதுநிலைப்பேராசிரியர் எம்.எ.வேதசுப்பையா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். முகாமில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, அறக்கட்டளை செயலாளர் ஆவுடையப்பன், பொருளாளர் சக்திவேல், அறங்காவலர்கள் தங்கத்துரைபாண்டியன், அன்பரசன், முருகன், சிவன்பாண்டியன், பரமசிவம், பால்வண்ணன், மற்றும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சுற்றுப்பகுதிகளில் உள்ள தவமையங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். செய்தி ;செ .பிரமநாயகம் தென்காசி
வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம்
வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம் தேசிய வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் தகவல்களை உறுதிபடுத்துதல் முகாம் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ,ரேசன் கார்டுகளை இணைப்பது மற்றும் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ள பணியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார். உடன் மாவட்ட கவுன்சிலர் சேர்மப்பாண்டி, நகர கழகச் செயலாளர் பாஸ்கர், மேலவை பிரதிநிதி ஜெயராமன், தீப்பொறி அப்பாத்துரை, பி .எஸ்.என்.எல். ஆலோசனைக் குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தி ; செ.பிரமநாயகம், தென்காசி
இன்றைய பாசமற்ற சூழலில் வாழும் தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் கங்காரு! – சீமான்
மனித இனமே இன்று பாசமற்ற சூழலில் வாழ்கிறது. குறிப்பாக தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் திசைமாறிக் கொண்டிருக்கும் சூழலில், உறவுகளின் மேன்மையை உயர்த்திப் பிடிக்க வந்திருக்கும் கங்காரு படத்தைப் பாராட்டுகிறேன் என்று செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கிய கங்காரு படம் நேற்று வெளியானது. படத்துக்கு சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் கூறியதாவது:
தம்பி சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கியுள்ள கங்காரு படத்தைப் பார்த்தேன். தங்கையின் மீது அளப்பற்ற பாசம் வைத்துள்ள அண்ணன், அந்தத் தங்கையைப் பிரியாமலிருக்க எந்த எல்லைக்கும் போவதை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாமி. அவர் இதற்கு முன் இயக்கிய படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் இடையே அவ்வளவு வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது.
அண்ணன் – தங்கை பாசத்தை மிக அழகாக, வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழர்கள் பாசமற்ற, உறவுகளற்ற ஒரு சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு சூழல்களால், ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள், ஒரு குழந்தை என்ற நிலை வந்துவிட்டதால், எதிர்காலத்தில் அண்ணன், தங்கை, மாமன், அத்தை, அத்தாச்சி என்ற உறவு முறைகளே அருகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. உடன்பிறந்தவர்கள் இருந்தால்தானே உறவுகள் நீடிக்கும்.
இதனால்தான் சமூகத்தில் வன்முறையும் வக்கிரங்களும் மலிந்து போய்விட்டன. பெண் என்றாலே அனுபவிக்கும் போகப் பொருள் என்ற நினைக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள் ஆண்கள். அதன் விளைவுதான் ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது மூதாட்டி வரை சிதைக்கப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றவன் வயிற்றில் நெருப்போடு காத்திருக்கிறான்.
தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில்தான் கொம்பன், கங்காரு போன்ற உறவுகளின் மேன்மையைச் சொல்லும் படங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. தங்கை என்ற உறவைக் கொண்டாடும் கங்காரு, இந்த தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டிய படம். ஒரு கங்காரு தன் குட்டியை ஈன்றதிலிருந்து அது தானாக தன் வேலைகளைச் செய்யும் வரை வயிற்றின் கதகதப்பிலேயே வைத்து வளர்த்து எடுக்கிறதே.. அப்படி தன் தங்கையைப் பாதுகாக்கும் அண்ணனை இந்தப் படத்தில் பார்த்தேன்.
கங்காரு படத்தை இயக்கிய சாமி, தயாரித்த சுரேஷ் காமாட்சி, நடித்த கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்,” என்றார்.
நேபாளத்தில் உ ள்ள தமிழர்கள் பத்திரம்: தமிழக அரசு அறிக்கை
கோவில் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உதவி மையங்கள் மூலம் எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாலில் தமிழர்கள் யாராவது சிக்கியிருக்கிறார்களா? என தேடும் பணியை தமிழக அரசு உடனடியாக முடுக்கி விட்டுள்ளது. அவர்களை மீட்டுக் கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சுற்றுலா மற்றும் ஆன்மிக யாத்திரையாக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கியிருப்பதாக தெரிகிறது. எனினும், யாரும் பயப்பட தேவையில்லை. அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள். உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறையும் உறுதி செய்துள்ளது. நேபாலில் சிக்கியுள்ள தமிழர்களின் உறவினர்கள் 011-21493460 மற்றும் 011-24193456 டெல்லியின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 1070 என்ற இலவச உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
நிலநடுக்கம்: தேசியப் பேரிடராக அறிவிப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம், நில அதிர்வுகள் தாக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை தேசியப் பேரிடராக நேபாளம் அறிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா முழு வீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தன் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ளது தேசியப் பேரிடர் என நேபாள அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன் [Best_Wordpress_Gallery id=”15″ gal_title=”Actress Meera mithun”]
நேபாளத்தில் நிவாரணப் பணிகள் தாற்காலிக நிறுத்தம்
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின் பேரழிவில் இருந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் ஒரு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீட்பு பணிகள் சிறிது பாதிக்கப்பட்டன. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

