கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கூகுள் சி இ ஓ யார் தெரியுமா? மைக்ரோசாஃப்ட், யூட்யூப், ஃபெட் எக்ஸ், அடோப், ஐபிஎம், அட அவ்வளவு ஏங்க வேர்ல்டு பேங்க் சி இ ஓ வே இந்தியன் தான். நாம இல்லாம அமெரிக்காவே நகராது…. இல்லையா? இல்லை.
மேலே சொன்ன அத்தனை கம்பெனிகளுக்கும் ஓனர் யாரு? அமெரிக்கன்ஸ்… நாம யாரு? லேபரரூ… என்ன வித்யாசம்? நம்ம அம்மா அப்பா நம்மள என்ன சொல்லி வளர்த்தார்கள்? நல்லா படி மகனே/மகளே நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி கை நிறைய சம்பாதிச்சு நிம்மதியா வாழணும்.
எந்த ரிஸ்க்கும் இல்லாம, நல்ல வேலையில் சேர்ந்து மாசமாசம் நல்ல சம்பளம் வாங்கணும். அவ்வளவு ஏன், நல்ல மாப்பிள்ளைங்க, நல்ல கம்பெனியில வேலை பார்க்கிறார். நிரந்தர வேலை. தைரியமா பொண்ணைக் கொடுக்கலாம். காக்காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கோணும். எந்தப் பெற்றவர்களும் தொழில் தொடங்கு, நிர்வாகம் செய்னு சொன்னதே இல்லை.
அமெரிக்கன்ஸ் / ஐரோப்பியன்ஸின் பலமே மேனேஜ்மெண்ட்ல ஸ்ட்ராங்காக இருப்பது தான். ”பால் கெட்டி” என்ற முன்னாள் கோடீஸ்வரரை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் ராக் பெல்லர் மாதிரியான பெரிய தொழிலதிபர். அவருடைய அப்பாவும் பெரிய தொழிலதிபர் தான். வருடத்திற்கு சில நூறு டாலர்கள் மட்டுமே கொடுப்பாராம். இதை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள். இதுவும் ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுப்பேன். பிழைத்தால் பிழைத்துக் கொள் இல்லையென்றால் அப்படியே ஓடிடுனு சொல்லியிருக்கார்.
அந்தக் காலத்தில் சில நூறு டாலர் என்பது பெரிய விசயம் தான். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ஒரு ஹோட்டலோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரோ ஆரம்பித்திருப்போம். பால்கெட்டி என்ன செய்தார் என்றால், வளைகுடா நாடுகளுக்குச் சென்று இருக்கும் காசையெல்லாம் வைத்து எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டினார். இரண்டு வருடங்களாக ஒவ்வொரு முயற்சியும் தோல்வி. எனினும் ரிஸ்க் எடுத்து கடைசியில் உலகத்தின் முதல் மூன்று கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.
இன்றைக்கும் நம் மக்கள் என்ன செய்கிறோம்? ஐடி / கம்.சைன்ஸ்/மெக்.எஞ்சினியர் என்று வேலைக்குப் போகும் மனநிலையிலேயே படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோம்.
குறைந்தபட்சம் கல்லூரியிலிருந்தாவது மேனேஜ்மெண்ட் படிப்பினை விரும்பிப் படிக்கிறோமா? கடனுக்கு எம்பிஏ பட்டம் வாங்கிட்டு அதைக் காட்டி ஒரு ப்ரமோஷன் வாங்கிக்கிறோம்.
இன்றைக்கு நாம இல்லாட்டி அமெரிக்கா இல்லைனு நாமளா கற்பனை பண்ணிக்கிறோம். நாம இல்லாட்டி, இந்தோனேசியா, வியட்நாம், மெக்ஸிகோ, ப்ரெஸில், நைஜீரியா, எத்யோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களைத் தூக்கிட்டு வந்து ட்ரெய்ன் பண்ணி தொழிலை நடத்திக் கொள்வான். நாம தான் அங்கே வேலை போனதும், ஏய்.. இந்திய அரசே! வேலை கொடுக்க வக்கில்லையா? எங்கள் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லையா என்று வெட்கமே இல்லாமல் அடுத்தவர்கள் மீது பழி போடுவோம்.
கொஞ்சம் யோசித்தீர்களா? சுந்தர் பிச்சை, அஜய் பங்கா, ராஜ் சுப்பிரமணியம், அரவிந்த் கிருஷ்ணா எல்லாம் தன் கையிலிருக்கும் கோடான கோடியை வைத்து ஏன் தனியாக ஒரு கூகுள், ஐபிஎம், பேங்க், ஃபெட் எக்ஸ் போன்றதொரு கம்பெனியை ஆரம்பிக்கவில்லை என்று?
இவர்களெல்லாம் கம்பெனி ஆரம்பிப்பதாகச் சொன்னாலே உலகம் முழுவதுமிருந்து முதலீடுகள் கொட்டும். ஏன் ஆரம்பிக்கவில்லை.
அந்த வகையில், ஸோகோ ”ஸ்ரீதர் வேம்பு” ஒரு வைடூரியம். ரிஸ்க் எடுத்த தேசப்பற்றாளர். ஆனால், நமக்கெல்லாம் ஐடி நிறுவனம் என்றாலே வெளிநாட்டுக்குச் சேவை செய்யும் இன்ஃபி மாதிரியான கம்பெனிகள் தான் நினைவுக்கு வருகிறது.
ஏனெனில், நமக்கு நிர்வாகரீதியாக வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுவதை விட வேலை செய்து வெற்றிபெற்றவர்களே ஹீரோக்களாகப் படுகிறார்கள். சினிமா தயாரிப்பாளர்களை விட நடிகர்களே ஹீரோவாகப் பார்ப்பது போல…
இனியாவது நம் குழந்தைகளுக்கு நிர்வாக மேலாண்மையின் அவசியத்தையும், கல்வியையும் போதிப்போம். அடுத்த சில தசாப்தங்களில் உலக வல்லரசாவோம்.
அது வரை இன்னிக்கு ட்ரம்ப் என்ன அறிக்கை விடப் போகிறார்னு எக்ஸ்/ட்ரூத் ஆப்களை ரெஃப்ரெஷ் பண்ணிட்டே காத்திருக்க வேண்டியது தான்.
வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5 %, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5%, 18% என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. இந்த சீர்திருத்தம் நாளை 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறையும்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சிகள் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்,’நாளை முதல் அமலாகும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை மூலம் மக்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மூலம் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இந்தியப் பொருட்களையே வாங்குவீர்!
பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டதாவது…
நாளை முதல் நவராத்திரி தொடங்குகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளில், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
நாளை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. இந்த சீர்திருத்தத்துக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தம், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வர்த்தகத்தை எளிதாக்கி முதலீட்டை அதிகரிக்கும்.
ஒரே தேசம், ஒரே வரி என்ற கனவு ஜிஎஸ்டி மூலம் பூர்த்தியானது. தற்போது காலம் மாறிவிட்டது. தேவையும் மாறிவிட்டது. அதனால் தான் தற்போது இரண்டாம் தலைமுறை வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது
ஜிஎஸ்டி.,க்கு முன்பு 12 வகையான வரிகள் இருந்தன. இதனால் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று விற்பதிலும் மக்கள் சிரமப்பட்டனர்.
2014 ல் பிரதமராக பதவியேற்ற போது, ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியானது. அதில், இந்தியாவில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிறுவனம் ஒன்று ஒரு பொருளை பெங்களூருவில் இருந்து ஐதராபாத் கொண்டு செல்வதில் பிரச்னைகள் இருந்தது. முதலில், அதனை பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவுக்கும், அதன் பிறகு அந்த பொருளை ஐரோப்பாவில் இருந்து ஐதராபாத்துக்கும் கொண்டு சென்றதாக தெரிய வந்தது. அப்போது, இருந்த வரிகள் மற்றும் சுங்கச்சாவடிகளால் ஏற்பட்ட பிரச்னை இது.
லட்சக்கணக்கான நிறுவனங்கள், மக்கள், பல்வேறு வரிகளால் அவதிப்பட்டனர். பொருட்களை கொண்டு செல்வதற்கு அதிக செலவு செய்தனர். அந்த சூழ்நிலையில இருந்து விடுவிக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது.
இந்த நிலையில் தான், 2017 ல் ஜிஎஸ்டியை அமல்படுத்திய போது இந்தியா, பழைய வரலாற்றை மாற்றி புதிய வரலாற்றை நோக்கி திரும்பியது. வர்த்தகர்களும், மக்களும் பல மறைமுகவரிகளால் அவதிப்பட்டு வந்தனர்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, ஒவ்வொரு மாநிலங்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்தோம். அனைவரின் ஒருமித்த முடிவோடு பெரிய வரி சீர்திருத்தம் அமலானது. மத்திய மாநில அரசுகளின் முயற்சி காரணமாக, பல வரி அடுக்கு பின்னணியில் இருந்து நாடு விடுபட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்ற கனவு நனவானது.
ஜிஎஸ்டி அமலாக்கம் நாட்டின் பெரிய வரி சீர்திருத்தம். தற்போது வரி கட்டமைப்பு எளிமைபடுத்தப்பட்டு உள்ளது. இந்த சீர்திருத்தம் நாட்டின் சேமிப்புத் திருவிழா. பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளினால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.
ஜிஎஸ்டி 2.0 – நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன; இதன் மூலம் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.
இனி 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடி வரை செலவு குறையும்.
99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பில் வந்துள்ளன. உணவு, மருந்து , பல்வேறு வீட்டு உபயோக பொருட்களின் விலை இனி குறையும். சிக்கலான வரி கட்டமைப்பில் இருந்து நுகர்வோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் துவங்குகிறது.
உணவுப் பொருட்கள், மருந்துகள், அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை விரைவில் மலிவாகப்போகின்றன. வீடு, டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களை வாங்குவது இனி எளிதாகும்.
வரும் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை, தற்சார்பு பாரதம் என்ற பாதை மூலமாகவே நாம் அடைய முடியும். இதனை நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்
இந்தியாவின் விடுதலைக்கு சுதேசி என்ற மந்திரம் எப்படி சக்தியைக் கொடுத்ததோ, அதேபோல் சுதேசி பொருட்கள் நாட்டிற்கு புதிய வலிமையைக் கொடுக்கும்.
நமது பாக்கெட்டில் இருக்கும் ஒரு சீப்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? என்று கூட நமக்குத் தெரியாது.
எனவே நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியர்களின் வியர்வை அடங்கியதாக இருக்க வேண்டும்
தற்சார்பு பாரதத்திற்காக எதையெல்லாம் உள்நாட்டில் தயாரிக்க முடியுமோ அதை எல்லாம் நாம் இங்கேயே தயாரிக்க வேண்டும்.
நாம் தயாரிக்கும் பொருட்கள் உலகில் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட சிறந்ததாக இருக்க வேண்டும். அவை உலகின் அனைத்து சந்தைகளிலும் கிடைக்க வேண்டும்.
அந்தளவுக்கு தரமான பொருட்களை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும். இதனால் நாட்டின் பெருமையும், கவுரவமும் அதிகரிக்கும்.
நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு, நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ரூ.12 லட்சம் வரை வருவாய் இருந்தால் வருமான வரி கட்ட தேவையில்லை என்ற சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பலன்களை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு பல கனவுகள் நோக்கங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது. அரசு வழங்கிய முதல் பரிசு. அரசு பரிசளித்தது. ரூ.12 லட்சம் வரை வரிச்சலுகை அளித்த போது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தற்போது இரண்டாம் பரிசாக ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜிஎஸ்டிகுறைப்பு மூலம் அவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற முடியும்.
வருமான வரியிலும், ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். நடுத்தர மக்கள் இனி எளிதாக தங்களது இலக்குகளை நிறைவேற்றுவார்கள். இந்த வரி சீர்திருத்தத்தால் சிறிய கடைக்காரர்கள் கூட பலன் அடைவார்கள். மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும்.
சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியாக நடக்கும் நடவடிக்கை. காலமும் தேவையும் மாறும் போது மாற்றத்தை ஏற்பது அவசியம். மாற்றங்கள் ஏற்படும் போது நாட்டில் மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்த தலைமுறை சீரதிருத்தம் மிகவும முக்கியமானது. நாட்டின் தற்போதைய தேவை மற்றும் எதிர்காலத்தை மனதில் வைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிவி, டூவீலர்கள், கார்கள் உள்ளிட்டவற்றை எளிதாக வாங்க முடியும். ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை நுகர்வோர்களுக்கு கொண்டு செல்ல வணிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.
சுய சார்பு இந்தியாவே இந்த நேரத்தில் தேவையாக உள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் ஊக்கம் அளிக்கின்றனர். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுய சார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும். உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளும் அந்த பொருட்களை விற்க வேண்டும். சுதேசி 2.0 இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சனிக்கிழமை புரட்டாசி சனி வார கருட சேவையும் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.இங்கு மூலவரான சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்த திருத்தலம் பக்தர்களால் தென் திருப்பதி என அழைக்கப்படும்.இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கருட சேவை வெகு விமர்சையாக நடைபெறும்.அதை தொடர்ந்து வரும் ஞாயிறன்றும் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி சனி வார கருட சேவை 20ந்தேதி அதிகாலை 4:30 மணி அளவில் தொடங்கியது. அப்பொழுது சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலிலேயே பக்தர்கள் மலையேறி கூட்டம் கூட்டமாக சென்று சீனிவாச பெருமாளை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் முடி இறக்கியும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை காணிக்கையாக செலுத்திய வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவிலில் பகல் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜையும் இரவு 8 மணிக்கு சாயரட்ச பூஜையும் நடைபெற்றது. நண்பகல் 12.00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் 4.00 மணிக்கு உற்சவர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இன்று மஹாளய பட்ச அமாவாசை என்பதால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் மலையை சுற்றி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதிகளும், செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ் நேரடியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு வந்து ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாள் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை சென்னை செங்கோட்டை பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்த ரயில் சாதாரண பயணிகள் பெட்டிகளை அதிகரித்து குறைந்த கட்டண மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைத்து பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரயில் பயணம் என்றால் சுகமானது.அதிலும் இந்த பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிப்பது தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிக மிக இயல்பானது.ராத்திரி பயணத்தை துவக்கினால் விடிவதற்கு முன் சென்னை சென்று விடலாம்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் தென்காசி சென்னை இடையே வாரம் ஒருநாள் இயங்கி பின்னர் செங்கோட்டை சென்னை இடையே வாரம் 5 நாள் இயங்கி தற்போது தினசரி ரயிலாக பயணிகளின் ஏகாபித்த ஆதரவுடன் மதுரை கூட்டத்தில் அதிக வருவாயீட்டும் ரயிலாக பொதிகை அதிவிரைவு ரயில் இயங்கி வருகிறது.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதையடுத்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பாக இந்த ரயிலுக்கான கொண்டாட்டம் 20/09/25 மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், பொருளாளர் மற்றும் மதுரை ரயில் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுந்தரம் , PRO ராமன் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா , செங்கோட்டை அக்ரி ஷேக் , மேலூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி இவ்விழாவிற்கான ஜாங்ரி மற்றும் இரண்டு கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பல ஆயிரம் பயணிகள் பயணிக்கும் இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் ஒரு மணி நேரம் பயண நேரத்தை குறைக்க வேண்டும்.கூடுதலாக சாதாரண பயணிகள் பெட்டி குறைந்த கட்டணத்தில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிரடியாக US-CS எனும் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதாவது இது அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்வு முறையில்… வெற்றி பெறுபவர்களுக்கு மாத்திரமே யுனைடெட் ஸ்டேட்ஸ் என்கிற நாட்டின் குடியுரிமையை பெற தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக மிக கடினமான தேர்வு முறைகளை புகுத்தி இருப்பதாக பலரும் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
முதல் எல்லாம் சம்பிரதாயமாக அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் அமெரிக்க ஆங்கில பேச்சு வழக்கு தெளிவு இருந்தால் போதும், என்பதை சோதிக்கும் விதத்தில் ஒரு தேர்வு முறையை வைத்து இருந்தார்கள்….. அமெரிக்க குடியுரிமை பெற…
அதில் தான் தற்போது டிரம்ப் நிர்வாகம் மூக்கை நுழைத்து கதக்களி ஆடி இருக்கிறார்கள். இருபது கேள்விகளுக்கு பன்னிரண்டு சரியாக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக 128 கேள்விகளுக்கு குறித்த நேரத்திற்குள் சரியான விடை கொடுக்க வேண்டும்….. அப்போது தான் இரண்டாம் தாளில் வரும் அந்த இருபது கேள்விகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்பது போல் வடிவமைப்பு செய்து இருக்கிறார்கள். இதன் மாதிரி அமைப்பும் வெளியிடவில்லை…., முன்பு இருந்தது. நேர நிர்ணயம் எதன் அடிப்படையில்…. இணைய வழியில் தேர்வா… அல்லது நடத்தப் போகும் அமைப்புக்கு, அதிகாரம் என்ன என்பதெல்லாம் விசா நடைமுறையோடு சம்மந்தப்பட்டது என சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 8,08,000 பேர் வரை நம் இந்திய குடிமக்கள் அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக புள்ளி விபர தரவுகள் சொல்கின்றன….. இவ்வாண்டு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் குடியுரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறார்களாம்….. இதில் இந்திய மக்கள் சுமார் 57% பேர் என்கிறார்கள்.
ஏற்கனவே கோல்டன் விசா வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் H1B விசா மற்றும் H4 விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பலரை கொந்தளிக்க செய்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அதிலும் குறிப்பாக இந்தியர்களை என்கிறார்கள். ஏனெனில் இந்த விசா நடைமுறையில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான்…. கிட்டத்தட்ட 70% பேர் பாதிக்கப்படக்கூடும் என்கிறார்கள்.
அடுத்த இடியாக இந்த US-CS தேர்வு வந்து சேர்ந்திருக்கிறது.
இவையெல்லாவற்றுக்கும் நம் அமெரிக்க பெரியார் பீட்டர் நவ்ரோ பின்புலத்தில் இருப்பதாக பலரும் பொருமிக் கொண்டு நிற்கிறார்கள். இவருக்கு தற்சமயம் அமெரிக்க அதிபரின் பொருளாதார பிரிவு ஆலோசகர் என்கிற பதவி கொடுத்து கூடவே வைத்து கொண்டு இருக்கிறார் டிரம்ப். ஏடாகூடமான யோசனைக்கு பேர் போனவர் இந்த நவ்ரோ. பழமைவாத கிருஸ்துவ அடிப்படைவாதி என பெயர் எடுத்தவர். நம்மூர் ஆட்களை மருந்துக்கும் ஆகாது இவருக்கு… அமெரிக்க உச்ச பதவிகளில் இந்தியர்கள் பலர் கோலோச்ச ஆரம்பித்து விட்டனர் என ஆர்ப்பரிப்பவர்…… அதை எதிர்கொள்ளும் (நண்டு சிண்டு) வேலைகளில் தற்போது இறங்கி இருப்பதாக இவரே கூறிக் கொள்கிறார். சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்மூர் வீரமணி வேலைகளில் கை தேர்ந்தவர்……. ஒரு மாற்றாக நவ்ரோ இந்தியர்….. இந்தியர்….. என நடு இரவிலும் புலம்பிக் கூடியவர்.
அடுத்ததாக என்ன நடக்கும்…..?!?!
அக்டோபர் 20 பிறகான விண்ணப்பப் படிவத்தில் தான் இந்த தேர்வு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது….. அதுவரையில் பழைய நடைமுறை தொடரும் என பொடி வைத்து இருக்கிறார்கள்.
ஏன் இப்படி….????
இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை சதவீதம் பேர் முண்டியடித்து விண்ணப்பிக்க இருக்கிறார்கள் என்பதை அவதானிக்க போகிறார்கள் அதில் இந்தியர்கள் எத்தனை சதவீதம் பேர் என கணக்கிட இருக்கிறார்கள். ஏற்கனவே H1B விசா நடைமுறைக்கு கொண்டு வரும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து இட்டுயிருக்கும் நிலையில் இந்த அமெரிக்க குடியுரிமை விண்ணப்பப் படிவம் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் வேலை பார்க்க H1B, H4 விசா நடைமுறையில் உள்ளது…. அமெரிக்க குடியுரிமை பெற்றுக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக குடியேற US-CS வழிவகை செய்கிறது.
இந்த இரண்டு முறைகளை தாண்டி அமெரிக்காவில் வாழ்வது நடைமுறை சாத்தியம் இல்லை.
அப்படியான சூழ்நிலையில் இந்த கெடுபிடிகள் அத்தனையும் இந்தியர்களை குறிவைத்தே என்கிறார்கள். அமெரிக்கா வாழ் இந்தியர்களை கொண்டு நம் இந்திய தேசத்தை வழிக்கு கொண்டு வர நினைக்கிறது அமெரிக்கா.ஆயுத வியாபாரம் படுத்து விட்டது என்பதனால் விவசாய பொருட்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கு முக்கால் பாகம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் கொண்டே விவசாயம் பார்க்கிறது அமெரிக்கா. சகட்டு மேனிக்கு மரபணு மாற்றம் செய்து இருக்கிறார்கள் அவர்கள். தாவர விலங்கின கலப்பு அதில் பேர் போனது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
இந்த விஷயத்தில் சீனர்கள் தான் கில்லாடிகள்…. அவர்கள் மரபணு விதைகளில் வீர்யம் உள்ளனவற்றை கண்டறிந்து மேம்படுத்தல் செய்து பயிரிட்டு வருகின்றனர். உரங்களை உபயோகிப்பது வெகுவாக குறைந்து விட்டனர். இந்த மகசூலுக்கு அரபு நாடுகளில் ஏக கிராக்கி….கனடா வரை இதன் வீச்சு உண்டு.இதனால் அமெரிக்க விளைச்சல் நாளுக்கு நாள் தேக்கமடைந்து வருகிறது.அவற்றை சரிகட்ட நம் இந்திய தேசத்தை குறிவைத்து இருக்கிறார்கள்.
உலக அளவில் இந்திய பால் மற்றும் அது சார்ந்த உற்பத்தி பொருட்கள் முதல் இடத்தில் இருக்க… அமெரிக்கா, பால் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களுக்கான சந்தையை திறந்து விடச் சொல்லி நிர்பந்தித்து வருகிறது டிரம்ப் நிர்வாகம். அடுத்ததாக மரபணு மாற்றப்பட்ட தானிய பயிர் வகைகள் மற்றும் பார்லி ஒட்டு இன வீர்ய விதைகளை இந்தியாவில் பயிரிட அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் அவர்கள்.
இவையெல்லாம் உணவு தேவைகளை தாண்டி மது உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இடம் கொடுக்க வில்லை என்றதும்….. இந்திய தேசத்தை போதை பொருள் வர்த்தகம் சார்ந்த நாடுகளின் பட்டியலில் இந்த வாரம் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள். எத்தனை சில்லுண்டிதனம்….
இவற்றுக்கெல்லாம் நம் இந்திய பிரதமர் என்னவிதமான எதிர்வினை ஆற்றி இருக்கிறார்…..?!?!
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க டீப் ஸ்டேட் வகையறாக்கள் மூலம் கொடுத்துவந்த… விவசாயிகள் போராட்டத்தை நாசுக்காக கையாண்டு வெற்றி கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான அமெரிக்காவுக்கு இந்திய உற்பத்தி சந்தையை திறந்து விட முடியாது என தீர்த்து சொல்லி அதிரடித்திருக்கிறார். ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட முடியாது என்கிறார்.
மொத்தத்தில் அடிபணிய முடியாது…..ஆனதை பார்த்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
இது அமெரிக்காவை கொந்தளிக்க செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் மேற்கொண்ட விசா மற்றும் குடியுரிமை சமாச்சாரங்கள்.
இதில் இந்தியா சாதிக்குமா….???? நிச்சயமாக அந்த கவலையே வேண்டாம்.
ஏனெனில் தற்போதைய இந்திய முன்னெடுப்புகள் அத்தனையும் பின்னிணைப்பில் டாலர் எனும் கரன்சியை குறிவைத்தே பதம் பார்த்து வருகிறார்கள்.
உதாரணமாக டிரம்ப் நிர்வாகம் உலக அளவில் இரண்டு நாடுகள் மீது மட்டுமே சுமார் 50% வரிவிதிப்பு செய்து நடைமுறை படுத்தியது. ஒன்று இந்தியா மற்றொன்று பிரேசில். இது வெளிப்பார்வைக்கு…
ஆனால் இது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள்.BIRCS என்கிற ஆங்கில சொல்லின் B பிரெசிலை குறிக்கும் I இந்தியாவை குறிக்கும். இவர்களின் அடிநாதம் RIC. அதாவது ரஷ்யா,இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் ஒன்றிணைந்து முதலில் உருவாக்கியது தான் ரிக். இன்றைய தேதியில் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் ஆக வளர்ந்து நிற்கிறது…..
இன்றைய தேதியில் இந்த கூட்டமைப்பில் 21 நாடுகள் அதிகாரபூர்வமாக ஒன்றிணைந்து இருக்கிறார்கள்…… உலகப் பொருளாதாரத்தில் சுமார் 68% சதவீதமும் உலக மக்கள் தொகையில் 73% இந்த குடையின் கீழ் வருகிறார்கள். இவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உண்டென்றால் அது நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாத்திரமே.
இது அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவரும் சொல்லி வைத்தார் போல இணைய வழி கரன்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இன்று உலக அளவில் பல நாடுகளில் UPI ஏற்றுக் கொள்ளப்பட்டு கோலோச்ச ஆரம்பித்து விட்டது.கொஞ்சம் கொஞ்சமாக டாலர் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது.
அதன் பொருட்டே நம் கைகளை கொண்டே நம் கண்ணை குத்தும் விதமாக அமெரிக்க வாழ் இந்தியர்களை கொண்டே நம் இந்திய தேசத்தை பதம் பார்த்து விடலாம் என பகல் கனவு காண ஆரம்பித்து இருக்கிறார்கள் டிரம்ப் தரப்பில்…..
நடக்கும் அத்தனைக்கும் இதுவே மூல காரணம்.
நம் இந்திய பிரதமரும் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வரும் தீபாவளி திருநாளுக்கு கூடுமானவரை நம் இந்திய உற்பத்தி பொருட்களையே வாங்கிட பாருங்கள்….. அதற்கே முன்னுரிமை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில் அந்நிய செலாவணி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சற்றேறக்குறைய சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் புழங்கி வருகிறது… இவற்றை நம்மால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர். மறைமுகமாக இது அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட சவால் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
தற்சார்ப்பில்… தன்னிறைவு கண்டு ஏற்றுமதிக்கான வழிவகைகளை ஆராய்ந்திட பாருங்கள், இந்த அரசு அதற்கு துணை நிற்கும் தேவையான அனைத்திற்கும், ஆவண செய்யும் என உறுதி அளித்திருக்கிறார்.
இவையெல்லாம் மிகப் பெரிய முன்னெடுப்பு சமாச்சாரங்கள். புரிந்துக்கொள்ள பாருங்கள்.
அதைவிடுத்து மித்ரோன்…… என மேடையில் நின்று அலப்பறை கொடுக்கும் கழிசடைக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டாம். அந்த பன்னாடைக்கு இந்த பத்து ஆண்டுகளில்… பன்னிரெண்டு ஆண்டுகளில் எந்த ஒரு நல்லதும் கண்ணுக்கு தெரியவில்லை என்பதாக எடுத்து கொண்டு நகர்வதே சாலச் சிறந்தது. நாட்டின் நலன் சார்ந்த சமாச்சாரங்களில் அக்கறை கொண்டவர்களுக்கு நிச்சயம் நாட்டின் தற்போது உள்ள நிலை புரியும். அது போதும்.
வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சிலகட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும். பூணலை இடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்
1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்தாக மசூதி கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,100 ஏக்கர் நிலத்திற்கு மேல் உள்ள ஒரு மசூதியின் வக்ஃப் சொத்தாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து. 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் செப்புத் தகடு மூலம் வழங்கப்பட்ட மான்யம் (மானியம்) அடிப்படையில் அந்த மசூதிக்கு 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆகஸ்ட் 18, 2016 அன்று கண்டியாபேரியில் உள்ள கன்மியா பள்ளிவாசல் (மசூதி) முத்தவல்லிக்கு ஆதரவாக வக்ஃப் தீர்ப்பாயம் (திருநெவேலி முதன்மை துணை நீதிமன்றம்) பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிவில் சீராய்வு மனுவை ஓரளவுக்கு அனுமதித்த நீதிபதி எம். தண்டபாணி இவ்வாறு தீர்ப்பளித்தார்.
மாநில அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி மற்றும் அமிகஸ் கியூரி செவனன் மோகன் ஆகியோர் முன்வைத்த விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதி இந்த முடிவை எடுத்தார். மசூதிக்கு எந்த நிலமும் உரிமை இல்லை என்று அது வாதிட்டது.
வக்ஃப் தீர்ப்பாயத்தில் 2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில் மசூதியால் பட்டியலிடப்பட்ட அனைத்து சர்வே எண்களும் 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் (அழிப்பு மற்றும் ரயோத்வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் விதிகளின் கீழ் 1966 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் வாதிட்டார்.
அரசாங்கம் சொத்துக்களை ரயோத்வாரி நிலங்களாக அறிவித்தது, இதன் மூலம் வக்ஃப்பின் உரிமையை விலக்கியது, மேலும் அந்த நிலங்களில் பல பகுதிகள் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன என்று ஏஏஜி கூறினார். 362 பேர் நிலங்களை ஒதுக்கீட்டு பட்டாக்களின் அடிப்படையில் விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அரசாங்கத்தின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, ஒரு சொத்து வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டவுடன், அது அப்படியே இருக்கும் என்று கூறினார். செப்புத் தகட்டில் உள்ள தெலுங்கு கல்வெட்டு 1925 ஆம் ஆண்டிலேயே படியெடுக்கப்பட்டதால், 1712 ஆம் ஆண்டு மசூதிக்கு வழங்கப்பட்ட மானியத்தை சந்தேகிக்க முடியாது என்று அவர் கூறினார்.
கல்வெட்டில் இது “மசூதி தர்மத்திற்கான சர்வ மான்யம்” என்றும், “சூரியன் மற்றும் சந்திரன் இருக்கும் வரை இது மகனிடமிருந்து பேரனுக்கு தொடரும்” என்றும் எழுதப்பட்டிருந்தது. மதுரை சமஸ்தானத்தின் முன்னாள் ஆட்சியாளரால் வழங்கப்பட்ட வரி இல்லாத மானியம் 1865 மற்றும் 1866 ஆம் ஆண்டுகளின் இனாம் கண்காட்சி பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மானியத்தின் மீதான மசூதியின் உரிமையை திருநெல்வேலி (திருநெல்வேலியின் முந்தைய பெயர்) துணை நீதிமன்றம் மார்ச் 8, 1955 அன்று உறுதிப்படுத்தியது, மேலும் துணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போதிலும், மாநிலத்தால் மேல்முறையீட்டில் அது எடுக்கப்படாததால் அந்த ஆணை இறுதியானது என்று நீதிபதி கூறினார்.
இருப்பினும், மசூதிக்கு எவ்வளவு நிலம் உரிமை உண்டு என்பது குறித்து வந்தபோது, செப்புத் தகடு கல்வெட்டு 75 கோட்டா நிலம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறுகிறது என்றும், கூகிள் தேடலில் ஒவ்வொரு கோட்டா/கட்டாவும் 0.03124 ஏக்கருக்குச் சமம் என்று காட்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, மசூதிக்கு மொத்தம் 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உண்டு, அதற்கு மேல் எதுவும் இல்லை என்று நீதிபதி தண்டபாணி கூறி, செப்புத் தகடு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் எல்லைகளின் அடிப்படையில் அந்த நிலத்தை அடையாளம் காண தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
சர்வே மற்றும் எல்லைச் சட்டம் 1923 இல் மட்டுமே நடைமுறைக்கு வந்தது, அதுவரை, நிலங்களுக்கு சர்வே எண்களை ஒதுக்கும் நடைமுறை நடைமுறையில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், 1,100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏராளமான சர்வே எண்களின் மீது மசூதி எவ்வாறு உரிமை கோரியது என்பதை விளக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி கூறினார்.
“இந்த விஷயத்தில் சட்ட நிலைப்பாட்டின் புத்திசாலித்தனமான விளக்கத்துடன் இந்த நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியதற்காக, கற்றறிந்த அமிகஸ் திரு. செவனன் மோகன் வழங்கிய உதவிக்கு இந்த நீதிமன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, இதன் மூலம் இந்த நீதிமன்றம் கையில் உள்ள பிரச்சினை தொடர்பான சட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் தனது கருத்தை வழங்க முடியும்” என்று நீதிபதி தனது தீர்ப்பை முடித்தார்.
உசிலம்பட்டி அருகே புரட்டாசி முதல் சனிக்கிழமையில் 100ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீமானூத்து, கல்லூத்து கிராமத்திற்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடந்து, அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பூஜைகளை, அர்ச்சகர் தெய்வச்சிலை செய்தார்.
உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியில் புத்தூர் மலை அடிவாரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் மலைராமர் திருக்கோவிலில் மலைராமர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில், மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ மதங்களில் இருந்து இந்து மதத்தில் மீண்டும் இணைந்தவர்களுக்கு இணைப்பு விழா நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சரவணப் பொய்கையில் கிறிஸ்தவ மதங்களில் இருந்து மதம் மாறிய இந்துக்களுக்கு மீண்டும் இந்து மதத்தில் இணையும் “தாய் மதம் தழுவும் விழா” இணைப்பு விழா நடைபெற்றது.
மதுரை இந்து முன்னணி மாவட்டத் தலைவர் அழகர்சாமி மாவட்டப் பொறுப்பாளர் அரசு பண்டி மற்றும் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் தாய் மதம் தழுவும் விழா நடைபெற்றது.
அனுப்பானடி பகுதியில், வசித்து வரும் சுமார் 21 குடும்பங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்தில் இணையும் தாய் மதம் தழுவும் விழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்கள் சரவண பொய்கையில் நீராடி பின்னர் சரவணப் பொய்கையில் உள்ள ஆறுமுக சொன்னதில் கந்தசஷ்டி கவசம் படித்து வெற்றிவேல் வீரவேல் என முழங்கி தாய் மதத்தில் இணைந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப தூண். சிக்கந்தர் தர்கா உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து முன்னணி சார்பில் தாய் மதம் தழுவுவிழா என நிகழ்ச்சி நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வைத்து பத்தாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு ஜிக்ஞாசா தெற்கு தமிழ்நாடு சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது.
பராசக்தி கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவிற்கு கல்லுாரி முதல்வா் அமிர்தவல்லி தலைமை தாங்கினார். கோவை தி ஆரிய வைத்திய பார்மசி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தேவிதாஸ்வாரியர் முன்னிலை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் வசந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். செல்வி கவிமணி இறைவணக்கம் பாடினார்.
கோவை தி ஆரிய வைத்திய பார்மசி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு தேவிதாஸ் வாரியர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். விழாவில் வல்லுனர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் துறையை சார்ந்த சிறந்த ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் .’விவேகா ‘என்று பெயரிடப்பட்டிருந்த ‘ஆயுர் எக்ஸ்போ’என்ற கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 200க்கும் அதிகமான மூலிகை தாவரங்கள் மற்றும் 300க்கும் அதிகமான மூலிகை கச்சா பொருட்கள் பல்வேறு விதமான சிறுதானியங்கள் அவற்றின் உபயோகக் குறிப்புகள் பாரம்பரிய அரிசி வகைகள் தானிய வகைகள் அறுவை சிகிச்சை எந்திரங்களின் மாதிரிகள் ‘ரசசாலா‘ என்று சொல்லப்படக்கூடிய பண்டைய வேதியியல் ஆய்வு உபகரணங்கள் மாதிரியாக வைக்கப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மூலிகை தொடர்பான விளக்கப் படங்கள் மிகவும் நேர்த்தியாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்த கண்காட்சிக்கு முத்தாய்ப்பாக நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழிலும் வடமொழியிலும் வெளியிடப்பட்ட மிகவும் தொன்மையான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு ஆயுர்வேதம் தொடர்பான விளக்க செய்திகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் சிறு சிறு நூல்களும் விநியோகிக்கப்பட்டன.
தென் தமிழகத்தைச் சார்ந்த ஆயுர்வேத மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு நிபுணர்களின், பல்வேறு ஆய்வு நூல்களில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டதுமான நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .
மேலும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக குற்றாலம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் கிடைக்க பெறும் அரிய மூலிகைகளும் அன்றாடம் நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு நோய்களுக்கான மூலிகைகளும் கச்சா பொருட்களும் மிகவும் அழகாக இடம் பெற்றிருந்தன . முக்கியப் பகுதியாக ‘விவேகா ‘என்ற ‘வெப்சைட் ‘ஒன்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது .
இந்த வெப்சைட்டில் பல்வேறு விதமான மூலிகைகளை பற்றிய தரவுகளும் மேலும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் நூற்றுக்கணக்கான தொன்மையான ஆயுர்வேத மருத்துவ நூல்களும், மூலிகை செடிகள் பற்றிய விளக்க பக்கங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக விழாவினை சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவங்கி வைத்தார்கள் கல்லூரியின் முதல்வரும் விலங்கியல் துறையின் துறையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளரும் பிற விரைவுரையாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த விழாவை ஒட்டி விவேகா 2025 என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர்களும் இமானுவேல் அரசர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மரியா ஆயுர்வேத கல்லூரி மாற்றும் மாணவர்களும் ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்களும் பெருந்திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை செங்கோட்டை ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன் ஒருங்கிணைத்திருந்தார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்ற ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வு விளக்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. முடிவில் நவீன் நன்றி உரையாற்றினார்.