Home Blog Page 6201

என் 200க்கு கெய்ல் வாழ்த்தியபோது நகைப்பாக இருந்தது: நியூஸி.யின் குப்டில்

guptil-gayleநான் இரட்டை சதம் அடித்தபோது, கிறிஸ் கெய்ல் எனக்கு வாழ்த்து தெரிவித்து முதுகைத் தட்டிக் கொடுத்தது எனக்கு நகைப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் குப்டில். சனிக்கிழமை நியூசிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 163 பந்துகளில் 237 ரன்களை அடித்து சாதனை செய்தார். இதற்கு முன்னர், லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில், மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 215 ரன் எடுத்தார். அதுதான், உலகக் கோப்பையில் அதிகபட்ச இரட்டைச் சத ரன்னாக இருந்தது. அதனை குப்டில் முறியடித்தார். மார்டின் குப்டில் 200 ரன் எடுத்த போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், குப்டிலின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இது குறித்து குப்டில் பின்னர் கூறியபோது, “கிறிஸ் கெய்ல் என்னிடம், வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீக்குக்கு வரவேற்கிறேன்’ என்றார். எனக்கு அவரது வாழ்த்து மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் அதற்குப் பின்னர் அனைவருமே வாழ்த்து தெரிவிக்கும் நல்லுணர்வில் அவருக்குப் பின் நின்றனர். நான் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு பந்தையும் ஆட வேண்டும் என நினைத்தேன். அவ்வாறே ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வேடிக்கையாக ஆட முயற்சி செய்து, பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விரட்டினேன். எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து முழு இன்னிங்க்ஸையும் விளையாட இதமாகத்தான் இருந்தது. எனக்கு அந்த கடைசி நேரத்தில் இரண்டு மூன்று பார்ட்னர்ஷிப் கிடைத்தது, அது 400 ஐ நோக்கி ஸ்கோரை உயர்த்த வழிசெய்தது” என்று கூறியுள்ளார். ad4b0f606e0f8465bc4c4c170b37e1a3 - 2026

இந்தியாவுக்கு சாதகமாக ‘பிட்ச்’ மாற்றப்பட்டுள்ளது: ஆஸ்திரேலியா புகார்

சிட்னி: சிட்னி கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. சிட்னி மைதானம் எப்போதும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இப்போது இந்தியாவுக்கு சாதகமாக, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில், ஐசிசி பிட்ச்-ஐ மாற்றி விட்டது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.

மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம்- வரிகள், பொருள், ஒலி – அனந்தராம தீக்ஷிதர்.

  • அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி துர்மத சோஷிணி ஸிந்துஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அயி ஜகதம்ப மதம்ப கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே சிகரி சிரோமணி துங்க ஹிமாலய ச்ருங்க நிஜாலய மத்யகதே மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி கைடப பஞ்ஜினி ராஸரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அயி சதகண்ட விகண்டித ருண்ட விதுண்டித சுண்ட கஜாதிபதே ரிபுகஜ கண்ட விதாரண சண்ட பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட பதாதிபதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே சதுர விசார துரீண மஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே துரித துரீஹ துராசய துர்மதி தானவ தூத க்ருதாந்தமதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அயி சரணாகத வைரிவ தூவர வீர வராபய தாயகரே த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி சிரோதி க்ருதாமல சூலகரே துமிதுமி தாமர துந்துபி நாத மஹோ முகரீக்ருத திங்மகரே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன். ருள்: பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அயி ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமர ப்ரமரா திபதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக மல்லி தரல்லக மல்லரதே விரசித வல்லிக பல்லி கமல்லிக ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • கமல தலாமல கோமல காந்தி கலா கலிதாமல பாலலதே ஸகல விலாஸ கலாநிலய க்ரம கேலிசலத்கல ஹம்சகுலே அலிகுல சங்குல குவலய மண்டல மௌலிமிலத் பகுலாலிகுலே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • கர முரலீரவ வீஜித கூஜித லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யக பர்தினி சைலஸுதே

பொருள்: உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • கடிதடபீத துகூல விசித்ர மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர தன்சுல ஸன்னக சந்த்ரருசே ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித நிர்பர குஞ்ஜர கும்பகுசே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர கரைகநுதே க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக ஸங்கர தாரக ஸூனுஸுதே ஸுரத சமாதி ஸமான ஸமாதி ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே அயி கமலே கமலா நிலயே கமலா நிலய ஸகதம் நபவேத் தவ பதமேவ பரம்பதமித் யனு சீலயதோ மமகிம் ந சிவே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம் பஜதி ஸகிம் நசசீ குசகும்ப தடீ பரிரம்ப ஸுகானுபவம் தவ சரணம் சரணம் கரவாணி நதாமரவாணி நிவாஸிசிவம் ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • தவ விமலேந்து குலம் வதனேந்துமலம் ஸகலம் நனு கூலயதே கிமு புரஹூத புரீந்துமுகீ ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே மமது மதம் சிவநாமதனே பவதீ க்ருபயா கிமுத க்ரியதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

  • அயி மயி தீனதயாலு தயா க்ருபயைவ த்வயா பவித்வயமுமே அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி யதாஸி ததாஸனு மிதாஸிரதே யதுசித மத்ர பவத்யுரரீ குருதா துருதா பமபாகுருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்

இந்திய சுழலில் ஆஸ்திரேலியா சிக்கும்: பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா

misba-ul-haqஉலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலியா சிக்கும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முத்தரப்பு தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணி, உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, அனைத்து போட்டிகளிலும் வென்று சாதித்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளின் மோதல் ஒரு ‘யுத்தம்’ போன்றே இருக்கும் என்ற பரபரப்பு இப்போது தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியுடன் தொடங்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிஸ்பா உல் ஹக் இது குறித்துக் கூறும்போது, ‘‘சிட்னியில் ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா களமிறங்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் மாற்றங்கள் எதுவும் செய்யலாம்… காரணம் சிட்னியில் சுழற்பந்து வீச்சு பல வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் வகையில் உள்ளது. காலிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணீயின் தஹிர் சிறப்பாக செயல்பட்டார். இலங்கை அணிக்கு எதிராக அவர் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு வழிவகுத்தார். எனவே சிட்னியில் நல்ல சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். சிட்னியில் ஆஸ்திரேலியா தடுமாறும். அதேநேரம் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதால் இது இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும்’’ என்றார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் மகன் விபத்தில் பலி

sivakami-ias
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி. (சமூக சமத்துவப் படை நிறுவுனர்)
சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக சமத்துவ படை என்ற இயக்கத்தின் நிறுவுனருமான பி.சிவகாமியின் மகன் சுனந்த் ஆனந்த் (வயது 24) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனந்த் வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் படித்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கே சவுத் கரோலினா மாகாணத்தில் உள்ள ‘கிளெம்சன்’ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பை முடித்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சுனந்த் ஆனந்த், தனது காரில் ஹைவேயில் சென்று கொண்டிருந்த போது, கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், சுனந்த் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சுனந்த் ஆனந்தின் உடல் இந்தியா கொண்டு வரப் படுகிறது. அதற்கு 2 நாட்கள் ஆகும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சுனந்த் ஆனந்த், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் 2-வது மகன். இவரின் அண்ணன் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார்.

மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்: சீமான்

ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை… மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

மீத்தேன் பிரச்னை குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மீத்தேன் எரிகாற்று  எடுக்கப்போகும் பிரச்னை ஒட்டுமொத்த விவசாயிகளையும் போராட்ட களத்தில் நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மீத்தேன் பிரச்னை குறித்துப் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்  காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மீத்தேன் எடுக்க உரிமம் எடுத்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான குறைந்தபட்ச பணியைக்கூட அங்கு தொடரவில்லை என்றும், மத்திய அரசு கேட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் சொல்லி அதனாலேயே அந்த நிறுவனம் மீத்தேன் எடுப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காரணங்களைச் சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே மீத்தேன் பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இன்னமும் தீவிரத்தோடுதான் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டங்களையோ கட்சி பாகுபாடற்ற கொந்தளிப்புகளையோ கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தின் நடவடிக்கைகளை மட்டுமே மனதில் கொண்டு மீத்தேன் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர். 766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விவசாய மண்ணைக் காவு வாங்கக் காத்திருக்கும் மீத்தேன் எரிகாற்று திட்டத்தையே ரத்து செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீத்தேன் எரிகாற்று எடுக்கும் தனியார் நிறுவனத்தின் உரிமத்தை மட்டுமே ரத்து செய்யவிருக்கும் நிலையில், அந்த திட்டமே ரத்தானதைப் போல் போலி பிம்பத்தை தமிழகத்தில் சிலர் உருவாக்கி வருகிறார்கள். மீத்தேன் அரக்கனை வேரறுக்க நெஞ்சுறுதியோடு நிற்கிற விவசாயப் பெருமக்களின் உணர்வுகளைச் சிதைப்பதற்கான முயற்சியாகவே இதனைச் சிலர் பரப்புகிறார்கள். மீத்தேன் எரிகாற்று எடுக்கும் திட்டத்தின் நிலை குறித்த தெளிவான நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மீத்தேன் திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படாது என வெளிப்படையாக அறிவித்து, தமிழக மக்களின் கொந்தளிப்பை தணித்து முழு நிம்மதியை மத்திய அரசு உண்டாக்க வேண்டும். கிரேட் ஈஸ் டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றாக வேறு நிறுவனத்தைக் கொண்டுவந்து, அதற்கு உரிமம் வழங்கி மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக வரும் பேரச்சமான செய்திகளை அவ்வளவு சீக்கிரத்தில் புறந்தள்ளிவிட முடியாது. கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மீத்தேன் எடுக்க போடப்பட்ட திட்டம் இன்றைய பாஜக ஆட்சி வரை புரியாத மர்மங்களையே மக்களிடத்தில் விதைத்து வருகிறது. எனவே மீத்தேன் பிரச்னையில் தமிழக மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் விதமாக மீத்தேன் திட்டம் ரத்தாகும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதைச் செய்யாமல் மீண்டும் மீண்டும் மக்களைக் குழப்பும் விதமாகவே பாரதீய ஜனதா அரசு செயல்பட்டால், மீத்தேன் எரிகாற்றுக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் பெரிதாகத் தீவிரமெடுக்கும். மீத்தேன் எரிகாற்று பிரச்னையில் தமிழக மக்களின் பக்கம் நிற்கும் தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்ததைப் போலவே விவசாயத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக நிற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

அலுவலக உதவியாளர் வேலைக்கு வரிசையில் நின்ற பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன், அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களுடன் வரிசையில் நின்று பங்கேற்றார். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நிவாய் தொகுதி எம்எல்ஏ., ஹீரா லால் வர்மா தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மகன் ஹன்ஸ்ராஜ் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தார். தன் மகன் ஹன்ஸ்ராஜை, அந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு எம்எல்ஏ வர்மா அனுப்பி வைத்துள்ளார். அவரும், அஜ்மீரில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க மற்றவர்களுடன் வரிசையில் நின்றார். இது குறித்து வர்மா கூறியது… எனது மகன் குறைந்த படிப்பே முடித்துள்ளான். பத்தாம் வகுப்புகூட தாண்டவில்லை. எனவே அவனுக்கு அலுவலக உதவியாளர் வேலைதான் சரியாக இருக்கும். அவன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இப்போது எனது மகன், ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறான். மாதம் ரூ 5 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கிறது. என் முடிவு குறித்து சில எம்எல்ஏக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இது வழக்கத்துக்கு மாறான ஒரு செயல்தான். ஆனால், இதில் ஒன்றும் தவறு இல்லையே என நான் அவர்களிடம் கூறிவிட்டேன். இப்படி நடந்து கொள்வது, நேர்மையாக வாழ வழியைக் காட்டும். தவறான வழியில் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்கு, எனது பிள்ளைகளை நான் ஊக்கப்படுத்த மாட்டேன். நேர்முகத் தேர்வை எனது மகன் சிறப்பாக எதிர்கொண்டுள்ளான். தகுதி அடிப்படையில் மட்டுமே அவனுக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 3 பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். சமூக நலத்துறை துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன். இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மக்களுக்கு என்னால் இயன்ற வரையில் நேர்மையாக பணியாற்றுவேன்… என்று கூறுகிறார் வர்மா.

ஷ்யாமளா தண்டகம்: இசைப் பேழை

shyamala devi - 2026

ஸ்யாமளா தண்டகம் ||

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண-
ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||

மாதா மரகதஸ்யாமா மாதங்கி மதஸாலினீ|
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ ||

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே |
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸுகப்ரியே ||

ஜய ஜனனீ ஸுதாஸமுத்ரான்த ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட பில்வாடவீமத்ய கல்பத்ருமா கல்ப காதம்ப காந்தாரவாஸப்ரியே க்ருத்தி வாஸப்ரியே ஸர்வ லோகப்ரியே |

ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோலநீ பஸ்கராபத்த சூலீஸனாதத்ரிகே ஸானுமத்புத்ரிகே |

ஸேகரீ பூதஸீதாம் ஸுரேகாமயூகாவலிபத்த ஸுஸ்நிக்த நீலாலகஸ்ரேணி ஸ்ருங்காரிதே லோகஸம்பாவிதே |

காமலீலாதனு: ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசனே வாக்ஸுதாஸேசனே |

shyamala devi - 2026

சாருகோரோசனா பங்ககேலீல லாமாபிராமே ஸுராமே ரமே |
ப்ரோல்லஸத்வாலிகா மௌக்திகஸ்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்தலன்யஸ்த கஸ்தூரிகாபத்ர ரேகாஸமுத்பூத ஸௌரப்ய ஸம்ப்ரான்த ப்ருங்காங்க நாகீத ஸாந்த்ரீபவன்மந்த்ர தந்த்ரீஸ்வரே ஸுஸ்வரே பாஸ்வரே |

வல்லகீ வாதனப்ரக்ரியா லோலதாலீத லாபத்த தாடங்க பூஷாவிஷேஷான்விதே ஸித்தஸம்மானிதே |

திவ்யஹாலா மதோத்வேல ஹேலா லஸச்சக்ஷுராந்தோலன ஸ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக நீலோத்பலே * பூரிதாஸேஷலோகாபி வாஞ்சாபலே ஸ்ரீபலே |

ஸ்வேத பிந்தூல்ல ஸத்ப்பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருன்னாஸிகாமௌக்திகே ஸர்வ * விஸ்வாத்மிகே காளிகே |

முக்த மந்தஸ்மிதோதார வக்த்ரஸ்புரத்பூக கற்பூர தாம்பூல கண்டோத்கரே ஞானமுத்ராகரே ஸர்வஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே ஸ்ரீகரே |

குந்த புஷ்பத்யுதிஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேலனஸ்மேர ஸோனாதரே சாருவீணாதரே பக்வபிம்பாதரே |

ஸுலலித நவயௌவனா ரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்தார்ணவாவிர்ப வத்கம்பு பிம்போக ப்ருத்கந்தரே ஸத்கலாமந்திரே மந்த்தரே |

திவ்யரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம் ஸுஸோபே ஸுபே |

ரத்னகேயூர ரஸ்மிச்சடாபல்லவ ப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே யோகிபி: பூஜிதே |

விஸ்வதிங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜ:ஸ்புரத்கங்கணாலங்க்ருதே விப்ரமாலங்க்ருதே ஸாதகை: ஸத்க்ருதே |

வாஸராரம்ப வேலஸமுஜ்ரும்ப மாணாரவிந்த ப்ரதித்வன்த்வி பாணித்வயே ஸந்ததோத்யத்தயே அத்வயே |

திவ்யரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளி பல்லவோத்யன்னகேந்து ப்ரபாமண்டலே, ஸன்னதாகண்டலே சித்ப்ரபா மண்டலே ப்ரோலஸத்குண்டலே |

தாரகாராஜிநீகாஸ ஹாராவலிஸ்மேர சாருஸ்தனா போகபாரான மன்மத்ய வல்லீபலிச்சேதவீசீ *ஸமுல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே வல்லகீப்ருத்கரே கிங்கர ஸ்ரீகரே |

ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோஜ பாராவநம்ரே த்ரிலோகாவனம்ரே |
லஸத்வ்ருத்த கம்பீர நாபிஸரஸ்தீர ஸைவால ஸங்காகரஸ்யாம ரோமாவலீ பூஷணே மஞ்சுஸம்பாஷனே |

சாருஸிஞ்ஜத்கடீஸூத்ர நிர்பர்த்ஸிதாநங்க லீலாதனு: ஸிஞ்ஜனீ டம்பரே, திவ்யரத்னாம்பரே |

பத்மராகோல்லஸன் மேகலா பாஸ்வரஸ்ரேணி ஸோபாஜிதே ஸ்வர்ண பூப்ருத்தலே சந்த்ரிகா ஸீதலே |

வகஸித நவகிம்ஸுகாதாம்ர திவ்யாம் ஸுகச்சன்ன சாரூருஸோபா பராபூத ஸிந்தூர ஸோணாய மானேந்த்ர மாதங்க ஹஸ்தார்கலே வைபவானர்கலே ஸ்யாமலே|

கோமளஸ்நிக்த நீலோத்பலோத்பாதி தானங்க தூணீர ஸங்காக ரோதார ஜங்காலதே சாருலீலாகதே |

நம்ரதிக்பால ஸீமந்தினீ குந்தலஸ்நிக்த நீலப்ரபாபுஞ்ச ஸஞ்ஜாத தூர்வாங்குரா ஸங்க ஸாரங்க ஸம்யோகரிங்கன்ன கேந்துஜ்வலே ப்ரோஜ்வலே நிர்மலே |

ப்ரஹ்வ தேவஸ லக்ஷ்மீச பூதேச தோயேச வாணீ ச கீனா ச தைத்யே ச யக்ஷேச வாய்வக்னி மாணிக்ய சங்க்ருஷ்ட கோடீர பாலா தபோத்தாம லாக்ஷாரஸாருண்ய தாருண்ய லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரீ பத்மே ஸுதப்மே உமே |

ஸுருசி நவரத்ன பீடஸ்திதே ஸுஸ்திதே | ரத்ன பத்மாஸனே ரத்ன ஸிம்ஹாஸனே ஸங்க பத்மயோபாஸ்ரிதே | தத்ர விக்னேஷ துர்காவடுக்ஷேத்ரபாலைர்யுதே|

மத்தமாதங்க கன்யா ஸமூஹான்விதே | மஞ்ஜுளா மேனகாத்யங்க நாமானிதே, பைரவைரஷ்டபிர்வேஷ்டிதே | தேவி வாமாதிபி:ஸக்திபி:ஸேவிதே |

தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகை: ஸம்யுதே | மாத்ருகா மண்டலைர் மண்டிதே |

யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கநா மண்டலைரர்சிதே | பஞ்சபாணாத்மிகே|பஞ்ச பாணேனே ரத்யா ச ஸம்பாவிதே|*ப்ரீதிபாஜாம் பரம் ஸ்ரேயஸே கல்பஸே |

யோகினாம் மானஸே த்யோதஸே | ச்சந்தஸா மோஜஸா ப்ராஜஸே | கீத வித்யா விநோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே |

பக்திமச்சேதஸா வேதஸா ஸ்தூயஸே | விஸ்வஹ்ருத்யேன வாத்யேன வித்யாதரைர்கீயஸே |

ஸ்ரவண ஹரண தக்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீயஸே | யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலைரர்ச்யஸே |

ஸர்வ ஸௌபாக்ய வாஞ்சாவதீ பிர்வதூபி: ஸுராணாம் ஸமாராத்யஸே |

ஸர்வவித்யா விஷேஷாத்மகம் சாடுகாத்தா ஸமுச்சாரணம் கண்டமூலோல்ல ஸத்வர்ண ராஜித்ரயம் கோமளஸ்யாம லோதார பக்ஷத்வயம் துண்டஸோபாதி தூரீபவத் கிம்சுகம் தம்சுகம் லாலயன்தீ பரிக்ரீடஸே |

பாணிபத்மத்வயேன அக்ஷமாலாமபி ஸ்பாடிகீம் ஞானஸாராத்மகம் புஸ்தகம் *சாங்குஸம் பாஸமாபிம்ப்ரதீ யேன ஸஞ்சின்த்யஸே தஸ்ய வக்த்ரான்தராத் கத்யபத்யாத்மிகா பாரதீ நி:ஸரேத் |

யேன வா யாகவா பாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வஸ்யா பவந்தி ஸ்த்ரிய: புருஷ: |
யேந வா ஸாதகும்பத்யுதிர் பாவ்யஸே ஸோபி லக்ஷ்ம்ஹீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே| கிம் ந ஸித்யதேத் வபு: ஸ்யாமளம் கோமளம் சந்த்ர சூடான்விதம் தாவகம் த்யாயத: |

தஸ்ய லீலா ஸரோவாரிதி: தஸ்ய கேலீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம் தஸ்ய கீர்தேவதா கிங்கரீ தஸ்ய சா ஜ்ஞாகரீ ஸ்ரீ:ஸ்வயம் |

ஸர்வ தீர்த்தாத்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வ சக்த்யாத்மிகே, ஸர்வ பீடாத்மிகே, ஸர்வ தத்வாத்மிகே, ஸர்வ வித்யாத்மிகே, ஸர்வ யோகாத்மிகே, ஸர்வ நாதாத்மிகே, ஸர்வ சப்தாத்மிகே, ஸர்வ விஸ்வாத்மிகே, ஸர்வ தீக்ஷாத்மிகே, ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே ||

ஹே ஜகன்மாத்ருகே பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம் ||

தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ நம: |

ஐசிசி விதிகளை மீறிய வஹாப், வாட்சன்: இருவருக்கும் அபராதம்

Watson-Wahabசிட்னி: போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு ஐசிசி விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், பாகிஸ்தான் அணியின் வஹாப் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிலெய்டில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த 3ஆவது காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸை ஆஸ்திரேலிய அணியினர் சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர். இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பேட்டிங் செய்தபோது, பவுன்சராகப் பந்துகளைப் போட்டு, வஹாப் ரியாஸ் சீண்டிவிட்டார். மேலும், நான் வீசும் பந்தை அடித்துப் பார் என்றும் சவால் விடும் வகையில் சைகை செய்தார். இருவரின் நடத்தை குறித்தும் விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரஞ்சன் மதுகுலே வஹாப் ரியாசுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதமும், ஷேன் வாட்சனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதமும் அபராதமாக விதித்தார். இருவரும் தவறை ஒப்புக்கொண்டதால் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதாக ஐசிசி தெரிவித்தது.

சென்னையில் பேச்சுவார்த்தை: கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் கைது

சென்னை: சென்னையில் வரும் மார்ச் 24, 25ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 29 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி – கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்து, அதிலிருந்த 29 மீனவர்களைக் கைது செய்தனர். பின்னர் இரவு 8.30க்கு மீனவர்கள் அனைவரும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இத்தகவலை எமிரிட்டுக்கு அனுப்பியதாகக் கூறினார். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக சென்னையில் மார்ச் 24,25ஆம் தேதிகளில் இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.