Home Blog Page 6056

வேண்டுமென்றே தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா ஆதங்கம்

roja-actressசென்னை: ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்களை வேண்டும் என்றே ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஏப்.7ம் தேதி திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர போலீஸார் வேண்டும் என்றே 20 தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக நடிகை ரோஜா கூறியுள்ளார். திருத்தணியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர மாநில அரசு உத்தரவுப்படி போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆந்திர சிறப்பு படை போலீஸார் வேண்டுமென்றே தொழிலாளர்களை சுட்டுக்கொன்று விட்டு, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட பழைய செம்மரங்களை வரிசையாகப் போட்டுள்ளனர்” என்று கூறினார்.

நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள்: அதிர்ச்சியில் உறவினர்கள்

புது தில்லி: நேபாளத்தில் இன்று பிற்பகல் 11.56 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தது குறித்தும், கட்டடங்கள் இடிந்து சேதம் அதிகரித்திருப்பது குறித்தும் வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் இருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து சென்ற சுமார் 125 சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த சுமார் 125 சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தில் உள்ளனராம். மேலும், நாசிக்கைச் சேர்ந்த 80 பேர் நேபாளத்தில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளதாகவும், மலையேற்றப் பயிற்சிக்கு சுமார் 20 பேர் வரை சென்றிருப்பதாகவும் மகாராஷ்டிர தகவல் மையம் தெரிவித்துள்ளது.

டண்டனக்கா பாடலுக்கு 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்திரன் வழக்கு

t-rajendarடி.ராஜேந்தர் மனு மீது ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் வரும் ‘டண்டனக்கா நக்கா நக்கா…’ பாடல் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறி அந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த பாடலை உருவாக்கியதற்காக இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் டி.ராஜேந்தர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் திரையுலகில் நான் நடித்துள்ள பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ‘டண்டனக்கா நக்கா நக்கா…’ என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். டி.இமான் இசையமைத்த அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக்கள், என்னுடைய உச்சரிப்புக் கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தொடர்பாக என்னிடம் எந்த அனுமதியையும் அவர்கள் பெறவில்லை. இந்த பாடல் குறித்து நடிகர் ஜெயம்ரவி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் டி.ராஜேந்தரின் ரசிகனாக படத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், படம் முழுவதும் என்னை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெறலாம். எனவே, ரோமியோ ஜூலியட்’ படம் வெளியாவதற்கு முன்பு வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து, படத்தை பார்த்து அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் குறித்த அறிக்கையை இந்த நீதிமன்றம் பெறவேண்டும். மேலும், ‘டண்டனக்கா நக்கா நக்கா’ பாடலுடன், ‘ரோமியோ ஜூலியட் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க ரோமியோ ஜூலியட்’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நான் கல்யாணத்திற்கு தகுதியில்லாதவள்: லட்சுமி மேனன்

lakshmi menon812ம் வகுப்பு தேர்வில் பிஸியாக இருந்ததால் கொம்பன் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்க மறுத்து வந்தார் லட்சுமி மேனன். லட்சுமி மேனன் திருமணத்திற்கு தயாராகி வருவதால் பட வாய்ப்புகளை மறுத்து வருவதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தது. தற்போது அதற்கு பதிலளித்த லட்சுமி மேனன், நான் திருமணத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லை. தனியாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நிறைய ஆண்களை நான் ஏமாற்றி இருக்கிறேன். எனவே காதல் கல்யாணம் போன்ற உறவுகளுக்கு நான் தகுதி இல்லை என்று கருதுகிறேன். நான் சினிமாவை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. அஜித் படத்தில் அவரது தங்கையாக நடிக்க என்னிடம் கேட்டுள்ளனர் என்று லட்சுமி மேனன் கூறினார்.

இணைய தளங்களில் பரவும் அனுஷ்காவின் ஆபாச வீடியோ!

anushka28நடிகைகளின் ஆபாச வீடியோ, குளியல் வீடியோ இணையத்தில் வெளியாவது பிறகு அதில் இருப்பது நான் இல்லை என்று சம்பந்தப்பட்ட நடிகைகள் கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணுவது கோலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. த்ரிஷாவில் ஆரம்பித்து தற்போது உள்ள ஹன்சிகா வரை பலரது வீடியோக்களை கோடம்பாக்கம் பார்த்து விட்டது. தற்போது அனுஷ்காவின் பெயரில் இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் ஆபாச வீடியோ பரவி வருகிறது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்கா தானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எப்படி இருந்தாலும் அதிலிருப்பது நான் இல்லை என்று தான் சொல்ல போகிறார்…

விவசாயி தற்கொலை: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிய நடவடிக்கை

புது தில்லி: நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், விவசாயி கஜேந்திர சிங் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், விவசாயியின் தற்கொலைக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து பேசியதுடன், பேரணியையும் தொடர்ந்து மேற்கொண்டார். ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்கள்தான் கஜேந்திர சிங்கைத் தூண்டிவிட்டனர் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் விவசாயியின் இந்தத் தற்கொலைப் பிரச்னை அரசியலாக்கப்பட்டது. இதனிடையே தில்லி அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரித்து வரும்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில் தில்லி போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, முறையான அனுமதி கேட்டு, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அணுகியிருப்பதாகவும், அவர் அனுமதியின் பேரில், கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம்: மோடி தலைமையில் அவசர ஆலோசனை

புது தில்லி: தலைநகர் தில்லி, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கி.மீ. தொலைவில் 15கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் போகராவில் இருந்து தமிழகம் வரை உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின. இந்நிலையில், நிலநடுக்கம் தொடர்பாக உயர்மட்டப் குழுவுடன் பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். நேபாள பிரதமர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பதால், அவரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றும் முடியவில்லை. இந்நிலையில், நேபாள குடியரசுத் தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை மோடி கேட்டறிந்தார். இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் நேபாளத்துக்கான உடனடி மீட்புக் குழு அனுப்புவது குறித்து ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்தக் கூட்டம் மதியம் 3 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

பீகாரில் மேற்கூரை இடிந்து 2 பேர் பலி

பாட்னா: பீகாரில் நிலநடுக்கத்தின் விளைவால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இதற்காக 5 குழுக்கள் தனியாக அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்வர் நிதிஷ் குமார் தில்லியில் இருந்து பாட்னாவுக்கு உடனடியாக விரைந்தார். இந்நிலையில் தர்பங்கா மாவட்ட ஆட்சியர் குமார் ரவி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் 8 வயதுக் குழந்தையும் பெண் ஒருவரும் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் 17 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.

நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம்

புது தில்லி: நேபாளத்தை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகு நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது. இதுகுறித்து நேபாளத் தூதரகத்தின் துணைத்தூதர் கிருஷ்ண பிரசாத் தாகல் தெரிவித்தபோது, நேபாளத்தில் மிகப் பெரும் அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் எங்களுக்கு வந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதித்துள்ளது என்றார்.

இந்தியாவின் உடனடி உதவி: நேபாளத் தூதர் உருக்கம்

deep-upadayayaநேபாளத்தில் இன்று முற்பகல் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தொடர்ந்து 4 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் நேபாளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. கட்டடங்கள் பல இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு சுமார் 100 பேர்வரை பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்துக்கு தனது உடனடி உதவிக் கரத்தை இந்தியா நீட்டியுள்ளது பிரதமர் மோடி, உடனடியாகத் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகளை செய்வதாக்க் கூறி செயலில் இறங்கினார். இதனிடையே, தாங்கள் இந்தியாவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் உடனடி உதவிக்கு நன்றி கூறுவதாகவும் இந்தியாவுக்கான நேபாள தூதர் தீப் உபாத்யாய கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துடிப்பான செயல்பாடுகள் நேபாளத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகக் கூறினார். அவர் மேலும், நேபாளத்துக்கு மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவ அவசர சிகிச்சை அமைப்புகள் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை உடனே அனுப்பி வைக்க உதவுமாறும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார்.