Home Blog Page 6260

மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!

drama-theft சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன் நகர் போலீஸார் தெரிவித்தது…. குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் தெருவில் வசித்து வரும் சபீதா (35) (கணவர் பெயர்: சுரேஷ்) என்ற பெண்மணி நேற்று (05,03,15) மாலை குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில். இன்று நண்பகல் அடையாளம் தெரியாத 2 நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னை கட்டிப் போட்டுவிட்டு. வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000-ஐ திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்ததன் பேரில் குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில் நகை திருட்டு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தால், சபீதாவை விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், சபீதாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சபீதாவே அந்த நகைகளை அடகு வைத்திருப்பதையும், பணத்தை எடுத்து வைத்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தீவிரமாக விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் சபீதாவின் தந்தை ரவிக்குமார் ரெட்டி என்பவர் வீடு கட்டி வருவதால், அதற்கு பணம் தேவைப்படுவதாக தந்தை கூறியதன் பேரில், 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000 ஐ சபீதாவே எடுத்துக் கொண்டு, நகைகளை அடகுக் கடையில் வைத்துக் கிடைத்த பணம் ரூ.4 லட்சத்தையும் தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து சபீதாவிடம் குமரன் நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் முன்னாள் முதல்வர் ராம்சுந்தர் தாஸ் காலமானார்

புது தில்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராம் சுந்தர் தாஸ் தனது 95 ஆவது வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை இன்று பாட்னாவில் அவர் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவை அடுத்து, பீகார் அரசு இரு நாட்கள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப் படும் என்று கூறியுள்ளது. ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது, அவர் 1979ல் பீகார் முதல்வராகப் பதவி வகித்தவர். அவருக்கு இரு மகன்கள் ஒரு மகள். அவரது இறுதிச் சடங்கு கங்கைக் கரையில் பங்க்ஸ்கட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம் சுந்தர் தாஸின் மறைவுக்கு அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் ad4b0f606e0f8465bc4c4c170b37e1a3 - 2026

ஹோலிப் பண்டிகை: ராஜ்நாத் சிங் கொண்டாட்டம்

புது தில்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதனைத் தன் அமைச்சக பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஹோலிப் பண்டியைகை ஒட்டி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டு முன் குவிந்த தொண்டர்களிடம் வாழ்த்துகளை தெரிவித்த அவர், தொண்டர்களுடன் சேர்ந்து வாத்தியம் இசைத்து மகிழ்ந்தார். ad4b0f606e0f8465bc4c4c170b37e1a3 - 2026

காதல் விவகாரத்தில் மகள் கௌரவக் கொலை: சிவகங்கையில் சம்பவம்

சிவகங்கை: சிவகங்கை அருகே காmurderதலனுடன் சென்றதால் தன் மகளைக் கௌரவக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் (47). இவரது மகள் தமிழ்ச்செல்வியுடன் (19) அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் (27) என்பவருக்கு காதல் இருந்துவந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்காத நிலையில் அவரது தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந் நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், வெளியூரில் பூமிநாதனுடன் இருந்த தமிழ்ச்செல்வியை போலீஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் தாய், தந்தையருடன் செல்ல விரும்புவதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன் ஆஜரானார். தன் மகள் தமிழ்ச்செல்வியை தானே கௌரவக் கொலை செய்துவிட்டதாக அவர் கூறினார். அதன் பேரில் அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கடந்த 3-ந்தேதி இரவில் நான் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது வீட்டில் படுத்திருந்த போது எனது மகளைக் காணவில்லை. நான் வெளியே வந்து பார்த்தேன் அப்போது அவர், வயல்காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். நான் அழைத்தும் அவள் நிற்கவில்லை. இப்படி மீண்டும் மீண்டும் என்னை அவமானப்படுத்துகிறாளே என ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. உடனே அவளைப் பின்தொடர்ந்து சென்றேன். அங்கே இருந்த கட்டையால் ஆத்திரம் தீர அடித்தேன். அதில் அவள் இறந்துவிட்டாள். பின்னர் அவளது உடலை மண்ணெண்னை ஊற்றி எரித்து விட்டேன் என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

சென்னை:rama-gopalan குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்… குழந்தை திருமணத் தடைச் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என மதுரை உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது. குழந்தைகளின் கல்வி, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசு பிறப்பித்த குழந்தைத் திருமணத்தடைச் சட்டத்தை எதிர்த்து, இச்சட்டம் முஸ்லீம்களுக்குப் பொருந்தாது என வழக்கு தொடர்ந்தனர். இதனைக் கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் கீழ்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்ததுடன், மத நம்பிக்கை என்பது வேறு மத உரிமை என்பது வேறு என தெளிவுப்படுத்தி உள்ளது. பெண் வயதிற்கு வருவதே திருமணத்திற்கான தகுதி என்ற வாதம் மூடத்தனமானது. பெண்களின் உயர் கல்விக்கு இதுபோன்ற செயல்பாடுகள் தடையாக அமைகின்றன. ஒரு பெண் தனது வாழ்க்கையை துவக்க தேவையான கல்வி அறிவோடு, உடல், மன ரீதியான வலிமையையும் பெற வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் இணக்கமாகவும், குழந்தை பேறு சிறப்பாக அமையும். குடும்பப் பொறுப்பை ஏற்கும் முன் அதற்கான முதிர்ச்சியை பெண் அடைவதற்கு வயதும் ஒரு காரணமாக அமைகிறது. இந்நிலையில் இதுபோன்ற சட்டங்கள் அவசியமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். இச்சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம், பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல், இனக் கவர்ச்சியால் மாணவர்கள் வழி தவறுவது குறித்த விழிப்புணர்வை உளவியலாரைக் கொண்டு பள்ளிகளவிலேயே கருத்தரங்கம் நடத்த அரசு முன் வரவேண்டும். காதல் எனும் பெயரில் பெண் குழந்தைகள் பயமுறுத்தப்படுகிறார்கள். காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் போன்றவை வீசும் கொடூரமும் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க மாணவர்களிடையே விழிப்புணர்வும், தற்காப்புக் கலை பயற்றுவித்தலும் அவசியம். சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்பவர்கள், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது , பாலியல் துன்புறுத்தல் முதலானவற்றை தடுக்க, அது குறித்து தகவல் அளிக்க குழந்தை உதவி மைய தொலைபேசி எண்கள், மற்றும் புகார் அளிக்கும் விவரம் பள்ளி அறிவிப்பு பலகையிலோ அல்லது தனி அறிவிப்பு பலகையாகவோ இடம்பெற செய்ய வேண்டும். தற்கொலைத் தடுக்க ஆலோசனைகளை வழங்கும் உதவி மையங்களின் தொலைபேசி எண்களும் விளம்பரப்படுத்த வேண்டும். காவல் துறையினரோடு மாணவர்கள் கலந்துரையாடல் போன்றவற்றை ஏற்படுத்தி சட்டத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் மாணவ பருவத்திலேயே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமே குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். இந்திய மக்கள் அனைவருக்குமான பொதுவான சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் நெடுநாளைய கோரிக்கை. நமது அரசியல் சாசனமும் இதனை வலியுறுத்திக் கூறியுள்ளது. இத்தீர்ப்பானது, பொது சிவில் சட்டம் கொண்டு வர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பொது சிவில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. – என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்தியத் தீவுகள் பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து இந்திய அணி பந்துவீச களம் இறங்கியது.

கனமழை; நிலச்சரிவு: உதகை மலை ரயில் ரத்தானதால் பயணிகள் அவதி

உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, காட்டேரி- ரன்னிமேடு ரயில் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக 182 சுற்றுலாப் பயணிகளுடன் வந்த உதகை மலை ரயில் நிறுத்தப்பட்டது. நடுவழியில் தவித்த அவர்கள், பின்னர் அரசு பஸ் மூலம் உதகைக்கு அழைத்து வரப்பட்டனர். பலத்த மழை காரணமாக, உதகை-குன்னூர் இடையிலான ரயில் பாதையில் மரம் விழுந்தது. அந்தப் பாதையிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் அங்கே ரயில் போக்குவரத்து துவங்கியது.

தீமாபுர் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம்: ராஜ்நாத் சிங் உத்தரவு

தீமாபுர்: நாகலாந்தின் தீமாபுரில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.

சிறையை உடைத்து ஆவேசம்: பாலியல் பலாத்கார குற்றவாளியான வங்கதேச ஊருவல்காரனை அடித்துக் கொன்ற மக்கள்

GRAPHIC CONTENTnA crowd of Indian men suதீமாபுர் : நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த வங்கதேச ஊடுருவல்காரனை, சிறையை உடைத்து, வெளியே இழுத்து பொதுமக்களே அடித்துக் கொன்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர் சையத் பரீத்கான்(35). இவர், நாகாலாந்தில் கார் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 23, 24-ஆம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்பூரில் பாதுகாப்பு நிறைந்த மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாலியல் பலாத்காரச் சம்பவத்தைக் கேள்விப் பட்ட நாகா பழங்குடியின மக்கள், சையத் மீது கடும் கோபத்தில் இருந்தனர். சையத்துக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். இதை அடுத்து, ஆயிரக்கணக்கில் அவர்கள் சிறை முன்னே திரண்டனர். தீமாபுர் மத்தியச் சிறையை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சையத்தை சிறைக்கு வெளியே இழுத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று ஊரின் மையப் பகுதியில் வைத்து அடித்துக் கொன்றனர். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹோலி பண்டிகை: பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை: வண்ணங்களின் பண்டிகை என்று போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் இருந்து விலகி, பண்டிகைக் கொண்டாட்ட உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமான விடுமுறை தினமானதால், இன்று பங்குச் சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்ச் 5 நேற்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 29,448.95 புள்ளிகளிலும்,தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8,937.75 புள்ளிகளிலும் இருந்தது.