சென்னை: ‘வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் ‘ஆதார் எண்’ சேர்க்க, ‘எஸ்.எம்.எஸ்.,’ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்’ என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் ‘ஆதார் எண்’ சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வாக்காளரின் ‘ஆதார் எண்’, மொபைல் எண், இ – மெயில் முகவரி, போன்றவற்றை சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷன் இணையதளம் www. elections.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். இது தவிர எஸ்.எம்.எஸ்., மூலமாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கு, ECILINK என டைப் செய்து, ‘ஸ்பேஸ்’ விட்டு, ஆதார் எண்ணை ‘டைப்’ செய்து, ‘51969’ என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். இது தவிர, tnvoteraadhaar@gnail.com’ என்ற இ – மெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 1950 அல்லது 1077 கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்க எஸ்.எம்.எஸ். மூலம் விண்ணப்பிக்கலாம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

