Home Blog Page 6200

ஆம் ஆத்மியின் போராட்டத்தால் தமிழக முதல்வர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

panneerselvam சென்னை: ஆம் ஆத்மியினரின் முற்றுகைப் போராட்டத்தால் இதுவரை அமைதியாக இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு இப்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தி ராஜாஅண்ணாமலை புரத்தில் உள்ள முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆம்ஆத்மி கட்சியினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு வளையத்தையும் மீறி போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். இதனால் உயர் போலீஸ் அதகாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இந்தப் பாதுகாப்பில் மாநில போலீசாரே ஈடுபடுவர். டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கூடுதல் பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவருக்கு வழக்கமான பாதுகாப்பே அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது வீட்டு முன்பு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால் தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லிங்கா நஷ்டஈடு தொகையில் பங்கு? வேந்தர் மூவீஸ் சிவாவுக்கு விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்தின் பிரச்னை தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு விநியோகஸ்தர்களுக்கு ஒரு தொகை ஒதுக்கப்பட்டு அந்த தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ஜவ்வு போல இழுத்துக் கொண்டே இருந்த இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்கள் சரத்குமாரும், தாணுவும் தான். கலைக்குடும்பத்தில் கலகம் கூடாது என்று இவர்கள் எண்ணியதன் விளைவுதான் இந்தத் தீர்வு. 10 கோடி ரூபாய் பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி அதை விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களூக்கும் பிரித்து கொடுக்க தாணு பட்ட சிரமங்களை அருகில் இருந்து பார்த்தபோது தான் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவி என்பது மலர் கீரிடம் அல்ல அது ஒரு முள் கிரீடம் என்பதை தெரிந்து கொண்டோம். இரண்டு நாட்களாக பல மணி நேரங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நடந்து கொண்ட விதமும், எங்களை உபசரித்த விதமும் கண்களை குளமாக்கிவிட்டன. வில்லுக்கு விஜயன் என்றால் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ் என்று இலக்கியங்களை திருத்தியாக வேண்டும். அவரைப் போய் கன்னடர் என்று பிரித்து பேசிவிட்டோமே என்று மனம் கூனிக் குறுகிறது. பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள் எண்று ரஜினிகாந்த் தெரிவித்தவுடன் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷோடு சேர்ந்து தங்கள் பங்களிப்பாக சிறு தொகையையும் கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் 10 கோடி ரூபாயில் பங்கு கேட்பது, “பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதையும் புடுங்குச்சாம் அனுமாரு” என்பதை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது. ஆட்டோவில் வந்திறங்கி இழப்பீடு பெறும் விநியோகஸ்தர்களிடம் ஆடி காரில் வந்து பங்கு கேட்பது தர்மமா என்பதை வேந்தர் மூவிஸ் தெளிவுபடுத்த வேண்டும். விநியோகஸ்தர்களுக்கு தோள் கொடுத்து சுமூகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி பெரிதாக வளரவிட்டு பங்கு கேட்பது நியாயமாக இருக்க முடியாது. இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் நடுநிலையோடு பேசாமல் வேந்தர் மூவிஸ் நிர்வாகி என்ற முறையில் பேசும் சிவாவின் போக்கு சரியானது அல்ல. மார்ச் 23 திங்கட்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சிவா வேந்தர் மூவிஸ் நிர்வாகியாக கலந்து கொண்டால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கலந்து கொள்ள வேண்டும். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளராக கலந்து கொண்டால் வேந்தர் மூவிஸ் பற்றி வாய் திறக்க கூடாது என்பதை எச்சரிக்கை கலந்த வேண்டுகோளாக வைக்கிறேன். அதையும் மீறி கலந்து கொண்டால் அதை பேச்சுவார்த்தையில் ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களாக நடந்துவரும் பேச்சுவார்த்தையில் தலைவர் தாணுவை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவிட்டு, தொடர்ந்து அவர் பற்றி அவதூறு பரப்புவதை சிவா நிறுத்தி கொள்ள வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன்பு ‘அரவான்’ என்ற பெயரில் படத்தை தயாரித்து அதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களூக்கும் கொடுக்க வேண்டிய இழப்பு தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் சிவா நீதி, நியாயம் பற்றி பேசுவதை சகித்துக் கொள்ள இயலவில்லை. ‘அரவான்’ படத்தில் இழப்பை சந்தித்த பின்பு சொத்துக்களை வாங்கி குவிக்கும் சிவாவுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்ட வேண்டும். மார்ச் 23 திங்கட்கிழமை அன்று திரையரங்க உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜாம்பவான்களான அருள்பதி, திருப்பூர் சுப்ரமணி ஆகியோரோடு முன்னணி விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வதால் அன்றைய தினமே பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தெரிகிறது. முதல்கட்டமாக வைப்புத் தொகை திருப்பித் தரப்படும் என்று தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை எதிர்காலத்தில் வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்க கடமைப்பட்டுள்ளேன். எல்லா விநியோகஸ்தர்களுக்கும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தோல்வியால் விரக்தியில் இருந்த எங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி சிறு தொகையையும் வியாபார முதலீடாக கொடுத்த ராக்லைன் வெங்கடேஷுக்கும், விநியோகஸ்தர்களே சினிமா வியாபாரத்தின் முதுகெலும்பு என்பதை எடுத்துரைத்து எங்களுக்கு இழப்பீடு கிடைக்க செய்த கலைப்புலி தாணுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால் அது எங்கள் போராகி விடும்: காஷ்மீர் முதல்வர்

mufti-mohammed-syed பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால், அது எங்களின் போர் ஆகி விடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் சட்டமன்றத்தில் பேசினார். காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா பகுதிகளில் காவல் நிலையங்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முஹம்மது சயீத்…இந்தத் தாக்குதலுக்குப் பின் உள்ள சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவவே மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களால் மக்களின் உறுதியை அசைத்துவிட முடியாது. கராச்சியில் சர்ச் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்கள்… இவர்கள் எல்லாம் யார்?. பாகிஸ்தானும்தான் பயங்கரவாத வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் நட்பும் அமைதியும் நிலவ வேண்டும் எனக் கருதினால் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் அவரது தலைமையிலான அரசும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை கொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இஸ்லாத்தில் கற்றுத் தரப்பட்டது என்ன என எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடியவில்லை என்று நவாஸ் ஷெரிப் கூறினால், பின்னர் அது எங்களின் போராகவும் மாறிவிடும் என்றார்.

நாடாளுமன்ற வளாக தீ விபத்து: விசாரணைக்கு பிரணாப் முகர்ஜி உத்தரவு

புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்து குறித்து விசார்ணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் வேகமாக பரவிய தீ, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இது குறித்து பெரிதும் கவலை கொள்வதாகத் தெரிவித்ததுடன், தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெருமாள்பட்டி பகுதியில் திங்கள்கிழமை மின்தடை

நெல்லை மாவட்டம்  பெருமாள்பட்டி, அருகன்குளம், செந்தட்டியாபுரம், புதூர், மாங்குடி, இனாம் கோவில்பட்டி, தென்மலை, இடையான்குளம், கீழ்கரிசல்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, பருவக்குடி, கோமதி முத்துபுரம், வெங்கடாச புரம், பி.ரெட்டியார்பட்டி, கோதை நாச்சியார்புரம், சோலைச்சேரி, வேலாயுதபுரம், வாழவந்தாள்புரம், கிழவிகுளம், முத்தாநதி, சங்கரலிங்காபுரம், அகிலாபுரம், புதுக்குளம், சோழபுரம், தேசிகாபுரம், பனங்குளம், ரெங்கப்ப நாயக்கர்பட்டி, நல்லம நாயக்கர்பட்டி ஆகிய பகுதிகளில் 23 ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது.

அழைத்தால் போதும்: காவல்துறை உதவி கிடைக்கும்

நெல்லை மாவட்ட பொதுமக்களின் அவசர கால உதவிக்கு  ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டத்தை எஸ்.பி. விக்ரமன்  துவக்கி வைத்தார்.
 பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் அவசரகால உதவிக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள  ஹலோ போலீஸ்  என்ற புதிய திட் டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் 99527 40740 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு தங்களது புகார்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து தெரிவிக்கலாம்.
மேலும், இந்த நம்பருக்கு வாட்ஸ்அப், மெசேஜ் அல்லது வாய்ஸ் மெயிலிலும் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களுக்கு நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பது குறித்து பதில் தகவல் அளிக்கப்படும். இதில் நானும் எனக்கு கீழ் உள்ள மூன்று அதிகாரிகளும் தகவல்களை பெற்று உடனே நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற திட்டத்தை விழுப்புரத்தில் முதன் முதலில் துவக்கி வைத்தோம். அதற்கு நல்ல பலன்கள் கிடைத்தது.
இந்த நம்பரில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், கூலி தொழிலாளிகள் உட்பட யார் வேண்டுமென்றாலும் தகவல்களை 24மணி நேரமும் அனுப்பி வைக்கலாம்.

10ஆம் வகுப்பு தேர்வு:ஆங்கிலத்துக்கு விடுமுறை இல்லை: அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெறுவதில் சிக்கல்?

exam-students10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இப் பொதுத் தேர்வு கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் முதல்தாள், இரண்டாம் தாள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துப் பாடத் தேர்வுகளுக்கும் சில பல நாள்கள் விடுமுறை வழங்கி தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், படிப்பதற்கு மிகவும் கடினமான ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு மட்டும் தேர்வுத்துறை விடுப்பு வழங்கவில்லை. எளிதான பாடங்களை படிக்க 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலப் பாடத்துக்கு மட்டும் விடுமுறை அளிக்காதது ஏன் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் வழி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் கோலோச்சிய நிலையில், ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு விடுமுறை அளிக்கப்படாதது, மறைமுகமாக மெட்ரிக் பள்ளியை ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28ல் பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.  இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக 28-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான கலந்தாய்வு ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும். முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்

a1 a3 a4 அம்பாசமுத்திரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு அகஸ்தியர் பட்டியில் வைத்து தமிழக வீட்டு வசதி,மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 68 ஜோடிகளுக்கு திருமணம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் எராளமான அதிமுகவினர் கலந்துக் கொண்டனர்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சிறப்பு பிரார்த்தனைகள்

tuti தூத்துக்குடி:தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளைமுன்னிட்டு தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகவேண்டி தூத்துக்குடிமாவட்ட 9 நவதிருப்பதிஆலயங்களில் சிறப்புவிஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலிபூஜை தூத்துக்குடிமாவட்டகழகசெயலாளரும் சுற்றுலாத்துறைஅமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. பிறந்தநாள் சிறப்பு பூஜைகளும் மீண்டும் முதல்வராகவேண்டி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றதொகுதியில் உள்ள 9 நவ திருப்பதிகோவில்களானஆழ்வார்திருநகரிஆதிநாதன்,திருக்களுர்வைத்தமாநிதிபெருமாள்,தென்திருப்பேரைமகரநெடுங்குழைக்காதர் இரட்டைநவதிருப்பதி 1 தேவர்பிரான் இரட்டைநவதிருப்பதி 2 அரவிந்தலோசனர் பெருங்குளம் மாயகூத்தபெருமாள் திருப்புளியங்குடிகாய்சினிவேந்தபெருமாள் நத்தம் விஜயலோசனபெருமாள் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமிஆகிய நவ திருப்பதிஎனும் 9 திவ்யதேசங்களில் தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலிபூஜை நேற்றுமாலை 5 மணிக்கு தூத்துக்குடிமாவட்டகழகசெயலாளரும் சுற்றுலாத்துறைஅமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்தசிறப்புபிரார்த்தனையில் ஜி.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ,வழக்கறிஞர்செல்வகுமார்,அரசுபோக்குவரத்துகழகம் அண்ணாதொழிற்சங்கநிர்வாகிகே.டிசி.அந்தோணி, மாவட்டஎம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்சத்யாலெட்சுமணன் உட்படதிரளானகழகத்தினர்கலந்துக்கொண்டு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவேண்டி பிரார்த்தணைசெய்தனர்.