Home Blog Page 6356

பிள்ளையார் செய்திகள்

விநாயகர் இடுப்பில் சர்ப்பம்

நர்மதா நதிக்கரையில், பேரகாம் என்னும் தலத்தில் உள்ள யோகினி ஆலயத்தில் நர்த்தன கணபதி, இடையில் சர்ப்பப் பட்டயம் கட்டியபடி காட் சியளிக்கிறார். கேது கிரகத்துக்கு அதிபதியான விநாயகர், பாம்பு தோஷத்தை விலக்குபவர் என்பதால், இவ்வாறு பட்டயம் கட்டியிருக்கிறார் என்கிறார்கள்.

- 2026

விநாயகர் ஊர்கள்
  • காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் அருகில் உள்ள ஊர் ‘விநாயக நல்லூர். 
  • கோவையில் உள்ள ஒரு பகுதியின் பெயர் ‘கணபதி.’
  • திருநெல்வேலி, காலக்குடி அருகே உள்ள ஊர் ‘பிள்ளையார் குளம்.
  • கோவை, வீரபாண்டி அருகில் உள்ள ஊர் ‘கணபதி பாளையம்.’ 
  • காரைக்குடி அருகில் உள்ள ஊர் பிரசித்தி பெற்ற ‘பிள்ளையார் பட்டி.’ 
  • தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் இருப்பது  ‘இருபிள்ளையார் நத்தம்.

அபூர்வ முருக விநாயகர் – மதுராந்தகம்

மதுராந்தகத்தில் விநாயகர் கோயிலில் முருகப் பெருமானின் இருபுறமும் விநாயகர் அமர்ந்துள்ளார். இந்தக் காட்சி அபூர்வமானது.

அன்னதான கணபதி – திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் கிழக்கு மதில் சுவரின் உட்புறத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் தனிச் சந்நதியில் ‘அக்கிர சாலா  கணபதி’ வீற்றிருக்கிறார். அந்தக் கோயிலில் அன்னதானம் செய்யப்பட்ட காலத்தில் அங்கே கணபதி வீற்றிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் என்பது ஐதீகம்.

- 2026

பருப்பு ரசம்தான் அபூர்வ நைவேத்யம் – கும்பகோணம்

கும்பகோணம், நாகேசுவரர் கோயிலில் உள்ள விநாயகர்  ‘சுரப் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். காய்ச்சல் நோய் கண்டவர்கள் நோய் தீர  இவரை வணங்கினால் காய்ச்சல் மறைகிறது. பருப்பு ரசம்தான் இவருக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

அரிய தகவல்கள்

  • பிள்ளையார்பட்டி விநாயகருக்கு காண்டாமிருகக் கொம்பினாலும் அபிஷேகம் நடைபெறுவது மிக அபூர்வமாகும். 
  • செய்யாறில் உள்ள கோயிலில் நான்கு அடி உயரத் திருவுரு, பிரபையுடன் சேர்த்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அரிய விநாயகர் சிலை உள்ளது. 
  • கொல்லூர், முரடேசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தலையில் பள்ளத்துடன் காணப்படுகிறார். 
  • தாரமங்கலம் ஊரில் உள்ள கோயிலில் சித்தி விநாயகர் சந்நதி அடித்தளம் முதல் கோயில் கோபுரம் வரை ஒன்பது கற்களால் காரைக் கலப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

கல் ஸ்ரீசக்ரம் கொண்ட நாயகி – மதுரை

மதுரையின் மத்தியில் இருப்பதால் மத்யபுரிநாயகி என போற்றப்படும் அம்பிகையை வேண்டிக்கொள்ள, திருமணம் இனிதே கை கூடுகிறது. அதனால்  இந்தத் தாய் மாங்கல்ய வரப் பிரசாதினி  எனப்படுகிறாள். இத்தேவி நின்றருளும் தாமரை பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. பொதுவாக  செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்வதே வழக்கம். இங்கு கல்ஸ்ரீசக்ரம் வித்தியாசமானதாகக் கருதப்படுகிறது. 
- 2026
பத்து தளங்களைக் கொண்ட  தசதளவில்வம் இத்தல விருட்சம். ஊர்ப் பெயரை ஒட்டி இத்தல ஈசன் மதுரநாயகர் என்று இறைவி மதுரநாயகி என்றும் வணங்கப்படுகின்றனர். பூலோக  கைலாயம் என அழைக்கப்படும் இத்தலம் மதுரைமீனாட்சியம்மன் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் உள்ளது.

ஒரே லிங்கத்தில் பஞ்சபூதங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பூதப்பாண்டி. இங்கு பஞ்சபூத (நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம்) நாயகனாகத் திகழ்கிறார் ஈசன். 
Tamil Daily News Paper 29666864872 - 2026
பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பெரும் மகாசக்தியாக வீற்றருள்கிறார் இந்த  பூதலிங்கர். இவரை வணங்கினால், பஞ்ச பூத தலங்களையும் (காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளஹஸ்தி, சிதம்பரம்) வணங்கிய  பலன் கிட்டும் என்பது ஐதீகம். இத்தல இறைவி, சிவகாமி.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில், அழகர்மலை, மதுரை

     மூலவர்    :    பரமஸ்வாமி
     உற்சவர்    :    சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
     அம்மன்/தாயார்    :    ஸ்ரீதேவி, பூதேவி
     தல விருட்சம்    :    ஜோதி விருட்சம், சந்தனமரம்.
     தீர்த்தம்    :    நூபுர கங்கை
     ஆகமம்/பூஜை     :    தென்கலை/வைகானஸம்
     பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
     புராண பெயர்    :    திருமாலிருஞ்சோலை
     ஊர்    :    அழகர்கோவில்
     மாவட்டம்    :    மதுரை
     மாநிலம்    :    தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்

சிந்துரச் செம்பொடி போல் திருமாலிருஞ் சோலையெங்கும் 

இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் 
மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட 
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங் கொலோ.

-ஆண்டாள்

 திருவிழா:

சி்த்திரைத் திருவிழா – 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா – 13 நாள் ‌ஐப்பசி தலை அருவி உற்சவம் – 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

 தல சிறப்பு:

மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்- 625 301 மதுரை மாவட்டம்.

போன்:

+91 – 452-247 0228

 பொது தகவல்:

புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.

பிரார்த்தனை

இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

 தலபெருமை:

கருப்பண்ணசுவாமி : இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.  இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

கோட்டை : விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக  ‌‌செலுத்துவார்கள்.

அழகர் ‌கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

நூபுர கங்கை : சிலம்பாறு – ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.

பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.  6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் .
சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.

சிறப்பு தகவல்: மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும். இதில் மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக கழியும் என்பது நம்பிக்கை.

அழகர் ஆற்றில் இறங்குதல்: மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, “மண்டூக பவ’ அதாவது “மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ’ என சாபமிட்டார்.

சாபம் பெற்ற சுதபஸ், “”துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்,” என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,” என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.

மாசியில் தேனூர் மண்டபத்தில் நடந்த விழா:
மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.சைவத்திற்கு தனி விழா. வைணவத்திற்கு தனிவிழா என்ற கொண்டாடப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ, வைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கி விட்டார். அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்றுமுதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை. இந்த திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது. மக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் “கள்ளழகர்’ ஆனார்.

அழகரின் அபூர்வ வரலாறு: ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.  சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து “”வேண்டியதை கேள்” என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள்  நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் “அழகு’. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

தல சிறப்பு: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.

கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது: அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள்.மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.   இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் “கள்ளழகர்’ ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், “வஞ்சக்கள்வன் மாமாயன்’ என்கிறார்.

வைகை தோன்றியது எப்படி: மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர்.  “”தங்களுடன் வந்துள்ள  அனைவரும் உடனடியாக சாப்பிடச்சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?” என்றனர். சிவன் அவர்களிடம், “”இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” என்றார்.  விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார்திகைத்தனர்.””மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,” என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன். அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், “” மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,” என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,” என்றார்.  இதுவே “வைகை’ ஆனது.  கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால்  “வேகவதி’ எனப்பட்டது. வைகையை பாழடித்து விட்ட நாம்,  அழகரையே வாய்க்கால்  கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.

   தல வரலாறு:

எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூல‌லோகத்தில் தற்சமயம் ‌கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.   இம்மலை 7 மலைகளை கொண்டது.
தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது.

சிறப்பம்சம்:

விஞ்ஞானம் அடிப்படையில்: தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.

நவ சமுத்திர தலங்கள் – பஞ்ச பீட தலங்கள்

நவ சமுத்திர தலங்கள்

  • அம்பாசமுத்திரம்
  • ரவணசமுத்திரம்
  • வீராசமுத்திரம்
  • அரங்கசமுத்திரம்
  • தளபதிசமுத்திரம்
  • வாலசமுத்திரம்
  • கோபாலசமுத்திரம்
  • வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
  • ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

பஞ்ச பீட தலங்கள்

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

  • கூர்ம பீடம் – பிரம்மதேசம்
  • சக்ர பீடம் – குற்றாலம்
  • பத்ம பீடம் – தென்காசி
  • காந்தி பீடம் – திருநெல்வேலி
  • குமரி பீடம் – கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்

  • பாபநாசம் – சூரியன்
  • சேரன்மகாதேவி – சந்திரன்
  • கோடகநல்லூர் – செவ்வாய்
  • குன்னத்தூர் – இராகு
  • முறப்பநாடு – குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • தென்திருப்பேரை – புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • ராஜபதி – கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • சேர்ந்தபூமங்கலம் – சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்

சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்

அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.

ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது காலம், காலமாக நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

405dfa9a 2cd6 4d07 bb75 27e7d5235832 S secvpf.gif - 2026


 அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும். சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாட செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அறுவடையான புது நெல்லைக் கொண்டு அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாதான் அன்னதாபிஷேகம்.

அதாவது அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம்.

எனவே பாண லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு அவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம்.

குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. எனவே அன்னாபிஷேக தினமான நாளை சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம்.

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில், எட்டயபுரம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஊரில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் வெங்கடாசலபதி கோவிலும் ஒன்று.
thirupathi+venkatachalapathi+abhishekam+5 - 2026
கோவில் வரலாறு
இந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு 885 எனக் குறிப்பிடப்படுவது ஆங்கில ஆண்டு அல்ல. இது நூலில் கொல்லம் ஆண்டு என்று குறிப்பிடப்படுகின்றது. ஆக ஆங்கில வருஷம் 1705லிருந்து 1725 வரை பட்டத்து ராஜாவாக இருந்த ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யனவர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. அரண்மனையிலிருந்து சற்று தள்ளியிருக்கும் இந்தக் கோயில் 300 வருடப் பழமை வாய்ந்தது.

கோவில் பராமரிப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு அறங்காவலர்களாக எட்டயபுரம் பாளையக்காரர் வாரிசுதாரர்கள் இருந்து வருகின்றனர்.

பூசைகள்
இந்தக் கோயிலில் தினசரி பூஜை செய்யப்பட்டு வருகின்றன. மார்கழி மாதம் நடக்கும் பஜனை, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடத்தப் பெறுகின்றன.

குறிப்பு: படம் ஒரு ஒப்பனைக்கு மட்டுமே. இந்தக் கோவிலைக் குறிக்கும் படமல்ல.

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

Ganesha%5B5%5D - 2026

சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு செந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு சுரமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த தரிய மெய்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் முஷிக வாக
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கமறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகந்து
குருவடிவாகி குவலயத்தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத் தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி யென்செவியில்
தெவிட்டாத ஞானத்தெளிவையுங்காட்டி
ஐம்புலன் தன்னை அடக்குமுபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகள் ஒடுங்குங் கருத்தினையறிவித்து
இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி
ஆறதாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடபிங் கலையின் எழுத்தறி வித்தே
கடையிற் சுழுமுனை கபாலமுங்காட்டி
மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுரைத்து
குண்டலி யதனின் கூடிய சபையில்
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் முண்டெழு கனலை
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தனியக்கமும்
குமுத சகாயங் குணத்தையுங்கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையுங்காட்டி
சண்முக தூலமும் சதுர்முக தூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தரிசனப்படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைகளைந்தே
வாக்கு மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டின் கொன்றிடமென்ன
அருள் தருமானந்தத்தை யழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்து அருள்வழிகாட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக்கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலiயைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரள்கரண் சரணே.

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்