புதுதில்லி: இந்தி நடிகர் சயீப் அலிகானின் பத்ம விருதை திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு மத்திய அரசு அறிக்கை அனுப்ப மகாராஷ்டிர அரசிடம் கேட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. இந்திய அரசின் உயர் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றவர் நடிகர் சயீப் அலிகான். இவர் சில மாதங்களுக்கு முன் மும்பை உணவு விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்டார். இது குறித்த வழக்கு ஒன்று, மும்பை போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அனுப்புமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அப்போது மும்பை போலீசாருக்கு கடிதம் எழுதியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உள்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தார். அதில், சர்ச்சைக்குரியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகளை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், நடிகர் சயீப் அலிகான் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மும்பை போலீசாருக்கு கடந்த ஆகஸ்டு 20–ந்தேதி கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும், எனவே இந்த விவகாரத்தில் விரைந்து அறிக்கை அனுப்புமாறு மும்பை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
விமான நிறுவன வேலை வாங்கித் தருவதாக மோசடி: 4 பேர் கைது
சென்னை: விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ வாசுதேவன்(46). இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்தியக் குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், தன் மனைவி யுவராணியுடன் சேர்ந்து சென்னை திருவொற்றியூரில்2013ம் ஆண்டில் டிஆர் எஸ் காம்ப்ளக்ஸில் எஸ்.எஸ்.டிரெண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு சேவை
நிறுவனம் நடத்தி வந்தார். அவர்கள், என் மகனுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினர். அவர்கள் சொன்ன உறுதி மொழியை நம்பி ரூ. 1.5 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், சொன்னபடி அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள் வங்கி காசோலை ஒன்றைக் கொடுத்தனர். ஆனால் அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட ராமச்சந்திரன் (30), யுவராணி(26), அவர்களது கூட்டாளிகள் கனியன் (26), ஏழுமலை(26) ஆகியோரைக் கைது செய்தனர்.
அசாமுக்குள் நுழைய சுப்பிரமணிய சாமிக்கு தடை விதிப்போம்: தருண் கோகோய்
சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய், இது போல் அவர் பேசினால் அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம் என்று எச்சரித்துள்ளார். சுப்ரமணியசாமி அசாம் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழக விழாவில் பேசியபோது, “மசூதிகளும், தேவாலயங்களும் பிரார்த்தனை செய்வதற்காகக் கூடும் கட்டடங்கள் என்பதால், அவற்றை இடிக்கலாம், சவூதி அரேபியாவில் கூட மசூதிகள் இடிக்கப்படுகின்றன; ஆனால், கோவில்களில் தெய்வங்கள் குடியிருப்பதால் அவற்றை இடிக்கக் கூடாது” என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சு சர்ச்சைக்குரியதாகியுள்ளது. இதற்கு பல்வேறு மத அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ஐரோப்பாவில் சர்ச்கள் மூடப்பட்டு, அங்கே மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சுப்ரமணியன் சாமியின் பேச்சு குறித்து சத்ராமுக்தி சங்கிராம் சமிதி என்ற அமைப்பு அளித்த புகாரின்பேரில் அவருக்கு எதிராக கௌஹாத்தி லட்டாசில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மார்ச் 16 – 31 வரைக்கான பொது பலன்கள்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் மேஷராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த வாரம் எதிர்பாரத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். ராசியில் ராசியாதிபதி செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று இருப்பதால் எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். . குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக் கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) சாந்தமாக இருக்கும் உங்களை யாராவது சீண்டினால் பொறுக்க மாட்டீர்கள் பாய்ந்து விடும் குணமுடைய ரிஷப ராசியினரே இந்த காலகட்டத்தில் மனதில் நிம்மதி உண்டாகும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்துகொள்வது மனதுக்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும். மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்த காலகட்டத்தில் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை வரும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) இனிமையான பேச்சும், குளுமையான பார்வையும் உடைய கடகராசியினரே உங்களுக்கு அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும். சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) எதைக்கண்டும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் சிம்ம ராசியினரே தைரியமே உங்கள் பலம். இந்த காலகட்டத்தில் அர்த்தாஷ்டம சனி இருந்தாலும் ராசிநாதன் சூரியன் சனிக்கு நாடிப்படி சம்பந்தம் பெறுவதால் கஷ்டம் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்திசாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும். கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) வெளிப்படையாக பேசுவது போல் உங்கள் பேச்சு இருந்தாலும் மறைக்க வேண்டிய விஷயங்களை மறைத்து விடும் கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள். பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) அளவான பேச்சும், அதிக நண்பர்கள் இல்லாமலும் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் ஆர்வம் காட்டும் துலா ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த வேகம் குறையும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். பார்ட்னர்கள் மூலம் தடங்கல் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் தடைகளையும், தாமதத்தையும் சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளி டம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தாமதமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) சொன்னாற்போல் இருக்க வேண்டும். அது சுட்டாற்போலும் இருக்க வேண்டும் என்பது போன்று திறமையாக பேசும் குணமுடைய விருச்சிக ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் குறையும். காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறு களில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மன நிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும். தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) யார் எந்த பிரச்சனை என்று வந்தாலும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி சிக்கலை தீர்க்கும் குணமுடைய தனுசு ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. பரிகாரம்: நவக்கிரகத்தில் குருபகவானை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும். மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) சோம்பேறியாக இருப்பது கூடாது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் குணமுடைய மகர ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும். கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) எவ்வளவு வேலை என்றாலும் சளைக்காமல் அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசியினரே இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடு வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும். மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) சிக்கனம் வீட்டை காக்கும் என்பதை நன்கு உணர்ந்து எதிலும் ஆடம்பரம் காட்டாமல் அமைதியாக இருக்கும். மீன ராசியினரே இந்த காலகட்டத்தில் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள் புதிய ஆர்டர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு: கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள். பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.
சத்து மாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி
சென்னை: சென்னையில், தாய் எடுத்துக் கொள்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழுகிணறு அப்பாசாமி சந்து பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மனைவி பாளையம். சந்தோஷ் இதே பகுதியில் காய்கறிக் கடை வைத்துள்ளார். இவர்களுக்கு ரித்திகா என்ற 4 வயது பெண் குழந்தையும், சஞ்சய் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் மனைவி பாளையத்துக்கு குழந்தை பிறந்ததையொட்டி, அவர் எடுத்துக் கொள்ள சத்து மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் மாத்திரைகளை பாளையம் கீழே வைத்துவிட்டு சமையல் செய்ய உள்ளே சென்றுள்ளார். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரித்திகா அந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து வாயில் போட்டு விழுங்கியிருக்கிறாள். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள். இதைக் கண்டு பாளையம் பதறியடித்து உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரித்திகாவை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரித்திகா உயிரிழந்தாள். இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய உதவி ஆணையர் மீது விசாரணை: ஆணையர் ஜார்ஜ்
அச்சுப் பிழை காரணம்: காந்தி ஜெயந்தி விடுமுறை விடுபட்டுப் போனதற்கு முதல்வர் விளக்கம்
பனாஜி: கோவா மாநில நாள்காட்டிக் குறிப்பில், அக்.2 காந்தி ஜெயந்தி தினத்துக்கான அரசு விடுமுறை நாள் நீக்கப் பட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அச்சுப் பிழை காரணம் என்று கோவா முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் மாதம் 2–ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நாடு முழுவதும் பொது விடுமுறை தினமாக மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவா மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட நாள்காட்டிக் குறிப்பேட்டில், இந்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினத்தில் காந்தி ஜெயந்தி விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசு வேண்டுமென்றே காந்தி ஜெயந்தியை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆளும் பாஜகவினரே இது குறித்து சந்தேகம் எழுப்பினர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிஜூ சாக்கோ, எந்த மாநிலமாவது இதுபோன்ற முடிவை எடுக்குமா? இது தேச விரோதச் செயல். மாநில அரசு இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் என்று கண்டித்தார். இந்நிலையில் இது தவறு என்றும், இந்தத் தவறு உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும், காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து செய்யப்படவில்லை என்றும் கோவா மாநில அரசு அறிவித்தது. இது குறித்து மாநில முதல்வர், லட்சுமிகாந்த் பர்சேகர் கூறியபோது, இது நிச்சயமாக ஒரு குறும்புத்தனமான செயல். அச்சுப்பிழை காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்கும். இந்தத் தவறு சரி செய்யப்பட்டுவிட்டது என்றார்.
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்
பேசில் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை பட்டம் வென்ற விக்டர் எக்சல்சனை போராடி வீழ்த்தியதன் மூலம் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த் கடாம்பி.
21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் அவர் தன்னை எதிர்த்து விளையாடிய எக்சல்சனை வீழ்த்தினார். இது இந்த வருடம் இவர் வெல்லும் முதல் பட்டம் என்பதும் , சுவிஸ் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
ஸ்ரீகாந்த் தற்பொழுது உலக அளவில் நான்காவது ரேங் வகிக்கிறார்.இங்கிலாந்து ஓபன் போட்டியில் சாய்னா இறுதி போட்டியில் மோசமாக விளையாடி தோற்றப் பின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .ஸ்ரீகாந்தும் இங்கிலாந்து ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அடுத்து நடக்க இருக்கும் இந்திய ஓபனில் இவர் பட்டம் வெல்வாரா என்பதே இப்போதையக் கேள்வி.
அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”
“அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…” (3 சம்பவங்கள் ஒரே பதிவில்) சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். (ஒரு பகுதி) ஊழியர்களோடு பரிவும் மற்றும் மூன்று. ஸ்வாரஸ்ய சம்பவங்களும். (“போகி-பல்லக்கு தூக்கி”) நாங்க சாப்பிடுகிற நேரங்களிலே,மகாப் பெரியவங்க எங்களை சாப்பிட விட்டுட்டுச் சும்மா உட்கார்ந்திருப்பாங்க. நாங்க திரும்பி வந்ததும், சாப்ப்ட்டாச்சான்னு விசாரிப்பாங்க. அப்போவெல்லாம் போகிகளுக்கு ஒரு நாளைக்குப் படி- ஆறு அணா. அது தவிர, குருவை நெல் அறுவடையில், நூறு கலம்;சம்பா அறுவடையில், நூறு கலம் நெல் கொடுப்பாங்க.இந்த ஏற்பாடு 1963 வரை நடைமுறையில் இருந்தது. ஒரு தடவை (பக்தவத்சலம் முதலமைச்சரா இருந்த போது) கீழத் தஞ்சை புலவச்சேரிங்கிற இடத்திலேர்ந்து விடியற்காலை மூணு மணிக்குப் புறப்பட்டோம். காளையார் கோவில்லே,காம்ப். தூரம் எழுபத்தஞ்சு கிலோ மீட்டர். அங்கே போனதும், மகாப் பெரியவங்க, எங்க ஆளுங்களுக்கு குளிக்க வெந்நீர் போட்டுக் கொடுக்கும்படி உத்தரவு போட்டாங்க.பாவம் போகிக்கெல்லாம் தோள் வலிக்கும்’னு சொன்னாங்க.நாங்க நின்ன இடத்திலேர்ந்து, சுவாமிகள் காம்ப்,ஒரு கிலோ மீட்டர் இருந்தது. “நான் நடந்தே போறேன்”-ன்னு சொல்லி,நடந்தே போனாங்க. அங்கேயிருந்து மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பி, சிவகங்கை போனோம். போனவுடனே,எங்களுக்கெல்லாம் ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுத்தாங்க. “இவாளுக்கு ரொம்ப சிரமம்.வடை-பாயசத்தோடு சாப்பாடு போடு”-ன்னு உத்தரவு போட்டாங்க.(சொல்லும் போதே கண்ணையனின் கண்கள் உணர்ச்சி மிகுதியால் கலங்குகின்றன. ஒரு நாள் காலை சுமாரா ஒன்பது மணி. வேதபுரி சாஸ்திரி, சுவாமிகளுக்குத் தொண்டு செய்திட்டிருந்தார். அப்போ சுவாமிகள் ஆசமனம் சங்கல்பம் செய்து ஜபம் பண்ணிட்டிருந்தாங்க.பட்டணத்திலேர்ந்து சில பேர் சுவாமிகளைப் பார்க்க வந்தாங்க. ‘இப்போ பார்க்க முடியாது’ன்னுட்டார்,வேதபுரி. அவங்க போயிட்டாங்க.பெரியவங்க கண்ணை முழிச்சதும் ‘பட்டணத்திலேர்ந்துவந்தவா, எங்கே?”ன்னு கேட்டார். “அவா போயிட்டா….”ன்னார், வேதபுரி. “அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…” அப்போ நான் பக்கத்தில் இருந்தேன். “அவா பஸ்ஸ்டாண்டிலே நின்னுண்டிருப்பா, ..அழைச்சிண்டு வா”ன்னு பெரியவங்க சொன்னாங்க. நான் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். வேகமா வந்து தரிசனம் பண்ணிட்டுப் பேசினாங்க…. மடத்துக்கு ஏதாவது காணிக்கை கொடுக்கணும்னு வேண்டிக்கிட்டாங்க. அப்போ,பெரியவங்க, “போகிக்கு ஏதாவது உதவி செய்யுங்கோ”ன்னு சொன்னாங்க.எங்கமேல அவ்வளவு பிரியம். நாப்பது வருஷத்துக்கு முன்னாடி இருக்கும். கொள்ளிடக்கரையிலே, மேனாவிலே தபஸ் பண்ணிட்டிருந்தாங்க பெரியவங்க.இருட்டு வேளை. மேனேஜர் வந்து மெள்ளக் கதவை நகர்த்தினார். சுவாமிகளைக் காணோம்! திடீர்ன்னு ஆயிடிச்சு! இரண்டு நிமிஷம் கழிச்சு,இருட்டிலேர்ந்து, ‘என்ன?’-ன்னு கேட்டுண்டே பெரியவங்க வர்ராங்க!.. “மகாசுவாமிகள் மேனாவிலிருந்து இறங்கிப் போனதை நீங்களெல்லாம் பார்க்கவில்லையா?” “கடவுளே! அதுதானே, தெரியலே!.. ..கதவு, மூடியபடி தானே இருக்கு.

