Home Blog Page 6270

“குட்டி தல வந்தாச்சு”: டிவிட்டரில் அஜித்துக்கு குவியும் வாழ்த்துகள்

ajith-kumar சென்னை: நடிகர் அஜித் குமார் – ஷாலினி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு அஜித் குமார் ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குட்டி தல வந்தாச்சு, குட்டி தல அரைவ்ட், என்றெல்லாம் டிவிட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. பல இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே, அஜித் குமார் மருத்துவமனையில் இருந்தபடி வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, மருத்துவமனை பணியாளர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பிரச்னை: பேச்சுவார்த்தை துவங்கியது

சென்னை: ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது. இதில் கலந்து கொள்ள 42 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நடந்த கூட்டத்தில், ‘12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தாவிடில் வருகிற மார்ச் 3-ந்தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரனிடம், வேலை நிறுத்தம் செய்வது தொடர்பான நோட்டீசும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்பு, மார்ச் 2-ந்தேதி (அதாவது இன்று) 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போக்குவரத்து கழகங்களில் செயல்படும் 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் குழுவினர், நிர்வாக தரப்பினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தந்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு

கான்புர்: காணாமல் போன காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டுபிடித்து தருமாறு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த தில்லி மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு ராகுல் காந்தி விடுமுறையில் சென்றுள்ளார். ராகுல்காந்தியின் அரசியல்   விடுமுறை குறித்து  மற்ற கட்சிகள் கடுமையாக  விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியிலும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி தில்லியில் இல்லை.  வெளிநாட்டுக்குச் சென்று  விட்டார் என்றும், வேறு மாநிலத்தில் இருக்கி றார் என்றும் செய்திகளும் படங்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உ.பி. மாநில காங்கிரஸின் முன்னாள் பிரமுகரும், அண்மையில் பாரதீய ஜனதாவில் இணைந்தவருமான அமர் வைய்யா என்பவர் ஒட்டியுள்ள  போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஒட்டியுள்ள போஸ்டரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமறைவு. அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நிலம் கையகப் படுத்தும் விவகாரத்தில் மோடிக்கு சிவசேனா கடிதம்

புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று அக்கட்சி கருத்து தெரிவி்த்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கோரி சிவசேனா தரப்பில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் அமெரிக்க இளைஞரிடம் சாட்டிலைட் போன் பறிமுதல்

chennai-airport-runway சென்னை: சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கக் காத்தி ருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் ஞாயிற்றுக்கிழமை கிளம்பத் தயாரானது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞரைச் சோதனை செய்த போது, அவரிடம் ஒரு சாட்டிலைட் போன் சிக்கியது. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, தான் அமெரிக்காவில் சாட்டிலைட் போனை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் டேவிட்டின் போனை பறிமுதல் செய்தனர். டேவிட்டுக்கு குற்றப் பின்னணி ஏதாவது உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்”

“முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்” தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் 1969132_763012707087106_4352134091554339462_n (நீன்ட கட்டுரையில் ஒரு பகுதி)

 
நமது அருளாளரது நீண்ட,நெடிய 
மடாதிபத்தியத்தின் அந்த ஆரம்ப 
காலம் குறித்த சில விவரங்கள்.
 
ஸ்ரீமடத்தில் பீடாதிபதிகள் மாறும்போது வருவாய்
மாறி மாறி சுக்ல பக்ஷமாகவும்,கிருஷ்ண பக்ஷமாகவும்
இருக்குமாம். புரிகிறதா? ஒரு பீடாதிபதியின் காலத்தில் வளர்பிறையாக
வருமானம் ஓங்கிக்கொண்டேயிருக்குமாம்.
அடுத்த பீடாதிபதியின் காலத்தில் தேய்பிறையாகச்
சிறுத்துக் கொண்டே வருமாம்.பெரியவாளுக்கு ஐந்து
பட்டம் முந்தைய 63-ம் பீடாதிபர் காலத்தில் நல்ல
செல்வச் செழிப்பாம். அடுத்த 64-ம் அதிபர் காலத்தில்
ஒரே இடத்தில் ஐந்தாறு வருஷ முகாம். வழக்கு,வியாஜ்யம் என்று ஏற்பட்டதில் திருமகளின்
தமக்கை விஜயம் செய்யலானாளாம். அப்புறம் சேர்த்து
வைத்து அமோக வருவாயாம்.(அதற்கு முக்ய காரணகர்த்தா
ஸ்ரீபெரியவாளின் பாட்டனாரான கணபதி சாஸ்திரிகள்.)
 
‘ஓவர் வள்ள’லாயிருந்த இளையாத்தகுடிப் பெரியவாள்
எனப்படும் 65வது பீடாதிபர், சேர்த்திருந்த செந்திருவை
வாரி வாரி வண்மையில் வழங்கினாராம். அதனால்
அப்போது கருப்பூரில் ஏராளமான நிலம் ஸ்ரீமடத்துக்கு
உடைமையாயிருந்துங்கூட அடுத்த அதிபர், அறுபத்து
ஆறாமவர்,மஹா பெரியவாளின் பரம குருவான கலவைப் பெரியவாள் என்பவர் பட்டத்துக்கு வந்தபோது
ஒரே கடனும் கஸ்தியுமாக ஆகிவிட்டதாம். இக்கால வங்கிகளில் போட்டு வைப்பது போல அந்நாளில்
தங்கள் சொத்தை மடத்தில் போட்டு வைத்திருந்தவர்கள்
உண்டாம். அவர்களில் ஓர் அம்மாள் ஒரு தினம் பீடாதிபதிகள்
பூஜைக்குப் போகுமுன் அவரை ‘வழிமறித்து’ என்றே
சொல்லக்கூடிய அளவுக்கு நிர்பந்தப்படுத்தி, “பிராம்மணா! நான் நாதியில்லாத பொம்மனாட்டி..
உள்ளதையெல்லாம் இங்கே போட்டு வெச்சேன்.
மடமே முழுகிப் போயிடுங்கறாளே !
எனக்கானதைப் பண்ணிப்பிட்டு அப்புறம் பூஜைக்கு
ஒக்காருவீராம்!” என்று கேட்குமளவுக்கு நிலமை முற்றியதாம். ஆனால் சோதனையும்,அருளுமாக மாறி மாறிச்
செய்துவந்த சந்திரமௌளீச்வரர் அப்புறம் எதிர்பாராத
திருப்பங்களை உண்டாக்கி மடத்திற்கு ஸுபிக்ஷம்
ஏற்பட்டதாம். அதன் பின்னரே நமது மஹா பெரியவாள் பட்டமேற்றது

“நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்”

“நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்” தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்947129_585338794830241_865216797_n

 
“பெரியவா சொல்கிறார்- நான் ஸ்வாமிகளாய் ஒரு வருஷம் முடியற ஸமயத்திலேயே ஜம்புகேச்வரம் கும்பாபிஷேகம்
போக வேண்டி வந்ததுலே, ஜம்புநாதர் பக்தகோடிகள்
கிட்டேருந்து ஸம்பாதிச்சுண்டது மட்டுமில்லாம
நம்ம சந்திரமௌளீச்வரரும் நன்னா சம்பாதிச்சுண்டார். “அப்புறம் அந்த வருஷ சாதுர்மாஸ்யம் நன்னா நடத்திண்டு தஞ்சாவூர் வழியா கும்பகோணம்
திரும்பறச்சே, தஞ்சாவூர் பாய் ஸாஹிப்கள் (ராணிகள்)
ரெண்டு பேரும் ஒரு மாஸம் தங்க வெச்சு, வேணது
செஞ்சதோட, நெறயவும் குடுத்தனுப்பினா.
 
“அதுக்கப்பறம் மாமாங்கம் வந்துடுத்து. (1909ம் வருஷத்திய மஹாமகம்) அதுல சிவன்வாள்
லக்ஷ பிராம்மண போஜனம்-னு ஆரம்பிச்சது.
அவரோட அந்த மனஸு விசேஷத்துல ப்ராம்மணாள்,
அப்ராம்மணாள்னு பல லக்ஷக்கணக்கில் சாப்பிட்டவிட்டும்
மூட்டை மூட்டையா,அம்பாரம்,அம்பாரமா ஸாமான்கள்
மிஞ்சிடுத்து. அத்தனையையும் அவர் மடத்துக்கே சேத்துட்டார்.
இப்படி  மடத்துக்கு ஏறக்கொறைய ஒரு வருஷத்துக்கு
ஸம்ருத்தியா ஆஹாரம் போட்டுட்டார்.! குடிபடை கூட,
‘துண்ண வவுத்தெ முன்னே வெச்சுப்பேசு’ன்னு சொல்றதுண்டு.
அப்படி எங்களுக்கு ச்ரம தசையிலே போட்டு,’நன்றிக் கடன்’னு
எழுதறேளே, அந்த மாதிரி எந்நாளும் பட்டிருக்கும்படியா
அந்தப் பெரியவர் (சிவன்வாள்) உபகரிச்சிருக்கார்.
 
இப்படிக் கூறியவர்தாம் தொடர்ந்து, “மடத்துச் சார்பிலே அவர் மாமாங்க ஸமாராதனை பண்ணினதாத்தான் லோகத்துக்குத் தெரிவிச்சது.
யதார்தத்திலே, மடத்துச் சார்பிலே இல்லே;
கண்ணுக்குத் தெரியாத சந்த்ரமௌளீச்வரரோட ரக்ஷை தவிர
மடத்துக்கே சார்பில்லையோன்னு சரிஞ்சு போயிருந்த அந்த
ஸமயத்துலே அந்தப் புண்யவான்தான் அந்த மாமாங்க
அன்னதானத்தாலே மடத்தையே தூக்கி நிறுத்தினார்னு
சொல்லணும்” என்றார். அடியாருலகனைத்தும் பாலிக்கும் தெய்வகுரு மாநுஷமாகித்
தம் மடத்தையே பாலித்ததாக வேறொருவரிடம் கொண்டிருந்த
நன்றிதான் எத்தனை அழகு? மேலே அவர் பிரஸாதமாக நாம்
உண்டோமே,நிறைய உணவு,அதை ஜீரணித்து ரத்தத்தில்
ஒட்டவைக்கும் வெற்றிலையன்றோ இந்த உணர்வு?

“பெரியவாளின் நுட்பமான வாதம்”

“பெரியவாளின் நுட்பமான வாதம்” தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம்.246400_479182102136836_1433845875_n
கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர்,
கும்பகோணத்தில் ஸ்ரீமடம் நிரந்தரமாக இயங்குவதற்கு
தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.
அதனால் ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுக்கு, தஞ்சை
மன்னரின் ராஜகுரு என்ற பதவியும் சிறப்பும் கிடைத்தன.
 
நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச மன்னர்களின்
நிலை தலைகீழாக மாறி விட்டது.
 
‘சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு
வரும் உதவித் தொகை நிறுத்தப்படப் போகிறது’
என்ற தகவல், தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம்
ராஜா அவர்களை எட்டியது.ஆடிப் போய்விட்டார் அவர்.
 
பரமாசாரியாளிடம் வந்து, தன் நிலைமையை விண்ணப்பித்துக் கொண்டார்.
 
உடனே, அந்தக் காலத்தில் சட்டத்துறை மகா மேதாவிகளான வழக்கறிஞர்கள் கே.எஸ்.வேங்கட-
ரமணியும்,டி.ஆர்.வேங்கடராம சாஸ்திரிகளும்
வரவழைக்கப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு
இந்திய அரசாங்கத்துக்கு ஒரு மனு தயாரிக்கப்பட்டது.
 
“பெரியவாளிடம் காட்டிவிட்டு அனுப்பலாமே?
என்றார்கள் சட்ட வல்லுநர்கள்.
 
பெரியவாள், அப்போது, கிழக்குக் கோதாவரிப்
பகுதியில் யாத்திரையில் இருந்தார்கள்.
 
படித்துப் பார்த்தார்கள், பெரியவாள்.
 
“ரொம்ப சரி,பக்குவமா,சட்டரீதியா எழுதியிருக்கேள்..”
 
சிறு இடைவெளி.
 
“வெங்கட்ராமா- ஒரு சின்ன பாரா சேர்க்கலாமோ?..
லண்டன் ப்ரிவி கவுன்சில்லே பிலிப்ஸ்-ங்கிறவர்
கொடுத்த தீர்ப்பிலே என்ன சொல்லியிருக்கு…?
 
…..இப்போது,சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசு
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும்,
பின்னர் ஒரு காலத்தில், அந்தந்த சமஸ்தானங்களை,
அந்தந்த மன்னர் பரம்பரையினருக்கே வழங்கி விடலாம்
என்று தீர்மானம் செய்யுமேயானால், தஞ்சாவூர் மன்னர்
பரம்பரையினருக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.
 
“….சமஸ்தானத்தையே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு சொல்லியிருக்கும்போது
இப்போதைய தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கு,
போதுமான இடமும் வசதிகளும் செய்து கொடுப்பது
நியாயமல்லவா? குறைந்த பட்சம், தற்போதுள்ள
வசதிகள் ரத்தாகாமல் பார்த்துக் கொள்வது,
அரசாங்கத்தின் கடமை…”
 
சட்டங்களின் கரைகண்டவர் என்று போற்றப்பட்ட
வெங்கட்டராம சாஸ்திரி, அப்படியே பிரமித்துப்
போய்விட்டார். பெரியவாளின் நுட்பமான வாதம்
அவரை கட்டிப்போட்டுவிட்டது.
 
“பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து
விட்டார்கள்.இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு
அப்பீல் செய்ய!

“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்)

“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
பெரியவாளின் வலது காலில் மேற்புறத்தில்10482143_599228513527816_46027082804070919_n
எப்படியோ ஒரு ரத்தக் கசிவு. ஒரு சொட்டு ரத்தம்
மாதுளமுத்துப் போல் இருந்தது.
 
சாவகாசமாக உட்கார்ந்து பெரியவாள் ஸ்ரீமடத்துச்
சீடரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
 
ஓர் எறும்பு வந்து, அந்தக் காயத்தின்மீது ஊர்ந்தது.
அந்த எறும்பைப் பின் தொடர்ந்து அதன் உற்றார்-
உறவினர்கள் கூடிவிட்டார்கள்.
 
‘எறும்புகளைத் தட்டி விடுங்கள்’ என்று
பெரியவாளிடம் யார் சொல்ல முடியும்?
 
வெளியே, பெரியவாளின் அன்புக்குப் பாத்திரமான
செல்வாக்குடைய பக்தர் நின்று கொண்டிருந்தார்/
அவரை ரகசியமாய் உள்ளே அழைத்து வந்தார்கள்.
 
” பெரியவா கால்லே எறும்பு மொய்க்கிறதே?”
என்று பணிவுடன் கூறினார், அவர்.
 
ஒரு விநாடி நேரம் அருள்நிறைந்த பார்வை.
 
“விபீஷணன்,ராமச்சந்திரமூர்த்தியை சரணாகதி பண்ணினான் என்று படிக்கிறோம். வாயாலே
‘சரணாகதி’ன்னு சொன்னான். ராமன் பாதங்களை
இறுகக் கட்டிக்கொள்ளல்லே அப்படியிருந்தும், ராமன்
ரொம்ப இறக்கப்பட்டு விபீஷணனுக்கு அடைக்கலம்
கொடுத்தான்.”
 
இந்த ராமாயணம் இப்போது இங்கே எதற்கு?…
 
“இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப்
பிடிச்சிண்டிருக்கு. அதுகள் என்ன சொல்றதுன்னு
கேட்காமல், உதறி விட்டால், அது நியாயமா?”
 
இந்த சொற்சுவையைக் கேட்டு ரசிப்பதா? இல்லை பெரியவாளுக்காக இரக்கப்படுவதா?- என்று புரியவில்லை, சீடர்களுக்கு. ‘உடல் வேறு; ஆன்மா வேறு’ என்பது உபநிஷத்
வாக்கியம் மட்டுமல்ல. பெரியவாளைப் பொறுத்த
மட்டில், உப்யோகமான வாக்கியம்!.
 
எறும்புகள், அமுதத்தைப் பருகிய களிப்பில்
மயங்கிக்கிடந்தன.
 
போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் (எறும்புகள்)
செய்திருந்தனவோ!

அஜீத் மனைவி ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது

ajithshaliniசென்னை: நடிகர் அஜித்குமார் – மனைவி ஷாலினி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலை 4.30 மணி அளவில் ஷாலினி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அஜித் – ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே அனுஷ்கா என்ற பெண் உள்ளார். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் #குட்டிதல என்ற ஹேஷ்டேகில் டிரெண்டாக தொடங்கியது. அஜித் குமாருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.