Home Blog Page 63

திருப்பதி பிரமோத்ஸவம்; ஆண்டாள் மாலை அனுப்பி வைப்பு!

andal maalai to thirupathi - 2026

திருப்பதி திருமலை ஸ்ரீ னிவாச பெருமாள் கோவிலில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் இன்று கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதனை முன்னிட்டு இன்று மதியம் 1:30 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாளுக்கு மாலை, கிளி, பரிவட்டம் சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட மாலை, கிளி, பரிவட்டங்களை ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரீவாஸ், கோயில் பட்டர்கள் மாடவீதிகள் சுற்றி கொண்டு வந்தனர்.

பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ராம்கோ இயக்குனர் ஸ்ரீகண்டன் ராஜா, கோயில் பட்டர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.

கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோயிலில் நவராத்ரி விழா!

mahakali amman temple golu - 2026

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளிஅம்மன் கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு நவராத்திரி திருவிழா  நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அனைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் பக்தர்கள் கொலு வைத்து வழிபடத் தொடங்கினர்.

வரும் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ஆம் தேதி விஜயதசமி பூஜையோடு நவராத்திரி விழா நிறைவடைகிறது.

தென்காசி மாவட்டம் கரிசல்குடியிருப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் திருக்கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தொடங்கியது விழாவில் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோயிலில் நவராத்திரி கொலு படிகள் ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் மாகாளியம்மன் வைத்தும்  இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரிசையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகாகவி பாரதியார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் வகையில் சுவாமிவிவேகானந்தர் அன்னைதெரசா அப்துல்கலாம் ஆகியோரின் உருவ பொம்மைகளும் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள், சமுதாய பெரியோர்கள் விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்து வருகின்றனர்.

செங்கோட்டையில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த வரவேற்பு வளைவு இடித்து அகற்றம்!

sengottai arch removed - 2026
செங்கோட்டையில் கனத்த இதயத்துடன் அகற்றப்பட்ட நுழைவுவாயில்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படும் தமிழகத்தின் கனிம வளங்களைச் சுமந்து செல்லும் அளவில் பெரிய லாரிகள், கண்டெய்னர் வாகனங்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து வசதிக்காக நூற்றாண்டுகள் பழமையான வரவேற்பு வளைவு இன்று காலை இடித்து அகற்றப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் செங்கோட்டை பகுதி இருந்த போது, சமஸ்தானத்துக்குள் நுழையும் வகையில் வைக்கப்பட்ட வரவேற்பு வளைவு மேலே சங்கு முத்திரையுடன் காணப்படும். இருபுறமும் துவாரபாலகர் சிலைகளுடன் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெற்ற அம்சத்துடன் இருந்தது இந்த வரவேற்பு வளைவு. இது போன்ற அமைப்பு நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. வெறும் வரவேற்பு வளைவுகள் மட்டும் தான் இருக்கும். ஆனால் இது ஆன்மிக அடையாளத்துடன் துவாரபாலகர்கள் சிலைகளுடன் அமைந்திருந்ததால் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது.

கோவில்கள் அதிகம் இருந்த இடம். திருவிதாங்கூர் பூமியே ஆன்மீக பூமி என்பதால் அந்தக் காலத்தில் இப்படி ஆலயங்களுக்கு வைப்பது போல் துவாரபாலகர் சிலைகளை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். கோயில்களுக்கு வெளியே அல்லது சந்நிதிக்கு வெளியே இப்படி துவாரபாலகர் சிலைகள் இருப்பது நாம் அறிந்தது. ஆனால் இங்கே இந்த பூமியே க்ஷேத்திரம் என்பதால் இந்த சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. துவாரபாலகர்கள் ஒற்றை விரல் காட்டி ஏகாக்ர சிந்தையோடு உள்ளே வாருங்கள் என்று சொல்வதாக அமைப்பு.

சபரிமலை செல்லும் அன்பர்கள் இந்த வழியாகச் செல்லும் போது புகழ்பெற்ற ஐயப்பன் தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பந்தளம், எரிமேலி உள்ளிட்ட அனைத்து ஐயப்பன் படை வீடு தலங்களுக்கும் செல்வதற்கு இதுவே நுழைவாயில் என்பதால், அந்நாளில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே தேர்வு செய்து பயணிப்பார்கள்.

அப்படி இந்த ஊர் வழியாகச் செல்பவர்கள் முதலில் துவார பாலகர்களுக்கு சூடம் ஏற்றி வணங்கி, தங்கள் பயணம் எந்தவித இடையூறும் இன்றி அசம்பாவிதம் ஏதுமின்றி நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அவர்களிடம் அனுமதி பெற்று பிறகு உள்ளே செல்வார்கள்.

காரணம் அந்தக் காலத்தில் கேரள மண்ணில் மாந்திரீக ரீதியாக அல்லது அவர்களின் ஆகம ரீதியாக பல பிரதிஷ்டைகளை செய்திருந்தார்கள். அப்படித்தான் கோட்டைவாசல் கருப்பசாமி பிரதிஷ்டையும். இன்றும் கோட்டைவாசல் மேலிருந்து பார்த்தால் கீழே ஊரும் நிலப்பரப்பும் அருமையாகத் தெரியும்.

கோட்டைவாசல் கோயிலுடன் கூடிய பகுதி 1956ல் தமிழகத்துடன் கேரளப் பகுதிகள் சில இணைக்கப்பட்ட போது, தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரிவர பராமரிக்க இயலவில்லை என்பதால், கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் வழிபாட்டை மட்டும் கேரளத்தின் கட்டுப்பாட்டில் கொடுத்து விட்டார்கள்! செங்கோட்டை நகரில் மாடன் பிரதிஷ்டைகளும் உண்டு. இவை ஊரில் ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் அந்நாளில் மாந்திரீக ரீதியாக பிரதிஷ்டை ஆனவை.

இத்தகைய பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த நுழைவுவாயில் வளைவு, அண்மைக் காலமாக தமிழகத்தில் இருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்லும் மிகப்பெரும் லாரிகள், கண்டெய்னர்களால் இடிக்கப்பட்டு உரசப்பட்டு சேதப்படுத்தப் பட்டது. எனவே இதனைப் பழுது பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், துவாரபாலர் சிலைகளுடன் கூடிய வரவேற்பு வளைவை அப்புறப்படுத்த நிறைய எதிர்ப்புகளும் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு வரவேற்பு வளைவு அமைத்து அதில் சங்கு முத்திரையுடன் துவார பாலகர்கள் சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறே செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது நகராட்சி நிர்வாகம். ஆனால் நிர்வாகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஆளுங்கட்சி நபர்கள் இந்தச் சிலைகளை அப்புறப்படுத்துவதிலேயே ஒரே கண்ணாக இருந்தார்கள் என்பது அவர்களின் பேச்சிலும் நடவடிக்கையிலும் நன்றாகத் தெரிந்தது. எனவே தான் ஆன்மிகப் பெருமக்கள் இவற்றை அகற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வைத்தார்கள். இதனால் இது அரசியல் ஆக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செங்கோட்டை பகுதியை உள்ளடக்கிய அதிமுக.,வைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி ஏற்பாட்டில் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, மீண்டும் புதிதாக கட்டித்தரப்படும் என்றும், அவ்வாறே துவாரபாலகர்கள் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று காலை பொதுமக்கள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.

எனவே வருங்காலத்தில் தாங்கள் வாக்களித்தபடி இல்லாமல் இந்தச் சிலைகளை வேறெங்காவது கொண்டு போய் வைத்து வரவேற்பு வளைவை அமைத்தால் இந்த ஊர் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.

மோடியின் புதிய இந்தியா : விவேகமான அயலுறவுக் கொள்கை!

india and qatar news - 2026
#image_title

— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

உலகெங்கிலும் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் குவிந்தன. உலகம் முழுவதும் அவருக்கு இருக்கும் மதிப்பு மரியாதையின் அடையாளம் இது.

உலக தலைவராக அவர் உயர்ந்துள்ளதன் அடையாளம் மட்டுமல்ல இது. இந்திய தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு கொஞ்ச காலம் ஜவஹர்லால் நேருவுக்கு கூட இது போன்ற உலக அந்தஸ்து இருந்தது. நேரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். காந்தி மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் வாரிசாக அடையாளப் படுத்தப்பட்டார். அதனால் அவர் சுதந்திரத்திற்கு பிறகு உலக அரங்கில் உயர்த்தப்பட்டார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்க வில்லை. உள்நாட்டிலும் உலக அரங்கிலும் இந்தியா திக்கித் திணறியது.

தனக்கு முன்பிருந்தவர்களை போலல்லாமல் மோடி எளிய பின்னணி கொண்டவர். அது மட்டுமன்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருத்தியலின் நிழலும் அவர் மீது கவிழ்ந்திருந்தது. 2014 பிரதமரானபோது எதிர்க்கட்சிகள் பலவும் அவர் அயலுறவு கொள்கையில் தோற்றுப் போவார் என்று கணித்தன. ஆனால் யாரும் நினைத்துப் பார்க்க முடியாததை அவர் சாதித்தார்.

ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான ( Strategic Autonomy) அயலுறவு கொள்கையால் சிறப்பாக வழி நடத்தினார்.

பல ஆதிக்க மையங்களை கொண்ட உலகில் தற்சார்பு கொண்ட நிலையை மேற்கொள்வது சுலபமான விஷயமல்ல. 1960 களில் பிரான்ஸ் நாட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சார்லஸ் டி கோல் அதிபராக இருந்தபோது இது போன்றதொரு கொள்கையை பின்பற்றினார். இரு துருவங்கள் இடையே பனிப்போர் நிகழ்ந்த காலம் அது. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பொதுவாக அமெரிக்க சார்பு நிலையை மேற்கொண்டிருந்தன. அப்போது டி கோல் தற்சார்பு கொண்ட அயலுறவு கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தார்.

அவரது அயலுறவு கொள்கை அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போக மறுத்தது. சோவியத் யூனியனின் அதிபர் நிகிதா குருசேவ் மற்றும் சீனாவின் மா சேதுங் உடன் அவருக்கு இருந்த உறவை அமெரிக்கா பரிவுடன் பார்க்கவில்லை. ஜான் கென்னடி மற்றும் லின்டன் ஜான்சனின் ஆட்சியின்போது ராஜதந்திரரீதியாக தனிமைப் படுத்துவோம், பொருளாதார தடைகள் விதிப்போம், நேட்டோ ராணுவ பாதுகாப்பு வளையத்தை விலக்கிக் கொள்வோம் என்றெல்லாம் அவரை அச்சுறுத்தினார்கள்.

கடைசியில் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தான் டி கோலின் சுதந்திரமான போக்கு அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்றும் அது தன் நாட்டின் (பிரான்சின்) சுதந்திரத்தையும் தற்சார்பையும் முன்னிறுத்தும் முயற்சி என்பதை புரிந்து கொண்டார்கள்.

பக்குவமாக மோடி மேற்கொண்ட தற்சார்பை மையமாகக் கொண்ட சுதந்திரமான வெளியுறவு கொள்கையால் உலக அரசியல் களத்தில் இந்தியா உயர்ந்தது. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது இயல்பானதே. 1960 ல் டி கோலை மிரட்டியதை போலவே இப்போதுள்ள அமெரிக்க தலைமை மோடியை பல்வேறு வழிகளில் முறைக்கிறது. டி கோல் போலவே மோடியும் உள்நாட்டில் கடுமையாக விமர்சிக்கப்படுவார். வெளிநாட்டு சதிகள் அரங்கேறும். இருந்தாலும் மோடி விவேகத்துடன் கூடிய , தற்சார்பு கொண்ட, சுதந்திரமான புதிய அயலுறவு கொள்கையை உருவாக்கி விட்டார் என்பதுதான் உண்மை. இந்தியாவில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த வழியில் இருந்து விலகிச் செல்ல விரும்பாது என்பதும் உண்மை.

அயலுறவு கொள்கையில் மோடி நிபுணத்துவம் பெற்றதற்கு பின்புலமாக இரண்டு தசாப்தங்கள் நீண்ட கதை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. வெளியுலகத்தின் மீது அவர் நடத்திய படையெடுப்பு 1990 களில் ஆரம்பமானது. பாஜகவின் தேசிய நிர்வாகியாக அவர் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர்களின் அமைப்புகளை திட்டமிட்ட ரீதியில் சந்தித்து அவர் கலந்துரையாடினார். அதன் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.

குஜராத்தின் முதல்வரான பிறகு சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் , தாய்லாந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக பயணம் செய்தார். 2002 இல் நடந்த கலவரம் சில தடைகளை, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், ஏற்படுத்தியது. ஆனால் அவற்றால் அவர் தளரவில்லை. நவீன குஜராத் பற்றிய அவரது கனவை நினைவாக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை என்பதை அறிந்திருந்தார். முக்கியமாக அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களின் ஆதரவு அவசியம் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.

இங்கிலாந்து அரசின் அங்கீகாரம் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் இங்கு வந்தால் கைது செய்து விடுவோம் என்ற அச்சுறுத்தலையும் மீறி, இந்திய வம்சாவளியினரின் வேண்டுகோளை ஏற்று 2003 இல் லண்டனுக்கு சென்றார்.

குஜராத் பொருளாதாரத்திலும் வணிகத்திலும் வெற்றிகரமான இடத்தை பிடித்ததால் மேற்கத்திய நாடுகள் அதை கவனத்துடன் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டில்லியில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதுவர்கள் தங்கள் நாட்டு மேலிடத்திற்கு மோடியுடன் உறவு வேண்டாம் என சொல்லியது எடுபடாமல் போனது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, 2005 இல் ஏற்றமிகு குஜராத் சம்மேளனத்திற்கு பிரிட்டனின் தொழிற் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேரி கார்டினெர் கலந்து கொண்டார். தில்லியில் உள்ள பிரிட்டன் தூதுவரை உசுப்பேத்தும் விதமாக அவர் மோடியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தார். இது போன்ற சிறு துளிகள் விரைவில் ஓடையாக பெருக்கெடுத்தன.

2009 ல் பொதுத்தேர்தல் நெருங்கும் போது மோடி பாஜகவின் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அது டெல்லியில் இருந்த தூதரகங்கள் பலவற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியது. 2008 இல் அமெரிக்காவின் துணை தூதர் என்னுடன் பேசும்போது சாதாரணமான குரலில் , மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டார். வாஷிங்டனில் (அமெரிக்காவில்) இது முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை உணராத நான், ‘பிரதமர் வேட்பாளராக நிற்பாரா என்பதல்ல எப்போது என்பதுதான் சரியான கேள்வி’, என்று என் பதிலின் முக்கியத்துவத்தை உணராமலே சொன்னேன். 2011 விக்கி லீக்ஸ் ஆவணங்கள் மூலம் இது வெளிப்பட்டது. இந்திய அரசியலில் ஒரு புதிய நாயகன் உருவாகி வருவதை உலகம் அப்போதே அடையாளம் கண்டுவிட்டது.

2009 அக்டோபரில் ஆர்எஸ்எஸ் ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மோகன் பாகவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு முயற்சித்தோம் . மிக முக்கிய நாட்டின் தூதுவர், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் ஸூடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்த போதிலும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒருவரை தவிர மற்ற எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதை கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் மோடியை பற்றி தான் இருந்தன. குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்பு படுத்தி மற்ற கட்சிகள் குற்றம் சாட்டுவதை மோகன் பாகவத் வண்மையாக மறுத்தார். நாட்டில் மிகவும் மதிக்கக் கூடிய தலைவராக மோடி இருக்கிறார் என்று உறுதிபட சொன்னார். அது ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதர்களுக்கு தெளிவான செய்தியை தெரிவித்தது.

2011 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய நாட்டின் தூதர் தடையாணையை மீறி காந்தி நகருக்கு வந்து மோடியை சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு எல்லா விதமான தடைகளும் தகர்ந்தன. 2014 இல் மோடி பிரதமரானபோது உலக நாடுகளின் அயலுறவுத் துறை அதிகாரிகளின் வட்டத்தில் ஒரு மதிப்பும் மரியாதையும் உருவாகிவிட்டது என்பதை டில்லியில் உள்ள பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகளுடன் தொடர்புடையவன் என்ற வகையில் நான் உறுதிப்பட கூறுவேன்.

1945 இல் அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு (ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு) பதிலாக அணுகுண்டை பயன்படுத்தியது ஏன் என்று கேட்டதற்கு, ‘அறிவியலை விட அது மிகவும் சிக்கலானது என்பதால்’ என்று ஐன்ஸ்டீன் கூறியது புகழ்பெற்ற வாக்கியமாயிற்று. புதிய இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளையும் இராணுவ நடவடிக்கைகளையும் சமமாக கையாளும் திறன் படைத்தது என்பதை மோடி வெளிப்படுத்தியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

நவராத்திரியில்… உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!

golu1 - 2026
ஆதி – அந்திப் பிரபு / நாக கன்னி / பாரத மாதா

ஜெயஸ்ரீ எம். சாரி

நவராத்திரி என்னும் சுபராத்திரியின் மையமாய் இருப்பது கொலு பொம்மைகள் தான். பல வருடங்களாக, பரம்பரையாக கொலு தர்பார் வீற்றிருப்பதே நம் தமிழக இல்லங்களில் அழகு.

golu2 - 2026
கடோத்கஜன் / பாண்டி ஆடும் பெண்கள்

சரியாக 25 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்த வருடம் பலரது இல்லங்களில் வீற்றிருந்த கொலு தர்பாரை தரிசிக்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

golu3 - 2026
தாயக்கட்டை ஆடும் பெண்கள் / பல்லாங்குழி ஆடும் சிறுமிகள்

பலரும் இருக்கும் இந்த அவசர யுகத்திலும் கொலு தர்பாரை அலங்கரிப்பதில் அவர்களின் ஆர்வம் புலப்பட்டது. பழைய காலத்து பொம்மைகளின் அழகும், திருத்தமான வடிவமைப்பும், புது பொம்மைகளின் வண்ண வனப்பும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன.

நான் கண்டு மகிழ்ந்த சில சுவாரஸ்யமான கொலு பொம்மைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

golu4 - 2026
குயவர் / விவசாயி

‘ஆதி-அந்த பிரபு’வாய் ஒரே பொம்மையில் ஒரு பாதியில் கணபதியும், மறு பாதியில் அனுமனுமாய் காட்சியளித்தனர். பாரத மாதாவும் கம்பீரமாய் வீற்றிருந்தாள்.

golu5 - 2026
பச்சைக்கிளி / பொய்க்கால் குதிரையில் ஆண் – பெண்

பாம்பு டான்ஸ் ஆடும் நாக கன்னி, கடோத்கஜன் தனக்கு பிரியமான உணவு வகைகளுடனும், பாண்டி விளையாடும் இளைஞிகள், தாயக்கட்டை ஆடும் சிறுமியர்கள், பல்லாங்குழி விளையாடும் பெண்கள், குயவர், காய்கறி விற்கும் விவசாயி, விவசாயப் பெண்மணி, வயலிலிருந்து அறுவடை செய்ததை தலையில் சுமந்து வரும் பெண்…

golu6 - 2026
தேசத்தலைவர்கள் / பூக்குடுவையில் அழகி

தத்ரூபமான பச்சைக் கிளி, பொய்க்கால் குதிரையில் ஆணும், பெண்ணும், தேசத்தலைவர்கள், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பூக்குடுவையில் மாடர்ன் அழகி, காகிதத்தினால் செய்யப்பட்ட மிருதங்கம், நாகஸ்வரம், மாக்கல்லினால் ஆன கல்லுரல், அம்மி, இயந்திரம், குழிப் பணியார பாத்திரம்….

golu7 - 2026
காகிதத்தால் செய்யப்பட்ட மிருதங்கம் / மாக்கல்லால் ஆன பொருட்கள்

கோனார் மற்றும் தாய்ப்பசுவிடம் பால் அருந்தும் கன்றுக்குட்டி, தாகத்திற்காக தண்ணீர் பானையில் காத்திருக்கும் காக்கை, மாட்டு வண்டிக்காரர், இசைக் கலைஞர்கள், வீட்டின் உள்ளே தன் பெண்ணிற்கு தலை பின்னிவிடும் தாய்…

golu8 - 2026
கோனார் மற்றும் பசு – கன்றுக்குட்டி / தாகமான காக்கை

கிணறு, குகனுடன் படகில் ராமர், இலக்குவன், சீதை, ஆரத்தழுவிய ராமன்- குகன், நட்பை விளக்கும் கண்ணன் – குசேலர், கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் அங்கேயே குளிக்கும் ஒரு பெண், பித்தளையில் சிறிய பாத்திரங்கள்…

golu9 - 2026
மாட்டு வண்டி / எம்.ஜி.ஆர்

கைலாச மலை, ஆற்று மணலில் பார்க், அயோத்தி ராம்லல்லா, நவராத்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தாங்கிய ‘பேனர்’ எனப் பலவிதமான வித்தியாசமான பொம்மைகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பெரும்பாலான இல்லங்களில் பண்டர்பூரின் ‘விட்டல் -ருக்மணி’ கொலுவில் எழுந்தருளியிருந்தனர்.

golu10 - 2026
இசைக் கலைஞர்கள் / வீட்டிற்குள் தலை சீவும் தாய்

‘பல இல்லங்களில் இன்னும் நிறைய பொம்மைகள் உள்ளன. பரணில் இருந்து எடுக்கத்தான் முடியவில்லை’ என்பதே பலரின் வார்த்தைகளாய் இருந்தன.

golu11 - 2026
காகிதத்தால் ஆன நாகஸ்வரம். / படகில் ராமனுடன் குகன்

இன்னும் ஒன்று சொல்ல மறந்தேனே! இப்பொழுது எல்லாம் கொலு தர்பாரை தரிசிக்க, ரசிக்க வரும் பெண்களுடன் விஜயம் செய்யும் ஆண்களுக்கும் நவராத்திரி பரிசுப் பொருட்களும் தருகிறார்கள்.

golu12 - 2026
கிணற்றங்கரை / பித்தளையால் ஆன சொப்புகள்

நவராத்திரியில் குழந்தைகள், பெண்கள், சில ஆண்களும் முப்பெருந்தேவிகளை ஆராதித்து பாடுகின்றனர். ‘தாண்டியா’ ஆட்டமும் பலரையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. இல்லம் வருவோரை கண்கவர் வண்ணக் கோலங்களும், ‘ரங்கோலியும்’ அருமையாய் வரவேற்கின்றன.

golu13 - 2026
ராமர் – குகன் மற்றும் கண்ணன் – குசேலர். / ஆற்று மணலால் செய்த பார்க். / கைலாச மலை

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் கொண்டாட்டமாக நவராத்திரி இருக்கிறது என்பதே ஒரு மகிழ்ச்சியாய், திருப்தியாய் இருப்பதை சொல்லவும் வேண்டுமோ!

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகுமா? எதிர்பார்ப்பில் மக்கள்!

railway news - 2026
#image_title

படிப்படியாக முன்னேறி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயில் சிலம்பு அதிவிரைவு ரயில்.12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பில் இயங்கும் சிலம்பு அதிவிரைவு ரயில் முதலில் சென்னை மானாமதுரை இடையே வாரம் இருமுறை இயங்கி பின்னர் செங்கோட்டை க்கு நீடிக்கப்பட்டு தற்போது வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதி விரைவு ரயில் தினசரி இயங்குமா என தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்டத்தில் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இந்த ரயில் தற்போது தாம்பரம் வரை இயங்குவதை பழையபடி சென்னை எழும்பூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

20681/82 செங்கோட்டை – தாம்பரம் இடையே புதுக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் இயங்கிவருகிறது.

கடந்த 2013 ஆண்டு புதுக்கோட்டை வழியாக வாரம் இரு முறை ரயிலாக காரைக்குடி – சென்னை எழும்பூர் இடையேயும் பிறகு மானாமதுரை – சென்னை எழும்பூர் இடையேயும், கடந்த 2017 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீடிக்கப்பட்டு, பிறகு 2019 முதல் வாரத்தில் 3 நாட்கள் இந்த வண்டி இன்று வரை பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு வரவேற்பில் இயங்கிவருகிறது.

முதலில் 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த வண்டி பயணிகளின் அமோக வரவேற்பில் 24 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் கூட இந்த வண்டி வாரத்தில் மூன்று நாட்கள் தான் இயக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

இந்த வண்டியை தினசரி இயக்க பல முறை பல ஆண்டுகளாக செங்கோட்டை முதல் புதுக்கோட்டை வரை இடைப்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் ரயில்வே கூறிய காரணங்கள்: “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எங்களிடம் மற்ற நாட்களில்(சிலம்பு இயங்கும் 3 நாட்கள் தவிர) பிளாட்பாரம் இல்லை” என்பது தான். ஆனால் கடந்த IRTTC 2024 ஆண்டு கூட்டத்தில் தென்னக ரயில்வே இந்த வண்டியை நிரந்தரமாக தாம்பரம் வரை மட்டுமே இயக்க முன்மொழிவு செய்து இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வண்டியை தினசரி இயக்க அத்தனை சாத்திய கூறுகளும் உள்ள போதும், வாரத்தில் 3 நாட்கள் தான் இயங்கினாலும் பயணிகளிடையே இந்த ரயிலுக்கு வரவேற்பு சற்றும் குறையாத போதும், தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் இந்த சேவையை தினசரி சேவையாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது ஏன் என தெரியவில்லை.

மேலும் புதுக்கோட்டை காரைக்குடி யில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல தினசரி வண்டிகள் எதுவும் கிடையாது. அதேபோல புதுக்கோட்டையில் இருந்து இரவில் புறப்பட்டு அதிகாலை 04:25 மணி அளவில் சென்னை(தாம்பரம்) சென்றடையும் தினசரி வண்டிகளும் எதுவும் இல்லை. இந்த இரண்டு தேவையையும் சிலம்பு தினசரியாக மாறினால் நிறைவேறும்.

எனவே பயணிகளின் பிரதான கோரிக்கையான சிலம்பு வண்டியை உடனடியாக தினசரி ரயில் ஆக்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் விருப்பமாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிவான கவனத்திற்கு 12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக_வரவேற்பில் வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதிவிரைவு ரயில் தினசரி ஆகுமா?என எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இதை நிறைவுற்ற எம்.பி க்கள் போதிய முயற்சி எடுக்கவேண்டும்

சுயசார்பு இந்தியாவின் பலம்: பிரதமர் மோடியின் தெளிவான அழைப்பு!

modiji speech at gangaikonda chozhapuram - 2026

Aatmanirbharta is India’s strength!
PM Modi’s clarion call for a self-reliant maritime ecosystem!

தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நண்பர்களே, பாரதம் இன்று, உலகின் நண்பன் என்ற உணர்வோடு, முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உலகிலே நமக்கு எந்த ஒரு, பெரிய எதிரியும் கிடையாது.  இதன் உண்மையான பொருள், நமக்கு இருக்கும்பெரிய எதிரி என்று பார்த்தால், அது என்னவென்றால், மற்ற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கக்கூடிய தன்மை.  இதுதான் நம்முடைய மிகப்பெரிய எதிரியாகும். 

நாமனைவரும் இணைந்து, பாரதத்தின் இந்த எதிரியை, சார்ந்திருக்கும் தன்மை, என்ற எதிரியை தோற்கடித்தே ஆக வேண்டும்.  நாம் இந்த விஷயத்தை, எப்போதும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.  எத்தனை அதிகம், அந்நிய நாடுகள் மீது சார்ந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகம், தேசத்தின் தோல்வி.  உலகத்திலே, அமைதி, நிலைத்தன்மை, மற்றும் வளமைக்காக, உலகின் மிகப்பெரிய மக்கட்தொகை கொண்ட தேசம், தற்சார்பு உடையதாக, கட்டாயம் ஆக வேண்டும். 

நாம் மற்றவர்களை, சார்ந்திருந்தோம் என்றால், நம்முடைய சுயமரியாதையையும் கூட, இழக்க நேரிடும்.  140 கோடி நாட்டுமக்களின் எதிர்காலத்தை, நாம் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது.  தேசத்தின் வளர்ச்சி உறுதிப்பாட்டை, மற்றவர்களைச் சார்ந்துவாழும் நிலைக்கு காவு கொடுத்துவிட முடியாது. 

நமது வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தை, சடுதியில் விட்டுச் செல்ல முடியாது.  ஆகையினால் தான் சகோதர சகோதரிகளே, நாம் குஜராத்தியிலே சொல்லுவோம் இல்லையா?  ……………..

100 துக்கங்களுக்கு, ஒரே ஒரு மருந்து தான், அது என்னவென்றால், தற்சார்புடைய பாரதம்.  தற்சார்புடைய பாரதம். ஆனால் இதற்காக, நாம் சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். 

நாம் பிற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கும் நிலைமையை, தொடர்ந்து நாம் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.  மேலும், இப்போது பாரதம், தற்சார்புடையதாக ஆகி, உலகத்தின் முன்னால் முழுச்சக்தியோடு, கண்டிப்பாக நிமிர்ந்து நின்றே ஆக வேண்டும்.

செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்!

thiruvasagam mutrothuthal sengottai - 2026

செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் திருவிளக்கு பூஜை.

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில் காலை நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது பின்னா் திருவாசக குழு தலைவி திருவாசகி சிவபகவதி, தேவி குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.

மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான விருந்து நடந்தது. மாலை 6மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையை முத்துலெட்சுமி முதல் விளக்கை ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.

தவணைசெல்வி, திருவிளக்கு பூஜையை நடத்தினார். பின்னா் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் இராம்நாத், தங்கையா, ஆடிட்டர்சங்கர், முருகேசன், சுப்பிரமணியன், நெடுஞ்செழியன், கணேசன், வீரபுத்திரன், கல்யாணி, மோகன், குருவாயூர்கண்ணன், பழனியம்மாள், பேச்சியம்மாள், பகவதி, கோவில் பூஜாரிகள் ஐயப்பன், மாரியப்பன், குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.

விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனா்.

GST 2.0 குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை முழுமையாக… தமிழ்க் குரலுடன்!

pm modi speech in tv on gst - 2026

செப்.21 அன்று மாலை 5 மணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்
தமிழ் வடிவம்
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வணக்கம். 

நாளையிலிருந்து, சக்தியை உபாசிக்கும் புனிதவேளை, நவராத்திரி தொடங்க இருக்கிறது.  உங்கள் அனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி, தேசம், தற்சார்பு பாரதம் இயக்கத்திற்காக, மேலும் ஒரு, மகத்துவம் வாய்ந்த, மற்றும் பெரிய அடியை முன்னெடுக்கிறது.   நாளை, அதாவது நவராத்திரியின்…. முதல் நாள்,

செப்டம்பர் 22ஆம் தேதியன்று, சூரிய உதயத்தோடு கூடவே, அடுத்த தலைமுறை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அமலுக்கு வந்துவிடும்.  ஒருவகையிலே பார்த்தால், நாளைமுதல் தேசத்திலே, ஜிஎஸ்டி…. சேமிப்புக் கொண்டாட்டம், தொடங்கப்பட இருக்கிறது.  இந்த ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டத்திலே, உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும்.  மேலும் நீங்கள், உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை, மேலும் எளிதாக வாங்கி அனுபவிக்க முடியும். 

நம்முடைய தேசத்தின் ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள், புதிய மத்தியத்தட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர், அனைவருக்கும்,   இந்தச் சேமிப்புக் கொண்டாட்டத்தால், நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். 

அதாவது, இந்தப் பண்டிகைகள் காலத்தில், அனைவருக்கும் இனிப்பான செய்தியாகும்.  தேசத்தின் ஒவ்வொரு குடும்பத்தின், சந்தோஷங்கள் அதிகரிக்கும்.  நான் தேசத்தின், கோடானுகோடி குடும்பத்தவர்களுக்கும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், மற்றும், இந்த சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்விருப்பங்களைத் தெரிவிக்கிறேன், நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 

இந்தச் சீர்திருத்தங்கள், பாரதத்தினுடைய, வளர்ச்சிப் பயணத்திற்கு, மேலும் வேகம் கூட்டும்.  தொழில்களை, மேலும் சுலபமானதாக ஆக்கும்.  முதலீடுகளை, மேலும் கவரக்கூடியதாக இருக்கும்.  மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், வளர்ச்சிக்கான ஓட்டத்திலே, சமமான களம் அமைத்துக் கொடுக்கும். 

நண்பர்களே, 2017ஆம் ஆண்டிலே, பாரதமானது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நோக்கி முன்னேறியது.  அது ஒரு பழைய சரித்திரத்தை மாற்றுவதற்கும், ஒரு புதிய சரித்திரத்தை இயற்றவும், தொடக்கமாக அமைந்தது. 

பல பத்தாண்டுகள் வரை, நமது தேசத்தின் மக்கள், நீங்கள் அனைவரும், நமது வியாபாரிகள், தனித்தனி வரிகள் என்ற வலையில் சிக்கியிருந்தார்கள்.  ஆக்ட்ரோய், நுழைவு வரி, விற்பனை வரி, சுங்க வரி, வேட், சேவைவரி, இப்படி நினைவில் வைக்க முடியாத அளவுக்கு, டஜன்கணக்கான வரிகள், நம் தேசத்திலே இருந்தன.   ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகருக்கு, பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், எத்தனை சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பது மலைக்க வைக்கும்.  

ஏராளமான படிவங்களை நிரப்ப வேண்டியிருக்கும்.  எத்தனையோ தடைகள் இருந்தன.  ஒவ்வொரு இடத்திலும், வரிகளுக்கான விதவிதமான விதிகள் இருந்தன.  எனக்கு நினைவிருக்கிறது.  2014ஆம் ஆண்டிலே, தேசம் எனக்கு, பிரதம மந்திரி பொறுப்பை அளித்த போது, அப்போது அந்தத் தொடக்கக்கட்டத்திலே, ஒரு அயல்நாட்டு செய்தித்தாளிலே, ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு பிரசுரம் ஆகியிருந்தது. 

அதிலே, ஒரு கம்பெனியின் கஷ்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது.  அந்தக் கம்பெனி கூறியிருந்தது, அதற்கு ஒருவேளை, பெங்களூருவிலிருந்து, 570 கி.மீ. தொலைவில் இருக்கும், ஹைதராபாதுக்கு, தனது பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால், அந்த அனுப்புதல், எத்தனை கடினமானது என்றால், அவர்கள்…. சிந்தித்தார்கள், அவர்கள் சொல்லவும் செய்தார்கள், அந்தக் கம்பெனி என்ன விரும்பியது என்றால், முதலில் தங்களுடைய பொருட்களை, பெங்களூருவிலிருந்து ஐரோப்பா அனுப்பிய பிறகு, அதே பொருட்களை, ஐரோப்பாவிலிருந்து ஹைதராபாத் அனுப்பலாம் என்று.     

நண்பர்களே, வரி மற்றும் சுங்கம் என்ற பெரும் வலை காரணமாக, அப்போது இந்த நிலைமை இருந்தது.  நான் உங்களுக்கு ஒரேஒரு, பழைய எடுத்துக்காட்டை மட்டுமே நினைவூட்டுகிறேன்.  அப்போது இப்படி இலட்சக்கணக்கான கம்பெனிகளுக்கு, இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கு, தனித்தனி வரிகள் என்ற பெருவலை காரணமாக, அன்றாடம் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.  சரக்குகளை, ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு இடையே, அதிகரித்த செலவினங்கள், அதையும் கூட, ஏழைகள் சுமக்க வேண்டியிருந்தது, உங்களைப் போன்ற, நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்தது.

நண்பர்களே, தேசத்தை, இந்த நிலையிலிருந்து வெளியேற்றுவது, மிகவும் அவசியமாக இருந்தது.  ஆகையினாலே, எங்களுக்கு நீங்கள், 2014இலே சந்தர்ப்பம் அளித்தீர்கள், நாங்கள் அப்போது, மக்கள் நலனிலே, தேச நலனிலே, ஜிஎஸ்டியை எங்களுடைய முதன்மையாகக் கொண்டோம்.  நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தோம்.  நாங்கள் அனைத்து மாநிலங்களின், அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தோம். 

ஒவ்வொரு சிக்கலுக்கான தீர்வையும் தேடினோம்.  அனைத்து மாநிலங்களையும், அனைவரையும், ஒன்றிணைத்த பிறகு, சுதந்திர பாரதத்தின் இத்தனை பெரிய, வரிச்சீர்திருத்தம், சாத்தியமாகியிருக்கிறது.   இந்த மத்திய, மற்றும் மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிகளின் விளைவாகவே, நமது தேசம், பலடஜன் வரிகளின் சுமையிலிருந்து விடுதலை அடைந்தது.  இதனால் தான் தேசம் முழுவதற்கும், ஒரே மாதிரியான அமைப்பு உருவானது.  ஒரு தேசம், ஒரு வரி.. என்ற கனவு மெய்ப்பட்டது. 

நண்பர்களே, சீர்திருத்தம் என்பது இடையறாது நடக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும்.  காலம் மாறும் போது, தேசத்தின் தேவைகள் மாறும் போது, அப்போது அடுத்ததலைமுறை சீர்திருத்தங்களும், அதே அளவுக்கு அவசியமானதாகிறது.  ஆகையாலே, தேசத்தின் தற்போதைய தேவைகள், மற்றும் வருங்காலத்தின் கனவுகளை மனதில் கொண்டு, ஜிஎஸ்டியின்… இந்தப் புதிய சீர்திருத்தங்கள், அமலுக்கு வருகின்றன. 

புதிய வடிவத்திலே, மேலும் முக்கியமாக, இப்போது வெறும், 5 சதவீதம், மற்றும் 18 சதவீதத்திற்கான வரி அடுக்கு இருக்கும்.  இதன் பொருள் என்னவென்றால், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள், மேலும் விலை மலிவாகிவிடும்.  உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பிரஷ், பற்பசை, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு, இப்படி பல பொருட்களும், இப்படி பல சேவைகளும், ஒன்று, வரி இல்லாமல் இருக்கும், அல்லது வெறும், 5 சதவீத வரி செலுத்த வேண்டியதாக இருக்கும். 

எந்தப் பொருட்களின் மீது முன்பெல்லாம், 12 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்ததோ, அவற்றிலிருந்து, 99 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 100க்கு பக்கமாக, 99 சதவீதப் பொருட்கள் இப்போது, 5 சதவீத வரி வரம்பிற்குள் வந்து விட்டன. 

நண்பர்களே, கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்திலே, 25 கோடி நாட்டுமக்கள், ஏழ்மையை தோற்கடித்திருக்கிறார்கள், ஏழ்மையை விரட்டியிருக்கிறார்கள், மேலும் ஏழ்மையிலிருந்து வெளியேறிய இந்த, 25 கோடி மக்கள் என்ற பெரிய சமூகம், புதிய மத்தியத்தட்டு என்ற வடிவிலே, இன்று நமது தேசத்திலே, மிகப்பெரிய பங்களிப்பு அளித்து வருகிறார்கள். 

இந்தப் புதிய மத்தியத்தட்டு மக்களுக்கு என, பிரத்யேகமான பேரார்வங்கள் இருக்கின்றன.  அவர்களுக்கென கனவுகள் இருக்கின்றன.  இந்த ஆண்டு, அரசாங்கம், 12 இலட்சம் வரையிலான வருமானத்திற்கு, வரிவிலக்கு அளித்து, ஒரு பரிசினை அளித்திருக்கிறது.  மேலும் சொல்ல வேண்டுமென்றால், 12 இலட்சம் ரூபாய் வருவாய் வரை, வருமான வரியில் விலக்கு கிடைத்தால், மத்தியத்தட்டு மக்களின் வாழ்விலே எத்தனை பெரிய மாறுதல் ஏற்படுகிறது!! 

எத்தனை எளிமையாகவும் வசதியாகவும் ஆகிறது!!  மேலும் இப்போது, ஏழைகளுக்கான முறை இது; புதிய மத்தியத்தட்டுக்கான முறை இது.  இப்போது ஏழைகளுக்கும், புதிய மத்தியத்தட்டு மக்களுக்கும், மத்தியத்தட்டு மக்களுக்கும், ஒரு வகையிலே, இரட்டை வெகுமதி கிடைத்திருக்கிறது.  ஜிஎஸ்டி குறைவானபடியால், இப்போது தேசத்தின் குடிமக்களுக்கு, தங்களுடைய கனவுகளை மெய்யாக்குவது, மேலும் சுலபமானதாக ஆகும். 

வீடு கட்டுதல், தொலைக்காட்சி, குளிர்சாதனங்கள், வாங்குவதாகட்டும்; ஸ்கூட்டர், பைக், கார் வாங்குவதாகட்டும்; இவை அனைத்தின் மீதும், இப்போது, குறைவாகவே செலவழிக்க வேண்டியிருக்கும்.  உங்களுக்கெல்லாம், சுற்றுலா சென்று வருவது கூட மலிவாகி விடும்.  ஏனென்றால், அதிக அளவு ஹோட்டல்களின் அறைகளுக்கும் கூட, ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு விட்டது. 

அதே போல நண்பர்களே, எனக்கு ஒன்று சந்தோஷமளிக்கிறது.  அதாவது கடைக்கார சகோதர சகோதரிகளும் கூட, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாக மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.  அவர்கள் ஜிஎஸ்டியில் ஏற்பட்டிருக்கும் விலைக்குறைப்பை, நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள்.  பல்வேறு இடங்களில் எல்லாம் முந்தைய, மற்றும் இப்போதைய அடுக்குபற்றி, பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

நண்பர்களே, நாம், நாகரிக் தேவோ பவ, குடிமக்களே நம் தேவர்கள், என்ற மந்திரத்தை அடியொற்றி முன்னேறி வருகிறோம், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களிலே, இதனை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.  நாம், வருமான வரியிலே விலக்கு, மற்றும் ஜிஎஸ்டியில் விலக்கு இரண்டையும் இணைத்துப் பார்த்தால், ஓராண்டிலே, எடுக்கப்பட்ட தீர்மானத்தால், இதனால் தேசத்தின் மக்களுக்கு, இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சேமிப்பு ஏற்படும்.  ஆகையால் தான் நான் இதை சேமிப்புக் கொண்டாட்டம் என்று கூறுகிறேன்.

நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டினால், நாம் தற்சார்பு பாரதம் என்ற பாதையிலே பயணித்தே ஆக வேண்டும்.  மேலும் பாரதத்தை, தற்சார்பு உடையதாக ஆக்க, மிகப்பெரிய பொறுப்பு, நம்முடைய எம் எஸ் எம் ஈக்கள், அதாவது, நமது சிறு, மத்திய, மற்றும் குடிசைத் தொழில்களின் மீதும் இருக்கின்றது.   எவை நாட்டுமக்களின் அத்தியாவசியத் தேவைகளோ, எவற்றை நாம் தேசத்திலேயே தயாரிக்க முடியுமோ, அவற்றை நாம், தேசத்திலேயே தயாரிக்க வேண்டும்.  

நண்பர்களே, ஜிஎஸ்டியின் அடுக்குகளைக் குறைத்ததால், விதிகள், மற்றும் செயல்முறைகள், மேலும் சுலபமாக ஆனதால், நமது எம் எஸ் எம் ஈக்கள், நமது சிறு தொழில்கள், குறு தொழில்கள் ஆகியவற்றுக்கு நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.  அவற்றின் விற்பனை அதிகரிக்கும், வரிகள் குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும்;  அதாவது, அவர்களுக்கும் கூட, இரட்டிப்பு ஆதாயம் கிடைக்கும்.  ஆகையால், இன்று என்னுடைய, எம் எஸ் எம் ஈக்களிடம், சிறு தொழிலாகட்டும், குறு தொழிலாகட்டும், குடிசைத் தொழிலாகட்டும், உங்கள் அனைவரிடத்திலும், அதிக அளவு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.  உங்களுக்கும் தெரியும்,

பாரதம், வளமையின் சிகரத்தின் மீது இருந்த போது, அப்போது, பாரதத்தின் பொருளாதார அமைப்பின் முக்கியமான ஆதாரமாக, நமது, எம் எஸ் எம் ஈக்களே இருந்தன, நமது சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் இருந்தன.  பாரதத்தின் தயாரிப்புத் துறை, பாரதத்தில் உருவாக்கப்பட்ட பொருட்களின், தரம் சிறப்பானதாக இருந்தது.  நாம் அந்த கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டும்.  நமது சிறு தொழில்கள் தயாரிப்பவை, அவை உலகிலே, அனைத்து உரைகற்களிலும், சிறப்பானவையாக இருக்க வேண்டும், மிக அருமையானவையாக இருக்க வேண்டும்.  நாம் தயாரிக்கும் பொருட்கள், அவை உலகிலே, அட்டகாசமான முறையிலே, மிகச் சிறப்பான பொருளுக்கான அடையாளமாக இருக்க வேண்டும்.  நமது பொருட்களின் தரம், உலகிலே, பாரதத்தின் அடையாளத்தை உயர்த்த வேண்டும், பாரதத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும், நாம் இந்த இலக்கை ஏந்திப் பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே, தேசத்தின் விடுதலைப் போருக்கு, எப்படி சுதேசி என்ற மந்திரத்தால் பலம் கிடைத்ததோ, அதே போல, தேசத்தின் வளமைக்கும் கூட, சுதேசி என்ற மந்தித்தால் மட்டுமே சக்தி கிடைக்கும்.  இன்று, அறிந்தோ அறியாமலோ, நமது அன்றாட வாழ்க்கையிலே, நிறைய அந்நியப் பொருட்கள் இணைந்து விட்டன, நமக்கு இது தெரியக்கூட இல்லை.  நம் பையில் இருக்கும் சீப்பு, அயல்நாட்டதா அல்லது நம் நாட்டதா நமக்குத் தெரியாது. 

நாம், இவற்றிலிருந்தும் கூட விடுபட்டாக வேண்டும்.  நாம் வாங்கும் பொருட்கள் எல்லாம், இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டும்;  இதிலே, நமது தேசத்தின் இளைஞர்களின் உழைப்பு இருக்க வேண்டும், நமது தேசத்தின் சகோதர  சகோதரிகளின் வியர்வை இருக்க வேண்டும்.  நாம், அனைத்து இல்லங்களையும், சுதேசியின் அடையாளமாக ஆக்க வேண்டும்.  அனைத்துக் கடைகளையும், சுதேசியால் அழகுபடுத்த வேண்டும்.  பெருமையோடு கூறுங்கள், இது சுதேசி என்று; பெருமையோடு சொல்லுங்கள், நான் சுதேசியையே வாங்குகிறேன் என்று; நான் சுதேசிப் பொருட்களை, விற்கவும் செய்கிறேன் என்று, இதுவே, அனைத்து பாரதீயர்களின் உணர்வாக ஆக வேண்டும். 

எப்போது இப்படி நடக்கிறதோ, அப்போது பாரதம் விரைவாக வளர்ச்சி அடையும்.  நான் இன்று, அனைத்து மாநில அரசுகளிடமும் கேட்டுக் கொள்கிறேன், தற்சார்பு பாரதத்தின் இந்த இயக்கத்தோடு கூடவே, சுதேசியின் இந்த இயக்கத்தோடு கூடவே, தங்களுடைய மாநிலங்களிலே, தயாரிப்புத் துறைக்கு விரைவு கூட்டுங்கள், முழுச் சக்தியோடு, முழு உற்சாகத்தோடு இணையுங்கள்.  முதலீடுகளுக்கான சூழலை அதிகரியுங்கள், மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து முன்னேறும் போது, தற்சார்பு பாரதம் என்ற கனவு நிறைவைக் காணும், பாரதத்தின் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும், பாரதம் வளர்ச்சி அடையும். 

இந்த உணர்வோடு கூடவே, நான் மீண்டும் ஒரு முறை, இந்த சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். 

ஒரு முறை மீண்டும், உங்கள் அனைவருக்கும், நவராத்திரிக்கான, ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.

GST 2.0: இனி நம்ம கையில பணம் நெறய புழங்கும்!

gst collection - 2026

நாளை முதல் மறைமுக வரி சீர்திருத்தம் #GST 2.0 அமலுக்கு வருகிறது. இது நேரடியாகவும், மறைமுகவாகவும் பல பயன்களை விளைவிக்கவல்லது. ஏற்கனவே நேரடி வரி விதிப்பிலும் (வருமான வரி) ரூ.12 இலட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

● வரிக் குறைப்பு பொது மக்கள் கையில் கூடுதல் பணம் புழங்க வழிவகை செய்துள்ளது.

● இதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

● நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சேவை அளிக்கும் வணிகர்கள் அனைவரும் எளிதான வரி விதிப்பிற்கு (5% & 18%) மாறுவார்கள்.

● வரி விதிப்பில் உள்ள சின்னச் சின்ன சிரமங்கள், வரம்புக் குழப்பங்கள் படிப்படியாக சில மாதங்களில் குறைந்து விடும்.

● வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய சிந்தனை அல்லது அவசியம் பலருக்கு இல்லாமல் போகும்.

● மறைமுக வரி குறித்த வழக்குகள், மேல்முறையீடுகள், அபராதங்கள், இழுத்தடிப்பு நிச்சயம் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

● நிதியமைச்சகம், வர்த்தக அமைச்சகம், சட்ட அமைச்சகம் மூன்றும் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரின் பணிச்சுமையை இலகுவாக்கும்.

● பட்ஜெட்டில் வரி குறித்த புதிய அறிவிப்புகள் வரும் ஆண்டுகளில் தேவையில்லாமல் போகும்.

● GST கவுன்சில் போன்ற மாநில நிதியமைச்சர்களின் குழு கூடி முடிவெடுக்கும் விஷயங்கள் கை விரலில் எண்ணி விடும் அளவுக்கு மிக சொற்பமாக மட்டுமே இருக்கும்.

● அரசின் செலவினம் குறைந்து, அரசு இயந்திரத்தின் செயல்திறன் அதிகரிக்கும்.

● Ease of Doing Business என்பதில் நாம் பல படிநிலைகள் முன்னேறுவோம். ஆனால் உலக வங்கி,IMF தரும் இந்த ஆய்வு முடிவுகள் வருவதற்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகும்.

● புதிய அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வரும். உள்ளூர் நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்தும்.

● எண்ணிலடங்கா தொழில் முனைவோர், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவர்.

● சர்வதேச நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகும்.

● ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளான நெடுஞ்சாலைகள், இரயில் தடங்கள், துறைமுகங்கள் இணைப்பு, விமான நிலையங்கள், நீர்வழிப் போக்குவரத்துத் தடங்கள், சரக்கு முனையங்கள் இலக்கு வைத்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

● சரக்கு போக்குவரத்து, கட்டுமானம், மின்சார உற்பத்தி + விநியோகச் செலவுகள் படிப்படியாக குறையும்.

● மின்சாரம், பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை வருங்காலத்தில் GST யில் கொண்டு வரப்பட வேண்டும்.

● இறுதியாக GST 2.0 சீர்திருத்திற்கு பிரதமர் தான் தான் காரணம் என்று பெருமை பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தற்போது கூறுகிறது. இதை ஒவ்வொரு GST கவுன்சில் கூட்டம் முடிந்த பின்போ, மாநில எதிர்க்கட்சிகள் நிதிப் பகிர்வு குறித்து அரசியல் செய்யும் போதோ சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொன்னால் இதை இப்போது நிச்சயம் வரவேற்று இருப்பேன்.

  • சக்ரவர்த்தி மாரியப்பன்