Home Blog Page 6286

ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கி கப்பலில் படகு மோதி பெரிஸ்கோப் சேதம்

ins-sindhughoshமும்பை: ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பலில் மீன் பிடி படகு ஒன்று மோதி கப்பலின் பெரிஸ்கோப் சேதம் அடைந்தது. ஐ.என்.எஸ். சிந்துகோஷ் 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பல். இது, நாட்டின் மேற்குக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தது. அரபிக் கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள மேற் பகுதி வழியாக வெளிவந்த கடற்படை வீரர்கள், சிறிய படகு மூலம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் மீது மீன்பிடி படகு ஒன்று மோதியது. இதில் கப்பலின் பெரிஸ்கோப் சேதமடைந்தது. பெரிஸ்கோப்பில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக மும்பை கடற்படைத் தளத்திற்கு கப்பல் சென்றதாக கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

தேமுதிக.,வுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு

தமிழக சட்ட மன்றத்தில் தேமுதிக பற்றி பேச அனுமதிக்கப் படாததால், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திமுகவினரைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். தமிழக சட்ட மன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து தேமுதிக பிரச்னை குறித்து பேசத் தொடங்கினார். ஆனால், அவைத்தலைவர், ‘இதற்கு அனுமதி இல்லை உட்காருங்கள்!’ என்றார். ஆனால் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நின்றபடியே பேச அனுமதி கேட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்… “தேமுதிக.,வை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்து இருக்கிறார்கள். இதனால் அடுத்து வரும் பட்ஜெட் தொடரிலும் அவர்கள் பங்கேற்ற முடியாத நிலை உள்ளது. ஆகவே தேமுதிக மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வைப்பதற்காக அனுமதி கேட்டேன். ஆனால் அது குறித்துப் பேசத் தொடங்கியதுமே அது அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று அவைத் தலைவர் அறிவித்து விட்டார். தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது பற்றிப் பேச அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தோம். கடந்த ஆட்சியின் போது இதுபோன்ற சம்பவங்களில் எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அவைத்தலைவர் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இப்போதும் அதுபோன்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்தோம். ஆனால் ஏற்கவில்லை” என்று கூறினார்.

“இதுவும் பூஜைதான்!”

“இதுவும் பூஜைதான்!” தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
குடவாசல்-கொறடாச்சேரி மார்க்கத்தில்
பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார்.
வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில்
அவர்களுக்கே இருந்த அதிவினய பக்தியுடன் கைகூப்பி
நின்றார்கள்.காணிக்கையுங்கூட ஸமர்ப்பித்தார்கள்.
 
தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக,
அவர்களது நலன்களை, நலன்கள் இல்லாமையும்
கேட்டுக் கொண்டார்-ஓடாமல்,பறக்காமல் நின்று
நிதானமாக! இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர 
மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால்
பிரமுகர்களாலும்-துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ
எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து 
முடிவு செய்தார்.
 
இதிலேயே ஓரளவு நேரம் சென்றதில் அடுத்த முகாம்
அடையத் தாமதமாகுமே என்று மானேஜரும்
மற்ற பரிவாரத்தினரும் எண்ணினர்.
 
ஆனால் ஏழையர் தெய்வமோ நிம்மதியாக உட்கார்ந்து
விட்டது. சிப்பந்திகளை அனுப்பி அவ்வளவு நந்தன்-
நந்தினிகளுக்கும் வேட்டி புடவை வாங்கி வரச் சொல்லி
விட்டது. அந்தச் சிற்றூரில் அவ்வளவு ஜவுளி ஸ்டாக் இல்லை
என்று தெரிந்த பின்னும் விடாமல் அருகிலுள்ள சற்றுப்
பெரிய ஊரான குடவாசலுக்கே போய் வாங்கிவர
ஆணை பிறப்பித்தது. அந்த நடுவழி மர நிழலிலேயே அவர்களுக்கு ‘திண்டி’யாக
ஒரு ஸாம்பார் சாதமும் தயாரிக்க உத்தரவிட்டுவிட்டது.
 
இதெல்லாம் முடித்துப் புறப்பட இரண்டு மூன்று மணி
அவகாசம் பிடிக்குமே, வெயிலும் நன்றாக ஏறி விடுமே,
அதற்கப்புறம் அடுத்த முகாம் போய் பெரியவாளுக்கே
உரிய அந்தப் பல மணி நேர பூஜை செய்வதென்றால்
மிகவும் ஆயாஸமாகிவிடுமே! இதை எண்ணி மானேஜர்
கவலைப்பட்டார்.
 
“இப்பவே டயம் ஆயிடுத்து. இன்னும் உத்திரவானதை யெல்லாம் பண்ணிட்டுப் போய் அப்புறம் பூஜை…..”
246400_479182102136836_1433845875_nஎன்று அவர் சொல்லிவரும் போதே…… ஸ்ரீசரணர் (பெரியவா) குறிக்கிட்டு, “இதுவும் பூஜைதான்!” என்றார்.

ஆஸ்கர் 2015: சிறந்த படமாக பேர்ட்மென் தேர்வு: சிறந்த நடிகர் எடி ரெட்மென், சிறந்த நடிகை ஜூலியன் மூரே

oscars
picture courtesy: https://oscar.go.com/
  ஆஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படமாக பேர்ட்மென் தேர்வானது. சிறந்த நடிகராக தி தியரி ஆஃப் எவரிதிங் படத்தில் நடித்த எடி ரெட்மென் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக ஸ்டில் அலைஸ் படத்தில் நடித்த ஜூலியன் மூரே தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இயக்குனராக பேர்ட்மேன் படத்தை இயக்கிய அலெக்ஜாண்ட்ரோ ஜி. இனாரிட் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த படமாக பேர்ட்மேன் தேர்வு செய்யப்பட்டது. பேர்ட்மேன், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் படங்கள் தலா 4 விருதுகளைப் பெற்றது.

“பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்”

“பெரியவா பட்டத்துக்கு வந்த புதிதில்”

 
(ஸ்ரீகார்யம் பற்றி சொன்ன சுவையான சம்பவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 
இதை பெரியவா மொழியா (வாயால) கேட்போம். “நான் ஸ்வாமிகளா வந்தப்போ ஒரு விசித்திரமான
சூழ்நிலை. நான் பட்டமாயி அஞ்சு வருஷம் வரை
மைனர்தானே? (சிரித்து, அதிநயமான அபிநயத்தில்
கழுத்துச் செயின்,காலர், ஸென்ட் ஆகியவற்றுக்குக்
குறிப்புக் காட்டி) அந்த ‘மைனர்’ இல்லே; வயஸில
மைனர்தானே? அதனால நிர்வாகம் ஒரு கார்டியன்
கிட்ட இருந்தது.அவர் யார்னா பரமகுரு ஸ்வாமிகள்
(கலவைப் பெரியவாள்) பட்டத்துக்கு வந்த நாள்லேருந்து
மடத்து ஸ்ரீகார்யமா (மேலாளராக) இருந்தவர்தான்.
அந்த ஸ்வாமிகளும் பட்டத்துக்கு வரச்சே மைனரா
இருந்தவாளானதால் அவாளுக்கும் இவரேதான்
கார்டியனாக இருந்திருக்கார்.
 
அவா பீடாதிபத்யம் வஹிச்ச பதினேழு வருஷத்துல மொத(ல்)
பத்து பன்னண்டு வருஷம் வரை இவர் ஸரியாகவே
நிர்வாகம் பண்ணிண்டிருந்தார். ஆனா போகப்போக
வயஸு ரொம்ப ஆயிட்டதாலே ஞாபகப் பெசகு; அது தெரியாம
இருக்கிறதுக்காகப் பண்ற காரியங்கள்ல கொஞ்சம் தப்புத்
தண்டா; கேள்வி கேட்டா தன் வயஸை, அத்தனைக் கால
ஒழைப்பைச் சொல்லி சீர்றது (சீறுவது); இதிலே சிலபேர்கிட்ட
ஒரே கோவம். அதனாலேயே அநுகூலமாயிருக்கறவாகிட்ட
அதி தாக்ஷிண்யம்னு ஆயிட்டார்.
 
“இப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்திலே ஒண்ணுந்தெரியாத நான்
புது ஸ்வாமிகளா வந்து அவர் கார்டியனா ஆனதுல அவருக்கு
ரொம்பவும் ஸ்தானம் குடுத்துப்போச்சு. அப்போ நான்
ப்ரத்யக்ஷத்துலே பாத்ததிலே, அவருக்கு தாரணா சக்தி
(விஷயங்களை அறிவால் கிரஹித்துக் காக்கும் திறன்)
பாதி போயிடுத்து; த்ருஷ்டி முக்கால் போயிடுத்து;காது முழுக்கவே போயிடுத்து! எடுப்பார் கைப்பிள்ளையா என்னவோ
பண்ணிக்கிண்டிருந்தார். அவரைக் கேக்க ஆளில்லை. “இதெல்லாம் சொல்றதுக்கே கஷ்டமாத்தான் இருக்கு. ‘ஸத்கார்யம்,ஆசார்யாள் கைங்கர்யம், ஜன்மாவைக்
கடைத்தேத்திப்போம்’னு மடம் மாதிரி ஒரு எடத்துக்கு வந்து, ஒரு
காலத்துல நன்னாவும் ஸேவகம் பண்ணிண்டிருந்தவாளையும்
அப்பறம் ஏதோ ஒரு மாயை வழுக்கிவிட்டு வீணாப் போயிடறதை
நெனச்சா துக்கமாத்தான் இருக்கு. பின்னு எதுக்கு கதை 
சொல்றேன்னா,
 
கர்மாவோ,கிர்மாவோ எதுக்காகவோ மாயையை ஏவிவிட்டு
இப்படியெல்லாம் கோளாறா நடக்கப் பண்ற அந்த ஈச்வர
சக்தியே எப்படி ஸமயத்திலே இந்த மடத்தைக் கட்டிக்
947129_585338794830241_865216797_nகாப்பாத்தியிருக்குன்னு காட்றதுக்காகத்தான்

இந்திய அணியிடம் தோல்வி: தன்னம்பிக்கை தகர்ந்துவிட்டதாக டிவில்லியர்ஸ் சோகம்

AB-De-Villiers1கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த அணியாக வலம் வரும் தென்னாப்பிரிக்க அணி, நேற்று இந்திய அணியிடம் படு தோல்வி அடைந்தது. மோசமான இந்தத் தோல்வியால், தங்கள் தன்னம்பிக்கை தகர்ந்து விட்டதாக தென்னாப்பிரிக்க அணி தலைவர் டிவிலியர்ஸ் சோகத்துடன் கூறியுள்ளார். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், நாங்கள் முக்கியமான ஒரு போட்டியில், 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதை எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இந்தத் தோல்வியை நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது. டாஸ் வென்றது இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் பேட்டிங் செய்யும் போது, ஒரு கட்டத்தில் இந்தியா 350க்கு மேல் ரன்களைக் குவித்து விடும் என நினைத்தேன். ஆனால் எங்கள் பவுலர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாகப் பந்து வீசி அதிக ரன்கள் எடுப்பதைக் கட்டுப்படுத்தினார்கள். அதுபோல், போட்டியின் கடைசிப் பந்து வரை எங்கள் அணி போட்டியில் இருந்து விலகிச் சென்றுவிடாமல் எங்கள் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் இப்படி மொத்தமாக இந்தியாவின் ஆதிக்கத்தில் சரணடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை. காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், இந்தத் தோல்வியின் மூலம் தன்னம்பிக்கை தகர்ந்து விட்டது. எங்கள் அணியின் மோசமான பேட்டிங்கும், இந்தியாவின் திறமையான பவுலிங்கும்தான் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்குள்ளாக்கியது. தான் ஆட்டம் இழந்த பிறகு ஹசிம் ஆம்லா இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்ததாக என்னிடம் கூறினார். குறிப்பாக, 300க்கு மேலான ஒரு இலக்கைத் துரத்தியபோது, இரண்டு ரன் அவுட்களால் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. நானும், டேவிட் மில்லரும், எந்தப் பந்து வீச்சாளராலும் ஆட்டம் இழக்காமல், ரன்-அவுட்டுகளால் பெவிலியன் திரும்பியதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தியர்கள் சிறப்பாக பீல்டிங் செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை, ஆனால் விக்கெட்டுகளுக்கு நடுவிலான ஓட்டத்தில் நாங்கள்தான் தவறு செய்துவிட்டோம். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்துகளை சிறப்பாக அடித்து ஆடக் கூடியவர்கள். அப்படியிருந்தும் இந்தியாவின் பவுன்சர் பந்து வீச்சுத் தாக்குதலில் தடுமாறியதற்கு பிட்சும் ஒரு காரணமாக இருந்தது என்று டிவில்லியர்ஸ் இந்தப் போட்டி குறித்த தனது கருத்தைத் தெரிவித்தார்.

50ஆம் ஆண்டு திருமண விழா: அத்வானிக்கு மோடி, அன்சாரி நேரில் வாழ்த்து

LK-Advani-with-his-daughter புதுதில்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது திருமண பொன்விழாவைக் கொண்டாடினார். அவர் கமலாவைத் திருமணம் செய்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நேற்று அவர் தனது தில்லி இல்லத்தில் திருமண பொன்விழாவைக் கொண்டாடினார். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகள் பிரதீபா செய்திருந்தார். இந்த விழாவில் பிரபலங்கள் பலர் வருகை தந்து, அவரிடம் ஆசி பெற்றனர். அத்வானியின் இல்லம் திருமண விழா இல்லம் போல் களை கட்டியிருந்தது. காலை முதல் பிரபலஸ்தர்கள் வந்திருந்து தங்கள் வாழ்த்தையும் ஆசியையும் அளித்தனர். வந்திருந்த நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில், பாரம்பரிய வழக்கப்படி அத்வானி–கமலா தம்பதியர் மணமகன், மணமகளாக மாறி மாலைகள் சூட்டி மகிழ்ச்சிகரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். இருவர் முகத்திலும் சந்தோஷம் தவழ இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுனர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக., தலைவர்கள், இந்தி திரை நட்சத்திரங்கள் விது வினோத் சோப்ரா, அனு மாலிக், குல்ஷன் குரோவர் உள்ளிட்டவர்கள், ஆன்மிகத் தலைவர்களான சுவாமி அனதீஷ்வரா, சுவாமி சிதானந்தா உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு அத்வானி தம்பதியரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

உங்களையும் சிறையில் அடைக்க முடியும் என செய்தியாளரை மிரட்டிய மம்தா

mamata-banerjee கோல்கத்தா: உங்களையும் சிறையில் அடைத்திருக்க முடியும் என செய்தியாளரை மிரட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.. நிதி மோசடி வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவாளரான தொழிலதிபர் சிவாஜி பாஞ்சா நேற்று தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அது தொடர்பாக நேற்று கோல்கத்தா விமான நிலையம் வந்திருந்த மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, செய்தியாளரை மிரட்டும் வகையில், வழக்கமான ஆவேசத்துடன், உங்களையும் சிறையில் அடைத்திருக்க முடியும். ஆனால் நல்லெண்ணம் காரணமாக அப்படிச் செய்யவில்லை. நீங்கள் என்னிடம் ஏன் இதனைக் கேட்கிறீர்கள்? தொழிலதிபர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கலாம். இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை…. என்றார். முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, வங்கதேச தலைநகர் டாக்கா சென்றிருந்தார். மம்தாவுடன், அவரின் நெருங்கிய உதவியாளரும், பிரபல தொழில் அதிபருமான சிபாஜி பன்ஜாவும் சென்றிருந்தார். இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம், விமானம் மூலம் கோல்கட்டா வந்தடைந்தார். அவருடன், பன்ஜாவும் வந்திறங்கினார். அப்போது, விமான நிலையத்தில் தயாராகக் காத்திருந்த இந்தியக் குடியுரிமைத் துறை அதிகாரிகள், பொருளாதார மோசடி வழக்கின் கீழ் பன்ஜாவை கைது செய்தனர். இந்த நிகழ்வு, விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பன்ஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் பிணையத் தொகை செலுத்தி ஜாமினில் வெளிவந்தார்.

ஸ்காட்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து: 119 ரன்னில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டத்தில், இன்றைய போட்டியில், ஸ்காட்லாந்து அணியை 119 ரன் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் அலி 142 பந்துகளில் 128 ரன் குவித்தார். பெல் 54ம், மோர்கன் 46 ரன்னும் எடுத்தனர். 304 ரன் என்ற கடின இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து அணி, இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது . அந்த அணியில் துவக்க வீரர் கோட்ஸர் 71 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 42.2 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 184 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை:

parliament புது தில்லி: இன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், மத்திய அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் விவரித்துப் பேசினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்றார். மேலும், இந்த படஜெட் கூட்டத் தொடர் ஆக்கபூர்வமானதாக இருக்கும். மத்திய அரசு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஏழைகளுக்கான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. தீண்டாமையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. நாம் பணவீக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் மாதிரி கிராம திட்டம், கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க நிதி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நேரடி மானிய திட்டமாக இந்தியாவின் சமையல் எரிவாயு மானிய திட்டம் உள்ளது மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழை மக்களுக்காவும் இந்த அரசு பாடுபடும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தூய்மை பள்ளிகள் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்மீது இந்திய அரசு மிகுந்து அக்கறை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் வழங்குவதில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண் கல்விக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது… என்று பேசினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இப்போது துவங்கி குறைந்த பட்சம் 3 மாதங்கள் வரை நடைபெறுவது வழக்கம். 2015– 2016–ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கு வசதியாக இந்தக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.