Home Blog Page 6340

கிறுக்கியதும்! கிறுக்கானதும்!

dp2 உன்னை நினைத்து ஓரிரு நாட்கள்… உன் பெயரைக் கிறுக்கித் தொலைத்தேன்.. என்னை மறந்து எத்தனை நாட்கள்.. என் இதயத்தைக் கிறுக்காக்கித் தொலைத்தேன்!

காதலுக்கு நிறுத்தல் குறி!

lovestrom நான் தான் காலம் பேசுகிறேன்..! தொலைக்காட்சித் தொடரில் தொலைதூரத்தில் இருந்து சுழலும் காலச் சக்கரம் …. காதுக்குள் சக்கரம்போல் இடதும் வலதுமாய் சுழன்று சுழன்று ஒலித்துக் கொண்டே இருந்தது..! காலம்… என்னுள்தான் எத்தனை தூரம் பேசிவிட்டது? கண்ணிமைக்கும் நொடிப்பொழுதாய் எத்தனை வருடம் கடத்தி வந்தேன்! ஆனால்… வருடம் மூன்று கடப்பதற்குள்… யுகம் மூன்று முடிந்து கலியில் கால் வைத்ததாய் அப்படியொரு தகிப்பு! மனத்தில் பரிதவிப்பு! இந்த யுக சஞ்சாரத்தில் இருந்ததுபோல் யுவ சஞ்சாரத்தில் இருந்ததில்லை! காலம்… நம்முள்தான் எத்தனை தூரம் பேசிவிட்டது? உன்மீதான எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போன போது… அழுத்தமாய்த்தான் நீ இருந்தாய்! அழுதுக் களைத்ததோ என் உள்ளம்! உனக்கே உனக்காய் என் நேரக் கதவுகளை திறந்தே வைத்திருந்தேன்! வசந்தமும் வரவில்லை… வாசமும் வரவில்லை! காலம்… உன்மூலம் எத்தனை தூரம் பேசிவிட்டது..? உன் ஒருத்தியின் சிநேகத்துக்காய் உருக்குலைந்ததில் எத்தனை பகைகள் எனக்கு?! உன் சிநேகம்தான் பூக்கவில்லை போகட்டும்… எனக்குப் பகையான நட்புகளும் உன்னால் உருக்குலைத்துச் சென்ற சோகம்! காலம்… இப்போதும் பேசுகிறது… தகுதி அறிந்து நட்பு கொள்! தகுதி அறிந்து அன்பு செய்! தகுதி அறிந்து தன்னைக் கொடு! அறியாது போனது என் தவறு! தகுதியற்ற காதல் செடியை தண்ணீர் விட்டு அல்ல… கண்ணீரால் வளர்த்ததில் பட்டுப் போனது பூ மட்டுமல்ல… செடியும்தான்! காலம்… இப்போதும் கதைக்கிறது என்னுள்… உன்னையே சுமந்து உன்னையே என்னில் இருக்க வைத்து… உன்னைக் காதலிப்பதாய் என்னை நானே காதலித்து…. அலுப்புத் தட்டுகிறது எனக்கு! போதும்…! காதல் ஒரு வேடம் என்றான பின் நாடகத்தின் முடிவில் கலைப்பதுதானே முறை? இதோ… காலம் பேசுகிறது… காதலுக்கு நிறுத்தல் குறியிட்டு!

காலத்தை வீணடிப்பாயோ?

love-heart-clock1 காலம் ஓடுகிறது… காலன் துரத்துகிறான்… கன்னி உன்னுடன் செலவிட வேண்டிய நேரம்… கணினியுடன் செலவிட்டு காலம் கழிகிறது! சுகத்தை நாடி… இரண்டிலும் சோகத்தையே பரிசாய்ப் பெற்ற நிலை! கன்னி கொல்லும் நேரத்தை கணினி கொன்று தீர்க்கிறது! குப்பைகள் குவிந்துவிட்ட விண்டோஸ் மண்டை! இத்துப் போன புரோக்ராம்கள்! செத்துப் போன ப்ரௌஸர்கள்! சுத்திக் கொண்டே பொறுமையை சோதிக்கும் ஜாவா அப்ளிகேஷன்ஸ்! வேக வேலைக்காய் உருவெடுத்தது… வேளையைக் கொலை செய்கிறது! வாழ்நாளை மரணத்தின் பாதை நோக்கி வேகப் படுத்துகிறது..! உன்னைப் போல் என் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கர்ண குண்டலமாய் கணினி! உன்னை … என்னில் இருந்து அகற்றிவிட்டால் நான் சூன்யம்! விரைந்து தெரிகிறது காலனின் ராஜ்யம்!

உனக்கான அர்ப்பணமாய்… நான்!

evening-prayer கதிரவன் கிரணங்களால் ஒளி வழங்கிய களைப்பு! ஓய்வைத் தேடி ஒளிகிறான் மலை முகட்டில்! அவன் மலையின் மடியில் சாயும் காலம்… சந்தியா காலம்! ஓடிக் களைத்த அவனுக்கு தாக சாந்தியாய்… மாலை நேரம் மந்திரம் சொல்லி அர்க்யமாய் உள்ளங்கை நீர்… அறிவே அர்ப்பணமாய்! மாலை வந்தால் மனத்தில் துவங்கும்… தியானமும் தவமுமாய்க் கழிந்த வாழ்க்கை! ஆகாசாத் பதிதந்தோயம்… உச்சரிக்கும் முணுமுணுப்பு! ஆகாயத்தில் இருந்து மண்ணில் வீழும் மழைத்துளி நதியில் சேர்ந்து கடலில் கலக்கிறது…! மற்ற தேவதைகளுக்கான வணக்கம் கேசவனிடமே சேர்கிறது! தேவதைகளை ஆராதித்து… ஒரே தேவனாய் கேசவன் தியானம்! எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது… நீ என் வாழ்வில் வரும் வரையில்! இப்போதெல்லாம்… மாலை நேரம் வந்தால்… மயக்கும் மாலையாய் மயங்கிப் போகிறேன்! மணக்கும் மாலையை மனத்தில் தாங்கியே! அந்தி சாயும் நேரம் வந்தால் புத்தி சாயும் உந்தன் மடியில்! தேவதைகள் எல்லாம் நீங்கிப் போனார்கள்… ஒரே தேவதையாய் நீ- என் முன் நிற்கிறாய்! வெண்ணிலவு முகம் காட்டி நட்சத்திரப் பற்கள் மின்ன முறுவலிக்கும் உனக்கான அர்க்யமாய்… அர்ப்பணமாய்… நானே!

நானே கடவுள்!

Love-Heart-Widescreen உடலில் ஒரு பாதியை உமைக்குத் தந்த பரமன்! இதயத்தில் இலக்குமியை இருத்தி வைத்த மாலவன்! எல்லாம் அன்பின் அடையாளங்கள்! ஆணும் பெண்ணுமாய் இயைந்த வாழ்வைக் காட்டுகிறார்.. பரமன்! எந்நேரமும் மனத்தில் மனைவியை நினைத்தபடி உள்ளார் மாலவன்! வணங்கும் தெய்வத்தின் வழியில் நானும் …. என் வாழ்வின் ஒரு பாதி நீ! மறு பாதி நான்! என் இதயமே நீயாய்! என் நினைவெல்லாம் உனைப் பற்றி! நீயே நானாக இருக்கும்போது… அட… நானே கடவுள்!

நாடகத்தின் ஒத்திகையோ?

Share-the-Love-Blog-Button-reduced-size நன்றாகத்தான் நடிக்கிறாய் நீ! நாடகத்தின் ஒத்திகையை திரைக்கு முன்னரேயே பார்த்துக் கொண்டு..! கருத்தைக் கவர்ந்த என் கவிதைப் பெண்ணே… உன் பேஸ்லுக்கில் சிதறித் தெறித்த என் உள்ளத்தை… நான் பேஸ்புக்கில் தேடித் தேடி இளைத்தேன்! வார்த்தைப் பரிமாற்றம் அதிலாவது வசமாகட்டும் என்று! உன் நினைவுகள் தந்த உஷ்ணம்! மூளை சூடு கண்டது! உடல் மெலிவு கண்டது! உடை தளர்வு கண்டது! ஆனாலும்.. நீயென் உள்ளத்தில் ‘கூலா’க உலா வருகிறாய்! ‘புஷ்டி’யுடன் என்னில் வாழ்கிறாய்! தினம் எனை மயக்குவது உன் அழகிய வதனம்! அந்த ஒரு கண மகிழ்ச்சிக்காய் உனைப் பார்க்கும் போதெல்லாம்.. புன்னகைப்பில் காட்டுகிறாயே ஏன் இந்த கஞ்சத்தனம்? காதலைத்தான் தர மறுத்தாய்! காமத்தை உன்னிடம் எதிர்பார்க்கவும் இல்லை! நான் கேட்டதெல்லாம்… ஊடுருவிப் பார்க்கும் உன் விழி நோக்கல்கள்… உதட்டை ஈரமாக்கி நீ உதிர்க்கும் உளறல்கள்… முத்தான தெத்துப் பல் தெரிய முறுவலிக்கும் புன்னகைகள்… அலைபாயும் மனதை அடக்குவதாய் அதிரவரும் அதரச் சிரிப்புகள்… இதற்கும்கூட இசையாத உள்ளமோ உனதுள்ளம்? ஆனாலும்… என் முன்னே நன்றாகத்தான் நடிக்கிறாய் நீ! துடிக்கும் என் இதயமும் உன் முன்னே நடிக்கிறது… நீயே இருந்தும்.. நீ இல்லாததுபோல்!

உள்ளங்கையில் என் உலகம்!

hands காலை எழுந்ததும் உன் உள்ளங்கையைப் பார்! ஆன்மிகம் அறிவுறுத்தும்! கையில் லட்சுமி வாசம் செய்வாளாம்! கையின் மத்தியில் வாணி வாசம் செய்வாளாம்! கை மூலைகளில் கௌரி வாசம் செய்வாளாம்! உன் செல்வம்… உன் அறிவு… உன் வீரம்… எல்லாம் உன் கைகளிலே! உனக்குள் குடிகொண்ட மூன்று தேவதைகளையும் உன் உள்ளங்கையில் பார்..! ஆன்மிகம் அறிவுறுத்தும்! சிறு வயது முதலே எனக்கும் பழக்கம்தான்! ஆனால் சமீப காலமாய்… உள்ளங்கை திறந்தால் உனது முகம்! அதிகாலை வேளையில் அழகின் தரிசனம்! லட்சுமி கரமாய் முகப்பொலிவு தகதகக்கும்! சரஸ்வதி வடிவாய் சாத்திரம்  போதிக்கும்! உமையவள் உருக்கொண்டு உதறலை உருக்குலைக்கும்! என் மீது கரிசனம் காட்டும் உன் முக தரிசனம் கண்டு தொடங்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு வெற்றி நாளே! இப்போதெல்லாம் ஊர் சுற்றப் பிடிக்கவில்லை! வெளி உலகு பிடிக்கவில்லை! என் உள்ளங்கையில் என் உலகமாய் நீ!

நினைவுச் சுவை நீங்காதிருக்கையில்…!

meals ஆதவன் உச்சி கடந்தான் அமிலம் சுரந்தது வயிற்றில்! அகோரப் பசிதான்… ஆனாலும் நாவுக்கு சுவை தேவை! உப்பும் உரப்பும் அமுதச் சுவையும் என அறுசுவை ஏக்கம் நாவுக்கு! வழக்கமான கேண்டீன் வாசம் வாய்க்கு ருசியாய் இல்லை.. வாவென அழைத்தேன் வந்தான் உடன் இருந்த நண்பனுமே! உணவு விடுதி வாசல் நாசி துளைத்த வாசம்… கறியும் கூட்டும் காரக் குழம்பும்… கவனமாய் பரிமாறப்பட… கவனத்தில் வந்தாய் நீ! உனக்குப் பிடித்த உருளைக் கிழங்கு கறி! ஒவ்வொரு கவளம் உணவும் உந்தன் கவனம் கொண்டே உள் சென்ற மாயம்! நிமிடம் சில கரைந்திருக்கும்! நிமிர்ந்து பார்த்தால்… நண்பன் பாதிக்கூட உண்ணவில்லை! உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது…! நண்பன் முனகினான்… உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்! குழம்பு உரப்பு ரசத்தில் உப்பு ரசமாயில்லை கூட்டு வேகவில்லை… கறியோ பிசுபிசுத்துக் கிடக்கிறது! எப்படி உண்டீர்கள் இதை? உங்கள் நாவில் சுவை தெரியாதா? நாவின் நுனி வரை வந்த பதில்.. நாணத்தால் தேங்கிப் போனது! உன் நினைவுச் சுவை நீங்காதிருக்கையில் உணவுச் சுவை உணர்வில் இல்லையே!

கல்லெறிந்த காதல்!

rose1 நலம் தரும் நவராத்திரியாம்! பெண்மை போற்றும் வழிபாடாம்! உலகம் கொண்டாடுகிறது… பர தேவதையாய் பாருக்குத் தெரியும் அன்னையை உலகம் பூசித்துப் போற்றுகிறது..! அவள்… அசுரனை அழித்த அன்னை! நீயோ என் அகங்காரம் அழித்த பெண்மை! ரம்மியமாய் எனக்குத் தெரிந்த ரம்யா! பாருக்குத் தெரியாத நீ என் அழகு தேவதை! என்னுள் உயிர்ப்புடன் உலவும் என் எண்ண தேவதை! உயிர் கொண்ட ஓவியம் நீ! நான்… குழந்தையாய் மாறிய போதெல்லாம் குலவையிட்டுத் தேற்றிய அன்னையாய் நீ திகழ்ந்தாய்! உன்னை… ஒன்பது நாட்களுக்கு மட்டும் உள்ளத்தில் அடைத்து வைத்து பூசிக்க விரும்பவில்லை! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னையே போற்றி வந்தேன்! சக்தி சேராத சிவம் சவமாய்க் கிடக்குமென சாத்திரங்கள் சொல்லும்! உமையொருபாகம் கொண்டு உலகுக்கு நலம் செய்வான் பரமன்! என் உடலுள் புகுந்த உயிராய் நீயும் இருப்பதால்… உலகத்தே நானும் உலவுகின்றேன்! உறவெனக் கூடிக் குலவுகின்றேன்! ஆனால் அண்மைக் காலமாய்… நீ என்னில் பர தேவதையாய்த் தெரிகிறாய்! மனத்தில் பார தேவதையாய்த் தெரிகிறாய்! வசைச்சொல் கற்களை எறிந்துவிட்டுப் போனாய்! இசைவாயிருந்த உள்ளம் எரிந்துபட்டுக் கிடக்கிறது! இப்போது… கல்எறிந்த காதலாய் நீ! எரிகல் தாக்குண்ட கிரகமாய் நான்!

உன் செவ்வாயின் மங்கள்யான்!

mangalyan செவ்வாயின் சுற்று வட்டத்தில் மங்கள்யான்… வண்ணப் படம் அனுப்பி வாழ்த்தைப் பெற்றது! சிவந்து தெரிந்த படம்… உமிழ்நீராய் உருவமிலா உருவகம்! நான் உன் செவ்வாயின் சுற்று வட்டத்தில் மங்களனாய்..! எண்ணப் பதிவு அனுப்பி எதிர்பார்த்துக் கிடந்தேன்! சிவந்து தெரிந்த சாயம்… உமிழ்நீர் சுரந்து உதடெல்லாம் மின்னும்! தாரகையாய் மின்னிய ஒளியில் தானாகவே மதி கரைந்து கவிப்பா புனையும்! தவிப்பாய்த் தவிக்கும்! செவ்வாயின் வெற்றிச் சங்கதியை செவ்வாய் திறந்து சொல்லத்தான்… உதட்டுச் சாயத்தை உரு ஏற்றினாயோ? ஆனால் பெண்ணே… உன் உதட்டுச் சாயத்தின் சிவப்பு.. என் உள்ளக் காயத்தின் தகிப்பு ! உன் உதட்டுச் சாயத்தின் வண்ண அளவு கூடுகிறது… என் உள்ளக் காயத்தின் வலி அளவும்தான்!