Home Blog Page 6202

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை: கிறிஸ் கெய்ல்

Chris Gayle கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெலிங்டனில் நடந்த 4-வது காலிறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பையும் இழந்து போட்டித் தொடரில் இருந்து வெளியேறியது. இந்தத் தோல்விக்குப் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் காயத்தால் அவதிப்படுவது உண்மை. ஆனாலும் நான் எந்த வடிவிலான கிரிக்கெட் ஆட்டத்திலும் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இப்போதைக்கு இல்லை. வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட விரும்புகிறேன். உலகக் கோப்பை போட்டியில் எங்கள் அணி சிறப்பாகவே செயல்பட்டது’ என்று கூறினார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் ஒரு போட்டியில் சதம் அடித்தும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரை சதம் அடித்தும் அசத்தினார்.

சட்டசபையில் பாலியல் தொல்லை: காங். அமைச்சர் மீது கம்யூ. பெண் எம்.எல்.ஏ., டிஜிபியிடம் புகார் மனு

kerala-lawmaker-biting திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அடிதடி வன்முறை ரகளை ஏற்பட்டது. அப்போது மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ. பிஜிமோள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 13–ஆம் தேதி கேரள சட்டசபையில் நிதியமைச்சர் கே.எம்.மாணி பட்ஜெட்டைதாக்கல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடிதடி வன்முறையில் இறங்கினர். ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளி கைககலப்பில் ஈடுபட்டனர். இந்த ரகளையின்போது, பெண் உறுப்பினர்களும் மாட்டிக் கொண்டனர். அந்த நேரத்தில், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேபி ஜான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. பிஜிமோளின் இடுப்பைக் கிள்ளினார். இதற்கு பதிலடியாக அவர் கடித்துவிட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பான படங்களும் வெளியாயின. இதை அடுத்து, பிஜிமோள் கேரள மாநில டி.ஜி.பி.யிடம் நேற்று அமைச்சர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். kerala-assemblyமுன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாஹித் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ரகளையின் போது நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஷிபு பேபி ஜான் கூறியதாக ஒரு தகவலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் மீது பிஜிமோள் புகார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

videos


தாயே யசோதா-ஊத்துக்காடு பாடல் (டி.வி. சங்கரநாராயணன்)

தாயே யசோதா-ஊத்துக்காடு பாடல். ராகம்: தோடி தாளம்: ஆதி ஆ – ஸரிகமபதநிஸ் அ – ஸநிதபமகரிஸ

பல்லவி தாயே! யசோதே! – உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே) அனுபல்லவி தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே – இந்த வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே) சரணம் 1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க – முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்! காலசைவும் – கையசைவும் – தாளமோடிசைந்து வர நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்! பாலனென்று தாவியணைத்தேன்! – அணைத்த என்னை மாலையிட்டவன் போல் – வாயில் முத்தமிட்டாண்டீ! பாலனல்லடி! உன்மகன் – ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன் நாலுபேர்கள் கேட்கச் சொல்ல – நாணமிக வாகுதடீ! (தாயே) 2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும் அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே – கண்ணன் தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை – அந்த விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே! நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ நந்தகோபற்கிந்தவிதம் – அந்தமிகு பிள்ளைபெற நல்லதவம் செய்தாரடி – நாங்கள் என்ன செய்வோமடி (தாயே) 3. எங்கள்மனை வாழவந்த – நங்கையைத் தன்னம் தனியாய் துங்க யமுனாநதிப் போகையிலே – கண்ணன் சங்கையுமில்லாதபடி – பங்கயக் கண்ணால் மயக்கி எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான் “உங்கள்மகன் நான் என்றான்! – சொல்லி நின்றபின் தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான் இங்கிவனைக் கண்டு இள – நங்கையரைப் பெற்றவர்கள் ஏங்கி – எண்ணித் தவிக்கின்றார்! – நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே) 4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்! கட்டின கன்றை யவிழ்த்து – எட்டியும் ஒளித்துவிட்டு மட்டிலாத் தும்பை கழுத்தில் – மாட்டிக் கொண்டான்! விட்டு விட்டு – “அம்மே” என்றான் கன்றினைப் போலே அட்டியில்லாத மாடும் “அம்மா” என்றதே! கிட்டின குவளையோடும் எட்டினால் “உன் செல்வமகன்!” பட்டியில் கறவையிடம் – பாலை யூட்டுறானடீ! (தாயே) 5. சுற்றி சுற்றி என்னை வந்து – அத்தை வீட்டு வழி கேட்டான் சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன் அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான் அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன் வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!! முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ அத்தனை இடம் கொடுத்து – மெத்தவும் வளர்த்து விட்டாய்! இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே) 6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்! வண்ணமாய் நிருத்தமாடி – மண்ணினைப் பதத்தால் எற்றிக் கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்! பண்ணிசையும் குழலூதினான்! – கேட்டு நின்ற பண்பிலே அருகில் வந்து – வம்புகள் செய்தான்! பெண்ணினத்துக்கென்று வந்த – புண்ணியங்கள் கோடி கோடி எண்ணீ உனக்காகுமடி – கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!) 7. முந்தாநாள் – அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து வித்தைகள் பலவும் செய்து விளையாடினான் பந்தளவாகிலும் வெண்ணை – தந்தால் விடுவேனென்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான் அந்த வாஸுதேவன் இவன்தான் – அடி யசோதே! மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால் சுந்தர முகத்தைக் கண்டு – சிந்தையுமயங்கு நேரம் அந்தர வைகுந்தமோடு – எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!

“எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!”

1507603_10202994818654217_4035239553088867808_n “எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” சொன்னவர்;ஸ்வாமிநாத ஆத்ரேயன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் (ஒரு பழைய போஸ்ட் புது மெருகுடன்) (எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத ரசமான கட்டுரை) கோஸ்வாமி துளஸீதாஸர் தசரதரைப் பற்றி ஒரு ரஸமான செய்தி கூறுகிறார்; தசரதருடைய முற்பிறவியில் அவர் ஸ்வாயம்புவ மனு. அவர் முன் நாராயணன் தோன்றி அடுத்த பிறவியில் அவருக்குத் தாமே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்களித்தார். அப்பொழுது ஸ்வாயம்புவ மனு ஒரு வரம் கேட்டார்; “ஸ்வாமி.! என்னை யாராவது பைத்தியக்காரன் என்று சொன்னால் சொல்லட்டும். ஆனாலும் தாங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்கும் போது ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளையிடம் எவ்வித அன்பு இருக்கவேண்டிமோ, அது மட்டும் இருக்கட்டும். “அப்படியே.!” என்று நாராயணனும் அருள் புரிந்தார். ராமனைப் புத்திரனாகப் பெற்ற தசரதர் அவரிடம் எவ்வளவு பாசம் கொண்டிருந்தார்; பிள்ளையின் பிரிவு தாங்காமல் எப்படிப் பிராணனை விட்டார் என்பது தெரிந்த விஷயம். காஞ்சி காமகோடி பீடம் பரமாசார்யாளிடம் பரம பக்தியும் பிள்ளைப் பாசமும் ஒருங்கே பெற்ற பெருமை எசையனூர்ப் பாட்டிக்கு உண்டு. எசையனூர்ப் பாட்டி என்ற கோகிலாம்பாள் அம்மாள் தென்னார்க்காடு மாவட்டத்தில் எசையனூர் என்ற கிராமத்தில் செல்வம் நிறைந்த குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு, இளமையில் கணவரையும், குழந்தைகளையும் இழந்தவள்.ஞானபக்தி, வைராக்யங்கள் அவளிடம் அடங்கின. பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள். ‘பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்’ என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும், பரிவும் மறு புறம். பாசத்தோடு,அக்கறையும் இணைந்து அதட்டி உருட்டத்- தயங்க மாட்டாள், பாட்டி.அது ஒரு சிறப்புச் சலுகை. …………………………………………………………………………………………. “ஏண்டா ராமமூர்த்தி, பெரியவா இன்னிக்குச் ..சரியா பிட்சை பண்ணினாளோடா? ஏன் தான் ..இந்த ஏகாதசி,துவாதசி,ப்ரதோஷம் சேர்ந்தாப் ..போல வரதோ.? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் …பட்டினியா.?இப்படிக் காய்ஞ்சா, அந்த …உடம்பு என்னத்துக்கடா ஆகும்,?” “மேலூர் மாமா,! நான் சொல்றதைக் கொஞ்சம் ..கேளுங்கோளேன். நீங்க சொன்னாத்தான் ..பெரியவா கேட்பா,! இப்படிப் பாறைமாதிரி ..கபம் கட்டிண்டிருக்கே,? இருமக்கூட முடியாமல் ..தவிக்கிறாளே,? வென்னீரில் ஸ்நானம் ..பண்ணச் சொல்லுங்களேன்.” “ஏண்டா, விச்வநாதா, பெரியவா கொஞ்ச நேரம் ..தூங்கட்டுமேடா.! எதற்கடா பேச்சுக் ..கொடுத்திண்டிருக்கேள். “இல்லே, பாட்டி.! பெரியவா பேசறா, நாங்க கேட்டுண்டிருக்கோம். -இப்படி, எல்லோரிடமும் பேசுவதற்குத் தனி உரிமை, பாட்டிக்கு. “ஏண்டாப்பா,! நைவேத்ய கட்டிலே இத்தனை பேர் ..இருக்கேளே,? பெரியவாளை ஸ்நானத்துக்குக் …கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை …செய்து பிட்சை பண்ணட்டுமே.?” சவாரிக்காரர்களிடம் போவாள். “நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். ..நன்னா இருங்கோ.! இந்தாங்கோ.! கொஞ்சம் ..பட்சணம் கொண்டு வந்திருக்கேன். ..எல்லாருமாச் சாப்பிடுங்கோ.! ..(டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு ..நேரம் காலமே கிடையாது.

  • அதுதான் (டின் நிறைய) பாட்டி நோக்கில்,கொஞ்சம்.!

“பெரியவா எப்ப கிளம்பறாளோ.? ..தயாரா இருக்கணும். வழியிலே ..ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ.!” “இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியில் ..படுத்துக்கறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. ..தீவட்டியை எடுத்துண்டு நாலு பக்கமும் ..சுத்திவரப் பாருங்கோ.பாம்பு,பல்லி ..இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா.! ..உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு” என்பாள். ……………………………………………………………………………………… புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு ஒரு அலாதித் தெம்பு. அவர்களிடம் பரமாசார்யாளைப் பற்றி, தான்படும் கவலையெல்லாம் மனம் விட்டுக்கொட்டுவாள். அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே கேட்பார்கள். ……………………………………………………………………………………………….. பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த பாட்டி சொல்லுவாள்; “நான் சொல்றதை நன்னாக் கேட்டுக்கோ.!.. (ஒரு மானசிகக் காட்சியை விவரிக்கிறாள்.) “பெரியவா அப்படியே தண்டத்தைத் தோளோடு அணைச்சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா. திடீர்னு சந்திரக் கலை தெரியறது. கங்கை தெரியறாள். ஜடை தெரியறது. பளபளன்னு நெத்தி.சாந்தமாகச் சிரிச்ச முகம்.அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாகக் கொண்டு வந்து தலைலே கொட்டறான். நான் கண்ணாலே பார்த்தேன்.! எல்லாரும் சொல்றா, மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு.” (பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஸ்தாபகர், பண்டிட் மதன் மோகன் மாளவ்யா,மகாசுவாமிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமாக மலர்களைப் பொழிந்து அபிஷேகம் செய்ததை அந்தக்கால பக்தர்கள் வெகுவாகப் பாராட்டியதை எசையனூர் பாட்டியும் அறிந்திருந்தார்.) …………………………………………………………………………………………………….. பழைய மானேஜர் விச்வநாத அய்யர் சொல்வார், “பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசையனூர்ப் பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள்” என்று.!. “நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என்கிட்ட சொல்லுங்கோ.!” என்று பாட்டியைப் பணிவுடன் கேட்பார், மடத்து மானேஜர்.! மடத்துச் சிப்பந்திகள் அனைவரிடமும் பாட்டிக்குப் பிள்ளைப் பாசம். அவர்களுக்குப் பல வித உபகாரம் செய்வாள்,பணத்தால் ஆக முடியாத ஊறுகாய்,பட்சணம் என்று பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள். (அந்தக் காலத்தில் இவைகள் விற்பனைக்கு வரவில்லை.) “எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” என்று பரமாசார்யாளே தமக்குப் பணிவிடை செய்பவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே எச்சரிப்பார்களாம். பரமாசார்யாள் மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் இட்டிருந்தார்கள்.அப்பொழுது, “எசையனூர்ப் பாட்டியை மாடு முட்டி விட்டது காலமானாள்.” என்ற செய்தி வந்தது. மகாஸ்வாமிகள் மூன்று நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்கள். எசையனூர்ப் பாட்டிக்கு, இனி ஒருபோதும் இந்த மண்ணுலகில் வேலையில்லை;ப்ரும்ம லோகத்திலும், மகாப்பெரியவாளையே ஸ்மரித்துக் கொண்டிருப்பாளோ?

இந்திய அணியை வீழ்த்த எந்த திட்டமும் வேண்டாம்: ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்

Australians-Indians-Glenn-Maxwell உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள தனியாக எந்த திட்டமும் போட வேண்டியதில்லை என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் மார்ச் 26-ஆம் தேதி அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்து கூறிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், இதுவரை எந்தப் போட்டியிலும் தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று ஆஸ்திரேலிய அணியிடம் கேட்கிறார்கள். இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த முத்தரப்புத் தொடரில், இந்தியா ஒரு வெற்றியைக்கூடப் பெறவில்லை. இதை இந்திய அணி நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள தனியாக எந்த திட்டமும் போட வேண்டியதில்லை. இதற்கு முன்பு இந்தியாவை எப்படித் தோற்கடித்தோமோ, அதே பாணியில் இப்போதும் சந்திப்போம். இந்திய-ஆஸ்திரேலியப் போட்டியை மிகப்பெரிய போட்டிபோல கிரிக்கெட் நிபுணர்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், ஆஷஷ் தொடர்தான் மிகப்பெரிய போட்டியாக இன்னும் நீடிக்கிறது. தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நன்றாக விளையாடாவிட்டால் அவர்கள் அரையிறுதி வரை வந்திருக்க முடியாது என்று கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சார் நிலை கருவூலக் கதவை உடைத்து ரூ.1 கோடி நகை பணம் கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து, 12 பெட்டிகளை வெளியே தூக்கிச் சென்று ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி சார்நிலைக் கருவூலம் உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிச் சென்றுள்ளார். சனிக்கிழமை காலை அலுவலகத்தை துப்புரவு செய்ய, பணியாளர் வந்தபோது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அலுவலர்களுக்கு துப்புரவு பணியாளர் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலீஸார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் அலுவலக மரக்கதவை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்து நீதிமன்றங்களிலிருந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைத்திருந்த 6 பெட்டிகள், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் மற்றும் சார்நிலை கருவூலத்திற்குச் சொந்தமான ஒரு பெட்டி ஆகியவற்றை, அலுவலகத்தின் சுற்றுச் சுவருக்குப் பின்னால் தூக்கிச் சென்று உடைத்துள்ளனர். பின்னர். அதிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணம் முதலியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த வந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் ஆய்வு நடத்தினார். சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வந்து அது ரயில் நிலையம் வரை ஓடிச் சென்றது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாய் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறினர்.

காணாமல் போனவர்களை கண்டறிய இணைய தளம் – தமிழகக் காவல்துறை அறிவிப்பு

      தமிழகத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் இணையதள சேவையை காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
       பொதுமக்கள், தங்களது உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்கள் காணாமல் போனால் அது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் செய்தால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் காணாமல் போன நபர்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் விவரங்கள், காவல்துறையின் அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், காவல்துறை இணைய தளங்களில் வெளியிடப்படுகின்றன.
ஆகவே, காணாமல் போன தங்களது உறவினர்கள், தெரிந்த நபர்களின் விவரங்களை எளிதில் தெரிந்துக் கொள்ள, www.tnpolice.org, www.ncrb.gov.in,  www.trackthemissingchild.gov.in, www.eservices.tnpolice.gov.in ஆகிய இணைய தளங்களைப் பார்க்கலாம். இதன் மூலம் பொதுமக்கள், காணாமல் போகிறவர்களை பற்றியத் தகவல்களை போலீஸôரிடம் இருந்து இந்த இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி கணினி ஆசிரியர் பட்டியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு

அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி பயிற்றுநர்களை (கணினி ஆசிரியர்) நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் இறுதி  பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும். இதேபோல், முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 10-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உடற்கல்வி இயக்குநர் தேர்வு முடிவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பி.எஸ் வீடு முற்றுகை: ஆம் ஆத்மி கட்சியினர் கைது

panneerselvamசென்னை: வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை ஆம் ஆத்மி கட்சியினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் விட்டின் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப் பட்டது. வீட்டின் சுவரைத் தாண்டி வீட்டுக்குள் செல்ல ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.