பீஜிங்: தற்போதுள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கண்ட பின்னர் கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடரும் என்று சீன அதிபரிடம் சிறீசேன உறுதி கூறியுள்ளார். ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தை 1.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நிறைவேற்ற சீனாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தத் திட்டத்தை கடந்த 2014ல் சீன அதிபர் ஜின் பிங், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே தொடங்கி வைத்தார். ஆனால் தற்போது அதிபராக சிறீசேன பதவி ஏற்ற பின்னர், கொழும்பு துறைமுக நகர் திட்டத்துக்கு முறையான ஒப்புதலைப் பெறவில்லை என கூறி திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், ‘ உள்நாட்டு சட்ட விதிகளின்படிதான் இந்தத் திட்டப் பணிகள் நடைபெற்றன; இது ரத்து செய்யப்பட்டால், அது வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுத்து விடும்’ என்று சீனா கூறியது. இந்நிலையில் இலங்கை அதிபர் சிறீசேன, சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பீஜிங்கில் அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியபோது, “கொழும்பு துறைமுக நகர் திட்ட பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கண்ட பின் பணிகள் மீண்டும் தொடரும்” என்று உறுதி அளித்தார். இத்தகவலை பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி நேற்று வெளியிட்டார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த முறை ஏப்.6ஆம் தேதிதான் சம்பளம்!
சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, சம்பளம், ஓய்வூதியங்கள் வழக்கமாக மாத இறுதியான 30 அல்லது 31ஆம் தேதிகளில் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால் இந்த முறை மாத இறுதிநாளான 31ஆம் தேதி, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 6ஆம் தேதிதான் வரவு வைக்கப்படும் என்று கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி நடப்பு நிதியாண்டு வங்கிக் கணக்குகளை முடிக்க வேண்டும். இதனால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு, செலவுக் கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடும். ஏப்ரல் 1ஆம் தேதி அடுத்த நிதியாண்டு கணக்குகள் தொடங்கும். அன்று அனைத்து வங்கிகளுக்கும் வழக்கம்போல் விடுமுறை. இதை அடுத்து 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 3ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறைகள் தினம் என்பதாலும், தொடர்ந்து 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் அரைநாள் மட்டுமே செயல்படுவதாலும், 5ம் தேதி வழக்கமான ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதாலும் ஏப்ரல் 6ஆம் தேதி திங்கட்கிழமைதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு; செப்.30ல் ராகுல் தலைவராகத் தேர்வாக வாய்ப்பு
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி உள்கட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய தலைவராக் ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்த போது, ”அகில இந்திய அளவில் இரண்டு கட்டங்களாக காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, ஜூலை 16 முதல் ஜூலை 31 வரை கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்களிலும், 2வது கட்டமாக ஜூலை 28 முதல் செப்டம்பர் 30 வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
- ஜூலை 28 முதல் ஆகஸ்டு 14 வரை வட்டார உறுப்பினர்கள் தேர்தலும்,
- ஆகஸ்டு 20 முதல் 31 வரை வட்டார காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், 6 மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒரு மாநிலக் குழு உறுப்பினர் தேர்தலும்,
- செப்டம்பர் 1 முதல் 15 வரை மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலும்,
- செப்டம்பர் 21 முதல் 30 வரை மாநில தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், மாநில பிரதிநிதிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலும்,
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வும் நடைபெறும். இந்தக் கூட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளர்..
செப்டம்பர் 30ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் என்பதால், அன்றைய தினம் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேளாண்துறை ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை: வேளாண் துறை ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் உயிர் வாழத் தேவையான உணவு தானியங்களை விளைவிக்கும் வேளாண்மையை நிர்வாகம் செய்யும் வேளாண்துறை ஊழல்களை விளைவிக்கும் துறையாக மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு அத்துறையில் ஊழல்கள் அதிகரித்து விட்டன. விதையில் தொடங்கி உரம் வரை அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்வதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. விவசாயம் செழிக்க வேண்டும், விளைச்சல் பெருக வேண்டும் என்றால் அதற்கான முதன்மைத் தேவை தரமான விதைகள் ஆகும். ஆனால், விதைகளை கொள்முதல் செய்வதில் தான் பெருமளவில் ஊழல் நடைபெறுகிறது. உதாரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் தானிய விதைகள் தேவைப்படுகின்றன. நெல், பயறு வகைகள் ஆகியவற்றின் விதைகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், திட்டமிட்டே தமிழகத்தில் விதை உற்பத்தியை ஆட்சியாளர்கள் ஊக்குவிக்க வில்லை. இதனால் தமிழகத்தில் 91,000 டன் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ள 2,09,000 டன் விதைகள் கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 65 ஆயிரம் டன் ஜிப்சம் தேவைப்படுகிறது. இந்த உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்ய இயலும். ஆனால், இந்த நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், இந்த உரங்களை வாங்கி விற்கும் ஐ.சி.எம்.சி (ICMC) என்ற நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதால் அரசுக்கு பெருமளவில் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வேளாண்மை ஆய்வுக் கூடங்களுக்குத் தேவையான வேதிப் பொருட்களை முன்னணி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யாமல், ஐ.சி.எம்.சி நிறுவனத்திடமிருந்து தரமற்ற வேதிப் பொருட்கள் வாங்கப்பட்டதிலும் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வேளாண்துறைக்கான உரங்களை முன்னணி உர நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களில் இருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், தரமில்லாத நீரில் கரையும் தண்மை கொண்ட உரங்கள் ரூ.45 கோடி மதிப்பில் வாங்கப்பட்டதால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமும் ஊழல் தான். மாநிலத்திலுள்ள 15 நுண்ணுயிர் உரத்தயாரிப்பு மையங்களில் தயாரிக்கப்படும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவையும், நோய்த் தடுப்பு நுண்ணுயிரிகளான சூடோமோனாஸ் போன்றவையும் தரம் குறைந்தவையாக உள்ளன. இவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரம் குறைந்தவையாக இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இம்மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் பவானி, அவிநாசி, பாலக்கோடு, தென்காசி, போளூர், காட்டான்கொளத்தூர், உத்தமபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் தொடங்கப்பட்ட நுண்ணுயிர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கருவிகள் வாங்கியதில் ரூ. 6 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்திய குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்து பல ஆண்டுகள் ஆகியும் அதன் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேளாண்மைப் பொறியியல் துறையில் தலைமைப் பொறியாளர் பதவி 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. அப்பதவிக்கு தகுதியற்ற செந்தில் என்பவர் பொறுப்பு தலைமைப் பொறியாளராக நீடித்து வருகிறார். இவரை விட அதிக அனுபவமும், திறமையும் கொண்ட மூத்த அதிகாரிகள் 9 பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு மேலாக செந்திலை நியமித்திருப்பதன் காரணமே ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும் உதவியாக இருக்கிறார் என்பது தான் என்று கூறப்படுகிறது. முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் இவரும் இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. வேளாண்துறை ஊழல்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஊழல்வாதிகளின் மிரட்டலைத் தாங்க முடியாமல் முத்துக்குமாரசாமி போன்ற நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்வது அதிகரித்து விடும். அதுமட்டுமின்றி, ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே வேளாண் துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தவும், ஊழலுக்கு காரணமானவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
போராட்டங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வரவில்லை: அன்னா ஹசாரே
ராலேகான் சித்தி: போராட்டங்கள் நடத்துவதற்கு எனக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் எதுவும் வரவில்லை என்று அன்னா ஹசாரே அறிக்கை அளித்துள்ளார். அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு பக்கபலமாக அவருக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்தும் பணம் வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து அன்னா ஹசாரே தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் எனக்கு பணம் வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். எங்களது இயக்கம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறது என்பதை யாராவது நிரூபித்தால், நான் பொதுவாழ்வில் இருந்து விலகி விடுகிறேன். நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம் அங்கு ஒரு பையை வைப்பேன். அதில் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை, உங்களால் முடிந்த பணத்தை போடுமாறு பொதுமக்களிடம் கேட்பேன். இவ்வாறாக சேர்த்த ஒவ்வொரு ரூபாய்க்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது.
ஸ்ரீசத்யநாராயண அஷ்டோத்திரம்
கோயில்களில் படப்பிடிப்பு கூடாது; அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை
சென்னை: கோயில்களில் படப்பிடிப்பு கூடாது, கோயில் வரவு செலவு ஆண்டறிக்கை வெளியிட வேண்டும், சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் இந்து முன்னணி முன்வைத்துள்ளது. தமிழக அரசிடம் பக்தர்களின் எதிர்பார்ப்பாக அந்த அமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக முதல்வர் அவர்கள் இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 206 கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுப்படுத்த உள்ளதாகவும், 250 கோயில்கள் புனர்நிர்மாணம் செய்ய 90 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மக்கள் தமிழக அரசிடம் எதிர்பார்க்கும் விஷயம்..
- அரசின் பிடியில் உள்ள எல்லா கோயில்களிலும் உள்ள அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதனை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கைக்குழுவால் மக்கள் பிரதிநிதிகள் முன்பு சரிபார்க்கப்பட வேண்டும். ஆலய சொத்துக்களில் குத்தகை, வாடகை பாக்கி வைத்துள்ளோர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டு, உடனடியாக வசூலிக்கப்பட வேண்டும். நீண்டநாட்களாக வாடகையோ, குத்தகையோ செலுத்தாதவர்களை உடனடியாக வெளியேற்றவும், அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்.
கோயில் வருமானம், செலவினங்கள் குறித்த விரிவான, தனியான ஆண்டறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
அன்னதானத் திட்டத்தை அறிவிக்கும் முதல்வர் அத்தனை கோயில்களுக்கும் அரசின் மூலம் அன்னதானத்திற்கு வேண்டிய அரிசியையாவது வழங்க வேண்டும். ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு ெநாய் அரிசியை அளிக்க மட்டுமே அரசின் கஜானா வாய் திறக்கும் என்றால், ஆலய அன்னதானம் திட்டம் பற்றி முதல்வர் அறிவிப்பது தேவையற்றது.
கோயில் நிலங்கள், கட்டிடங்கள் அரசின் வேறு துறைகளுக்கு, அல்லது தனியார்க்கு இலவசமாகத் தாரை வார்க்கப்பட்டிருப்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆலயங்கள் என்பது இறைவன் எழுந்தருளியிருக்கும் புனித இடம். அதே சமயம் நமது இந்து ஆலயங்கள் வரலாற்றுப் பெட்டகங்கள். இங்குள்ள கல்வெட்டுகள், புராதான சின்னங்கள், கட்டிடக்கலை முதலானவை பாதுகாத்து, பராமரிப்பது, பரப்புவதன் மூலம் நமது தொன்மை, பண்பாட்டு வளமை, மற்றும் நமது வரலாறு வருங்கால சமுதாயம் அறிந்து பெருமிதம் அடையவும், சுற்றுலா மேம்படவும் ஏதுவாகும். இதனைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. புதுப்பிக்கிறோம் என கோயில் கல்வெட்டுகள் சுண்ணாம்பால் மூடப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இதனைப் பாதுகாக்க, பதிப்பிக்க இது குறித்த முழுமையான ஞானம் கொண்ட நிபுணர் குழு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைவன் முன் அனைவரும் சமம். எதனாலும் பக்தர்களை பாகுபாடுபடுத்தாமல் இறைவனை தரிசிக்க அறநிலையத்துறை எல்லாவித தரிசனக் கட்டணங்களையும் நீக்க வேண்டும்.
ஆலய வருமானத்தினைக்கொண்டு நிர்வகிக்கப்பட்டு வரும் கல்வி நிலையங்களில் இந்துக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
ஆலயங்களின் புனிதம் கெடுக்கும் வண்ணம் திரைப்பட, சின்னத்திரை காட்சிகள் எடுப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.
மாணவர்களிடையே பண்பு வளர, ஒவ்வொரு ஆலயத்திலும் வார இறுதி நாட்களில் பண்பாட்டு வகுப்பு நடத்த வேண்டும். இந்த கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி அளிக்கவும் நிர்வாகம் உத்திரவிட வேண்டும்.
ஆலய சுகாதாரம், சுத்தம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிப்படியாக ஆலய நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற பொதுமக்கள், ஆன்மிக பெரியோர்கள், இந்து இயக்கத்தினர் அடங்கிய பொதுக்குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க முன் வர வேண்டும்.
இவற்றையெல்லாம் இந்த ஆண்டின் நிதிநிலை மீதான அறநிலையத்துறையின் மான்ய கோரிக்கையின் போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. மேற்கண்ட கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.
“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன?”
“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன?” (இன் நிகழ்ச்சியை இரண்டு நாள் முன்பாக பொதிகை டி.வி.யில் திரு இந்திரா சௌந்த்ர்ராஜன் விளக்கி கூறினார்) ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,மாரியம்மன் கோயில்,சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்தார். பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்) மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில் கோயில் கொண்டுள்ளார். இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது. ‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது சிவரகசியம்! அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர். அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு! அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி. உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து பையன்களை உடன் வைத்துக்கொண்டு சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார். ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச் செய்யவில்லை பெரியவாள். அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத் தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள். பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு கொடுத்தாரோ, தெரியாது. விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில் வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர். பெரியவாள், அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச் சொன்னார்கள். எல்லோருக்குமே வியப்பாக இருந்தது. இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா..? பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள். “இவரைப் பார்த்திருக்கிறாயோ?” “இல்லை” “இவர் அட்ரஸ் தெரியுமோ?” “தெரியாது” “எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?” (என்ன குறும்பு!) “சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்! இவர் பெரிய Builder. என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!” பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது. ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே… “இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு…” அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?. அது எந்த வகை ஸித்தி? மஹா பெரியவா பாராட்டிய வைதிகர் !!! ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,மாரியம்மன் கோயில்,சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்தார். பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்) மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில் கோயில் கொண்டுள்ளார். இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது. ‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது சிவரகசியம்! அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர். அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு! அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி. உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து பையன்களை உடன் வைத்துக்கொண்டு சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார். ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச் செய்யவில்லை பெரியவாள். அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத் தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள். பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு கொடுத்தாரோ, தெரியாது. விலையுயர்ந்த ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில் வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர். பெரியவாள், அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச் சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச் சொன்னார்கள். எல்லோருக்குமே வியப்பாக இருந்தது. இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா..? பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள். “இவரைப் பார்த்திருக்கிறாயோ?” “இல்லை” “இவர் அட்ரஸ் தெரியுமோ?” “தெரியாது” “எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?” (என்ன குறும்பு!) “சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்! இவர் பெரிய Builder. என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!” பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது. ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே… “இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு…” அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?. அது எந்த வகை ஸித்தி? ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா என்ன? !
கேரளத்தில் அரசு ஊழியர்கள் புகை, மது பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பணியிடங்களில் புகை மற்றும் மது பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில், கல்வி நிறுவனங்கள், நிர்வாக ரீதியிலான பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் பணியிடங்களில் மது மற்றும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை அரசு ஊழியர்கள் சரிவர கடைபிடிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியிடத்தில் புகை மற்றும் மதுவை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஓட்டுநர்கள் தங்களது பணி நேரத்தில் மது மற்றும் புகையை உபயோகித்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்க எஸ்.எம்.எஸ். மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: ‘வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் ‘ஆதார் எண்’ சேர்க்க, ‘எஸ்.எம்.எஸ்.,’ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்’ என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் ‘ஆதார் எண்’ சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வாக்காளரின் ‘ஆதார் எண்’, மொபைல் எண், இ – மெயில் முகவரி, போன்றவற்றை சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷன் இணையதளம் www. elections.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். இது தவிர எஸ்.எம்.எஸ்., மூலமாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கு, ECILINK என டைப் செய்து, ‘ஸ்பேஸ்’ விட்டு, ஆதார் எண்ணை ‘டைப்’ செய்து, ‘51969’ என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். இது தவிர, tnvoteraadhaar@gnail.com’ என்ற இ – மெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 1950 அல்லது 1077 கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

