Home Blog Page 61

இன்று ஒரு தகவல்: இந்திய விமானப் படை தினத்தில்…!

indian air force day - 2026

இன்று இந்திய விமானபடை தினம், இன்றைய உலகின் சக்திவாய்ந்த விமானபடையில் இந்தியா மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது, விமானபடையினை ஒப்பிடும்போது சீன விமானபடையினை விட இந்தியாவின் திறன் அதிகம் என்பதே நிஜம்

93 ஆண்டுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய விமானபடை தொடங்கபட்டது அப்போதுதான் விமான யுத்தம் உலகுக்கு அறிமுகமாகியிருந்தது இந்தியாவோ பிரிட்டனின் அடிமை தேசமாக இருந்தது

அதுவரை கோட்டைகள், குதிரைகள், பீரங்கிகள் என்றிருந்த களம் விமான வருகைக்கு பின் கடுமையாக மாறிற்று, மேற்கு நாடுகள் இப்படி மாறும்போது இந்தியா பிரிட்டிசாரின் பிடியில் உறிஞ்சபட்டு கொண்டிருந்தது

சுதந்திரம் இங்கு வெறுமனே கொடுக்கபடவில்லை காலடியில் தலையில் பக்கவாட்டில் பாகிஸ்தான் எனும் குட்டிசாத்தானை வைத்து காலத்துக்கும் இந்தியா முன்னேறாதபடி சூழ்ச்சி செய்து கொடுக்கபட்டது

இந்தியாவின் விமானபடை சுதந்திரமான புதிதில் பெரிதாக ஒன்றுமில்லை இதனாலேதான் பாகிஸ்தானால் காஷ்மீருக்குள் புகுந்துவிட முடிந்தது, சீன போரிலும் இந்திய விமானபடை சாதிக்க முடியவில்லை

1965 போர் அப்படித்தான் ஆனால் 1971 போரில் இந்திய விமானபடை மெல்ல எழுச்சி காட்டிற்று அது செய்த நுணுக்கமான தாக்குதலும் வங்கபோர் வெற்றிக்கு காரணம், அப்போரில் கடற்படை பெரும் சாகசம் செய்தது என்றாலும் விமானபடை பக்கபலமாக நின்றது

பின் இந்தியா மெல்ல மெல்ல தன் விமானபடையினை வலுபடுத்தியது முதலில் சோவியத் விமானங்கள் மட்டும் இருந்தன பின் பிரான்ஸின் ஜாகுவார் மிராஜ் விமானங்கள் வந்தன, இந்தியாவின் பாதுகாப்பு பலபடுத்தபட இன்னும் அது வளர்ந்தது

1980க்கு பின் இந்திய விமானபடை புதிய உச்சத்தினை எட்ட ஆரம்பித்தது, இந்தியாவில் அது ராணுவ பலம் மட்டுமல்ல பல நாடுகளில் நிவாரணம் காவல் என பெரும் கடமையாற்றியது

இலங்கையில் 1987ல் விமானத்தில் இருந்து உணவுபொருள் வீசி இலங்கையினை மிரட்டியது தொடங்கி உலகின் பல பாகங்களிலும் இந்திய விமானபடை சாகசம் செய்தது முக்கியமாக நிலநடுக்கம் புயல் என பல விஷயங்களில் பல நாடுகள் பாதிக்கபடும் போது இந்திய விமானபடையின் பெரிய விமானங்களே பொருட்களுடன் முதலில் செல்லும்

இந்திய விமானபடையின் முதல் முக்கிய வெற்றி கார்கில் போர், அங்கு தரைபடை அடிவாங்கும் போது விமானபடைதான் கைகொடுத்தது அதுவும் மிராஜ் ரக விமானங்கள் சாசகம் செய்தபின்பே பாகிஸ்தான் தரப்பு ஓடிற்று

இந்திய தரப்பின் விமானபடையின் பலம் அதிகரிப்பதை கண்டே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எப் 16 ரகத்தை கொடுத்தது

இந்திய விமானபடை பெரும் எழுச்சி பெற்றது நிச்சயம் மோடி காலத்தில்தான் அதுதான் தரமான ரபேல் விமானங்களை வாங்கியது, இன்னும் 100 விமானங்களுக்கு பதிவு செய்திருக்கின்றது

இந்தியாவில் சொந்தமாக தேஜஸ் விமானங்கள் தயாரிககப்டுகின்றன, உச்சமாக ஆறாம் தலைமுறை விமானத்தை தேசமே தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றது

பால்கோட் தாக்குதலில் இந்திய விமானபடையின் பங்கு அளப்பறியது என்றாலும் கடந்த மே மாதம் நடந்த ஆப்பரேஷ்ன் சிந்தூர் இந்திய விமானபடையின் பலத்தை உலகம் வியக்க சொன்னது

நான்கே நாட்களில் கப்பல் படை, தரைபடை உதவியின்றி பாகிஸ்தானை தனி அணியாக பந்தாடி காட்டியது இந்திய விமானபடை, மிக துல்லியமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலான தாக்குதல், பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு சேதாரமில்லாமல் அதன் ராணுவ விமானம் மேல் துல்லிய தாக்குதல் என அசத்தியது இந்தியா

பால்கோட் சம்பவத்திலே அமெரிக்காவின் எப் 16 விமானத்தை வீழ்த்திய இந்தியா இந்த போரிலும் ஒரு பாகிஸ்தான் விமானமும் மேல் எழும்பாதவாறு அடித்து போட்டது அமெரிக்க விமானம் சீன விமானம் உள்பட‌

விமானபடை எனும் போது தாக்குதல் மட்டுமல்ல தற்காப்பும் வரும் அவ்வகையில் உலகில் சிறந்த வான்பாதுகாப்பு வளையத்தை அது கொண்டிருக்கின்றது

இந்திய விமானபடைக்கு 42 பிரிவுகள் கொண்ட படைபிரிவு அவசியம் ஆனால் காலாவதியான பழைய விமானங்களை இன்னும் பழைய தலைமுறை விமானங்களை அகற்றி பார்த்தால் 32 பிரிவுதான் வரும்

இதனால் மின்னல் வேகத்தில் மோடி அரசு அந்த இடைவெளியினை குறைக்கின்றது ரபேல் விமான கொள்முதல், இந்தியாவில் ரஷ்ய பிரான்ஸ் உதவியுடன் தயாரிப்பு, தேஜஸ் விமானங்கள் தயாரிப்பு என அது மிகுந்த பரபரப்பில் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றது

தேசம் சுதந்திரம் பெறும்போது மேலை நாடுக்ள் பெரும் விஞ்ஞான பலத்தில் இருந்தன இங்கோ தரித்திர்ம் மட்டும் இருந்தது

இந்த 90 ஆண்டுகளில் அதை முறியடித்திருக்கின்றோம், கிட்டதட்ட அவர்கள் அளவுக்கு பலமோடு இருக்கின்றோம் அடுத்த சில வருடங்களில் நிச்சயம் அவர்களை கடந்தும் செல்வோம்

ஆறாம் தலைமுறையில் அவர்களுக்கு சவால்விடுகின்றோம், இனி ஏழாம் எட்டாம் தலைமுறையில் தேசம் உலகின் முதல் நிலை விமானபடையாக நிச்சயம் இருக்கும்

இது பரத்வாஜ முனிவர் காலத்திலே விமான சாஸ்திரா என விஞ்ஞானம் செய்த நாடு விமானம் செய்த நாடு,, அதன் புராண இதிகாசமெல்லாம் விமானம் தொடர்புடையதே

அப்படியான ஞானபூமி தன் பொற்காலத்தை மீட்டெடுக்க துவங்கியிருகின்றது, பாரத விமானபடையின் வீரர் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவந்து சாதித்திருக்கின்றார்

தேசம் வான்படையில் பெறும் அனுபவமெல்லாம் விண்வெளியிலும் இனி சாதிக்க கைகொடுக்கும்

அதுவும் பெண்கள் இயக்கும் விமானபடையில் இந்திய விமானபடையே முதலிடத்தில் இருக்கின்றது என்பது தனித்துவமான விஷயம் , ஆப்பரேஷன் சிந்தூரில் இந்திய் பெண் விமானிகளே ஆபத்தான தாக்குதலை அற்புதமாக செய்து உலகை வியக்க வைத்தார்கள், இந்திய பெண்களின் வீரத்தை பறைசாற்றுவதும் இந்த விமானபடையே

உலகின் மிக பலம் வாய்ந்த விமானபடை என இன்று கருதபடும் இந்திய விமானபடையினருக்கு, தேசத்தின் முக்கிய பலமாக வான் அரணாக நின்று காக்கும் தேசத்தின் வான் காவலர்களுக்கு பெரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உற்சாகமாக தேசம் தெரிவிக்கின்றது அவர்களுக்காக பிரார்த்திக்கின்றது

“வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவின் படி வானத்தையும் கடலையும் ஒருசேர அளந்து தேசம் காக்கும் அந்த வீரர்களை தேசம் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! : ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை!

karur tvk meting vijay speech - 2026

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக  எழுத்தாளர்கள்  எவரும்  அரசியல்  செய்யக் கூடாது என்று  ‘படைப்பாளர்கள்  சங்கமம்’  கூட்டறிக்கை  வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கை:

கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த நிகழ்வு விபத்தா,  சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில்தான்,  ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.

போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது,  நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும். 

ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து  அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை  மாநில அரசின் தவறுகள். 

மேலும், கண்மூடித்தனமாகக் கூடி  நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு. 

இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது. 

இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில்  ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.

இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட  இயலாது.  

நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும்  முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு. 

இந்தத் தருணத்தில்,  பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது  அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது. 

எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின்  நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம். 

கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  

-தமிழக நலனில் அக்கறையுடன்…

  1. ‘திராவிட மாயை’ சுப்பு, சென்னை
  2. இசைக்கவி ரமணன், சென்னை
  3. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சென்னை
  4. பேராசிரியர் ப.கனகசபாபதி, கோவை
  5. கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை
  6. எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஈரோடு
  7. கவிஞர் ரவி சுப்பிரமணியன், சென்னை
  8. கவிஞர் பெ.சிதம்பரநாதன், கோவை
  9. கவிஞர் லட்சுமி மணிவண்ணன், நாகர்கோவில்
  10. பத்ரி சேஷாத்ரி, சென்னை
  11. மோகன் ஜி ஷத்ரியன், சென்னை
  12. பி.டி.டி.ராஜன், சென்னை
  13. இயகோகா சுப்பிரமணியம், கோவை
  14. அர்ஜுன் சம்பத், கோவை
  15. பேராசிரியர் உமையொருபாகன், நாகர்கோவில்
  16. வானவில் க.ரவி, சென்னை
  17. எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம்
  18. பா.பிரபாகர், சென்னை
  19. ம.வெங்கடேசன், சென்னை
  20. என்.சி.மோகன்தாஸ், சென்னை
  21. டாக்டர் சீனிவாசகண்ணன், நாகர்கோவில்
  22. பத்மன், சென்னை
  23. நம்பிநாராயணன், சென்னை
  24. வ.மு.முரளி, திருப்பூர்
  25. ஹேமா கோபாலன், சென்னை
  26. மீனாட்சி ஸ்ரீதர், சென்னை
  27. ஜவஹர் வெங்கடசாமி, சென்னை
  28. பாஸ்கர் சுப்பிரமணியம், சென்னை
  29. ஒமாம்புலியூர் ஜெயராமன், சென்னை
  30. ஜெயகிருஷ்ணன் கோபால், சென்னை
  31. ஆமருவி தேவநாதன், சென்னை
  32. செங்கோட்டை ஸ்ரீராம், சென்னை
  33. சந்திர.பிரவீண்குமார், சென்னை
  34. ஹரன் பிரசன்னா, சென்னை
  35. ஜடாயு, பெங்களூரு
  36. பி.ஆர்.மகாதேவன், சென்னை
  37. சத்தியப்பிரியன், சேலம்
  38. எஸ்.ஜி.சூர்யா, சென்னை
  39. கோதை ஜோதிலட்சுமி, சென்னை
  40. பி.வெங்கடாசலபதி, திருநெல்வேலி
  41. முனைவர் காயத்ரி சுரேஷ், சென்னை
  42. அருட்செல்வப்பேரரசன், திருவொற்றியூர்
  43. கவிஞர் சுரேஜமீ, சென்னை
  44. கவிஞர் உமாபாரதி, சென்னை
  45. கவிஞர் பாபு பிரித்திவிராஜ், நாகர்கோவில்
  46. கவிஞர் சுதே.கண்ணன், நாகர்கோவில்
  47. கவிஞர் அமுல்ராஜ், திருவண்ணாமலை
  48. கவிஞர் மீரா வில்வம், மும்பை
  49. கவிஞர் லட்சுமி சாஹம்பரி, பெங்களூரு
  50. கவிஞர் திருமலைக்கண்ணன், ஸ்ரீரங்கம்
  51. கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், திருப்பூர்
  52. கவிஞர் சிவதாசன், திருப்பூர்
  53. கோவிந்தராஜ், திருப்பூர்
  54. விசாலி கிருஷ்ணன், சென்னை
  55. கமலநாதன். சென்னை
  56. கவிஞர் பால்முகில், சென்னை
  57. கவிஞர் துரைசிங், கன்னியாகுமரி
  58. கவிஞர் இயற்கை, செஞ்சி
  59. கவிஞர் நந்தலாலா, சென்னை
  60. கவிஞர் சுராகி, திருவொற்றியூர்
  61. கவிஞர் மீ.விஸ்வநாதன், சென்னை
  62. கவிஞர் விவேக்பாரதி, சென்னை
  63. கவிஞர் எஸ்.சுவாதி, சென்னை
  64. கவிஞர் தில்லைவேந்தன், சென்னை
  65. கவிஞர் ஹரிஹரன், சென்னை
  66. கவிஞர் முரளிகிருஷ்ணா, சென்னை
  67. கவிஞர் விஜயகிருஷ்ணன், சென்னை
  68. கலைச்செல்வி ஸ்ரீநிவாஸ், சென்னை
  69. வழக்கறிஞர் எம்.விஜயா, சென்னை
  70. ராதா எஸ்.தேவர், சென்னை
  71. ராமசுப்பிரமணியன், சென்னை
  72. ராகவேந்திரா, சென்னை
  73. நடராஜ சாஸ்திரி, சென்னை
  74. ஜனனி ரமேஷ், சென்னை
  75. முனைவர் செ.ஜகந்நாத், மதுரை
  76. சோ.விபின்ராஜ், கன்னியாகுமரி
  77. ஜா.விநாயகமூர்த்தி, விழுப்புரம்
  78. அசோக்ராஜ், கும்பகோணம்
  79. சே.வெங்கடேசன், திருவண்ணாமலை
  80. பத்மா சந்திரசேகர், சென்னை
  81. பொன்.மூர்த்திகன், பறங்கிப்பேட்டை
  82. நிழலி, பெரம்பலூர்
  83. பாவலர் கா.நேசன், திருகளப்பூர்
  84. ச.மோகன், பெரம்பலூர்
  85. தேவரசிகன், கும்பகோணம்
  86. ஜி.பி.இளங்கோவன், கும்பகோணம்
  87. மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம்
  88. கே.மணிமாறன், சென்னை
  89. திருமை பா.ஸ்ரீதரன், சென்னை
  90. பி.வீரராகவன், சென்னை
  91. பேராசிரியர் ஜோஸபின்மேரி, பாளையங்கோட்டை
  92. பேராசிரியர் பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி
  93. வி.வி.பாலா, சென்னை
  94. விதூஷ், சென்னை
  95. கே.ஜி.ஜவர்லால், சென்னை
  96. முனைவர் சடகோபன், சென்னை
  97. முனைவர் தர்மசேனன், சென்னை
  98. சக்திவேல் ராஜகுமார், சென்னை
  99. ஜெயந்தி நாகராஜன், சென்னை
  100. கே.கந்தசாமி, கோவை
  101. புதுகை பாரதி, புதுக்கோட்டை
  102. தசரத் ஷா, காஞ்சிபுரம்
  103. அருண்பிரபு, சென்னை
  104. ஆனந்த்பிரசாத், சென்னை
  105. துக்ளக் சத்யா, சென்னை
  106. ஆர்.ராமமூர்த்தி, சென்னை
  107. குமரேசன், சென்னை
  108. திவாகர், சென்னை
  109. தேவப்பிரியா, சென்னை
  110. ஆண்டனி, சென்னை
  111. அரவிந்தா நாஞ்சில், சென்னை

மற்றும் பலர் (200க்கு மேற்பட்டோர்)

விடுதலைக்கு வழி: ஓர் எழுத்தாளரின் வாழ்க்கையை மாற்றிய ஆர்.எஸ்.எஸ்.!

rss 100 years celeb - 2026
#image_title

விடுதலைக்கு வழி: ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை மாற்றிய சங்கம்!

— அத்வைத கலா —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

நான் எப்போதும் ஒரு நாடோடி போல ஊரை விட்டு வேறொரு ஊருக்கு குடியேறுவது, நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு போய் வாழ்வது என்பதை இயல்பாக கொண்டவள். இந்த நாடோடி வாழ்க்கை என்னை இந்தியா முழுக்கவும் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் கொண்டு சென்றுள்ளது. கூடவே நான் எழுத ஆரம்பித்தேன். நாவல்கள் திரைக்கதைகள் எழுதினேன். மக்கள் அதை படித்திருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. சிலர் என் பெயரைக் கூட தெரிந்து வைத்திருந்தனர். இந்த அங்கீகாரம் கிளுகிளுப்பை கொடுத்தாலும் அதன் அடியில் அமைதியாக ஆனால் தொடர்ந்து ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது. உண்மையில் நான் எந்த இடத்தை சேர்ந்தவள் ?

எல்லா பயணங்களுக்கும் பிறகு நான் ‘வந்தடைந்தேன்’ . அமெரிக்காவில் என்னுடைய புத்தகம் வெளியானது. நூல் வெளியீட்டுகளின் தலைமையிடமான நியூயார்க் நகரில் என்னுடைய வெளியீட்டாளர் எனக்கு ஒரு விருந்து கொடுத்தார். ட்ரூமன் கபோட்டின் அலங்காரம் நிஜ வாழ்க்கைக்கு வந்த மகிழ்ச்சி.

இருந்தாலும் லேசான வெறுமை எனக்குள் இருந்தது. மகிழ்ச்சி இல்லாமல் இல்லை. பெருமையாகவும் உவப்பாகவும் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று இல்லாததை போல் இருந்தது. வூட்டி ஆலன் சினிமாவில் வரும் கதாபாத்திரம் போல் நான் ஒரே மாதிரியான, மகிழ்ச்சியுடன் இருந்தேன். அது நான் தான் ஆனால் நானில்லை.

சில ஆண்டுகள் கழித்து அதே உணர்வு மீண்டும் வந்தது. இந்த முறை வேறொரு வடிவில். என்னுடைய கஹானி (கதை) திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. அப்போது வான்கூவரில் கரன் ஜோகரிடமிருந்து விருது பெற மேடை ஏறினேன். அவர் கண்ணாலே என்னை அளந்தார். விருது பெற்றாலும் எனக்குள்ளே இருந்த ஆள் அந்த சூழ்நிலைக்கு நான் பொருந்தி போகாததை கண்டு கொண்டான். மீண்டும் ஒரு பெருமைமிகு தருணம். ஆனால் அதே அசௌக்கரியமான உணர்வு.

அறிமுகமான பாதையில் சரியான மைல்கல்களை பார்த்தபடியே பயணித்து ஆனால் காணாமல் போய் விடுவதை கற்பனை செய்து பாருங்கள். அது நான்தான். இந்த நிலையில்தான் என்னுடைய பாதை வேறு திசையில் திரும்பியது.

புத்தக உலகத்திற்கு முன்பொரு வில்லன் இருந்தார். அவர் பெயர் தீனாநாத் பாத்ரா . அவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் . ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்தவர். புத்தகங்களை தடை செய்யும் பணியை தானே விரும்பி ஏற்றுக் கொண்டவர். வென்டி டோனிகரை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் மிகவும் பிரபலம். நான் அப்போது ஒரு செய்தித்தாளில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இணைய சீண்டலுக்கு (Troll) முந்தைய காலம் அது. என்னுடைய கீச்சக நண்பர் (முன்பு ட்விட்டர் இப்போது எக்ஸ் தளம்) ஒருவர் பாத்ராவை சந்திக்க வருகிறாயா என்று கேட்டார். அவர் ஒரு ஸ்வயம்சேவகர் . எனக்கு இணையம் வழி நண்பர்.

புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என்பவர்களை எனக்கு பிடிக்காது என்று அவரிடம் கறாராக சொல்லிவிட்டேன் . ‘சும்மா வந்து பாரேன்’ என்றார் அவர். சீரிய முற்போக்கு சிந்தனையின்படி, எழுத்துலக எதிரியை சந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன். போவதற்கு முன்பு அவரைப் பற்றிய விஷயங்களை தேடி தெரிந்து கொண்டேன். எல்லா விஷயங்களிலும் அவருடன் முரண்படுவேன் என்று நினைத்துக் கொண்டு சென்றேன்.

மாறாக , நான் என்ன நினைக்கிறேன் என்பதை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய நம்பிக்கைகளுக்காக உறுதியோடு நிற்கும் ஒரு முதியவரை சந்தித்தேன். ஊடக செல்வாக்கு மிக்க மிகப்பெரிய வெளியீட்டாளர், வழக்கறிஞர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர், அந்த முதியவரை எதிர்கொண்டு தனது நூலாசிரியரை பாதுகாக்க வருவார் என்று எதிர்பார்த்த போது அவர் நீதிமன்றம் பக்கமே வரவில்லை.

பாத்ராவுடன் நான் உடன்படவில்லை. அதேவேளையில் அவரது அர்ப்பணிப்பை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எரிச்சலுடன் தொடங்கிய உரையாடல் நட்பான சூழலில் முடிந்தது. என்னை வழியனுப்ப படிக்கட்டு வரை வந்தவர், படிக்கட்டை பயன்படுத்து. அது நீரிழிவை தள்ளி வைக்கும். சுறுசுறுப்பாக இரு, என்றார். அதுவரை மோதிக் கொண்டு இருந்தவர் இப்பொழுது அக்கறை உள்ள பாட்டனாக மாறிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பும்போது என் கருத்தில் இருந்து மாறவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் நெகிழ்ந்து போனேன்.

நாம் பலருடன் தீவிரமாக முரண்படலாம். சந்திப்பு, உரையாடலுக்கு பின்னால் இருக்கும் உள்நோக்கத்தை சந்தேகப்படலாம். ஆனால் இறுதியில் உங்கள் மனதில் நிற்பது மனிதநேய செயல்கள் தான். விவாதம் செய்த விஷயங்கள் அல்ல, எதிர்பாராத இடத்திலிருந்து வெளிப்பட்ட அன்பு தான் என்ற புரிதல் ஏற்பட்டது. சந்திப்பை பற்றி என்னுடைய பத்தியில் எழுதினேன். அவரை புகழ்ந்து அல்ல, நியாயமாக எழுதினேன். அதுவரை அவர் பெற்றதை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி அல்ல அது தொடக்கம் மட்டுமே.

பிறகு சர்சங்கசாலக் உடனான சந்திப்பு. அவர் ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கும் போது ‘எல்லாம் ஓகே தானே?’ என்று கண்களில் குறும்பு மின்ன வரவேற்பார். அது சாதாரண முகமது தான் ஆனால் எனக்கு முதல் சந்திப்பை நினைவூட்டியது. வேக வேகமாக வந்து உறவுகளுடன் சேர்ந்த முதல் நிகழ்வு. அதன் பிறகு அவர் கூறிய காலத்தை வென்று நிற்கும் ஆலோசனை, மெதுவாக வேகமெடு , நினைவில்லாடும்.

அந்த ஆரம்ப நாட்களை நினைக்கும் போது சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் வரும் மரியா என்ற கதாபாத்திரம் மனதில் வந்து போகும். தீவிர கருத்தியலாளர்களையோ, கடுமையாக வழிநடத்தும் தலைவர்களையோ நான் பார்க்கவில்லை. ஆனால் கன்னியாஸ்திரி சகோதரிகளுக்கிடையே பொருந்தாத மரியா போல் நானும் ஒன்றுக்கு பின் ஒன்றென தவறான காலடி வைத்தேன். தங்கள் பழக்கத்திற்கு அடியில் மென்மையான, ஆளை எடை போட்டு கட்டம் கட்டாமல் வழிநடத்தும், கன்னியாஸ்திரிகள் படத்தில் வருவார்கள். அது போன்ற அனுபவத்தை பெற்றேன் . சினிமாவில் வந்ததற்கு இணையானது அது.

மரியாவை போலவே நானும் கேள்விகளுடனும் ஆரோக்கியமான அவநம்பிக்கைகளுடனும் பாறை போல் இறுக்கத்தை எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக நான் யார் என்று எடை போடாமல் புன்சிரிப்புடன் அரவணைத்த நேயத்தை பெற்றேன். வாழ்நாள் முழுக்க எனக்கான இடம் எது என்று அலைந்து கொண்டிருந்த நான், இங்கு தானாகவே பொருந்தினேன் . நீங்கள் யாரோவாக இருப்பதை எதிர்பார்க்கும் , அந்த பெயர் சொல்லி அழைக்கும் புத்தக பதிப்பலகத்திற்கும் பாலிவுட்டிற்கும் பழகிய எனக்கு இது ஆச்சரியம் அளித்தது. இங்கு அதெல்லாம் பொருட்டே அல்ல. இங்கு மரியாதை இருந்தது ஆனால் பழகுவதில் படிநிலைகள் இல்லை.

எனது முதல் சங்க அறிமுகத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு ஜெய்ப்பூரில் சர்சங்கசாலக் உரையாற்றும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. சில பெண்களுடன் சேர்ந்து கொண்டு ரயிலில் பயணமானேன். மற்றொரு வியப்பு. எங்கள் எல்லோரையும் ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்தார்கள் . அங்கிருந்த வசதிகளை நான் நீண்ட பார்வை பார்த்தேன். அது குளிர்காலம். நீண்ட டார்மெண்டரியில் படுக்கைகள் வரிசையாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. அங்கு ஒரு குளியல் அறை. அதில் ஒரு குண்டு பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. நான் ஓட்டம் எடுத்தேன். இதுதான் ஆர்எஸ்எஸின் சொகுசா ?. எனக்குத் தெரிந்த குடும்பத்தினருடன் தங்குவதாக சொல்லி விட்டு மாரியார்ட் ஹோட்டலில் போய் தங்கினேன். நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

முதல் நாள் இரவு சற்று அதிகமாக தூங்கி விட்டேன். கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதம். கடைசியில் போய் உட்கார்ந்து கொள்ளுவோம், யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். தவறு . என் ஆடையின் நிறத்தில் தொடங்கி, அடர் ரோஜா நிறம், அமைதியான அந்த கூட்டத்தில் தாமதமாகவும் பரபரப்பாகவும் வந்தது எனக்கும் மற்றவர்களுக்கும் நினைவில் நிற்கும். வழக்கத்திற்கு மாறான தாமதமான வருகையாளரின் அசைவுகள் அந்த மங்கலான ஒளியூட்ட பட்ட அரங்கில் பலரின் தலையை திருப்பும்படி செய்தது.

சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தை பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும் எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களை பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. படப்பிடிப்பு இடமாக இருந்தாலும் புத்தக வெளியீட்டு அரங்கமாக இருந்தாலும் தாமதமாக வருவது சாதாரண விஷயம் என்று நானே சொல்லிக் கொண்டேன்.

சர்சங்கசாலக் உடனான சந்திப்புக்கு பிறகு அவர் என்னை எப்போது சந்தித்தாலும் ‘எல்லாம் ஓகேவா? ‘ என்று கண்ணை மினுக்கி கேட்பார். அது எளிய முகமன் தான் ஆனால் எனக்கு அது முதல் சந்திப்பை நினைவூட்டும். அடுத்து அவர் சொன்ன, மெதுவாக வேகமெடு , என்ற அறிவுரை. எளிய ஆனால் காலத்தை வென்று நிற்பது அது. முதலில் அது முரண்பாடு போல தெரியும். வேகமாக ஆனால் பொறுமையாக. மீண்டும் மீண்டும் என் மூளையில் போட்டு பார்க்க சங்கத்தின் ரிதம் எனக்கு புரிந்தது. அவர்களது செயல் திட்டங்கள் அதன் வீச்சு தசாப்தங்களுக்கு விரிவடைவது. அதே வேளையில் அவற்றின் இலக்கு தலைமுறைகளுக்கு அப்பால் இருப்பது. அவர்கள் லட்சிய பற்றுடன் வேகமாக வேலை செய்கிறார்கள். ஆனால், அதன் பலன்கள் மெதுவாக தான் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் . இது எனக்குள் நங்கூரம் போல் உறுதியாக உட்கார்ந்து கொண்டது. உலகத்துடன் பயணிக்க புதிய வழி கிடைத்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தாகமோ வேகமோ இல்லாமல் பயணிக்க புதிய வழி. இது எனக்கு பெரிய விடுதலையை அளித்தது.

சில உவகைகளும் உள்ளே மறைந்திருந்தன. நான் சுவைத்ததிலேயே மிகவும் ருசியான மாம்பழ சாறு நாகபுரியில் ரேசம்பாக்கில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சின்ன எவர்சில்வர் டம்ளரில் கொடுக்கப்பட்டது தான். அதற்கு பதிலீடாக நாகபுரி பற்றிய சதி கோட்பாடுகளை மனதில் வைத்து பாருங்கள். நிச்சயம் முடியாது. சங்கத்தை தெரிந்து கொள்ள ஒரே வழி அவர்களுடன் சேர்ந்து பழகுவது தான்.

பல ஆண்டுகளாக, நான் எந்த ரயில் நிலையத்தில் இறங்கினாலும் என்னை வரவேற்க குடும்பம் நின்றிருக்கும் . தலைவர்களைப் போல பிரம்மாண்டமான வரவேற்பு இல்லை. எளிய ஆனால் நேசமிக்க செயல். யாரோ ஒருவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வந்து வரவேற்பார். என் பெட்டியை எடுத்துக் கொள்வார். இப்போது தான் முதல் முறை சந்தித்தாலும் ஏதோ நன்கு தெரிந்தவரை மீண்டும் சந்திப்பது போல பயணம் எப்படி இருந்தது என்று கேட்பார். அவர் ஒரு ஸ்வயம்சேவகராக இருப்பார்.

நான் இந்தியா முழுக்கவும் பயணித்திருக்கிறேன். மாநிலத்திற்கு மாநிலம் சங்கத்தின் நடவடிக்கை வெவ்வேறாக உள்ளது. ஹரியானாவில் நகைச்சுவை உணர்வுடன், கேரளத்தில் செயலுக்கம் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஸ்வயம்சேவகர்கள் எல்லோரும் குடும்பத்தினரை போலவே இருக்கிறார்கள். உச்சரிப்பு, உணவு மாறுபடலாம். ஆனால் அன்பும் பரிவும் ஒன்று போலவே இருக்கிறது.

நான் பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் வெளியே போனதும் அந்த நிலப்பரப்பை தெரிந்து கொள்கிறீர்கள். அங்குள்ள நல்லவற்றை கற்றுக்கொள்கிறீர்கள். அங்குள்ளவற்றுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் எப்போதும் மக்களை இணைத்து வைத்திருப்பது உறவு கயிறு தான்.

சங்கத்துடன் பழகிய பிறகுதான் ரத்த உறவுகளுக்கு அப்பால் குடும்பம் விரிவடைய முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். சங்கத்திற்கென்று நம்பிக்கை இருக்கிறது. அது மதம் சார்ந்த நம்பிக்கை அல்ல. மாறாக அது சமுதாயத்திற்கு, தேசத்திற்கு, பண்பாட்டுக்கு உரியது. அது இறுகிய கருத்தியலில் வேர்கொண்டது என்று தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது ஒரு கோட்பாட்டிலோ அதன் மீதான பிடிவாதத்திலோ இல்லை. மாறாக சமுதாயத்தில் வேர் கொண்டுள்ளது. அதனால் அது சங்கம். அது பரிவார் (குடும்பம்).

சங்கத்துடனான தொடர்புக்கு நான் விலை கொடுக்க வேண்டியிருந்தது. நான் ‘சங்கி’களுடன் சுற்றுவதாக செய்தி பரவியது. என் உலகத்தைச் சேர்ந்த சிலர் அமைதியாக பின் வாங்கினார்கள் . இலக்கிய விழாக்களுக்கான அழைப்புகள் வருவது நின்று போனது. விருதுகள் வாங்கி இருந்தாலும் திரைப்பட வாய்ப்புகள் அருகின. எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் இல்லை. ஒரு பெரிய செய்தித்தாள் தொடர்ந்து எழுத எனக்கு வாய்ப்பளிப்பதாக சொன்னது. ஆனால் பிறகு கண்டுகொள்ளவில்லை. ‘எப்படி இருக்கே?’ என்று தொடங்கி சகஜமாக தொடரும் உரையாடல்கள் எல்லாம் இப்பொழுது தடுமாறி அமைதியாகி விட்டன. இது எனக்கு புதிதாக இருந்தது. ‘பண்பட்ட’ சமூகம் ஆர் எஸ் எஸ் ஸை எப்படி நடத்தியது என்பது அதுவரை எனக்கு தெரியாமல் இருந்தது.

புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பாதையில் பயணித்தேன். யாருடைய சிறகை சிதைத்தேன் என்பதை பற்றி கவலைப்படாமல் நான் பயணித்தேன். என்னை தெரிந்ததற்காக எத்தனை பேர்கள் கூச்சப்பட்டார்கள் என்று தெரியவில்லை. நேசமுள்ளவர்கள் நான் மூளை சலவைக்கு ஆளானதாக நினைத்தார்கள். மாம்பழ சாறுக்கு அந்த சக்தி இருந்தால், அவர்கள் நினைத்தது சரிதான். மற்றபடி, அது தவறான சத்துருண்டை சாப்பிட்ட கற்பனை தான். நான் எப்போதும் போல் புதியவர்களை சந்தித்தேன். புதுமையான அனுபவங்களை பெற்றேன்.

ஒரு நாள் சங்கத்தில் மூத்தவர் ஒருவரிடம், நண்பர்கள் என்னை தவிர்க்கும் விஷயத்தை பற்றி சொன்னேன். அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். உலகின் பிற்போக்குதனத்தை அனுபவத்தில் பார்த்து, அது மீண்டும் நிகழ்வதை பார்க்கும் முதியவர்களின் கண்களில் தெரியும் சந்தோஷம் அவர் கண்களில் வெளிப்பட்டது. பிறகு, உனக்கு பெரிய விடுதலைதான். யாரையாவது சந்திக்கும்போது அவர்களுக்கு நீ எப்படி தெரிவாய் என்ற கவலை இனி உனக்கில்லை . அந்தப் பிரச்சினை இனி அவர்களுடையது, என்றார். அவர் சரியாகச் சொன்னார். திருகலான புரிதல்களில் இருந்து நான் எதிர்பாராமல் விடுதலை பெற்றேன் . என்னுடைய இருப்பும் நட்புறவும் நடிப்பாக இல்லாமல், இயல்பாக இருந்ததால் எனக்கு அந்த விடுதலை கிடைத்தது.

சங்கத்துடன் பயணிக்க என்னுடைய வாழ்க்கையின் போக்கு மாறியது. ஆனால் எப்போதும் போல் நான் நானாகவே இருந்தேன். எந்தவிதமான பழமைவாதத்தையும் கடைபிடிக்கவில்லை. நானாகவே தொடர முடிந்தது. மேலும் முற்போக்கான தனிமனிதத்துவத்திற்கு அப்பால் செல்ல முடிந்தது. என்னுடைய உலகம் விரிவடைந்தது. என்னுடைய தேசம் எனக்கு உயிர்ப்புள்ளதாக ஆனது. என்னுடைய எழுத்துக்கு ஒரு நோக்கம் கிடைத்தது. அது புத்தக விற்பனையையும் திரைப்பட வசூலையும் மட்டுமே நோக்கமாக கொண்டதாக இல்லை.

மரியாவை போல, அவள் தன் பாடல்களை விட்டுவிட்டு கன்னியாஸ்திரி மடத்தை விட்டு வெளியேறிய போது புதிய ஒத்திசைவை கண்டு கொண்டாள் . என்னுடைய பயணமும் அதுபோலவே இருந்தது. என் குரலை இழக்கவில்லை. மாறாக அது புதிய குழுவுடன் சேர்ந்து பெருகியது. சங்கத்தை அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு கட்டுரையிலோ அல்லது ஒரு புத்தகத்தை படித்தோ தெரிந்து கொள்ள முடியாது.

அதை ஒரு கருத்தியலோடு பிணைக்க முடியாது. ஏனெனில் சங்கம் அதைவிட மேலானது. அது ஒரு மனிதனைப் போல் உயிர்ப்புள்ளது . சில நேரங்களில் அதன் உரையாடல் உங்களை 1800 க்கு இழுத்துச் செல்லும். சில வேளைகளில் 2047க்கு கொண்டு செல்லும். சங்கம் இந்தியாவைப் போல் பன்முகம் கொண்டது. தேசத்தின் எல்லா பகுதிகளும் தனக்கே உரிய வகையில் அதில் எதிரொலிக்கும் . அதே வேளையில் ஆர்எஸ்எஸ் மெதுவாக மலர்ந்து கொண்டே வரும்.

நாம் இந்த பயணத்தில் கொஞ்ச காலம் சேர்ந்து போவோம் . நமக்கு முன்னால் பலரும் பயணித்துள்ளனர். வருங்காலத்திலும் பலர் அதுபோலவே பயணிப்பார்கள். அவ்வப்போது , சுதந்திரமாக பறக்கும் ஆன்மாக்கள் இதனை புரிந்து கொண்டு மெதுவாக தரையிறங்கும்.

நன்றி : தி ஓப்பன் மேகஸீன்


கட்டுரையாளர் விருது பெற்ற நாவலாசிரியர். திரைத்துறையிலும் விருதுகள் பெற்றவர்.


சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (55): தேஹளீதீப ந்யாய: 

samskrita nyaya - 2026

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 55

 தெலுங்கில்: பி.எஸ். சர்மா 
தமிழ் மொழிபெயர்ப்பு: ராஜி ரகுநாதன்
 

தேஹளீதீப ந்யாய: 
தேஹளீ – வீட்டு வாசற்படி, தீப: – விளக்கு 
(ஒரே கல்லில் இரண்டு மாங்காய்)

நுழைவாயிலில் வைத்த விளக்கு வீட்டின் உள்ளும், வீட்டிற்கு வெளியிலும் ஒளியைத் தரும் என்பது இந்த நியாயத்தின் பொருள்.

ஒரே பொருள் அல்லது ஒரே செயல் இரண்டு வித நன்மைகளையும், பயன்களையும் சாதித்துத் தரும் என்று எடுத்துரைக்கும் போது இந்த நியாயத்தை உதாரணம் காட்டுவார்கள். ஒரே சொல்லுக்கு இரு வேறு பயன்பாடுகள் இருக்கும் போதும் இந்த நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள். 

வாசற்படியில் வைக்கும் விளக்கில் கூறும் நியாயம் என்ன? ஒரு செயலில் இரு பயன்களை எவ்வாறு பெறுவது? ஒரு செயலை எங்கே, எப்படிச் செய்தால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்? தீபத்தை எங்கே வைத்தால் இரு புறங்களிலும் வெளிச்சம் வரும்? இவற்றை அறிவோம். 

“ஏகாக்ரியாத்வர்த கரீ” – “ஒரே செயல் இரண்டு பலன்களைக் கொடுப்பது” என்ற புகழ் பெற்ற வாக்கியத்திற்கு இந்த நியாயம் முன்னோடி. 

வீட்டிற்குள்ளே ஒரு தீபமும், வெளியில் ஒரு தீபமும் வைக்காமல் நடுவில் வைப்பது என்பது புத்திசாலித்தனமான செயல். அது ஒரு உத்தி. 

சாதாரணமாக, பலர் தம் வேலைகளிலும் வருமானத்தைப் பெருக்குவதிலும் மூழ்கி விடுவர். அதற்கு ‘கரீர்’ (career), ‘வாழ்க்கைப் பணி’ என்று பெயர் வைப்பார்கள். அதில் முழுவதும் இறங்கி குடும்பத்தை மறந்து விடுவார்கள். சம்பாதிப்பது யாருக்காக என்று சிந்திக்க மாட்டார்கள். தனி மனிதனிடமிருந்து குடும்பம், குடும்பத்தில் இருந்து சமுதாயம், சமுதாயத்தில் இருந்து தேசம் பயனடைய வேண்டும் என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. ஒரு வேலையைச் சிந்தித்துத் திறமையாகச் செய்யும் போது பலனும் அதிகம் கிட்டும். அதைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறுகிறது இந்த நியாயம்.    

பெண் கல்வி:

ஒரே பணியில் இரு இலக்குகளை சாதிப்பதை ஆங்கிலத்தில் ‘Two BIrds at one shot’ என்பார்கள். தமிழில் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்போம். இதனை எடுத்துக் காட்டி அரசியல்வாதி, நவீன சாணக்கியர் என்று பகழப்பெற்றவர், ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், ஸ்ரீ ராஜாஜி (சி. ராஜாகோபாலாசாரி) ஒரு முறை நாக்பூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் உரையாயற்றுகையில் பெண் கல்வியைப் போற்றி, “ஒரு பெண் பட்டதாரி ஆவதென்பது, ஐந்து ஆண் மகன்கள் பட்டதாரி ஆவதற்குச் சமம். பெண்கள் படித்தால் முழுக் குடும்பமும் பயன் பெறும். ஏனென்றால் அவள் தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவாள். அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்கும் ஆசிரியையாக ஆவாள்” என்றார். 

சுவாமி விவேகானந்தர், “வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து, கல்வி கற்பித்து, அறிவூட்டினால், அவர்கள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் கௌரவம் பெற்றுத் தருவார்கள்” என்று பெண் கல்வி பற்றி உரையாற்றியபோது இந்த ‘தேஹளீதீப’ ந்யாயத்தை உதாரணம் காட்டினார். “வீட்டில் பெண்கள் படிப்பறிவோடு விளங்கினால் குடும்பம் முழுவதும் பயன்பெறும்” என்று கூறி சுவாமி விவேகானந்தர் தன் பெண் சீடரான சகோதரி நிவேதிதைக்குப் பெண் கல்வி பற்றி பிரச்சாரம் செய்யும் பணியை ஒப்படைத்தார். அந்த குருவும் சிஷ்யையும் சேர்ந்து ‘தேஹளீதீப’த்தைப் போலக் கீழை நாட்டிலும், மேலை நாட்டிலும் ஆன்மீக ஒளியைப் பரப்பி சிரஞ்சீவிகளாகத் திகழ்கிறார்கள். 

ஆயுர்வேதம்:

“ஏகாக்ரியாத்வர்த கரீ” என்பதற்கு உதாரணமாக ஆயுர்வேத நூல்களில் பல சூத்திரங்கள் உள்ளன. ஆயுர்வேதத்திற்கு இரண்டு வித பலன்கள் உண்டு. ஆரோக்கியமாக இருப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவது, (ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய ரக்ஷணம்). நோயாளியின் நோயைக் குணப்படுத்துவது (ஆதுரஸ்ய விகார ப்ரஸமனம்). இது ஒரே கணையால் இரண்டு இலக்குகளை வீழ்த்துவது என்பதற்கான குறியீடு. 

தாய்ப்பால் குடிக்கும் வயதில் இருக்கும் சிசுக்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் ஆயுர்வேத மருத்துவர்கள் தாய்க்கு மருத்துவம் பார்ப்பார்கள். தாய்க்கு மருந்து கொடுப்பார்கள். அது இருவருக்கும் நன்மை விளைவிக்கும். 

யோக மார்கம் ஒரு தீபம்:

பிராணாயாமத்தால் பல நன்மைகள் உண்டு. மூச்சை வெளியில் விடுவது (ரேசகம்), உள்ளே இழுப்பது (பூரகம்), நிறுத்தி வைப்பது (கும்பகம்) இவை பிராணாயாமப் பயிற்சியின் பகுதிகள். இது வெறும் உடலால் செய்யும் செயல் அல்ல. மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைக்கும் வழி. அமைதியான வாழ்க்கைக்கான  சிறந்த மார்க்கம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்கிறது. 

தர்மம் – சுவரின் மேல் விளக்கு:

“ஏகாக்ரியாத்வர்த கரீ” பற்றிக் கூறுகையில், வியாச முனிவர் வேதனையோடு உதிர்த்த  சொற்கள் கவனிக்கத் தக்கவை. 

“ஊர்த்வ பாஹோரிவ ரௌம்யேஷா 
ந கஸ்சிதபி ஸ்ருணோதி மே !
தர்மாதர்தஸ்ச காமஸ்ச
ஸ கிமர்தம் ந சேவ்யதே !!”

பொருள்: இரண்டு கைகளையும் மேலே தூக்கி கூறுகிறேன். என் பேச்சைக் கேளுங்கள். தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். அதன் மூலம் அர்த்தம், காமம் இரண்டும் கிடைக்கும். தர்மம் என்ற சுவரின் மேல் தீபத்தை வைத்தால் அந்த வெளிச்சம் அர்த்தம், காமம் என்ற இரண்டின் மீதும் பரவும் என்று வியாச மகரிஷி கூறுகிறார். செல்வமும், இன்பமும் (அர்த்தமும், காமமும்) தர்மத்தோடு கூடியதாக இருத்தல் வேண்டும்.  

இதே கூற்றை கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தில் மட்டுமல்ல, பிற நூல்களிலும்   தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் சிறப்பைக் கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல, ஆடம்ஸ்மித், சாமுவேல்சன், ஸ்காட், ஜெகாலன் போன்ற வெளிநாட்டு பொருளாதார அறிஞர்களும் ஒரே குரலில் ‘Ethics in Economics’ பற்றி இதையே கூறுகிறார்கள். 

நேர்மைக்குப் புறம்பான வியாபாரத்தால் தேசத்திற்கு வளர்ச்சி ஏற்படாது என்று ஏறக்குறைய அனைவரும் இப்போது பேசத் தொடங்கி உள்ளார்கள். இது வியாச மஹரிஷி விவரித்த கொள்கைக்கு நெருக்கமாக உள்ளது. தர்மமில்லாத செல்வம் (அர்த்தம்) வீண்.

அதே போல் தர்மமில்லாத கல்வி அரக்கர்களை உருவாக்குகிறது. சைபர் க்ரைம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. ஊழலுக்கு இடம் கொடுக்காத நீதிபதிகளின் மூலம் மட்டுமே தர்மம் நிலைநின்று, சமுதாய நலம் பெறும். தர்மத்தோடு கூடிய கல்வி,  தனிமனித வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி இரண்டுக்கும் வழி வகுக்கிறது.  

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் உரையாற்றுகையில் ‘தேஹளீ தீப’ நியாயத்தை உதாரணம் காட்டி இவ்வாறு கூறினார், “ஆர்எஸ்எஸ் நடத்தும் பாலர் பிரிவில் பயிற்சி பெற்றவன் என்ற தகுதியோடு கூறுகிறேன், அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆடல், பாடல், உடற்பயிற்சி மூலம் சிறுவர்களின் உடல் வலிமை பெறுவது மட்டுமின்றி அறிவும் மலர்கிறது. மைதானத்திற்குச் சென்று கிரிக்கெட் விளையாடினால் கிடைக்கும் நன்மையை விட இது அதிகம். “ஏகாக்ரியாத்வர்த கரீ” என்பதற்கு இது புகழ்பெற்ற உதாரணம். Benifit Multifold” என்றார். 

2020 ல் நேர்ந்த ‘பூஹான் கரோனா’ தொற்று நோயை ஒழிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அளித்த வாக்சின் “கோவிஷீல்ட், கோவாக்சின்” என்ற மருந்துகள் நம் தேச மக்களின் உயிரைக் காத்ததோடு மட்டுமின்றி, பிற நட்பு நாடுகளுக்கும் இலவசமாக விநியோகித்து அந்தந்த தேச மக்களின் உயிரையும் காத்தன. அந்த நாடுகளின் சிநேகத்தையும், நல்லெண்ணத்தையும் சம்பாதித்துக் கொண்டது. “ஆரோக்ய தானம், சிநேகம்” இரண்டையும் அளித்த ராஜதந்திரம், ‘தேஹளீ தீப’ நியாயத்திற்கு உதாரணம். 

ஒரே அம்பில் இரண்டு இலக்குகளையல்ல, ஏழு இலக்குகளைக் குறிபார்த்துத் துளைத்த   பாரதப் படையின் வீரத்தை அண்மையில் பார்த்தோம். பயங்கரவாத தேசமான பாகிஸ்தான் பஹல்காமில் நடத்திய அரக்கச் செயலுக்கு எதிர்வினையாக நம் தேசப் படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்த நியாயத்திற்கு எடுத்துக் காட்டாக நிற்கிறது. 

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தின் ‘நகோடா’ மாவடத்தில் இருக்கும் ‘கைரான்’ மலைகளில் இருக்கும் சுரங்கங்களில் மறைந்து வைத்த அணு ஆயுதங்களை பாரதப் படை வீரியமிழக்கச் செய்தது. பாகிஸ்தானோடு கூட அந்த தேசத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த அமெரிக்காவுக்கும் இதன் மூலம் அடி விழுந்தது. ‘தேஹளீ தீப’ நியாயத்திற்கு இது ஒரு நிகழ்காலச் சான்று. அணு ஆயுதங்கள் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை உலகிற்குத் தெரிய வந்தது. பெரியண்ணனாக உலாவந்த அமெரிக்கா நாட்டின் மதிப்பு குறைந்தது. 

பெருமையோடு ஏற்றுவோம் தேசிய தீபங்களை: 

அண்மையில் ‘மன்கீபாத்’ நிகழ்ச்சியின் போது, காசியில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிஜி, சுதேசி பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் 146 கோடி மக்கள் தொகை, உலகத்தின் பன்னிரண்டிலிருந்து பதினைந்து தேசங்களின் மக்கள் தொகைக்குச் சமம். அதனால் வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவிற்குள் வந்து குவிகின்றன. வெளிநாட்டுப் பொருட்களின் மேல் மோகம் கொள்வது நம் தேசத்திற்கு நன்மை பயக்காது. அதனால்தான் பிரதமர் மோடி அவர்கள், “வரப்போகும் பண்டிகைகளிளும், திருமணங்களிலும் தேவையான துணிகளை இந்தியாவில் நெய்தவற்றையே வாங்கி உடுத்துங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்த சுதேசி முழக்கம் (Vocal for Local) ஒரு மந்திரம். இதனால் ‘ஆத்மநிர்பர்’ (சுயச்சார்பு) பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத்), தன்னிறைவு பாரதம் ஆகியவற்றை நோக்கி அடி எடுத்து வைப்பதில் வேகம் பிடிக்கும். சுதேசி மந்திரம் வீட்டிலும் வெளியிலும் வெளிச்சத்தை நிரப்பும் விளக்கு. இந்த மந்திரம் இந்திய மக்கள் பலரின் இல்லங்களில் விளக்கேற்றும். பல தொழிலாளிகளின் குடும்பங்களில் விளக்கு எரியும்.  சுதேசி பொருட்களை உற்சாகப்படுத்தினால் வேலை வாய்ப்போடு கூட திறமையும் வளரும். உற்பத்தியும் தரமும் வளர்ந்தால் ஏற்றுமதியும் உயரும். எந்த ஒரு தேசமும் நம் மீது கட்டுப்பாடோ தடையோ விதிக்க முடியாது. அவ்விதமாக சுதேசி தீபம் உலக நாடுகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும். 

டில்லியில் தீபம்:

இந்தியத் தலைநகருக்கு தீபாவளியில் இருந்து தான் டெல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பாரத தேசத்திற்கு ‘வாயிற்படி’ என்று பெயர். தற்போது நியூ டெல்லியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் தீபத்தைப் போன்றவர்கள். இந்த தீபங்கள் நம் தேசத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வெளிச்சத்தை நிரப்பி வருகின்றன. 

41 பேர் உயிரிழந்த சம்பவம்: கரூரில் பாஜக., மௌன அஞ்சலி!

IMG 20251004 WA0025 - 2026

த வெ க கூட்ட நெரிசலில் அப்பாவி உயிர்கள் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ! கரூரில் பாஜக சார்பில் மெளன அஞ்சலி !

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று த வெ க தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்துக்காக வந்த போது அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 41 நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்திற்காக, கரூர் காவல்நிலையம் எதிரே உள்ள குமரன் சிலை முன்பு, உயிரிழந்த அப்பாவி மக்கள் 41 நபர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பாஜக சார்பில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் செல்வம், மாநில ஓ பி சி அணி சமூக ஊடக பொறுப்பாளர் கார்த்திகேயன், மாநில ஓ பி சி அணி செயலாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.

Ind vs WI Test: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய அணி!

indian women cricket beaten south africa in chennai - 2026

இந்தியா- மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளின் முதல் டெஸ்ட் – இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இந்த சுற்றுப்பயணம் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் 2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

ஏப்ரல் 2025 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025–26 உள்நாட்டு சர்வதேச சீசனின் ஒரு பகுதியாக, சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணையை உறுதிப்படுத்தியது.

முதல் டெஸ்ட், அகமதாபாத்தில், 02 அக்டோபர் முதல் 6 அக்டோபர் வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் அக்டோபர் 10 முதல் 14 வரை நடக்க உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் முதலில் கொல்கொத்தாவில் நடக்கவிருந்தது. ஆனால் பின்னர் அது டெல்லிக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இந்திய அணியில் ஷுப்மன் கில் அணித் தலைவராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா துணை அணித் தலைவராக இருக்கிறார். அணியில் இடம்பெறும் மற்ற வீரர்கள் – (1) ஜஸ்பிரித் பும்ரா, (2) யஷஸ்வி ஜெய்ஸ்வால், (3) நாராயண் ஜெகதீசன் (விக்கட் கீப்பர்), (4) துருவ் ஜூரல் (விக்கட் கீப்பர்), (5) பிரசித் கிருஷ்ணா, (6) நிதிஷ் குமார் ரெட்டி, (7) தேவ்தட் படிக்கல், (8) அக்சர் படேல், (9) கேஎல் ராகுல், (10) முகமது சிராஜ், (11) சாய் சுதர்சன் (12) வாஷிங்டன் சுந்தர், (13) குல்தீப் யாதவ்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அணித்தலைவராக ரோஸ்டன் சேஸ் இருக்கிறார். அணியின் துணைத்தலைவராக ஜோமல் வாரிக்கன் இருக்கிறார். அணியின் பிற வீரர்கள் – (1) கெவ்லான் ஆண்டர்சன், (2) அலிக் அதனேஸ், (3) ஜெடியா பிளேட்ஸ், (4) ஜான் கேம்பல், (5) டகேனரைன் சந்தர்பால் (6) ஜஸ்டின் கிரீவ்ஸ் (7) ஷாய் ஹோப் (விக்கட் கீப்பர்), (8) டெவின் இம்லாக் (விக்கட் கீப்பர்), (9) அல்சாரி ஜோசப் (இவர் வரவில்லை; இவருக்குப் பதிலாக ஜேதையா பிளேட்ஸ் வந்திருக்கிறார்) (10) ஷமர் ஜோசப் (இவரும் வரவில்லை; இவருக்குப் பதிலாக ஜொஹன் லைனே வந்திருக்கிறார்), (11) பிராண்டன் கிங், (12) ஜோஹான் லேன், (13) ஆண்டர்சன் பிலிப், (14) காரி பியர், (15) ஜெய்டன் சீல்ஸ்.

இரு தினங்களுக்கு முன் தொடங்கிய முதல் டெஸ்டில் பூவா-தலையா வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அனுபவமில்லாத அணி என்பதால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை அந்த அணியின் மட்டையாளர்களால் சமாளிக்க முடியவில்லை.

முதல் பத்து ஓவர்களுக்குள் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பல் (8 ரன்), அணித்தலைவர் தேஜ்நாரயண் சந்த்ரபால் (பூஜ்யம் ரன்), ப்ராண்டன் கிங் (12 ரன்), அலிக் அதான்சே (13 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 42 ரன் எடுத்திருந்தது.

அதன் பின்னர் ரோஸ்டன் சேஸ் (24 ரன்), ஷாய் ஹோப் (26 ரன்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (32 ரன்) அணிக்கு குறிப்பிடத்தக்க அளவில் ரன் சேர்த்தார்கள். அதன் பின்னர் கறி பியரி (11 ரன்), ஜோமல் வாரிகன் (1 ரன்), ஜேய்டன் சீல்ஸ் (ஆட்டமிழக்காமல் 6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்கள். அதனால் மே.இ. தீவுகள் அணி 44.1 ஓவர்களில் 162 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் சிராஜ் 4 விக்கட்டுகளையும் பும்ரா 3 விக்கட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 38 ஓவர்கள் விளையாடியது 2 விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும் சாய் சுதர்ஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கே.ஏல் ராகுல் 52 ரன்னிலும் கில் 18 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பிறகு நேற்று இரண்டாவது நாள். இந்திய அணியின் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். ஷுப்மன் கில் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கே.எல். ராகுல் தனது சதத்தைப் பூர்த்தி செய்த பின் 100 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் 125 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் ஜதேஜா 104 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 286 ரன்கள் அதிகமாகப் பெற்றிருந்தது. இந்திய அணியில் மூன்று வீரர்கள் சதமடித்திருந்தனர்.

5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் சேர்த்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்வதாக இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிசை ஆடத் தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து வந்தன. அனுபவ வீரர்களான சந்திர பால்,  காம்பல் ஆகியோர் இரட்டை இலக்கங்களை தாண்டும் முன்பே ஆட்டம் இழந்தனர். கிங்,  சேஸ் ஆகியோர் அவர்களின் வழியில் உடனே ஆட்டம் இழந்து வெளியேறினர். அதனால் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 38 ரன். சேர்த்தார்.
நடு வரிசையில் கிரீவ்ஸ் 25 ரன்கள் சேர்த்து சற்று நம்பிக்கை கொடுத்தார்.‌ டெயில் என்டர்கள் ஓரளவு விளையாடி ரன்கள் சேர்த்ததால் அந்த அணி 100 ரன்கள் கடந்தது. இறுதியில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி தோல்வியை தழுவியது.

இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட், சிராஜ் 3 ஜாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்

இதனால் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது.

சுதந்திரமாகத் தெருவில் திரியும் விலங்குகள்!

dharma dhyana meditation - 2026


தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா 
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன் 

சனாதன தர்மம், எல்லா உயிரினங்களின் நலனையும் கோரும் இயல்பு கொண்டது. அனைத்து உயிர்களிடமும் கருணையோடு இருக்கவேண்டும் என்று எல்லா நூல்களிலும் உபதேசிக்கிறது. எந்த ஒரு பிராணியையும் துன்புறுத்தக் கூடாது என்பது சனாதன தர்மத்தின் கொள்கை.

ஆனால் அண்மைக் காலமாக இமயம் முதல் குமரி வரை இதுவரை என்றுமே காணாத  அளவில் ஒவ்வொரு தெருவிலும், பார்க்கிலும் நாய்களின் தொல்லை அளவுக்கு மீறிப்  பெருகியுள்ளது. கடந்த காலத்தில் அவற்றுக்குக் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் ஜீவகாருண்ய சங்கங்களின் அழுத்தம் காரணமாகத் தெருநாய்களை இஷ்டத்திற்குத் திரியவிடுவது நடக்கிறது.

கார்களில் பயணிப்பவர்களைத் தவிர பிறர் அனைவருமே  தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. பிறர் துன்பம் அறியாமல்  கார்களில் சுற்றும் பணக்காரர்களே போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தத்  தொல்லையின் அனுபவம் இல்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நீதி மன்றத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவங்கள் சிறிது காலத்திற்கு முன் தலைநகர் டெல்லியில் நடந்தது. 

நாய் ஆர்வலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரவர் விருப்பம் அவரவருடையது. அவை சரியா தவறா என்று வாதிடுவது அனாவசியம். அவர்கள் தத்தம் வீடுகளில் எல்லாவித நாய் இனங்களையும் வளர்த்துக் கொண்டும், ‘டாக் பேரெண்டிங், டாக் லவிங்’ போன்ற வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தியும் அவற்றின் மீது  பாசத்தை வளர்த்துக் கொள்ளலாம். அவை அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். வெளியில் வந்தாலும் அவர்களின் கைக் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு இருக்கும். 

ஆனால் தெருநாய்களின் விஷயத்தில் அவர்களுடைய தலையீடு தேவையில்லாதது. அனாவசியமானது. அவை தாக்குவதால் பலர் உயிரிழந்துள்ளனர். வெளியில் நடைப்பயிற்சி செல்வதற்குக் கூட அஞ்ச வேண்டி உள்ளது. 

காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை தீர்த்தங்களிலும், க்ஷேத்திரங்களிலும் தெருக்களிலும் வீடுகளின் முன்னாலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சூழ்ந்து வளைய வருகின்றன. பாதசாரிகள் மட்டுமின்றி, இரு சக்கர வாகன ஓட்டிகளும் இவற்றின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாமல் திண்டாடுகிறார்கள். 

அவற்றைத் துன்புறுத்தாமல், கொல்லாமல் தகுந்த கட்டுப்பாட்டோடு மக்கள்  இருப்பிடங்களுக்கு தொலைவாக இருத்தும் வழிவகைகள் உள்ளன. அவற்றை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

நாய் ஆர்வலர்கள் அதிகமாக வழிபடும் வெளிநாடுகளை ஒருமுறை நன்றாக கவனித்தால் புரியும். அங்கு எங்குமே தெருநாய்களின் தொல்லை இல்லை. வளர்ப்பு நாய்களுக்கும் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கிறார்கள். தெருக்களில், பார்க்குகளில் அவற்றை அழைத்துச் செல்லும்போது அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அவற்றின் கழிவுகளைத் தம் கைகளால் அள்ளி அவற்றுக்கென்று உள்ள குப்பைத்தொட்டிகளில் போடுவார்கள். நாய் ஆர்வலர்கள் தாம் அதிகம் போற்றும் வெளிநாட்டு கலாசாரத்தில் இருந்து இந்த ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம். அவர்கள் வளர்க்கும் நாய்களின் மீது ஏதாவது தடைகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்கும் பட்சத்தில் போராட்டம் செய்தால் அதில் பொருள் இருக்கும். ஆனால் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தெருநாய்களின் விஷயத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தடுப்பது அர்த்தமற்ற செயல். 

சனாதன தர்மத்தில் எல்லா உயிரினங்களிடமும் அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. அதே நேரத்தில் அவற்றை எந்த எல்லையில் வைத்து, எப்படிக் காக்க வேண்டும் என்றும் நியமங்கள் உள்ளன. 

“ஸ்வப்யஸ்ச ஸ்வபதிப்யஸ்ச வோ நம:” – “நாய்களின் வடிவிலும், நாய் வளர்ப்பவர்களின் வடிவிலும் இருக்கும் ஈஸ்வரனின் விபூதி (மகிமை)யை வணங்குகிறேன்” என்று வழிபடும் பண்பாடு நமக்குள்ளது. 

காலபைரவரின் சந்நிதியில் (குர்க்குர) நாய்களின் கணங்கள் உள்ளன. வேதங்களே வேட்டை நாய்களாக, ‘அதி கிராத’ வடிவத்தில் இருக்கும் சிவனிடமும், தத்தாத்ரேயரிடமும் இருப்பதாக சாஸ்திரம் தெரிவிக்கிறது. மகாபாரதம் தேவ ஜாதியைச் சேர்ந்த ‘சாரமேயம்’ என்ற நாயோடுதான் தொடங்குகிறது. இறுதியில் தர்மதேவதை நாய் வடிவத்தில் தர்மபுத்திரனைத் தொடர்ந்து செல்கிறது. தன்னைத் தொடர்ந்து வரும் நாய்க்கும் சுவர்க்கத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று யுதிஷ்டிரன் வேண்டுகிறான்.  

தேவ ஜாதி நாய்களுடைய தாயின் பெயர் ‘சரமா”. அவளுடைய புதல்வர்கள் என்பதால் நாய்களுக்கு ‘சாரமேயம்’ என்று பெயர். அப்படிப்பட்ட நாய்களில் பல இனங்கள் உள்ளன. நாய்கள் விசுவாசத்திற்கும், பாதுகாப்புக்கும் குறியீடாக விளங்குகின்றன. தேசப் பாதுகாப்பு அமைப்பில் தனிப்பட்ட பயிற்சி பெற்ற நாய்கள் உள்ளன. 

ஆனால் எந்த விலங்கானாலும் அதற்கென்று குறிப்பிட்ட எல்லையும், முறையான கட்டுப்பாடும் தேவை. சரணாலயங்களில் புலிகளையும் சிங்கங்களையும் வைத்துக் காப்பாற்றலாம். ஆனால் ஜீவகாருண்யம் என்ற பெயரில் தெருக்களில் திரிய விடமாட்டோம் அல்லவா? பாம்பைக் கண்டவுடன் தடியால் அடித்துக் கொல்கிறீர்களே, அப்போது உங்கள் ஜீவகாருண்யம் எங்கே போனது? மனிதர்களின் நடமாட்டத்திற்குத் தடை ஏற்படுத்தி, உயிரைப் பறிப்பதற்குத் துணிந்த நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும், அவற்றைத் தொலைவாக எங்காவது விடுத்து வருவதும் செய்யலாம் அல்லவா?  

இன்னொருபுறம் தினமும் லட்சக்கணக்கான பசுமாடுகளை வதைமுகாம்களுக்கு விரட்டுகிறார்களே, இந்த ஜீவகாருண்ய முழக்கங்கள் என்னவாயின? சத்தத்தையே காணோமே. உங்கள் இரக்கம் எங்கே போனது?

சில இடங்களில் அநாதைகளைப் போல சாலைகளின் திரியும் பசுக்கள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் விளைவிப்பதில்லை. அதோடு அவை குப்பைத்தொட்டிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களைத் தின்று அவஸ்தைக்கு ஆளாகின்றன. அவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு பசுக்களை சாலையின் விடும் பசு உரிமையாளர்களை எச்சரித்துத் தண்டிக்க வேண்டும். ஆதரவற்ற பசுக்களை கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும். 

சாலைகளில் குப்பைகளை அகற்றுவது, விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றைச் செய்யாவிட்டால் இனி உள்ளூர் நிர்வாக அமைப்புகள் இருந்து என்ன பயன்? ஒரு இடத்தில் பன்றிகளின் தாக்குதலால் சிலர் மரணித்தனர். அங்கு வந்த  அதிகாரிகள் அவற்றின் உரிமையாளர்களைக் கண்டித்து, எச்சரித்த போது அவர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார்கள். அதற்கு பதிலாக வேண்டுமென்றே முள்ளம்பன்றிகளை சாலைகளில் விடுத்தார்கள் என்று ஒரு செய்தி வந்தது.

இவ்வாறு நாய்களோடும் பன்றிகளோடும் துன்புறும் பொதுமக்கள் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளார்கள். மேலும் பெரிய வாகனங்களிலும் கார்களிலும் அடிபட்டு பல நாய்கள் இறப்பதும் நேர்கிறது. 

சிலருடைய விவேகமற்ற போராட்டங்களுக்கு தலை குனியும் மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் துணிந்து கட்டப்பாடு விதிக்காவிட்டால் சமுதாயத்தில் சாமானிய வாழ்க்கை கொடுமையாக முடியும். ஒவ்வொரு மாநில அசாங்கமும் உள்ளூர் அமைப்புகளின் மூலம் சரியான விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் வேண்டிய தேவை உள்ளது. 

சாக்கடைகள், அழுக்கு நீர்ப் பள்ளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தென்படுகின்றன. அவற்றோடு கூட தெரு நாய்களின் நடமாட்டம் வேறு. இவை அரசாங்கத்தின் அலட்சியத்திற்கும், பொதுமக்களின் எதிர்வினையாற்றாத தன்மைக்கும் சான்றுகள்.

(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், அக்டோபர் 2025)

கற்க கசடற அரசியல் – கற்றபின் கரூரில் நிற்க அதற்குத் தக

write thoughts - 2026
#image_title

கற்க கசடற அரசியல் – கற்றபின் கரூரில் நிற்க அதற்குத் தக

ஆர். வி. ஆர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், சமீபத்தில் கரூரில் பிரசாரம் செய்யும்போது பெரும் சோகம் நிகழ்ந்தது. அவரைப் பார்க்கவும் கேட்கவும் வந்த ரசிகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை இதுவரை 41. அதில் சிறுவர் சிறுமியர் 10.

கரூர் நெரிசலில் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், மாநில அரசின் சார்பாகப் பத்து லட்ச ரூபாய் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது போக, அந்தக் குடும்பங்களுக்கு விஜய் இருபது லட்சம், மத்திய அரசு இரண்டு லட்சம், தமிழக பாஜக ஒரு லட்சம் என்று நிதி உதவி அளிக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்கள், அந்தக் கூட்டத்தில் சிக்கி அதில் 40 பேருக்கு மேல் மரணம் அடைகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? எங்கெல்லாம் கோளாறு இருக்கிறது?

தான் கரூரில் பிரசாரம் செய்கையில் எவ்வளவு கூட்டம் வரலாம், தான் ஒரு மாஸ் நடிகர் என்பதால் தனது சினிமா முகத்தைப் பார்க்கவே பெரும் கூட்டம் கூடுமே, எத்தனை பேர் அதிக பட்சம் கூடுவார்கள், கூட்டம் நடக்கும் பகுதியில் நெரிசல் ஏற்படாத அளவு மக்கள் நகர இடம் இருக்கிறதா, காலை எட்டு மணியில் இருந்தே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேருகிறதே, பல மணிநேரம் அங்கு காத்திருக்க வேண்டிய மக்களுக்குப் போதிய குடிநீர் வசதி இருக்கிறதா, நீண்ட நேரம் அந்த மனிதர்கள் காத்திருந்தால் அவர்களுக்குப் பசி எடுக்குமே, அடைபட்டிருக்கும் அவர்களின் இயற்கை உபாதைகளுக்கும் என்ன ஏற்பாடு, என்று விஜய் முன்னதாகவே நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அரசியலில் ஆசை பெரிதாகவும், முதிர்ச்சி சிறிதாகவும் உள்ள விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாகத் தெரியவில்லை.

சரி, கூட்டம் நடக்கும் பகுதியில் காலையில் இருந்தே மக்கள் சேரச் சேர, அங்கு கூடுகிற கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம், அதுவும் விஜய் மாதிரி ஒரு சினிமா நடிகரைப் பார்க்க வரும் கூட்டத்தை எளிதில் கட்டுப்படுத்த இயலாது, அப்போது எந்த விபத்தும் நடக்கலாம் என்று அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனதா? அந்த அபாயம் நிகழாமல் இருக்க, அதைப் பெரிதும் மட்டுப்படுத்த, அவர்கள் முன்னேற்பாடாகக் கூடுதல் போலீஸ்காரர்களை அருகிலேயே வைத்திருக்க முடியாதா? அல்லது, போலீஸ்காரர்களையும் குறைவாக அனுப்பி அவர்களை ஒருவாறு முடக்கி வைத்தால் நமக்கு நல்லது, ஏதாவது நடந்தால் விஜய் மேல் பழி வரட்டும் என்று விஜய்யின் சக்திமிக்க அரசியல் எதிரிகள் நினைத்தார்களா?

விஜய் கூட்டத்திற்குப் பெரும் திரளாகக் கூடிய அவரது ரசிகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள், அறிவிக்கப் பட்ட பகல் 12 மணிக்கு விஜய் அநேகமாக வரமாட்டார் என்று யோசிக்கவில்லை. மூன்று மணி நேரம் கடந்த பின்னும் – அதாவது மாலை மூன்று மணிவரை – கரூரில் பிரசாரக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் வரவில்லை. இருந்தாலும் அங்கு கூடிய மக்களில் எத்தனை பேர் விஜய்யைப் பார்க்காமல் வீடு திரும்ப எண்ணி இருப்பார்கள், அதைச் செய்ய முயன்றிருப்பார்கள்?

தனக்கு, வாழ்வில் தன் முன்னேற்றத்திற்கு, தன் குடும்பத்தினருக்கு, எது அதிக முக்கியம் என்று அறியாத மனிதர்கள் அன்று கரூரில் விஜய்க்காக நீண்ட நேரம் காத்திருந்தார்கள் – மாலை ஏழு மணிக்கு விஜய் வரும் வரை. இது ஒரு பக்கம். தன்னைப் பார்த்துத் தன் ரசிகர்களும் கட்சியினரும் உணர்ச்சி பொங்குவது, தன்னை நோக்கிக் கூச்சலிடுவது, அதைச் செய்வதற்கு அவர்கள் பழியாகக் காத்திருப்பது, தன்னைப் பெருமைப் படுத்தும், தனக்கு அரசியல் வலிமை தரும், என்று நினைத்துத் திருப்தி கொள்கிறவர் விஜய். இது இன்னொரு பக்கம்.

அன்றையக் கூட்டத்தில் விபத்தும் உயிரிழப்பும் நிகழ யாராவது திட்டமிட்டு ஏற்பாடு செய்தார்களா, நடந்த துயரத்திற்கு ஒரு திட்டமிட்ட ஏற்பாடு மட்டும்தான் காரணமா என்று கேட்டால், “அதற்கு வாய்ப்பில்லை” என்று நாம் உடனே நினைக்கும்படி தமிழக அரசியலின் லட்சணம் இருக்கிறதா? இல்லை. எது உண்மை என்று நாம் அறிவதும் எளிதல்ல.

தமிழகத்தின் சில சுயநல அரசியல் தலைவர்கள் தாங்கள் கற்ற, தங்களால் முடிந்த, அரசியலைக் கரூரில் நிகழ்த்தி இருக்கிறார்கள். அது போக, அரசு கஜானாவிலிருந்து பத்து லட்சம், சொந்தப் பணம் அல்லது கட்சிப் பணத்திலிருந்து இருபது லட்சம் என்று கரூரில் மரணம் நிகழ்ந்த குடும்பங்களுக்கு நிதி உதவி செல்வது உண்மையில் எதற்காக? பாதிக்கப் பட்ட குடும்பங்களும் அந்த ஊரும் – பொதுவாகத் தமிழகத்தின் அனைத்து சாதாரண மக்களும் – தன் மேல், தன் தலைமையின் மீது, குற்றம் காணாமல் இருக்கட்டும், தனது கருணை உள்ளத்தில் மயங்கித் தன்மீது கனிவு கொள்ளட்டும் (“தலைவருக்கு எவ்ளோ பெரிய மனசு!”) என்று சில தலைவர்கள் நினைத்தார்களா? முழு உண்மையை அவர்களின் மனசாட்சி அறியும். நாம் ஊகிக்கலாம்.

விஜய்யின் சினிமா பிரபல்யமும் அவரது முதல்வர் ஆசையும் அவருக்கு அதி முக்கியம். மற்ற அனைத்தும் அவருக்கு இரண்டாம் பட்சம். இன்னொரு பக்கத்தில், பழம் தின்று கொட்டை போட்ட அவரது அரசியல் எதிரிகள் அவரை அடக்கி வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ‘இது புரியாத விஜய்யின் ரசிகர்களும் பொதுமக்களும் தமிழகத்தில் இருந்தால், கரூர் கூட்டத்திற்குப் போனால், அங்கு கெடுதலைச் சந்தித்தால், நாம் என்ன செய்வது?’ என்ற அளவில் மட்டும் ஒருவர் நினைத்தால் அது சரியில்லை. நம்மில் பலர் அப்படி நினைத்தால் நமது ஜனநாயகம் முதிர்ச்சியை நோக்கித் திரும்பாது.

இந்தியாவில், தமிழகத்தில், எப்படியான சாதாரண மக்கள் இருக்கிறார்களோ, அவர்களை வைத்துத்தான் நமது ஜனநாயகத்தின் சக்கரங்கள் முக்கியமாகச் சுழல முடியும். “மக்கள் பெரிதும் மக்குகள். எந்த அரசியல் தலைவரைப் போற்றவேண்டும், பின்பற்ற வேண்டும் என்று தெரியாதவர்கள்” என்று நாம் பரவலாக சாதாரண மக்களை இகழ்வது பயன் தராது. இந்த மக்களின் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்றுதான் ஒரு நல்ல, திறமையான, தொலைநோக்குச் சிந்தனை உள்ள, எந்த அரசியல் தலைவரும் அவர் கட்சியும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய முடியும் – முக்கியமாக தேசத்தைக் காப்பாற்ற முடியும்.

மக்களைப் பல வகையில் மேம்படுத்துவதும் ஒரு நல்ல தலைவனின் எண்ணமும் செயலுமாக இருக்க வேண்டும். இது இந்தியாவில், அதுவும் தமிழகத்தில், மிக அவசியம். இதுவும் நமது முன்னேற்றத்திற்காகக் கரூர் நமக்கு நினைவு படுத்தும் ஒரு அரசியல் பாடம் அல்லவா?

Author:
R. Veera Raghavan Advocate, Chennai veera.rvr@gmail.com https://rvr-india.blogspot.com

பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்!

write thoughts - 2026
#image_title

பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்:
நூல் மதிப்புரை:

தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

இந்திய நாவல் எழுத்தாளர்களில் முக்கியமானவர் டாக்டர் எஸ்.எல். பைரப்பா. இவர் கன்னட மொழியில் எழுதிய சிறந்த நாவல் ‘பர்வா’. வியாசருடைய மகாபாரதத்தின் மற்றொரு நவீன வடிவம் பர்வா. மகாபாரதத்தில் காணப்படும் மாயை, மந்திரம் தொடர்பான சம்பவங்கள் எல்லாம் உண்மையா என்று பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு ஆய்வு நடத்திய பின் பைரப்பா இந்த நாவலை எழுதினார். இதில் வரும் மகாபாரத பாத்திரங்கள் எந்தவித அமானுஷ சக்திகளும் அற்றவர்களாக சாமானிய மனிதர்களாக உலா வருகிறார்கள்

‘ஆச்சார்ய கங்கிசெட்டி லக்ஷ்மிநாராயணா’ சாமானிய வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் தூய தெலுங்கு சொற்களால் சிறந்த வாக்கிய அமைப்போடு தெலுங்கில் பர்வா நாவலை மொழிபெயர்த்தார்.

1001028673 - 2026

புகழ்பெற்ற கன்னட நாவலாசிரியர் டாக்டர் எஸ்.எல் பைரப்பாவின் மிகப் புகழ் பெற்ற நாவல் பர்வா பிரசுரமாகி நாற்பது ஆண்டுகள் கழிந்தபின் பெங்களூரில் பைரப்பாவின் படைப்புகள் குறித்து நடந்த இலக்கிய அரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சாகித்ய அகாடமியின் தலைவர் திரு ‘சந்திரசேகர் கம்பரா’ பேசுகையில், “பைரப்பா அவர்கள் வியாசரின் மகாபாரதம் என்ற மகா காவியத்தை பர்வா என்ற நாவலாகப் படைத்து பழமையான நம்முடைய சம்பிரதாயத்தைக் காப்பாற்றியுள்ளார். அதன் மூலம் நம்மை ஒரு சிறந்த சம்பிரதாயத்திற்கு வாரிசாக்கியுள்ளார்” என்றார்.

தலைவர் திரு மாதவ் கௌசிக் பேசுகையில், “பைரப்பா வியாசரின் மகாபாரத்தை இந்திய கண்ணோட்டத்தில் எழுதியுள்ளார். பிறர் எழுதிய மகாபாரத படைப்புகளில் இருந்து பைரப்பாவின் படைப்பு வேறுபட்டது. இது வாசகர்களுடைய மனத்துக்கு நெருக்கமானது ஒவ்வொரு பாத்திரத்தின் அந்தரங்கத்தையும் பைரப்பா காட்டிய முறை இந்த நாவலின் புதுமைக்குக் காரணம்” என்றார்.

1001028676 - 2026

மகாபாரதம் என்றால் தாயாதிகளிடையே நடந்த போர். அரியணைக்காக நடந்த யுத்தம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அதுவல்ல. என்ன நடந்ததென்றால்… என்று பைரப்பா ஆதாரங்களோடும் பகுத்தறிவோடும் இந்த நாவலை எழுதி சில யூகிக்க முடியாத உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளிக்கொணர்ந்த பல உண்மைகளில் முக்கியமானது “பெண்களின் மனப் போராட்டம்”.

அன்றைய பெண்கள் மெளனமாக எத்தகைய துயரத்தையும் விழுங்கிக் கொண்டு வாழ்ந்தார்கள். சிலர் வலிமையான காமம் என்ற புயற்காற்றில் சிக்கி மூச்சு முட்டி உயிரை விட்டனர். அரசியல் ஒப்பந்தங்களுக்குத் திருமணம் என்ற அழகான பொய்ப் பெயரைச் சூட்டி வஞ்சனை செய்ததால், தெரிந்து சிலரும் தெரியாமல் சிலரும் அதில் விழுந்து நலிந்தனர். ‘ஆரியர், அனாரியர், அர்தாரியர்’ போன்ற முகத்திரைகளின் விவாதத்தால், வாழும் மகிழ்ச்சியை இழந்து வாழ்க்கை நடத்தினர் சிலர். கதை முழுவதும் பெண்கள் வடித்த கண்ணீரால் நனைந்து ஊறிப்போயுள்ளது. அந்தக் கண்ணீர் அன்று மட்டுமின்றி, இன்றும் கூட சில கேள்விகளை எழுப்புகிறது. அவற்றுக்கு விடை அன்றும் கிடைக்கவில்லை. இன்றும் கிடைக்கவில்லை.

“அன்றைக்கிருந்த சமூக அரசியலை மனத்தில் கொண்டு விமரிசிக்க வேண்டுமே தவிர இன்றைய நவீன இயல்புகளோடு அன்றைய மகாபாரதத்தை விமரிசிக்கக்கூடாது” என்பது சிலருடைய கருத்தாக உள்ளது. மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிச் சிந்தித்தால் முதலில் நினைவுக்கு வருவது (குந்தி) ப்ருதாவும், (திரௌபதி) கிருஷ்ணாவும். கதை முழுவதும் இந்த இருவருடைய தியாகமும் கண்ணீருமே நிறைந்துள்ளது. அதற்கு அடுத்த முக்கிய பாத்திரம் காந்தாரி.

மிக நவீன கண்ணோட்டம் உள்ளவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் குந்தியையும் திரௌபதியையும் ஏளனமாகவும் குறைவாகவும் மதிப்பிட்டு விமர்சிக்கிறார்கள். ஆனால் எதிர்மறையான சூழலிலும் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் போராடி, மிக உயர்ந்த ஆளுமைகளாக விளங்கிய அவர்கள் நடத்திய போராட்டம் அசாதாரணமானது. அறிவியல் பார்வையோடும், தர்க்கத்தோடும், பகுத்தறிவோடும் ஆராய்ந்து பார்த்தால், குந்தியும் திரௌபதியும் பேசிய சொற்களின் உண்மை விளங்கும்.

குந்தி:

பர்வா நாவலை ஆராய்ச்சிப் பார்வையோடு படித்து, பைரப்பா குந்தியை எவ்வாறு படைத்துள்ளார் என்று முதலில் பார்ப்போம். பாண்டுராஜாவுக்கு இருந்த குறைபாடு தெரிந்துதான் குந்தியோடு திருமணம் நடந்தது. அவனுடைய உடற்குறையோடு கூட, அவனுக்கிருந்த மாறுபட்ட மனநிலையால் குந்தி மனத்தளவிலும் உடலளவிலும் மிகுந்த வேதனையை அனுபவித்தாள். முடிந்தவரை முயற்சி செய்து தோல்வியடைந்த பாண்டு, தன்னுடைய கையறு நிலையை அங்கீகரிக்காமல் குந்தியையும் அவளுடைய குடும்பத்தையும் அவமதித்தான். இறுதியில் தன்னுடைய குறையை ஏற்றுக்கொண்டு அவளுடைய மடியில் தலை சாய்த்து அழுதான். அப்போது பூமாதேவிபோல் பொறுமை கொண்ட குந்தி பரந்த மனத்தோடு அவனை அணைத்து, இரு கரங்களால் தழுவி ஆதரித்ததாள்.

‘மத்ர’ தேசத்துப் பெண்கள் சிருங்கார மர்மங்களை நன்கறிந்தவர்கள். மாத்ரியும் அத்தகைய திறமை வாய்ந்தவளே. அவளாவது பாண்டுவைக் கிளர்ச்சியால் தூண்டுவாள் என்ற எண்ணத்தோடு அவளை பாண்டுவுக்குத் திருமணம் செய்தார்கள். திறமை வாய்ந்த மாத்ரியின் முயற்சிகளும் வீணாகவே, அவள் குந்தியிடம் முறையிட்டு அழுதாள்.

திருதராஷ்டிரனுக்கு பிள்ளைகள் பிறந்து விடுவார்களோ என்ற அச்சத்தாலும், கவலையாலும் ராஜ்ஜியத்தை விட்டு விலகி, மலைகளிலும் குன்றுகளையும் தாண்டி இயற்கையில் மடியில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு மானசிக அமைதி பெறுகிறார்கள். தேவகணங்களைச் சேர்ந்த அச்விநீ தேவதைகளிடம் உடல் வலிமைக்காக பாண்டு வைத்தியம் செய்து கொள்கிறான். எத்தனை ஆண்டுகள்தான் அவ்வாறு முயற்சி செய்ய முடியும்? தனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும். உலகில் தான் ஒரு தந்தை என்று பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்பினான். ‘நியோக முறை’ என்று ஒன்று உண்டு. அது ஆரியர்களுக்கு ஏற்புடையது என்று கூறி குந்தியைச் சம்மதிக்க வைத்து, வேறொரு ஆணிடம் அனுப்பினான். கணவன் சம்மதித்தால் நியோக முறை தவறல்லவாம். அதற்கு பதில் கல்யாணத்திற்கு முன்பே அவளுக்குப் பிறந்த கர்ணனை அவர்கள் அங்கீகரித்திருக்கலாம் அல்லவா? அதற்கு ‘ஆரிய சம்மதம்’ கிடைக்காது என்று தெரிந்ததால் குந்தி அஞ்சினாள். கர்ணனைப் பற்றிக் கூறவில்லை.

நியோகம் என்றால் என்ன? ‘கர்ப்பம் தரிப்பதற்காக’ மட்டுமே என்று மனத்திடம் கூறிக் கொள்ள வேண்டுமாம். உடலும் மனதும் அந்த செயலால் தூண்டப்படக் கூடாதாம். அதில் ஈடுபடுவது ஒரு பெண். அவள் உயிற்ற பொம்மை அல்ல. ‘கர்ப்ப தாரணை’ ஆனவுடனே அந்த ஆணை தந்தையாகக் கருத வேண்டும். அன்பைப் பகிரக் கூடாது. வாழ்க்கையில் மீண்டும் அவனை நினைக்கக் கூடாது. இதுதான் அதன் நியமம். அந்தச் செயலுக்கு முன்னும், பின்னும் கூட அவள் பெண் அல்லவா? உடலிலும் மனத்திலும் அவளுக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா? இது என்ன நியாயம்? இந்த தர்மத்தை அன்றும் இன்றும் கூட நாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோமே, அது சரியா?

தேவர்களைச் சேர்ந்த யமன் வந்தபோது, குந்தி எத்தனை மனப் போராட்டத்தைச் சந்தித்திருப்பாள்? போகிறது. தர்மன் பிறந்தான். ஆனால் பாண்டுவுக்கு பலம் மிகுந்த இன்னொரு புதல்வன் வேண்டும் என்று தோன்றியது. வலிமை பொருந்திய (மருத்து) வாயுவை வரவழைத்தான்.

மீண்டும் சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு குந்தியை வாயுவிடம் அனுப்பினான். மருத்துவின் பலம் மிகுந்த கைகளின் அணைப்பில் குந்தி உண்மையிலேயே உடலாலும், மனத்தாலும் சந்தோஷத்தை அடைந்தாள். மனப்பூர்வமாக இருவரும் விரும்பி சங்கமித்தார்கள். “இதையெல்லாம் விட்டுவிட்டு என்னோடு வந்துவிடு” என்றான் வாயு.

குந்திக்கு பயம். அதனால் சம்மதிக்கவில்லை. அவளுடைய பரந்த மடி நிரம்புமளவுக்கு பீமன் பிறந்தான். ஆயிற்று. இந்த சம்பவங்களையெல்லாம் தெரிந்து கொண்ட இந்திரன் குந்தியின் மேல் மோகம் கொண்டு அவளிடம் வந்தான். கணவனின் அனுமதி தேவையல்லவா? சாமர்த்தியம் மிகுந்த இந்திரன் அதைச் சாதித்தான்.

மகா சாம்ராஜ்ஜியத்தை வெல்லக் கூடிய புதல்வன் பிறக்க வேண்டுமல்லவா? அந்த ஆசையால் பாண்டுராஜா சம்மதித்தான். மீண்டும் குந்தியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு இந்திரனிடம் அனுப்பினான். அர்ஜுனன் பிறந்தான். இனி போதும். குந்தி மனத்தை திடம் செய்து கொண்டாள். குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தினாள்.

மாத்ரி சும்மாயிருப்பாளா? குந்தி பிள்ளை வேண்டி தேவர்களோடு சுகித்திருக்கையில் பாண்டுராஜுவும் பிள்ளைகளும் அவளிடம்தான் இருந்தார்கள். மத்ர தேசத்துப் பெண் மாத்ரி சிருங்காரத்தில் சிறந்தவள். அவளுக்கும் ஒரு மனம் இருந்தது அது உடல் சுகத்தைக் கோரியது.

பாண்டுராஜு குந்தியின் அனுமதியோடு அஸ்விநீ தேவதைகளிடம் மாத்ரியை அனுப்பினான். எதுவானாலும் அச்விநீ தேவதைகள் இருவரும் சேர்ந்தே செய்வார்கள். அவர்கள் மூலம் மாத்ரிக்கு நகுலனும், சகாதேவனும் பிறந்தார்கள்.

அதற்குள் பாண்டுராஜா உட்கொண்ட மருந்துகள் வேலை செய்ய ஆரம்பித்து அவன் உடலில் துணிவும் தூண்டலும் பிறந்தன. அவனுடைய உற்சாகத்திற்கு அழகி மாத்ரியோடு கிடைத்த தனிமை துணை புரிந்தது. பலனாக பாண்டுராஜா உடலளவில் பெற்ற வெற்றியாலோ அல்லது தோல்வியாலோ மரணத்தைத் தழுவினான். அதற்குக் காரணம் தானே என்ற கழிவிரக்கத்தால் மாத்ரி கணவனின் உயிரற்ற உடலோடு சேர்ந்து தானும் எரிந்து சாம்பலானாள்.

இது தியாகமா? பயமா? பிள்ளைகளை தன்னால் வளர்க்க முடியாது என்ற கையறு நிலையா? குந்தி நன்கு வளர்ப்பாள் என்ற நம்பிக்கையா? எதுவானாலும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை அவ்விதம் முடிந்து போனது.

மீண்டும் குந்தியின் ஆளுமையை, ஹிடிம்பியோடு திருமணத்திற்கு பீமனை சம்மதிக்கச் செய்த சந்தர்ப்பத்திலும், திரௌபதியை ஐந்து பாண்டவர்களோடு திருமணத்திற்குச் சம்மதிக்கச் செய்த சந்தர்ப்பத்திலும் பார்க்க முடிகிறது. வரப்போகும் யுத்தத்தில் ராட்சசர்களின் படையும், பாஞ்சாலத்தின் படையும் தமக்குத் துணையாக இருக்கும் என்பதால். பல சந்தர்ப்பங்களில் குந்தி நிதானமாக யோசித்து நிலையான மனத்தோடு முடிவெடுத்தாள்.

பதின்மூன்றாண்டுகளுக்குப் பிறகு பாண்டவர்கள் தாயைத் தம்மோடு வரச் சொன்னபோது, “போரில் வென்று அரியணையைப் பெற்ற பிறகு என்னை அழையுங்கள். வருகிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினாள்.

தனக்கு மணமாகும் முன்பே பிறந்த கர்ணனைச் சந்தித்து, பல ஆண்டுகளாக மறைத்து வந்த வேதனையை அவனிடம் வெளியிட்டாள். அவன் போரில் மரணமடைந்தான் என்று தெரிந்து போர்க்களத்திற்குச் சென்றாள். அவன் பிறந்த போது எந்த சடங்குகளும் செய்யாத நிலையில், இறுதிக் கிரியையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சடலங்களின் இடையில் தன் மூத்த புதல்வனைத் தேடி அலைந்தாள். பூமாதேவியைப் போன்ற பொறுமை கொண்ட குந்தியின் ஆளுமையை வியாசரின் மகாபாரதத்திலும், பைரப்பாவின் பர்வாவிலும் தெளிவாகக் காண்கிறோம்.

ஆச்சார்ய கங்கிசெட்டியின் தெலுங்கு மொழிபெயர்ப்பு, வசன நடையில் சாமானியர்கள் பேசும் வழக்குத் தெலுங்குச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டாலும், இயல்பாக, எளிதாக, ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு தேர் போலப் பயணிக்கிறது. கன்னடத்திலிருந்து பர்வாவை தெலுங்கு வாசகர்களுக்கு அளித்ததில் ‘ஆச்சர்ய கங்கிசெட்டி’ நன்றிக்குரியவராகிறார்.

(க்ருஷ்ணா) திரௌபதி:
திரௌபதி பிறந்தபோது வைத்த பெயர் க்ருஷ்ணா. அவளை அறிவால் புரிந்து கொள்ள முடியாது. உணர்வால்தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு பெண்ணை எந்த அளவு அவமதிக்க முடியுமோ, கீழிறக்க முடியுமோ அந்த அளவு அன்று அவமதித்தார்கள். இன்றும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அவளுடைய தந்தை ஆண்ட தேசத்தின் பெயரைக் கொண்டு, அதாவது த்ருபத நாட்டு இளவரசி என்பதால் திரௌபதி என்றழைத்தார்கள். ஆனால் அந்த பெயருக்கான பொருளை புரிந்து கொள்ளாத விஷம் நிரம்பிய நாக்கு கொண்டவர்கள் த்ரௌ ‘பதி’ என்றார்கள் அதாவது பல கணவர்களைக் கொண்டவள் என்று ஏளனம் செய்தார்கள். மகாபாரத இதிகாசத்தில் அவளுக்கு நேர்ந்த அவமானங்களும், அவள் எதிர்கொண்ட சவால்களும் அன்றும் இன்றும் கூட எந்த ஒரு பெண்னின் இதயத்தையும் உருகச் செய்யும். அவள் தன் முகத்தில் புன்னகை மலரைப் பூக்கச் செய்தாலும், அவளுடைய மனத்தின் சோகத்தை யாரால் அறியமுடியும்?

பைரப்பாவின் பர்வா நாவலிலும் திரௌபதியை அதுபோல் தான் சித்தரித்திருப்பாரோ என்ற அச்சத்தோடு படிக்கத் தொடங்கியபோது, ஒரு கோபம் இருந்தது. ஆனால் அவர் திரௌபதியை வர்ணிக்கும் போதோ, பிற பாத்திரங்களின் உரையாடலிலோ அவளுடைய கௌரவத்திற்கு இழுக்கு நேரும்படி எங்குமே எழுதவில்லை. அதோடு, பல சந்தர்ப்பங்களில் மீதியுள்ள பாத்திரங்களின் மூலம் அவளுடைய உயர்வைச் சிறப்பாகக் கூறுகிறார்.

ஹிடிம்பி உடலளவில் வலிமையான ராட்சசப் பெண். பீமன் போன்ற ஆணையும் இறுக்கிப் பிடித்து தூக்கி விடக் கூடியவள். கோபம் வந்தால் முதுகில் நான்கு குத்து விடக் கூடியவள். ஓடுவதிலும், வேட்டையிலும் சிருங்காரத்திலும் பீமனோடு சரிசமமாக நிற்கக் கூடிய சக்தி மிகுந்த பெண் அவள். அப்படிப்பட்ட முதல் மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் பீமன் திரௌபதியை நினைத்துக் கொள்வான் என்று பைரப்பா எழுதுவது திரௌபதியின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டு என்பதைக் கூறாமலே கூறுகிறது.

“அவள் சுகுமாரி. அவள் ஒரு மலர். அவளுடைய பேச்சிலும், மௌனத்திலும், புருவ நெரிப்பிலும், கடைக்கண் பார்வையிலும் அவளுடைய விருப்பத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அவள் ஆரியப் பெண். அப்படித்தான் இருப்பாள்” என்று எண்ணுகிறான் பீமன். அவன் பார்த்த முதல் பெண் அவள்தான். “அவள் எதையும் நேரடியாகக் கூறிவிட மாட்டாள். அவளுடைய உள்மனத்தை யாராலும் வெளிப்படுத்த முடியாது” என்று நினைத்துக் கொள்வான் பீமன். வெளியில் சொல்லாவிட்டாலும் அவளுடைய இதயத்தில் பற்றி எரிந்த நெருப்பை அவனால் மட்டுமே அணைக்க முடிந்தது.

அர்ஜுனன் தம் ஐவருக்கும் சேர்ந்து ஒரு மனைவியாக திரௌபதி இருந்தாலும், தனக்கு மட்டுமே பிரத்தியேகமாக சுபத்திராவை அழைத்து வந்த போது, “திரௌபதி, உன்னுடைய சக்தி நிறைந்திருக்கும் இடத்தில் வேறு யாரும் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள இயலாது” என்று மனத்தில் நினைக்கிறான். அத்தகைய சக்திப் பிரவாகமே வடிவெடுத்த மிக உயர்ந்த பெண்மணி திரௌபதி. பகடை விளையாட்டிற்குப் பின் துச்சாசனன் அவளுடைய புடவையை பிடித்திழுத்த போதும், கீசகன் அவள் மேல் கண் வைத்த போதும், அவமானம் தாங்காமல் துயரத்தால் அவளுடைய இதயம் நொறுங்கியது.

வில் வித்தையில் சிறந்த அர்ஜுனன், கடினமான இலக்கை ஒரே பாணத்தால் தாக்கி திரௌபதியை வென்றான். இங்கு பைரப்பாவின் உள்ளத்தை ‘கங்கிசெட்டி’ மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார். “திரௌபதி தன் தந்தையின் தோட்டத்திலிருந்து நழுவி நேராக அவனுடைய மடியில் விழுந்தாள்” என்று எழுதுகிறார். அதாவது அந்தப் பழத்தை அதற்கு முன் யாரும் பறிக்கவுமில்லை, சுவைக்கவுமில்லை.

போட்டியில் வென்ற ‘பொருளை’ தன்னோடு குயவனின் வீட்டின் பின்புறமிருந்த குடிசைக்கு அழைத்து வந்தான். மீதியிருந்த நான்கு சகோதரர்களும் அவளைப் பார்த்த உடனே அவள் பால் கவரப்பட்டதைக் கண்டு அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். குந்தி அவளருகில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்து, “உண்மையாகவே மிக அழகாக இருக்கிறாய். நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் முகம், கண்கள், மூக்கு வாய் உடலின் வளைவுகள், ஈரப்பு எல்லாம் அற்புதமாக உள்ளன. அசாத்தியமான களையோடு உள்ளாய். உன்னைப் போல இன்னொரு பெண் கிடைக்க மாட்டாள். என் ஐந்து புதல்வர்களையும் நீயே மணம் புரிந்து கொள். உனக்குக் கிடைக்கும் தாம்பத்திய சுகம் நம் ஆரிய வம்சத்தில் வேறு யாருக்கும் கிடைக்காது” என்று ஆசீர்வாதம் செய்தாள்.

இமயமலைப் பகுதிகளில் இது போன்ற வழக்கம் உள்ளது. இன்றைக்கும் ஆரியர்களின் மூல சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் தேவஜாதி இனம் இமயமலையின் உள்ளது. அதோடு. “என் ஐந்து புதல்வர்களும் உன் விருப்பத்தை ஒரு அங்குலம் கூட மீற மாட்டர்கள். நான் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று குந்தி திரௌபதிக்கு வாக்களித்தாள். ஐந்து பாண்டவர்களையும் ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களாகச் சேர்த்துத் தாங்குவது திரௌபதிக்கு ஒரு தியானமாக மாறியது. அந்த நிஷ்டையை அவள் வெற்றிகரமாகக் கடைப்பிடித்தாள்.

தினம் ஒருவராக திடகாத்திரமான ஐவரும் திரௌபதியைக் காதல் கடலில் மூழ்கடித்தாரகள். ஒருவர் ஒருநாள் வந்தால், மீதி நான்கு பேரும் அவளுக்காக ஏங்கினர். ஆனால் அதன் பிறகு வருடத்திற்கு ஒருவர் என்ற நியமத்தைக் குந்தி ஏற்படுத்தினாள். தன் கணவர்களின் மேன்மைக்காக அத்தகு தர்மத்தைக் கடைப்பிடித்த திரௌபதி எத்தனை சிரமத்தை அனுபவித்தாளோ? ஐவருக்கும் தன்னை சமர்ப்பித்துக் கொண்டாள்.

திரௌபதியின் கர்ப்பம் என்றால் வலிமையான கர்ப்பம். திருமணமான உடனே ஐவருக்கும் ஆளுக்கொரு புதல்வனாகப் பெற்றளித்தாள். பிரதிவிந்த்யன், ஸ்ருதசோமன், ஸ்ருதகீர்த்தி, சதாநிகன், ஸ்ருதசேனன் என்பன அவர்களுடைய பெயர்கள். பகடையில் யுதிஷ்டிரன் தோற்றபின் நடந்த பல பரிணாமங்களால் திரௌபதி வாழ்க்கையில் பலப்பல கஷ்டங்களையும் கண்ணீரையும் சந்திக்க நேர்ந்தது. திரௌபதியின் மனத்தில் நிகழ்ந்த கொந்தளிப்புகள் வாசகர்களின் இதயத்தைக் கலங்கச் செய்கின்றன. பர்வாவில் அவற்றை அற்புதமாகப் படைத்துள்ளார் ஆசிரியர்.

“உண்மையாக அரச தர்மம் என்றால் என்ன?” என்று கேட்டான் பிரதிவிந்த்யன். திரௌபதி கலகலவென்று சிரித்தாள். காரணம் புரியாவிட்டாலும் தாயோடு சேர்ந்து அவனும் சிரித்தான்.

“வேட்டையாடுவது, குடிப்பது, பெண்களின் தொடர்பு, சூதாடுவது” என்று விரக்தியில் பதிலளித்தாள் சிரிப்பினூடே. அந்தச் சிரிப்பு, அவள் மனத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஜுவாலை. எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு போன்றது அந்தச் சிரிப்பு. அந்தச் சிரிப்புக்குப் பல அர்த்தங்கள். அவளுடைய வேதனையும் ஆத்திரமும் நம் மனத்தை வந்து மோதுகின்றன. மிகவும் ஆழமாகப் பரிசோதனை செய்த பின் பைரப்பா அந்த சம்பவத்தை இவ்வாறு வர்ணித்தார் என்று தோன்றுகிறது.

உண்மைதான். மகாபாரதக் கதை முழுவதும் அந்த மூன்று வீடுகளைச் சுற்றியே நடந்தது அல்லவா? இதில் மறைமுகமாகப் பெண்களே ஹிம்சையை அனுபவித்தார்கள். அதிலும் முக்கியமாக பகடையாட்டத்திற்குப் பின் திரௌபதியின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் அரசை இழந்தான். தம்பிகளை இழந்தான். தன்னைத் தானே இழந்தான். திரௌபதியையும் பணயமாக வைத்துத் தோற்றான். ஒற்றை ஆடையில் இருந்த திரௌபதியை சபை மண்டபத்திற்திற்கு இழுத்து வந்தபோது அதைத் முதியவர்கள் யாரும் தடுக்க இயலாமல் போனார்கள். துஷ்டர்கள் நால்வரும் உரைத்த விபரீதமான சொற்களை யாரும் எதிர்க்க வில்லை.

அந்த நேரத்தில் திருதராஷ்டிரனும் காந்தாரியும் வந்து அந்தக் கொடுஞ்செயலை நிறுத்தினார்கள். அதன் பிறகு, மீண்டும் சூதாட்டதிற்கு தயாரான யுதிஷ்டிரனிடம், “வேண்டாம்” என்று வேண்டினாள் திரௌபதி. “நீ செய்வது தவறு என்று ஆண்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் அந்த நாட்களில் இல்லை” என்று திரௌபதி தன் ஐந்து புதல்வர்களிடமும் கூறுகிறாள்.

“பின் எப்போது உனக்கு தைரியம் வந்தது?” என்று சுதசோமன் கேட்டபோது, “தர்மத்தை அறிந்தவர் ஒரே ஒருவர்தான். வாசுதேவ கிருஷ்ணன். வீம்புக்காக மீண்டும் சூதாட்டத்திற்குச் சென்று தோற்ற யுதிஷ்டிரனை முகம் வீங்குமளவுக்குத் திட்டி புத்தி கூறினான் கிருஷ்ணன். “துரியோதனன் போன்ற தாயாதியின் மனம் எப்படி வேலை செய்யும் என்று தெரிந்து கொள்ளும் அறிவு உனக்கு இல்லாமல் போய் விட்டது. அந்த நேரத்தில் நான் அங்கு வந்திருந்தால் அது அதர்மம் என்று உனக்கும் துரியோதனனுக்கும் புத்தி கூறி இருப்பேன். கேட்காவிட்டால் இவருடைய கைகளையும் வெட்டியிருப்பேன். சூதாடுபவர்களுக்கு அதுதான் தண்டனை” என்றான் கிருஷ்ணன்.

தர்மபுத்திரன் தன்னை அவ்வாறு சூதில் தோற்றது தர்மமா என்று திரௌபதி கேள்வி எழுப்பியபோது பீஷ்மரோ துரோணரோ பதில் கூற வில்லை. ஐந்து கணவன்மார்களும் மெளனமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் உரைத்த பீமனின் சபதமே அவளுக்கு எதிர்காலத்தின் மேல் ஆசையை ஏற்படுத்தியது.

அந்தத் தீயவர்கள் தன்னைத் துகிலுரித்தி அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் வீரர்களான தன் தந்தையின் பெயரையும் சகோதரனின் பெயரையும் எடுத்துக் கூறி பயமுறுத்த வேண்டும் என்று முயற்சித்தாள். ஆனால் தீயவர்கள் அதைச் செவிமடுக்கவில்லை. “ராஜசூய யாகத்தில் அந்த யாதவ கிருஷ்ணன், சிசுபாலனின் கழுத்தை வெட்டினான் அல்லவா? அந்தக் கிருஷ்ணன் எனக்கு அண்ணன். அவன் வருவான் உங்களை ஒரு கை பார்ப்பான்” என்றாள் திரௌபதி. எல்லோருக்கும் அப்போதுதான் அச்சம் வந்தது.

திரௌபதி வாழ்நாள் முழுவதும் கடமைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தாள். விரதம், தர்மம், நியமம் என்று எல்லாமே அவளுக்குச் சிறைதான். போர்க்களத்தில் அபிமன்யு வீரமரணம் அடைந்தபோது பாண்டவர்களும் கிருஷ்ணனும் சுபத்ராவை சமாதானப்படுத்தினார்கள். அதன் பிறகு அடுத்த அறையில் கர்பவதியான உத்தரையின் தலையை திரௌபதி தன் மடியில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான். அதைப் பார்த்து அர்ஜுனன், “உன்னைத் தவிர இவளுக்கு ஆறுதல் கூறும் சக்தி வேறு யாருக்கும் இல்லை” என்றான். ஆனால் உப பாண்டவர்களான திரௌபதியின் புதல்வர்களை அஸ்வத்தாமன் அநியாயமாகக் கொன்ற போது திரௌபதி நெஞ்சு வெடிக்கும்படி அழுது அரற்றினாள். “அபிமன்யு இறந்தபோது சுபத்ராவுக்கு அனைவரும் ஆறுதல் கூறினார்கள். அர்ஜுனன் அவளை அணைத்துக் கொண்டு விக்கி அழுதான். கடோத்கஜன் இறந்தபோது பீமன் சடலத்தைப் தூக்கி வந்து தன் கண்ணீரால் புதல்வனின் உடலில் இருந்த ரத்த கரைகளைக் கழுவினான். இப்போது என் ஐந்து புதல்வர்களை நான் இழந்து நிற்கிறேன். என்னை அணைத்து ஆறுதல் கூறுவார் யாருமில்லை” என்று நினைத்துக் கொண்டாள்.

ஐந்து கணவன்மார்கள் இருந்தும் அவளுடைய இதயத்தில் தனிமை கூடு கட்டிக்கொண்டு இருந்தது போலும். பர்வா நாவலின் இறுதியில், உத்தரையின் கர்பத்திலிருந்து பிறந்த குழந்தையிடம் அசைவு இல்லாத போது, குந்தி திரௌபதியிடம் வந்து, “நீ மீண்டும் கர்ப்பம் தரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வம்சம் முடிந்து போய் விடும்” என்கிறாள்.

திரௌபதியின் கண்களில் அலட்சியம். தலையைக் குறுக்காக அசைத்து, “இந்த வம்சம் முடிவடைந்தால் என்ன நஷ்டம்?” என்று கேட்டாள். அந்தக் கூரான சொற்களின் மூலம் தன் எதிர்ப்பைக் காட்டினாள். அவளுக்குள் எத்தனை சமுத்திரங்கள் பொங்கிப் புரண்டனவோ யாரறிவார்?

பைரப்பாவைப் போல மேலும் சிலரும் மகாபாரதக் காலத்தைச் சேர்ந்த பெண்களின் துயரத்தையும் அவர்கள் வெளியில் சொல்லாமல் அனுபவித்த வேதனையையும் கண்டு பரிதாபப்பட்டு எழுதியுள்ளார்கள். சிலர் பெண் எழுத்தாளர்களை விட அற்புதமாக பெண்களின் இதயத்தை வர்ணித்தார்கள்.

கன்னட நாவல் பர்வாவைத் தெலுங்கில் மொழிபெயர்த்த கங்கிசெட்டி லக்ஷ்மிநாராயணா, “பைரப்பா பண்டிதர்களுக்காக அன்றி இந்த இதிகாசம் பாமரர்களுக்குப் புரியும்படி அவர்கள் பேசும் மொழியில் எழுதினார். மொழிபெயர்ப்பில் நானும் அதே போல் தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரே விதமான மொழி வடிவத்திலும், வாக்கிய அமைப்பிலும் செய்தேன். இது என் சிறு முயற்சி” என்றார்.

ஆனால் கங்கிசெட்டி மிகப் பெரிய செயலைத் தலைமேல் தாங்கி தெலுங்கு வாசகர்களுக்கு அன்றைய வரலாற்றையும், கலாசாரத்தையும் பரிணாம மாற்றத்தையும் தெளிவாக எழுதி முழுமையைச் சாதித்தார்.

காந்தாரி:

மகாபாரதத்தில் மற்றொரு முக்கியமான உயர்ந்த பாத்திரம் காந்தாரி. பைரப்பா பர்வா நாவலில் காந்தாரியின் மறைத்த கண்களுக்குப் பின்னால் அசைந்த கரு நிழலைப் புரிந்து கொண்டு அவளுடைய உள்ளத்தை விளக்கினார். மகாபாரத்தின் பல பாத்திரங்கள், முக்கியமாக பெண் கதை மாந்தர்களின் இதய ஆழத்தில் இருந்த கம்பீரமான எண்ணங்களை இந்த பிரபஞ்சம் எவ்வாறு அறிய முடியாமல் போனதோ, அதே போல் காந்தாரியின் மன உலகத்தையும் இந்த வெளியுலகம் பார்க்க இயலாமல் போனது.

அவளுடைய விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்ளத் தவறிய தந்தையும், உடன் பிறந்தவர்களும் தீர்மானித்த குருடனோடு திருமணத்திற்கு எத்தனை நிசப்தமாக சம்மதித்தாளோ, பின்னர் அவள் தன் வாழ்நாள் முழுவதும் அதே கட்டுப்பாட்டோடு கணவனை அனுசரித்தாள்.

காந்தாரம் உயர்ந்த மலைகளோடும் அவற்றை மூடி மறைப்பது போல் வளர்ந்த பசுமையான மரங்களோடும், புதர்கள், சிகரங்கள் என்று தூய இயற்கை எழில் நிரம்பிய தேசம்.. நீல வானம், எல்லா பருவ காலங்களிலும் ஒன்றில்லாவிட்டால் ஒன்று அழகிய மலர்கள் மலரும் செடிகள், கொடிகள், இனிப்பான தண்ணீர், வெப்பம் என்பதே தெரியாத காற்று என்று இயற்கைச் சூழலில் வளர்ந்த பெண் காந்தாரி. அத்தனை அழகான தேசம் வேறொன்று இல்லை என்று தோன்றக் கூடிய தேசம். ஆனால் மண்ணில் சாரம் இல்லை. உலோகங்களோ, பொன்னோ செல்வமாக அங்கு இல்லை.

காந்தாரி நல்ல சிவப்பு. மலைப் பகுதிக்கே உரிய திடமான உடல்வாகு. மென்மையான பெண்மை. தூய நீர்நிலைகளில் எந்த வித மாசும் இல்லாத தன் அழகான முகத்தை ஆசை தீரப் பார்த்து மகிழ்வாள். தோழிகள் அவளுடைய மனத்தை மயக்கும் இனிமையான கற்பனைக் கதைகளைக் கூறி வந்தனர்.

பீஷ்மர், திருதராஷ்டிரனுக்குப் பெண்ணைக் கொடுக்கும்படி, உயர்ந்த காணிக்கைகள், ஆடை ஆபரணங்கள், நதிக்கரையில் விளைந்த சிறந்த தானிய வகைகள், பெரிய படை எல்லாவற்றையும் அனுப்பினார். தம்முடைய வைபவத்தைக் காட்சிப்படுத்தி ஆசை காட்டினாரா அல்லது படையைக் காட்டி எச்சரித்தாரா, தந்தைக்குப் பேராசை பிறந்ததா, படையைக் கண்டு ஏற்பட்ட அச்சம் நடுக்கத்தை உண்டு பண்ணியதா என்று தெரியவில்லை. பிறவிக் குருடனுக்குப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார். அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பது குறித்து அவளை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. அவள், அவருடைய கண் முன்னால் தன் மேல் வஸ்திரத்தை சர்ரென்று கிழித்து, கண்களை மறைத்துக் கொண்டாள். “குருடனுக்கு வாழ்க்கைப்படப் போகும் நான் அவன் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேன்” என்று எதிர்ப்போடு கண்களை மூடிக் கொண்டாள் போலும். அல்லது கணவனுக்கு இல்லாத பார்வை தனக்கு எதற்கு என்று நினைத்தாளோ தெரியவில்லை. பிறந்த வீட்டிலிருந்து கிளம்பும்போதே கண்களை மூடி மறைத்த கட்டோடுதான் கிளம்பினாள்.

மாமியார் வீட்டுக்கு வந்த பிறகு ஒரு ஒருமுறை கூட பிறந்த வீட்டுக்குச் செல்லவில்லை. “அங்கு சென்று என்ன செய்வது? யாரைப் பார்ப்பது? எப்படியோ என் சகோதரர்கள் இங்கு வந்து விட்டார்கள்” என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டாள் போலும். பிறந்து வளர்ந்த காந்தார தேசமும் அங்கிருந்த அழகிய சூழலும் வேறு. இங்கு மாமியார் வீட்டு அந்தப்புரம் வேறு. எத்தகைய நியமங்களுக்குத் தன்னைத் தானே அடக்கிக் கொண்டாளோ தெரியாது. ஒருவித ஜடத்தன்மை அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டது. சுயேச்சையாக, இயல்பாக வளர்ந்த பிறந்தவீட்டை விட்டு வந்த பின் புகுந்த வீட்டில் தன்னுடையதல்லாத வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்.

முழுவதுமாக கணவனை அனுசரித்து நடப்பதே தன் வாழ்க்கை என்ற நிச்சயத்தோடு காந்தாரி வாழத் தொடங்கினாள். எல்லோரிடமும் ‘மகா சாத்வி’ என்று பெயரெடுத்தாள். அவளுக்கு கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ‘தர்மம் வெல்லும்’ என்பதில் நிச்சயமான முடிவோடிருந்தாள். அந்த விஷயத்தில் எப்படிப்பட்ட தடை நேர்ந்தாலும் உள்ளது உள்ளபடி உண்மையை எடுத்துரைப்பதற்கு அவள் பின்வாங்கவில்லை. கணவன் குருடனானாலும் சில தாசிப் பெண்களோடு அவனுக்குத் தொடர்பு இருந்ததை அவள் அறிவாள்.

திருதராஷ்டிரன் வெளியில் சொல்லாவிட்டாலும் அந்தரங்கத்தில் சிம்மாசனத்தில் மேல் விருப்பமும், தன் குருட்டுத்தனத்தின் மேல் சொல்லவியலாத வெறுப்பும் கொண்டிருந்தான் என்பதை காந்தாரி உணர்ந்தாள். அவனுக்கு இல்லாத கண் பார்வை தனக்கும் தேவையில்லை என்று நினைத்தாளோ அல்லது தனக்கு இல்லாத கண்பார்வை மனைவிக்கு இருந்தால் தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தாளோ தெரியாது. ஆனால் திருதிராஷ்டிரனைப் போன்றவனோடு அத்தனை ஆண்டுகள் சுகமாகக் குடும்பம் நடத்திய மகா பதிவிரதையான காந்தாரி கம்பீரமான இதயம் கொண்டவள். பூஜிக்கத் தகுந்தவள். அனைவராலும் தேவதையாக கௌரவிக்கப்பட்டாள் அப்படிப்பட்ட மனைவி பற்றி திருதராஷ்டிரனுக்கு கர்வம் இருந்தது. “குரு வம்சத்தில் மட்டுமே அல்ல. முழு ஆரிய வர்ஷத்திலேயே ஈடிணையில்லாத தேவி காந்தாரி” என்ற கர்வம் அவன் மனத்தில் இருந்தது.

கர்ணனின் மனத்தில் காந்தாரி பற்றி எத்தனை உயர்ந்த மதிப்பு இருந்தது என்பதைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது. குருக்ஷேத்திர யுத்தத்திற்கு முன்பு குந்தி கர்ணனைச் சந்தித்து அவனுடைய பிறப்பின் ரகசியத்தைக் கூறினாள். அப்போது கர்ணன், “என்னை வளர்த்த தாய் ராதா இறந்த பின் என் நண்பனின் தாய் காந்தாரிமாதா எனக்குத் தாயில்லாத குறையைத் தீர்த்தாள். ஹஸ்தினாபுரத்தில் மட்டுமல்ல எந்த தேசத்திலும் காந்தாரி போன்ற ஒரு தாய் கிடைப்பாளா என்பது சந்தேகமே. கணவனுக்காக அத்தகு தியாகம் செய்யும் பெண்களில் மட்டுமே அத்தகு முழுமையான தாய்மை மலரும் என்று தோன்றுகிறது. எப்போது அவள் பாதங்களைப் பணிந்து, “தாயே, கர்ணன் உன் பாதங்களைப் பணிகிறேன்” என்று கூறினாலும், பாசத்தோடு என் தலையை இரு கரங்களாலும் வருடி, “தீர்க்காயுவோடு வாழ்வாய், மகனே” என்று ஆசீர்வாதம் செய்வாள். அவள் தன் அன்புள்ளத்தை தன் புதல்வர்களோடு கூட எனக்கு கொஞ்சம் பகிர்ந்து கொடுத்தாள்” என்று கூறுவது காந்தாரியிடம் இருக்கும் தாய்மை உள்ள்த்திற்கு சிறந்த சான்று.

காந்தாரி தன் மனக் கண்ணால் சுற்றிலும் நடப்பதை உணரும் திறன் மிகுந்தவள். நல்ல மனத்தோடு குந்தியின் மன வேதனைகளைப் புரிந்து கொண்டாள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானங்களையும், கொந்தளித்த அவளுடைய நெஞ்சையும் காந்தாரி அறியாதவள் அல்ல. நிறைந்த அரச சபையில் அவமதிப்பைச் சந்தித்த திரௌபதியின் மனம் எத்தகைய வேதனையில் வருந்தும் எனபதை சக பெண்ணாக காந்தாரியால் யூகிக்க முடிந்தது. அதனால்தான் கணவனோடு சேர்ந்து சென்று துச்சாசனனை அவளால் தடுக்க முடிந்தது. அத்தகு கொடுஞ்செயலைச் செய்த தன் புதல்வனுக்குக் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்று அஞ்சிக் கொண்டே இருந்தாள். எடுத்துச் சொன்னாலும் தன் புதல்வர்கள் கேட்கமாட்டார்கள் என்று தெரிந்து செய்வதறியாது இருந்துவிட்டாள்.

குருக்ஷேத்திரத்தில் வரிசையாகத் தன் புதல்வர்கள் மரணித்து வந்த செய்தியைக் கேட்டு இதயம் வெடிப்பது போல் அழுதாள். சஞ்சயன் கூறி வந்த கடுமையான கெட்ட செய்திகளை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தான் சுமந்து பெற்ற குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த அந்தத் தாயின் இதயம் சுக்கு நூறானது. அவளுடைய் ‘கர்ப்ப சோகம்’, ‘கூடாது’ என்று நினைத்தாலும் நிற்காமல் சாபமாக மாறியது. அவள் ஸ்ரீகிருஷ்ணனின் வம்சத்திற்தே சாபம் கொடுத்தாள்.

கடைசியில் கிருஷ்ணன் காந்தாரியிடம், “தாயே, உன்னோடு மனம் விட்டு ஒரு விஷயம் பேச வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை இருந்தது. எதுவும் மறைக்காமல் உண்மையைக் கூறும் வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறையாவது வரவேண்டும். உன்னுடைய அந்தரங்கத்தைத் திறந்து கூறு. மகாராஜா பிறவிக் குருடர். நீ ஏன் கண்ணை மறைத்துக் கொண்டாய்?” என்று கேட்டான்.

“கண் தெரியாதவனுக்கு என்னைக் கட்டி வைத்தால், அவன் முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று என் இரு கண்களையும் துணியைக் கட்டி மறைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு என்னனயும் நான் பார்த்துக் கொள்ளவில்லை. என்னைப் பார்த்து ரசிக்கக் கூடிய கணவன் எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் எல்லோரும் என்னை “மகா சாத்வி, பதிவிரதை” என்று புகழ்ந்த போது அதன் ருசி என் தலையில் ஏறியது. அந்தப் பட்டங்களை இழப்பதற்கு என் மனம் விரும்பவில்லை. நான் கண்ணைக் கட்டிப் பார்வையை மறைத்துக் கொண்டதன் காரணத்தை மறந்து, இந்த ஹஸ்தினாபுரத்தின் அந்தப்புரமக்கள் வைத்த புனிதப் பெயர்களில் திளைத்து மூழ்கிப் போனேன். இன்று நீ என் மனசைத் தட்டி திறந்துவிட்டாய். இதுவரை என் பிள்ளைகளில் யாரும், “அம்மா, நீ ஏன் இப்படி குருடியானாய்? எங்களைப் பார்ப்பதற்காகவாவது கண்களை திற” என்று கேட்கவில்லை. என் புதல்வி கூட கேட்கவில்லை. தாயின் செயற்கையான குருட்டுத் தனத்தில் புனிதத் தன்மையும் தெய்வீகமும் நிற்கிறது என்று என் கால்களைப் பணிந்து வணங்குவார்கள்” என்று காந்தாரி கூறிய சொற்களைக் கேட்டு சுற்றிலும் வீசிய காற்று கூட அவள் மனத்தைப் போல உறைந்து விட்டதோ என்று எண்ணினான் கிருஷ்ணன்.

“தாயே, நீ பிறவிக் குருடியல்ல. மேலே துணியைக் கட்டிக் கொண்டதால் பார்க்கும் சக்தி போய் விடாது. இப்போதாவது ஏன் அதனை எடுத்து விட்டு சுற்றிலும் பார்க்கக் கூடாது?” என்று கூறி, மென்மையாக அவளுடைய கண் கட்டுகளை அவிழ்த்தான்.

“கண்களைத் திறந்து பார், தாயே. கண்ணை மறைப்பதற்கு முன் காலையில் தூங்கி எழுந்ததும் கண்களைத் திறப்பாய் அல்லவா, அதே போல் திற” என்றான்.

அவளுடைய இரண்டு இமைகளையும் கிருஷ்ணன் தன் விரல்களால் மெதுவாக வருடினான். நிதானமாக அவள் கண்களைத் திறந்தாள். பாண்டவர்கள் அவள் எதிரில் வந்து காலில் விழுந்து வணங்கினார்கள்.

“க்ருஷ்ணா, வந்து வணங்கு” என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறியவுடனே திரௌபதி வந்து காந்தாரிக்கு நமஸ்காரம் செய்தாள். காந்தாரி திரௌபதியின் தலையை வருடினாள். தன் கை விரல்களை அவளுடைய தலைமுடியில் நுழைத்து வருடினாள். பாசத்தோடு அவளை எழுப்பி இரு கரங்களால் அணைத்துக் கொண்டாள்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற திருதராஷ்ட்ரனுக்கு காந்தாரியையும் கிருஷ்ணன் தன்னிடமிருந்து பிரித்து விட்டான் என்ற வருத்தம் இருந்தது. எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு எதையோ பெற்ற மகிழ்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் குருட்டுத் தனத்திற்குப் பிறகு எதைப் பார்ப்பது என்று யோசித்தாள். உயிரோடிருக்கும் போது என்றுமே பார்க்காத தன் புதல்வர்களை இப்போது உயிரற்றவர்களாகப் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கிருஷ்ணனிடம் தெரிவித்தாள்.

போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கு எங்கு பார்த்தாலும் சடலங்கள். உடைந்த உடல் பகுதிகள், ஆபரணங்கள், விற்கள், ரதங்கள், குதிரைகள், யானைகள் எல்லாம் கிடந்தன. அவளால் அவற்றைப் பார்க்கச் சகிக்கவில்லை. பயங்கரமான அந்த காட்சிகளைப் பார்த்து அவளுடைய பார்வை சிதறியதா அல்லது அவள் மீண்டும் குருட்டுத் தன்மையை விரும்பி வரவேற்றாளா தெரியாது. எல்லாம் கிருஷ்ண மாயை.

மந்திரம், மாயை, அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாவற்றையும் பார்த்து, “ராமாயணமும் மகாபரதமும் உண்மையில் நடந்த கதைகள் தானா?” என்று சந்தேகம் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயல்பே. அந்த சந்தேகங்களைத் தீர்ப்பவர்களையோ, தீர்க்கும் சூழலையோ நம் கல்வியமைப்பு உருவாக்கும் வாய்ப்பு இல்லை. வாதத்திற்கு ஏற்புடைய ‘பர்வா’ போன்ற நூல்களை பாட நூல்களாக வைப்பதற்கோ, குறைந்தபட்சம் குறிப்பு நூலாக வைப்பதற்கோ கூட பல கல்லூரி, பலகலைக் கழகங்களுக்குத் தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரான பைரப்பாவின் பர்வா நாவல் எத்தனை சிறந்ததோ, அதே போல் அவர் எழுதிய “நான் ஏன் எழுதுகிறேன்?” என்ற கட்டுரையும் மிக முக்கியமானது. ஒரு எழுத்தாளர் உண்மையைக் கண்டு எழுத எத்தனை சிரமங்களை மேற்கொள்வார் என்பதை அறிய வேண்டுமென்றால் பைரப்பாவின் மானசிக, உடல் பிரயாணத்தைப் பற்றிப் படிக்க வேண்டும். தன்னுடைய சொந்த பணத்தைச் செலவு செய்து எத்தனை இடங்களுக்கு அலைத்தார், என்னென்ன அவஸ்தைகளை அனுபவித்தார், என்பவற்றை அறிந்து கொள்ள வேண்டும். கட்டுக்கட்டாக வரலாற்றையும், புராணங்களையும் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களுக்கு விழிப்பு ஏற்பட வேண்டுமென்றால் பைரப்பாவின் “நான் ஏன் எழுதுகிறேன்?” கட்டுரையைப் படித்துத் தீர வேண்டும். மகாபாரதம் நிகழ்ந்த எல்லா இடங்களுக்கும் சென்று அங்கிருப்பவர்களோடு பேசி, அந்தந்த இடங்களைப் பார்த்து, மனம் ஒன்றிப் போய் இனி எழுதத் தீரவேண்டும் என்ற தீவிரமான உத்வேகத்தோடு பர்வாவை எழுதத் தொடங்கினார். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் அவர் செய்த அந்தப் பெரிய முயற்சி எத்தனை பேரைச் சென்றடைந்தது? பர்வாவைப் பற்றிய தெரியவிட்டாலும் பரவாயில்லை. நான் என் எழுதுகிறேன் என்ற கட்டுரையாவது இலக்கிய ஆர்வலர்கள் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு பாட நூலாக வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், மகாபாரதக் கதை நடந்த இடங்களைப் பற்றி ஒரு புரிதல் ஏற்படும். ஆராய்ச்சி என்றால் எத்தனை அர்பணிப்போடு நடத்த வேண்டும், எத்தனை முயற்சி செய்ய வேண்டும் என்பது தெரியும். தொலைவான இடங்களுக்குப் பயணம் செய்வது, செய்திகளைச் சேகரிப்பது, அவற்றை தினமும் சிந்தித்து, இரவெல்லாம் எழுதுவது என்று இடைவிடாமல் உழைத்த பைரபபவின் உடல் நலம் சீர் கெட்டது. “தலையில் இருப்பதை எல்லாம் எழுத்தில் இறக்கினால் தவிர உடல்நலம் சீராகாது” என்றார் டாக்டர். சுமார் நான்கு ஆண்டுகள் பிடித்ததாம் பர்வாவை எழுதி முடிக்க. அப்போது அவருடைய வயது இருபத்தெட்டுதான்.

நவீன கண்ணோட்டத்தோடு பைரப்பா கன்னடத்தில் எழுதிய பர்வா நாவல் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட வேண்டிய ஒன்று.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை!

pm modi with rss chief mohan bhagawat - 2026

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை…

தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

மேடையில் வீற்றிருக்கின்ற, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்கார்யவாஹ், மதிப்பிற்குரிய தத்தாத்ரேய ஹோஸ்போலே ஜி, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர ஷேகாவத் ஜி, தில்லியின் பிரபலமான முதலமைச்சர் ரேகா குப்தா ஜி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அனைத்து ஸ்வயம்சேவகர்களே, அவையில் இன்னபிற சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே பெரியோர்களே. நேற்று நமது மூத்த ஸ்வயம்சேவகர், மற்றும் சங்கத்தினுடைய, அனைத்துத் திருப்புமுனைகளிலும், ஏதோ ஒருவகையில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட, விஜய்குமார் மல்ஹோத்ரா அவர்களை நாம் இழந்திருக்கிறோம். நான் முதன்மையாக, அவர்களுக்கு மரியாதைகலந்த, சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.

நண்பர்களே, இன்று, மஹநவமித் திருநாள். இன்று, தேவி சித்திதாத்ரிக்கு உரித்தான நாளாகும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், நவராத்திரியின் பொருட்டு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை, விஜயதசமி மிகப்புனிதமான நாள். அநியாயத்தின் மீதான, நியாயத்தின் வெற்றி. அசத்தியத்தின் மீது, சத்தியத்தின் வெற்றி. இருளின் மீது, ஒளியின் வெற்றி. விஜயதசமி, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின், இந்த சிந்தனை மற்றும் நம்பிக்கையினுடைய, காலத்தை வெல்லும் அறைகூவல். இத்தகைய மகத்தான வேளையின் போது, நூறு ஆண்டுகள் முன்பாக, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவுதல், இது ஏதோ யதேர்ச்சையான விஷயமல்ல. இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும், அந்தப் பாரம்பரியத்தின், மீள் புத்தாக்கமாகும்.

இதிலே, தேசிய விழிப்புணர்வு, அந்தந்த சமயத்திலே, அந்த காலகட்டத்துடைய, சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே, புதிய புதிய 6வடிவங்களிலே வெளிப்படுகிறது. இந்தக் காலகட்டத்திலே, சங்கம், அந்த அனாதியான தேசிய விழிப்புணர்வை, புண்ணியமான வடிவமாகும்.

நண்பர்களே, இது நம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்வயம்சேவகர்களுடைய, சௌபாக்கியமாகும். அதாவது எங்களுக்கு, சங்கத்தின் நூற்றாண்டு என்பது போன்ற, மகத்தான வேளையை, பார்க்க முடிந்திருக்கிறது. நான் இந்த சந்தர்ப்பத்திலே, தேச சேவை என்ற உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்த, கோடானுகோடி ஸ்வயம்சேவகர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், மனதார வாழ்த்துகிறேன். நான் சங்கத்தின் நிறுவனரும், நம்மனைவருக்கும் ஆதர்ஸமானவரும், பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவரார் அவர்களுடைய சரணாரவிந்தங்களிலே, நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

நண்பர்களே, சங்கத்தின் இந்த நூறாண்டுக்கால கௌரவமான பயணத்தின் நினைவாக, இன்று, பாரத அரசாங்கமானது, சிறப்பு அஞ்சல்தலை, மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டது. 100 ரூபாய் நாணயத்திலே, ஒருபுறத்திலே, தேசிய சின்னம் இருக்கிறது. இன்னொரு புறத்திலே, சிங்கத்தோடு கூட, வரத ஹஸ்தத்தோடு பாரதமாதாவின் சிறப்பான தோற்றம் உள்ளது. மேலும், சமர்ப்பண உணர்வோடு அவளை வணங்கும் ஸ்வயம்சேவகர்களைக் காண முடியும். பாரதநாட்டு நாணயத்திலே, பாரதமாதாவின் திருவுருவம், ஒருவேளை, சுதந்திர பாரதத்தின் வரலாற்றிலே, முதன்முறையாக நடந்தேறியிருக்கிறது.

இந்த நாணயத்தின் மேலே, சங்கத்தின் ஞானவாக்கியமும் பொறிக்கப் பட்டிருக்கிறது. ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய, இதம் ந மம.

நண்பர்களே, இன்று வெளியிடப்பட்டிருக்கும் சிற்ப்பு அஞ்சல்தலை, அதற்குமே கூட ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. நாமனைவரும் நன்கறிவோம், ஜனவரி 26 அன்று, குடியரசுத்திருநாளின் அணிவகுப்பு எத்தனை முக்கியமானது என்று. 1963யிலே நைண்டீன் சிக்ஸ்டி த்ரீயிலே, ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்வயம்சேவகர்களும் கூட, ஜனவரி 26ஆம் தேதி தேசிய அணிவகுப்பிலே கலந்து கொண்டார்கள். மேலும் அவர்கள், அழகு மிடுக்கு பெருமிதத்தோடு, தேசபக்தியின் மெட்டுக்கேற்ப பீடுநடை போட்டார்கள். இந்தத் தபால்தலையிலே, அந்த வரலாற்றுப்பூர்வமான கணத்தின் நினைவு அடங்கியிருக்கிறது.

நண்பர்களே, சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், இவர்கள் இடைவிடாமல் தேச சேவையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். சமூகத்தை சக்தியுடையதாக ஆக்கி வருகின்றார்கள். இதன் காட்சியும் கூட, அந்த நினைவு தபால்தலையிலே இருக்கின்றது. நான், இந்த நினைவு நாணயம், மேலும் தபால்தலையின் பொருட்டு, நாட்டுமக்களுக்கு, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே, எந்த வகையிலே, பர்ந்துபட்ட நதிக்கரையோரம், மனித நாகரீகம் தழைக்கின்றதோ, அதே போல, சங்கத்தின் கரைகளிலும் கூட, அதன் பிரதான ஓட்டத்திலும் கூட, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் அதிலே தழைத்தோங்கி இருக்கின்றன. எப்படி ஒரு நதி, எந்தப் பாதையில் பெருகியோடுகிறதோ, அந்தப் பகுதியை அந்த நிலத்தை, அங்கிருக்கும் கிராமங்களை, சுஜலாம் சுஃபலாம் என்று தனது நன்னீரால், வளமையாக்குகிறதோ, அதே போல, சங்கமானது இந்த தேசத்தின் அனைத்துத் துறைகளிலும், சமூகத்தின் அனைத்துக் கோணங்களையும் தொட்டிருக்கிறது. இது, இடையறாத தவத்தின் பலனாகும், இது தேசிய நீரோட்டத்தின் பலமாகும்.

நண்பர்களே, எந்த வகையிலே, ஒரு நதி பல கிளைகளாகத் தன்னை வெளிப்படுத்துகிறதோ, அனைத்துக் கிளைகளூம் அந்தந்தப் பகுதிகளை வளமடையச் செய்கின்றதோ, சங்கத்தின் பயணமும் கூட இதைப் போன்றதே தான். சங்கத்தின் பல்வேறு அமைப்புகளும் கூட, வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளோடும் இணைந்து, தேச சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கல்வியாகட்டும் விவசாயமாகட்டும் சமூக நலனாகட்டும், பழங்குடிகள் நலனாகட்டும் மகளிர் அதிகாரமளிப்பாகட்டும், கலை மற்றும் அறிவியல் துறையாகட்டும், நம்முடைய அனைத்து தொழிலாள சகோதர சகோதரிகளாகட்டும், சமூகத்தின் இப்படிப்பட்ட அனைத்துத் துறைகளிலும், சங்கம், தொடர்ந்து பணியாற்றி வருகின்றது. மேலும் இந்தப் பயணத்துக்கும் கூட ஒரு சிறப்பு விஷயம் இருக்கின்றது.

சங்கம் என்ற பெரும் நீரோட்டம், அநேக கிளைகளாக என்னவோ ஆனது, பல்கிப் பெருகித் தழைத்தது, ஆனால் இவற்றுக்கிடையே, முரண்பாடோ பிரிவினையோ பிறந்ததில்லை என்றுமே ஏற்பட்டதில்லை. ஏனென்றால், ஒவ்வொரு கிளையினுடைய, பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் அனைத்து அமைப்புக்களின் நோக்கம் ஒன்று தான், உணர்வு ஒன்று தான், தேசத்திற்கே முதன்மை. Nation First.

நண்பர்களே, தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், விசாலமான நோக்கத்தைத் தாங்கிப் பயணித்தது. அந்த நோக்கம் என்னவென்றால், தேச நிர்மாணம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, சங்கம் தேர்வு செய்த பாதை என்னவென்றால், அது தான், தனிநபர் உருவாக்கத்திலிருந்து தேசத்தின் உருவாக்கம். மேலும் இந்தப் பாதையில் இடைவிடாமல் பயணிக்க, தேவையான செயல்பாட்டுமுறை, என்னவென்றால், என்றும் விதிகளின்படி செயல்படும் ஷாகா.

நண்பர்களே, பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவார் நன்கறிவார், அதாவது நமது தேசம் எப்போது சக்தியுடையதாய் ஆகுமென்றால், ஒவ்வொரு குடிமகனுக்குள்ளேயும், தேசத்தின் பொருட்டு கடமையுணர்வு விழிப்படையும் போது தான் என்பதை. நம்முடைய தேசம் எப்போது மேலெழும்பும் என்றால், நாட்டின் குடிமக்கள் அனைவரும், பாரதத்திற்காக வாழ்வதைக் கற்கும் போது தான். ஆகையினாலே, அவர் தனிமனித உருவாக்கலில் நிரந்தர கவனம் செலுத்தினார். அதோடு அவருடைய வழிமுறையும் கூட, மிக வித்தியாசமாக இருந்தது. பரம்பூஜ்ய டாக்டர் ஹெட்கேவார் அவர்கள்…. இது பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம், அவர் கூறுவதுண்டு எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள். எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிவிடு. மக்களைத் திரட்டுவதில் டாக்டர் ஐயாவின் இந்த வழிமுறை.

இதை எளிமையாகப் புரிந்து கொள்ளவேன்றுமென்றால் குயவனை நினைத்துக் கொள்ளுங்கள். எப்படி குயவன், செங்கல்லைச் சுடுகிறார்!! அவர் பூமியின் சாதாரண மண்ணிலிருந்து பணியைத் தொடங்குகிறார். குயவன் மண்ணைக் கொண்டு வருகிறார், அதில் உழைக்கிறார், அதற்கு உருவம் கொடுக்கிறார் கொடுத்து, சுடப் பண்ணுகிறார். தானும் வெப்பத்தில் உழல்கிறார் செங்கல்லையும் சுடுகிறார். பிறகு அந்தச் செங்கற்களை ஒன்று திரட்டி, இவற்றைக் கொண்டு பெரும் கட்டிடத்தை எழுப்புகிறார்.

இதைப் போன்று தான் டாக்டர் ஐயா, மிகவும் எளிமையான மனிதர்களைத் தேர்வு செய்தார். பிறகு அவர்களுக்குக் கற்பித்தார் தொலைநோக்கை அளித்தார் உருவாக்கினார். இந்த வகையிலே, அவர் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களை உருவாக்கினார். ஆகையினால் தான் சங்கம் பற்றி ஒன்று கூறுவதுண்டு. அதாவது இதிலே, சாதாரணமானவர்கள் இணைந்து, அசாதாரணமான ஆச்சரியமான பணிகளை சாதிக்கின்றார்கள்.

நண்பர்களே, தனிமனிதனை உருவாக்கும் இந்த அழகான செயல்முறை, இதை இன்றும் கூட, சங்கத்தின் ஷாகாவிலே நம்மாலே காண முடியும். சங்க ஷாகாவின் மைதானம், எப்படிப்பட்ட உத்வேக பூமி என்றால், அங்கிருந்து, நானிலிருந்து நாம் என்பதற்கான பயணம் தொடங்கி விடுகிறது. சங்கத்தின் ஷாகாக்கள், தனிமனித உருவாக்கலுக்கான யாக குண்டங்கள். இந்த ஷாகாக்களிலே, தனிமனிதனுடைய, உடல்ரீதியான, மனரீதியான மற்றும் சமூகரீதியான வளர்ச்சி ஏற்படுகிறது. சங்கத்தின் சுயம்சேவகர்களுடைய மனங்களிலே, தேச சேவைக்கான உணர்வும் உத்வேகமும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுயாய் அதிகரிக்கிறது. அவர்களுக்கெல்லாம், தியாகமும் அர்ப்பணிப்பும், இயல்பான ஒன்றாக ஆகி விடுகிறது. தற்புகழுக்காக போட்டிமனப்பான்மை, முடிவுக்கு வந்து விடுகிறது. மேலும் அவர்களுக்கு, சமூக தீர்மானம், மற்றும் சமூகப் பணியின், நற்பண்பு கிடைக்கிறது.

தேச நிர்மாணம் என்ற மகத்தான நோக்கம், தனிமனித உருவாக்கம் என்ற தெளிவான சிந்தனை, மற்றும் ஷாகா போன்ற, எளிய, உயிர்ப்புடைய, செயல்பாடு. இதுதான் சங்கத்தினுடைய, 100 ஆண்டுக்கால பயணத்தின் ஆதாரமாக ஆகியிருக்கிறது. இந்தத் தூண்களின் பலத்தால் எழுப்பப்பட்ட சங்கமானது, இலட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை உருவாக்கியிருக்கிறது.

இவர்கள் பல்வேறு துறைகளிலே, தேசத்திற்கு, தங்களுடைய சிறப்பானவற்றை அளித்து வருகிறார்கள். தேசத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவை வாயிலாக, மற்றும் தேச உயர்வுக்கான உழைப்பு வாயிலாக செய்கிறார்கள்.

நண்பர்களே, சங்கம் எப்போது செயல்படத் தொடங்கியதோ, சங்கத்திற்காக, தேசத்தின் முதன்மை மட்டுமே, அதன் முதன்மையாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையிலே, எந்தக்காலகட்டத்திலே தேசத்தின் முன்பாக சவால்கள் வந்த போதெல்லாம், சங்கமானது, அந்தக்காலகட்டத்திலே தன்னைத் தானே, அர்ப்பணித்தது, சங்கம் அதை எதிர்கொண்டது. சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவார் உள்ளிட்ட பல தொண்டர்கள் சுதந்திரப் போராட்ட வேள்வியில் கலந்து கொண்டார்கள்.

டாக்டர் ஐயா பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் எண்ணற்ற வீரர்களுக்கு, சங்கம் ஆதரவு அளித்து வந்தது. அவர்களோடு இணைந்து, தோளோடு தோள் சேர்த்து பணியாற்றியது.

1942இலே, nineteen forty twoவிலே, அங்கே சிமூரிலே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் வெடித்த போது, அதிலே, அநேக ஸ்வயம்சேவகர்கள், ஆங்கிலேயர்களின் தீவிரமான அடக்குமுறைக்கு இரையானார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, ஹைதராபாதின் நிஜாம் கட்டவிழ்த்த கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, கோவாவின் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து தாத்ரா நகர் ஹவேலியின் விடுதலை வரை, சங்கம் பல தியாகங்களைப் புரிந்திருக்கிறது. ஆனால் உணர்வு, ஒன்றாகவே இருந்திருக்கிறது. தேசத்திற்கே முதன்மை. இலக்கு ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம். நண்பர்களே, தேச சாதனையின் இந்தப் பயணத்திலே, சங்கத்தின் மீது தாக்குதல்கள், ஏதும் நடக்காமல் எல்லாம் இருக்கவில்லை.

சங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் பின்னப்பட்டன. நாமே கவனித்திருக்கிறோம், எப்படி சுதந்திரத்திற்குப் பிறகு சங்கத்திற்கு, முடிவுகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை. பிரதான நீரோட்டத்தில் வராமல் இருக்கச் செய்யவும், அப்படி அது வருவதைத் தடுக்கவும், எண்ணில்லாத சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பரமபூஜனீய குருஜியை, பொய் வழக்குகளில் சிக்க வைத்தார்கள். அவரை சிறைகளில் கூட அடைத்தார்கள்.

ஆனால், பூஜிய குருஜி சிறையிலிருந்து வெளிவந்தவுடன், அவர் மிக இயல்பாகவே கூறினார். ஒருவேளை, வரலாற்றின் ஏடுகளிலே இந்த உணர்வு, இந்தச் சொற்கள், மிகப்பெரிய கருத்தூக்கம் அளிப்பவை. அப்போது பெருமதிப்பிற்குரிய குருஜி மிக இயல்பாகக் கூறினார். சில வேளைகளிலே, நாக்கு பற்களுக்கு இடையே கடிக்கப்பட்டு விடுகிறது, நசுக்கப்பட்டும் விடுகிறது, ஆனால் நாம், பற்களை இதற்காக உடைப்பதில்லை. ஏனென்றால், பற்களும் நம்முடையவை தான், நாக்கும் நம்முடையது தான்.

உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? யார் சிறையில் துன்புறுத்தப்பட்டாரோ, யார்மீது பலவகையான கொடுமைகள் இழைக்கப்பட்டதோ, அதன் பிறகு கூட, பெருமதிப்பிற்குரிய குருஜியின் மனதிலே எந்தக் காழ்ப்பும் இருக்கவில்லை. எந்த வெறுப்பும் இருக்கவில்லை. இதுதான் பரமபூஜ்ய குருஜியுடைய, ரிஷியைப் போன்ற ஆளுமையாகும். அவருடைய இந்த சிந்தனைத் தெளிவு தான், சங்கத்தின் ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைந்தது. இது தான் சமூகத்தின்பால், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு நற்பண்புகளுக்கு வலுசேர்த்தது.

அந்த வகையிலே, சங்கத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டாலும், சூழ்ச்சிகள் பின்னப்பட்டாலும், பொய் வழக்குகள் போடப்பட்டாலும், சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், எப்போதுமே, காழ்ப்புணர்வுக்கு இடமே அளித்ததில்லை. ஏனென்றால் அவர்கள் அறிவார்கள், நாம் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை.

சமுதாயம், நம்மனைவரிடமிருந்து தான் உருவாகி இருக்கிறது. எது சிறப்பாக இருக்கிறதோ, அதுவும் நம்முடையது தான். எது சிறப்புக் குறைவானதோ, அதுவும் நம்முடையது தான்.

நண்பர்களே, மேலும் ஒரு விஷயம். யார் காழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ, அதுதான் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருடைய, ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தின்பால் இருக்கக்கூடிய அசையாத நம்பிக்கை. தேசத்தின் மீது அவசரநிலை திணிக்கப்பட்ட போது, இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும் பலத்தை அளித்தது, போராடுவதற்கான நெஞ்சுரத்தை அவர்களுக்கு அளித்தது. இந்த இரண்டு நற்பண்புகள் தான், அதாவது சமூகத்தின்பால் ஒற்றுமை, மற்றும் அரசியல்சட்ட அமைப்புகளின்பால் கொண்ட நம்பிக்கை தான், சங்கத்தின் ஸ்வயம்சேவகர்களுக்கு, அனைத்துச் சங்கடங்களின் போதும், நிலையான சித்தம் உடையவர்களாக ஆக்கியது. சமுதாயத்தின்பால், புரிந்துணர்வு உடையவர்களாக உருவாக்கியது. அந்த வகையிலே, சமூகத்தின் பல தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு, சங்கம் இன்றுவரை, விசாலமான ஆலமரத்தைப் போல, உறுதியாக நிற்கின்றது.

தேசம் மற்றும் சமூக சேவையிலே, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இப்போது இங்கே, நமது ஒரு ஸ்வயம்சேவகர், மிக அழகாக ஒரு பாடலைப் பாடினார்.

பூஜ்யத்திலிருந்து ஒரு நூறாண்டானது. பூஜ்யத்திலிருந்து, ஒரு நூறாண்டு வரை. பண்பே மன உணர்வாய், பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும். மனதிலே உத்வேகம் உண்டாகட்டும். பயிற்சியை மேற்கொள்கிறோம். தாய்நாட்டினை வழிபடுகிறோம்.

மேலும் அந்த பாடலின் செய்தி என்ன? நாங்கள், தேசத்தையே தெய்வமாகப் போற்றுகிறோம். மேலும் நாங்கள், தேகத்தையே தீபமாக ஆக்கும் பாடத்தைக் கற்றிருக்கிறோம். உண்மையிலேயே, இது அற்புதமானது. நண்பர்களே, தொடக்கம்முதலே சங்கம், தேசப்பற்று… மற்றும் சேவை என்பதன் பொருளாக இருந்தது. நாடு துண்டாடப்பட்ட துயரம், இலட்சோபலட்சம் குடும்பங்களை வீடில்லாதவர்களாக ஆக்கியது. அப்போது ஸ்வயம்சேவகர்கள், அகதிகளுக்கு சேவை புரிந்தார்கள். சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் தங்களுடைய குறைவான ஆதாரங்களைக் கொண்டு, அனைவருக்கும் முன்னதாய் இருந்தார்கள். இது வெறும் நிவாரணம் அல்ல, இது, தேசத்தின் ஆன்மாவினை, ஆற்றுப்படுத்தும் பணியாகும்.

நண்பர்களே, 1956லே குஜராத்தின் கட்சின் அஞ்ஜாரிலே, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அழிவு எந்த அளவுக்கு இருந்தது என்றால், நாலாபுறங்களிலும் பெருநாசமே காட்சியளித்தது. அந்த வேளையிலும் கூட, சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் நிவாரணம் மற்றும் மீட்பில் ஈடுபட்டார்கள்.

அப்போது, பெருமதிப்பிற்குரிய குருஜி கூட, குஜராத்தின் மூத்த சங்க பிரச்சாரகரான…. வகீல் ஐயாவிடம், அவர் அந்த வேளையில் குஜராத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் என்ன எழுதினார் என்றால், மற்ற மனிதர்களுடைய துக்கத்தை அகற்றுவதற்கு, சுயநலமற்ற தன்மையோடு தாமே அந்த கஷ்டங்களைச் சுமப்பது, ஒரு உத்தமமான இதயத்தின் அடையாளமாகும்.

நண்பர்களே, தாமே கஷ்டத்தை மேற்கொண்டு மற்றவர்களின் துயரத்தைப் போக்குதல், இதுவே ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் அடையாளமாகும். நினைத்துப் பாருங்கள், 1962 யுத்தகாலத்தை. சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் இரவுபகலாக விழித்திருந்து, இராணுவத்திற்கு உதவி புரிந்தார்கள். அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். எல்லைப்புற கிராமங்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்தார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்றிலே, இலட்சோபலட்சம் அகதிகள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பாரதம் வந்தார்கள். அவர்களிடம் வீடில்லை ஆதாரங்களும் இல்லை. அந்தக் கடினமான வேளையிலே, ஸ்வயம்சேவகர்கள் அவர்களுக்கு உணவளித்தார்கள் ஆதரவளித்தார்கள் மருத்துவத் தேவைகளை கவனித்துக் கொண்டார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள். அவர்களின் துயரத்தைப் போக்கினார்கள்.

நண்பர்களே, ஒருமுறை, நாமெல்லோரும் நன்கறிவோம். 1984. சீக்கியர்களுக்கு எதிராக, படுகொலை கட்டவிழ்க்கப்பட்டது. அநேக சீக்கிய குடும்பங்கள், ஸ்வயம்சேவகர்களின் வீடுகளிலே அடைக்கலம் ஆனார்கள். இதுவே ஸ்வயம்சேவகர்களின் இயல்பாக இருந்து வந்திருக்கிறது. நண்பர்களே, ஒருமுறை, முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், சித்ரகூட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர், நானாஜி தேஷ்முக் அவர்களின், ஆசிரமத்திலே நடைபெற்றுவந்த பணிகளைக் கண்டார்கள். அங்கே சேவைப்பணிகளைப் பார்த்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

அதே போல முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணவ் முகர்ஜியும் நாகபுரிக்குச் சென்ற போது, அவரும்கூட சங்கத்தின் ஒழுங்குமுறை சங்கத்தின் எளிமை, இவற்றைப் பார்த்து பரவசப்பட்டார். நண்பர்களே இன்றும்கூட நீங்கள் கவனித்தால், பஞ்சாபின் பெருவெள்ளம், ஹிமாச்சல் மற்றும் உத்தராக்கண்டின் பேரிடர், கேரளத்தின் வயநாட்டின் பெருந்துயரம், அனைத்து இடங்களிலும், ஸ்வயம்சேவகர்கள் அனைவருக்கும் முன்பாகச் செல்வோரில் முன்னணியில் இருக்கிறார்கள்.

கொரோனா காலத்திலே உலகம் முழுவதும், சங்கத்தின் வல்லமை மற்றும் சேவையுணர்வை நேரடியாகவே கண்டு உணர்ந்தது.

நண்பர்களே, தனது இந்த நூறாண்டுக்காலப் பயணத்திலே, சங்கத்தின் ஒரு பெரும்பணி என்று சொன்னால், அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும்… தன்மதிப்பீட்டையும் சுயமரியாதையையும் தட்டி எழுப்பியது. இதன் பொருட்டு சங்கம், தேசத்தின் பல துறைகளிலும் பணியாற்றி வருகிறது, அவை தொலைவானவை, அங்கே செல்வது கூட கடினமானது. நம்முடைய தேசத்திலே கிட்டத்தட்ட, பத்து கோடி பழங்குடி சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நீண்டகாலமாக அரசாங்கங்கள் அவர்களுக்கு முதன்மையேதும் அளிக்கவில்லை. ஆனால் சங்கம் அவர்களுடைய கலாச்சாரம், அவர்களுடைய திருநாட்கள் திருவிழா மொழி, மற்றும் பாரம்பரியங்களுக்கு உச்சபட்ச முதன்மை அளித்தது. சேவாபாரதி வித்யாபாரதி ஏகல் வித்யாலய் வனவாசி கல்யாண் ஆசிரமம், பழங்குடி மக்களின் அதிகாரமளிப்பின் தூண்களாய் இவை நிற்கின்றன. இன்று நமது பழங்குடி மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, அவர்களின் வாழ்க்கை மாறி வருகிறது.

நண்பர்களே, சங்கம், பல தசாப்தங்களாக பழங்குடியினத்தவர்களின் பாரம்பரியங்களை, பழங்குடிகளின் சடங்குகளை, பழங்குடிகளின் விழுமியங்களைப் பேணிக்காக்க, தனது ஒத்துழைப்பை அளித்து வந்திருக்கிறது. தனது கடமையை நிறைவேற்றி வந்திருக்கிறது. அதன் தவம் தான் பாரதத்தின் கலாச்சார அடையாளம், பாதுகாப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. நான் தேசத்தின் தொலைவுகளிலும் இருக்கின்ற, பழங்குடிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதில் ஈடுபட்டுவரும், சங்கத்தின் இலட்சோபலட்சம் ஸ்வயம்சேவகர்களையும் போற்றிப் பாராட்டுகிறேன்.

நண்பர்களே, சமூகத்திலே, பலநூற்றாண்டுகளாக, புரையோடிப்போன நோய்கள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வு, தவறான பழக்கங்கள், தீண்டாமை போன்ற அசுத்தம் நிறைந்திருக்கிறது. இவை ஹிந்து சமுதாயத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றன. இது ஒரு மிகப்பெரிய கவலை, இதன் மீது சங்கம், தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கிறது. ஒருமுறை, அண்ணல் காந்தியடிகள், வர்தாவிலே சங்க முகாம் ஒன்றுக்குச் சென்றார். அவரும்கூட சங்கத்திலே, சமத்துவம் அனுசரணை சகோதரத்துவம், சமவுணர்வு, புரிந்துணர்வு, இவையனைத்தையும் பார்த்துவிட்டு மனம்திறந்து பாராட்டினார்.

நீங்களே பாருங்கள், டாக்டர் ஐயா தொடங்கி இன்றுவரை, சங்கத்தின் அனைத்து மகத்தான ஆளுமைகளும், அனைத்து சர்சங்கசாலகர்களும், ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். பெருமதிப்பிற்குரிய குருஜி தொடர்ந்து, ந ஹிந்து பதிதோ பவேத். இந்த உணர்வை முன்னெடுத்துச் சென்றார். அதாவது அனைத்து இந்துக்களும் ஒரே குடும்பத்தவர். எந்த ஒரு ஹிந்துவும் தாழ்ந்தவராகவோ கீழானவராகவோ இருக்க முடியாது. பூஜ்ய பாலாசாகேப் தேவ்ரஸ் அவர்களின் சொற்களும்கூட, நம்மனைவருக்கும் நினைவிருக்கும். அவர் கூறுவதுண்டு.

தீண்டாமை பாவம் இல்லையென்று சொன்னால், தீண்டாமை பாவம் இல்லையென்று சொன்னால், உலகிலே வேறு எந்த ஒன்றும் பாவமில்லை. சர்சங்கசாலக்காக இருந்த ரஜ்ஜு பையா ஜியும் சரி சுதர்ஷன் ஜியும் சரி, இதே உணர்வைத் தான் முன்னெடுத்துச் சென்றார்கள். தற்காலத்திய சர்சங்கசாலக், மதிப்பிற்குரிய மோகன் பாகவத் அவர்களும், சமத்துவத்திறகாக சமூகத்தின் முன்பாக தெளிவான இலக்கை முன்வைத்திருக்கிறார். மேலும் கிராமம்தோறும் ஒரு விஷயம் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. அது என்னது? அவர் கூறினார், ஒரு குளம், ஒரு ஆலயம், மேலும் ஒரு மயானம். இது தொடர்பாக சங்கம், தேசத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்றது. எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. எந்தவொரு கருத்து மாறுபாடும் இல்லை, மனதில் எந்தவொரு காழ்ப்பும் இல்லை. இது தான் சமத்துவத்தின் ஆதாரமாகும். இதுதான் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் மனவுறுதியாகும்.

மேலும் சங்கம், இதற்கே தொடர்ச்சியாக, புதிய சக்தி அளித்து வருகிறது, புதிய ஆற்றல் அளித்து வருகிறது.

நண்பர்களே, 100 ஆண்டுகள் முன்பாக சங்கம் நிறுவப்பட்ட போது, அந்தக் காலத்தின் தேவையாக, அந்தக் காலத்தின் போராட்டம் வேறாக இருந்தது. அப்போது நாம், பல நூற்றாண்டுக்கால அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டியிருந்தது. நம்முடைய கலாச்சார நன்மதிப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, நமது பாரதம், வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கையில், நமது பாரதம், உலகத்தின் 3ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆக இருக்கும் வேளையில், நமது தேசம், மேலும் தேசத்தின் மிகப்பெரிய…. வறுமைத்தட்டு மக்கள், ஏழ்மையைத் தோற்கடித்து, ஏழ்மையை முறியடித்து முன்னேறும் வேளையிலே, நமது இளைஞர்களுக்கு, புதியபுதிய துறைகளிலே புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும் போது, உலகளாவிய ராஜரீகம் முதல் பருவநிலை கொள்கை வரை, பாரதம், உலகத்திலே தனது குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையிலே, இன்றைய சூழ்நிலையின் சவால்களும் வேறுவிதமானவை, போராட்டமும் வேறுரகமானது. மற்ற நாடுகளின் மீது பொருளாதார சார்புநிலை, நம்முடைய ஒற்றுமையைத் தகர்க்கும் வஞ்சகங்கள், மக்கட்தொகையியலை மாற்ற முனையும் சூழ்ச்சிகள், ஒரு பிரதம மந்திரி என்ற முறையிலே, நான் பணிவோடு கூறுகிறேன், எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது, அதாவது நமது அரசாங்கம், இந்தச் சவால்களை விரைவுகதியிலே எதிர்கொண்டு வருகின்றது. அதே வேளையிலே, ஒரு ஸ்வயம்சேவகன் என்ற முறையிலே மேலும் சந்தோஷம் அளிக்கும் விஷயம், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது, இந்தச் சவால்களை அடையாளம் கண்டுகொண்டதோடு, இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே, சிறப்பான திசைகாட்டுதலையும் அளித்திருக்கிறது.

இப்போது மதிப்பிற்குரிய தத்தாஜி கூறிய விஷயத்தை நான் என் பாணியில் விளக்க விரும்புகிறேன்.

நண்பர்களே சங்கத்தின் ஐந்து மாற்றங்கள். ஸ்வபோத். சமூக சமத்துவம். குடும்ப பிரபோதன். குடிமக்கள் நடத்தைமுறை. மற்றும் சுற்றுச்சூழல். இந்த உறுதிப்பாடுகள், ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும், தேசத்தின் முன்பாக இருக்கும் சவால்களை தோற்கடிக்கத் தேவையான பெரும்உத்வேகங்கள்.

நண்பர்களே, ஸ்வபோத் என்றால், தன்னைப் பற்றி அறிதல். ஸ்வபோத் என்றால், அடிமைத்தன உணர்விலிருந்து விடுதலை அடைந்து, நம்முடைய மரபு குறித்து பெருமிதப்படுதல். நம் மொழிகள் குறித்து பெருமைப்படுதல். ஸ்வபோத் என்றால் சுதேசி. தற்சார்புடையவராக ஆவது. மேலும் எனது நாட்டுமக்களே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தற்சார்புத்தன்மை. இது ஒன்றும் மாற்று அல்ல. இது இன்றியமையாத ஒன்றாகும். நாம் சுதேசி என்ற மூலமந்திரத்தை சமூகத்தின் உறுதிப்பாடாக ஆக்க வேண்டும்.

நாம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தினை, அதன் வெற்றிக்காக, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதைத் தொடர்ந்து, ஒரு புதிய சக்தியை அளிக்கவல்ல உத்வேக கோஷமாக ஆக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.

நண்பர்களே சங்கமானது, சமூக சகோதரத்துவத்தை, தனது முதன்மையாகக் கொண்டு வந்திருக்கிறது. சமூக சகோதரத்துவம் அதாவது, வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு முதன்மையளித்து, சமூகநீதியை ஸ்தாபிக்க வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இன்று தேசத்தின் முன்பாக எழும்பி நிற்கும் சங்கடங்களைப் பார்த்தால், இவை நமது ஒற்றுமை நமது கலாச்சாரம் நமது பாதுகாப்பிற்கு எதிராக நேரடித் தாக்குதலைத் தொடுக்கின்றன. பிரிவினைவாத சிந்தனை, பிராந்தியவாதம், சாதி மொழியை முன்னிறுத்தும் விவாதங்கள், அந்நிய சக்திகளால் தூண்டப்படும் பல்வேறு…. பிரிவினைவாத இயல்புகள், இவை போல, கணக்கேயில்லாத சவால்கள் சங்கடங்கள் நம்முன்னே நிற்கின்றன. பாரதத்தின் ஆன்மா எப்போதுமே, பன்முகத்தன்மையிலே ஒருமையாகவே இருந்திருக்கிறது. இந்த இழை அறுபட்டுப் போனது என்றால், பாரதத்தின் சக்தியும் பலவீனப்பட்டுப் போகும். ஆகையால் நாம் இந்தச் சக்தியை தொடர்ந்து வாழ்ந்து வர வேண்டும். அதற்கு பலமளிக்க வேண்டும்.

நண்பர்களே, சமூக சகோதரத்துவத்துக்கு இன்று, மக்கட் தொகையியலில் மாற்றம் என்ற சூழ்ச்சியால், ஊருறுவல்காரர்களால் பெரும் சவாலாகி இருக்கிறது. நம்முடைய இந்த உள்நாட்டுப் பாதுகாப்பு, மற்றும் எதிர்காலத்தோடும் தொடர்புடைய கேள்விக்குறி இது. ஆகையால் தான், நான் செங்கோட்டையிலிருந்து, மக்கட்தொகையியல் மிஷன் பற்றி அறிவித்திருந்தேன். நாம் இந்த சவால் தொடர்பாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதை உறுதியோடு எதிர்கொள்ளவும் வேண்டும்.

நண்பர்களே, குடும்ப ப்ரபோதன். இன்று காலத்தின் கட்டாயம். சமூகவியல் ரீதியாக பல நூற்றாண்டுகளாக இருந்துவரும்…. மெத்தப்படித்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதத்திலே இருந்துவரும் பிராணசக்தி, இதற்கு ஒரு காரணம், அதில் இருக்கும் குடும்ப அமைப்பு. பாரதநாட்டு சமூக அமைப்பில் பலமான ஒரு அலகு என்று சொன்னால், நமது பாரத சமூகத்திலே, தழைத்தோங்கிய, பலமானதொரு குடும்ப அமைப்புமுறை. குடும்ப பிரபோதன் அதாவது, அந்த குடும்ப கலாச்சாரத்தின் ஊட்டம். இதுவே பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் ஆதாரம். இது பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உத்வேகம். வேர்களோடு தொடர்புடையது. குடும்பங்களின் விழுமியங்கள், பெரியோர்களுக்கு மரியாதை, பெண்சக்திக்கு மதிப்பு, இளைஞர்களிடம் நற்பண்புகள், தங்கள் குடும்பம் தொடர்பான கடமைகளை நிறைவேற்றுதல், அதைப் புரிந்து கொள்ளல், அந்த திசையிலே குடும்பத்தை சமூகத்தை விழிப்புணர்வு அடையச் செய்தல், மிகவும் அவசியமானவை.

நண்பர்களே, பல்வேறு காலகட்டங்களிலே தேசம் முன்னேறிச் செல்லும் போது, அதிலே குடிமக்களின் நன்னடத்தை பெரும்பங்கு வகித்திருக்கிறது. குடிகளின் நன்னடத்தை என்றால், கடமையுணர்வு, குடிகளின் கடமைகள் பற்றிய தெரிதல், குடிமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். தூய்மைக்கு ஆதரவு தேசத்தின் சொத்துக்களை மதித்தல் விதிகள்சட்டங்களை மதித்தல், நாம் இவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்முடைய அரசியல்சட்டத்தின் உணர்வு, குடிமக்கள் தங்களுடைய கடமைகளை ஆற்ற வேண்டும். நமது அரசியல் சட்டத்தின் இந்த உணர்விற்கு நாம் தொடர்ந்து சக்தியளித்து வர வேண்டும்.

நண்பர்களே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தற்கால மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. இது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. நாம் பொருளாதாரத்தோடு கூடவே, சுற்றுச்சூழல் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். நீர் பாதுகாப்பு பசுமை சக்தி சுத்தமான ஆற்றல், இந்த இயக்கங்கள் அனைத்தும், இந்த திசையைச் சார்ந்தவை தாம்.

நண்பர்களே, சங்கத்தின் இந்த ஐந்து மாற்றங்கள், இவை எப்படிப்பட்ட கருவிகள் என்றால், இவை தேசத்தின் வல்லமையை அதிகரிக்கக்கூடியவை. இவை தேசத்தை எதிர்கொள்ளும் பல சவால்களை தீர்க்கும் வல்லமை உடையவை. இவை 2047, இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழக்குள்ளாக, வளர்ச்சியடைந்த பாரதத்தின் ஆதாரமாக ஆகும்.

நண்பர்களே, இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழின் பாரதம், தத்வஞானம் மற்றும் விஞ்ஞானம், சேவை மற்றும் சகோதரத்துவத்தால் உருவாக்கப்பட்ட பெருமிதமான பாரதமாகும். இதுதான் சங்கத்தின் நோக்கு. இதுதான் ஸ்வயம்சேவகர்களான நம்மனைவரின் பயிற்சியுமாகும். மேலும் இதுவே நமது மனவுறுதியுமாகும்.

நண்பர்களே, நாம் என்றைக்குமே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கம் உருவாக்கப்பட்டது, தேசத்தின்பால் கொண்ட உறுதியான நம்பிக்கை காரணமாக. சங்கம் இயங்கியது, தேசத்தின்பால் கொண்ட அபாரமான சேவை உணர்வுகாரணமாக. சங்கம் புடம்போடப்பட்டது, தியாகம் மற்றும் தவம் என்ற அக்னியிலே. சங்கம் தழைத்தது, சாதனை மற்றும் நற்பண்புகளின் சங்கமத்திலே. சங்கம் நிற்கிறது, ராஷ்ட்ர தர்மத்தை வாழ்க்கையின் உச்சபட்ச தர்மமாக கருதுவதால். சங்கம் இணைந்திருக்கிறது

பாரத அன்னையின் சேவை என்ற பெரும் கனவால்.நண்பர்களே, சங்கத்தின் ஆதர்ஸம் என்றால், கலாச்சாரத்தின் வேர்கள் ஆழமாகவும் சக்தியோடும் இருக்க வேண்டும் என்பது தான். சங்கத்தின் நம்பிக்கை என்றால், சமூகத்தின் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் இலட்சியம் என்றால், இதயங்கள்தோறும் மக்கள்சேவை என்ற ஜோதி ஒளிவிட வேண்டும் என்பதே. சங்கத்தின் கண்ணோட்டம் என்றால், பாரதீய சமூகம், சமூகநீதியன் எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என்பதே.

சங்கத்தின் இலக்கு என்றால், உலக அரங்கிலே, பாரதத்தின் குரல் மேலும் உரக்க ஒலிக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் உறுதிப்பாடு என்றால், பாரதத்தின் எதிர்காலம், பாதுகாப்பாவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்பதே.

நான் மீண்டும் ஒருமுறை, உங்களனைவருக்கும், இந்த சரித்திரபூர்வமான கணத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நாளை விஜயதசமி புனித நன்னாள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் விஜயதசமிக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. நான் அதற்காகவும் கூட, உங்களனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். பலப்பல நன்றிகள்.