ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நவக்கிரக சன்னதி பிரதிஷ்டை க்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்படும்.
தற்போது சபரிமலை மஞ்சமாதா கோயில் அருகே புதிய நவக்கிரக சன்னதி கட்டப்பட்டது. பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நாளை சனிக்கிழமை நவக்கிரக சன்னதி பிரதிஷ்டை முன்னோடி பூஜைகள் நடத்தி ஜூலை13 காலை வேதபாராயண முறைப்படி நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து அலங்காரம் பூஜைகள் நடத்தி பிரதிஷ்டை சடங்கு வழிபாடுகள் நடைபெறும்.இரவு நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு இந்த மாதம் ஜுலை -2025 ல் மூன்று முறை திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெறும். . நவகிரகங்கள் பிரதிஷ்டைக்காக 11.7.2025 இன்று மாலை 5 மணி திருநடை திறக்கப்பட்ட்டது. 13.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்.
மீண்டும் ஆடி கற்கடகம் மாத பூஜைக்காக 16.7.2025 மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும் 21.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்.
மீண்டும் நிறைபுத்தரி பூஜைக்காக 29.7.2025 மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும் 30.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்
விமானம் கீழே சரிந்த கொண்டு இருக்கிறது இரண்டு இஞ்சின்களும் செயல் இழந்து விட்டது…. இந்த தகவல் தான் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி மதியம் ATC க்கு வந்தது.
இது அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல அப்போது தான் டேக் ஆஃப் ஆன AI 171 இல் வந்திருந்தது. மீண்டும் இவர்கள் தொடர்பு கொள்ள விமானம் அங்கு இல்லை. இவர்கள் ATC, அதாவது ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து பார்க்க விமானம் அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அங்கிருந்தவர்கள்.
உலக நாடுகளிலும் ஒரு கனம் ஆடித் தான் போனார்கள்.
காரணம்…… அமெரிக்க போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான மிகவும் நம்பகமான விமானமாக அதுவரை கருதப்பட்ட போயிங் 787 டீரீம் லைனர் முதல் முறையாக முற்றிலும் எரிந்து சேதமடைந்ததிருந்தது.
இந்த AI 171 விமான விபத்தின் காரணம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில் விமானத்திற்கான எரிபொருள் அணைக்கப்பட்டு இருந்ததாக…. ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதனை கைகளால் மட்டுமே…. அதாவது விமானிகளால் மட்டுமே இயக்க…, அணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஓர் பொறிமுறை என்பதால் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
விமான இஞ்சினில் தீ ஏற்பட்டால் விமானியால் அணைக்க இந்த பொறிமுறை அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. தவிர இது டெக்னிக்கல் டூல்… அதாவது கம்ப்யூட்டரால் இயங்கும் ஸ்வீட்ச் இல்லை…. ஹேக் செய்துவிட்டதாக சொல்வதற்கு…. அப்படி என்றால் விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு தான் இஞ்சின்களுக்கான எரிபொருளை நிறுத்தி வைக்க அவசியம் என்ன வந்தது என்கிற கேள்வியும் வருகிறது.
விமான இஞ்சின் இரண்டுமே இரண்டு வெவ்வேறான எரிபொருள் குழாய் மூலம் சப்ளை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த இரண்டு குழாய்களுக்கென்று இரண்டு தனித்தனி குமிழ் சுவிட்ச் கொடுக்கப்பட்டு ஏதேச்சையாக கை பட்டு அது இயங்கி விடக்கூடாது என்பதற்காக அழுத்தி கீழே இறக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்திருக்கின்றது. இந்த விமானத்திலும் அப்படி இருக்க….. ஏன் இதை இயக்கினார்கள் என்பது தெரியவில்லை.
இரண்டு சுவிட்ச்களை தனித் தனியே… அதேசமயம் இரண்டையும் அணைத்து வைத்து இருக்கிறார்கள்.
ஏன்……. தெரியவில்லை..,
இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரேயொரு பயணி… 11A சீட்டில் இருந்த பயணி மீது பலரது கவனமும் திசை திரும்பி இருந்தது விபத்து நடந்த வாரத்தில்….. கதவு திறந்து வந்ததாக அவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது தான் அதற்கு காரணம். ஆனால் அவர் விமானம் விழுந்த சமயம் விமானத்தின் இடது புற இறக்கை ஓரம் முதலில் கட்டிடத்தில் தட்டி… தூக்கி வீசப்பட்டு மணல் குவியலில் விழுந்தது ஊர்ஜிதம் ஆனதால் விட்டுவிட்டார்கள்.
அடுத்ததாக விமானத்தின் கருப்பு பெட்டி புதுடெல்லிக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்தது. வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உத்தேசித்து கடைசி நேர மாறுதலாக டெல்லியிலேயே வைத்து ஆராய்ந்து வருகிறார்கள். இதனையொட்டி அமெரிக்க புலனாய்வு குழுவினர் இதிலிருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவும் ஓர் வகையாக சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறது.
விமான விபத்தில்….. ஏற்படுத்தப்பட்ட காரணங்களால் விபத்து நிகழ்ந்தால் இழப்பீட்டு தொகை கூடும். தனி நபர் இன்ஷூரன்ஸ் அது தனி.
மேற்சொன்ன விபத்தில் இழப்பீட்டு தொகை கூடும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
புற காரணிகள் காரணமாக விபத்து நடந்திருப்பதாக…. விமான கோளாறு காரணமாக விபத்து நடக்கும் வாய்ப்பு மிக மிக குறைவான இருந்திருக்கின்றது என்பதாக… விசாரணை சென்று கொண்டு இருக்கிறது.
விமான விபத்து நடைபெற்றால்.. இது விமானத்தை தயாரித்த நிறுவனம்… அந்த நிறுவனம் இருக்கும் நாடு… அதை வாங்கிய நாடு….. அதை இயக்கிய நிறுவனம்.. என பலரும்…. பலருக்கும் சிக்கலை உண்டாக்கும்.
இது இந்த விபத்து உண்டாக்கும் போலிருக்கிறது.
ஒரு வேளை இதில் சதிச்செயல் இருக்கக் கூடுமோ என்பது போலவும் புலனாய்வு குழு ஒன்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படி இருப்பினும் நம் இந்திய தேசத்தில் நடைபெற்ற முதல் தனியார் நிறுவன விமான விபத்தாக இதை அணுகி…. அதை சரியான விதத்தில் கொண்டு சென்று இருக்கிறார்கள் என்பதாக உலகளவில் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். காரணம் இதேபோல் வேறோர் விபத்து நடந்திருப்பின் அவற்றை குறைந்த பட்சம்…… இழப்பீட்டு தொகை கூடி விடக்கூடாது என்பதற்காகவாவது மறைத்து விடும் சாத்தியம் இருந்திருக்கும். ஆனால் இந்திய அரசு அப்படி ஏதும் செய்யவில்லை என்பது இந்த சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததை பொது வெளியில் கொண்டு வந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள்…. என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் அவர்கள்.
விமானத்தை இயக்கிய மூத்த விமானி குறைந்தது பத்தாயிரம் மணிநேர பறத்தல் அனுபவத்தை கொண்டு இருக்கிறார் நிச்சயமாக இந்த பொறிமுறை வசதி குறித்து நன்கு அறிந்தவராகவே இருக்கும் பட்சத்தில் ஏன் அணைத்து வைக்கப்பட்டது என்பதே இதில் பிரதான கேள்வியாக இருக்கிறது. காக்பிட் உரையாடலை முழுமையாக ஆராய்ந்து அறிக்கையாக வெளிவர குறைந்தது பத்து மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை சார் வல்லுனர்கள். தற்சமயம் புகைப்பட ஆதாரங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது.அவற்றையும் நன்கு அலசி ஆராய்ந்து ஊர்ஜிதம் செய்து இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.இது, இதில் பயணம் செய்த பயணிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க போதுமான அடிப்படை ஆதாரங்கள் ஆகும்.
விபத்து நடந்த சமயத்தில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் டாட்டா குழுமத்தின் பங்குகள் சரிந்தன. ஏர் இந்தியாவை இயக்கும் டாட்டா குழுமத்திற்கு இது போதாத வேளை போலிருக்கிறது. போயிங் நிறுவனம் சமாளித்து விடும் போலிருக்கிறது மேற்சொன்ன விவகாரங்களால்…… பார்க்கலாம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரைக்கு பதிலடியாக இதை எழுதியதாக எழுத்தாளர் பிரியம் காந்திமோடி தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் – முணுமுணுப்பல்ல முழக்கம்!
— பிரியம் காந்திமோடி
ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, ஜூன் 13 தேதி, அது ஈரானை தாக்கியது. ஏற்கனவே கொத்தளிப்பில் உள்ள மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் மோதல் 12 நாட்கள் நீடித்தது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் பற்றிய இந்தியாவின் எதிர்வினை முன்னெச்சரிக்கையுடனே இருந்தது. போராக மாறக் கூடாது. மோதல் தவிர்க்கப்பட வேண்டும். அந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும், என்று இந்தியா கூறியது.
மனித குலத்திற்கு ஏற்படும் அழிவு பற்றி கவலை தெரிவித்த பிரதமர் மோடி இது போருக்கான யுகம் அல்ல என்று மீண்டும் கூறினார். அவரது தலைமையிலான இந்திய அரசு தேவைப்படும் போதெல்லாம் மிக விரைவாக மனிதநேய உதவிகளை செய்தது. ஐநா மன்றத்தில் காசா பகுதியில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
மோதல் பகுதிகளில் இருந்து தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தது. இப்பொழுது, மிக அண்மையில், இஸ்ரேல் – ஈரான் பகுதிகளில் இருந்து சிந்து நடவடிக்கை என்ற பெயரில் தன் குடிமக்களை, பலரும் மருத்துவ மாணவர்கள், பத்திரமாக மீட்டது.
வலிமையின் அடையாளம்
இந்தியாவின் நம்பகத் தன்மையையும் அதன் ராஜதந்திர வல்லமையும் உலகம் அங்கீகரித்து வருகிறது. இந்தியாவின் அமைதியான ராஜதந்திர செயல்பாடுகள் அதன் உயர்வை காட்டுகின்றன. இந்தியா அவசியமென்றால் பேசுகிறது. தேவைப்படும்போது செயல்படுகிறது. கேட்டுக் கொண்டால் முயற்சிகளை முன்னெடுக்கிறது.
இஸ்ரேலுடன் இராணுவ ஒத்துழைப்பு, ஈரானுடன் எண்ணெய் மற்றும் வர்த்தக உறவு, வளைகுடா நாடுகள் பலவற்றிலும் பரவி உள்ள தன் குடிமக்களின் நலன் என மேற்கு ஆசிய பகுதியில் இந்தியாவின் ஈடுபாடுகளும் செயல்பாடுகளும் அதிகம்.
அரபு நாடுகள் பலவற்றுடன் பிரதமர் மோடி வளர்த்துள்ள நல்லுறவால் அந்நாடுகளில் சில இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்துள்ளன. இணைந்து வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. இது அவரது ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது. உலகில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதால் பொருளாதார ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பும் ராஜதந்திர நடவடிக்கைகளின் மையமாக இருக்கின்றன.
ஒரு போரில் தேவையில்லாமல் தலையிடுவது, அதுவும் நமக்கு தொடர்பில்லாத போரில், நம்முடைய தேச நலனுக்கு எதிரானதும் அவசியமற்றதும் ஆகும். எந்த சாய்வும் இல்லாமல் தன்னிச்சையான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது இந்திய பண்புகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் துரோகம் செய்வது என்றாகாது. மாறாக எல்லா தரப்பினருடனும் உறவாடவும் தன்னுடைய நலன்களை உறுதியாக பாதுகாப்பதும் ஆகும்.
சிந்தூர் நடவடிக்கையும் அதன் பிறகும்
இன்றைய சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள் தங்கள் தங்கள் தேசிய நலனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளன. அண்மையில் பெகல்காமில் பாகிஸ்தானிய பயங்கரவாத தாக்குதலும் அதற்கு சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா கொடுத்த பதிலடியும் அதன் பிறகு இந்திய – பாகிஸ்தான் மோதல் குறித்து உலக நாடுகளின் நிலைப்பாடும் நாம் வாழும் காலத்தில் புவி அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக் காட்டுகின்றன.
அம்பலமானது பிற்போக்குதனம்
முன்பெல்லாம் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும், பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொண்டே பாகிஸ்தானுக்கு நிதி உதவியும் ஆயுதங்களையும் தந்து வந்தன. இதனால் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்த பாகிஸ்தான் தெம்பாக இருந்தது.
மேற்கத்திய நாடுகள், அதில் பல இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த விரும்பி முயற்சிகளை மேற்கொள்பவை, இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தரத்தில் வைத்து பார்த்தன. கடந்த இரண்டு முறை ஆட்சியில் இருந்தவர்கள் (மோடி அரசு) இதை தவறென்ன நிரூபித்தபடியே இருந்தனர் .
பல நாடுகள் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருந்தன. அதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்கள், விமான தளங்களை பயன்படுத்திக் கொள்ள அவற்றிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த நாடுகள் சீனா, ஈரானுடனான மோதலின் போது தங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்று கருதின.
பாகிஸ்தான் தன் விசுவாசத்தை அதிக விலை கொடுப்பவர்களுக்கு என்றதால் சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன், நவீன ஆயுதங்கள், தலைவர்களுடன் விருந்து என்று அதன் விசுவாசம் விலைக்கு வாங்கப்பட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் ஜனநாயகத்தைப் பற்றி உரை நிகழ்த்தும் நாடுகள், ‘ஜனநாயக மதிப்பீடு’களை காப்பதாக சொல்லி மற்ற நாட்டின் மீது படையெடுத்த நாடுகள், பாகிஸ்தான் ராணுவ ஆட்சி தலைமையுடன் உறவாட முனைந்ததுதான். இதற்கு காரணம் அது அவர்களது நலனுக்கு வசதியாக இருந்தது என்பதுதான்.
இந்தியாவுடன் உறவை வளர்த்துக் கொண்டாலும் அரபு நாடுகள் வேகமாக பாகிஸ்தானை ஆதரித்தன. மத ரீதியான சகோதரத்துவம் இதற்கு காரணம். இந்திய அயலுறவு கொள்கையானது இந்த நுட்பங்களை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடுகள் தன் நாட்டின் நலன்கள், பாதுகாப்பு, மதிப்பீடுகள் , வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளன.
மேற்கு ஆசியா
உலகில், அரசியல் ரீதியாக, மிகவும் நிலையற்ற தன்மை கொண்ட பகுதி மேற்கு ஆசியா. அங்குள்ள நாடுகள் இடையே பல மோதல்களும், தொடர் சண்டைகளும், அரசு அல்லாத சக்திகளும் மோதலில் ஈடுபடுவதும் நடந்து வருகின்றன. நிலையற்ற, அடிக்கடி வெடித்து பீறிடும் சூழ்நிலையில் அணு ஆயுதம் வைத்திருப்பது ஆபத்தை மிகவும் அதிகரிப்பதாகவும், பொறுப்பற்று பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை அளிப்பதாகவும் உள்ளது.
அணு ஆயுதங்கள் நீண்ட மோதல்களையும் வெகு ஜனங்கள் மீது மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே அணு ஆயுத பரவல் தடை சட்டம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அணு ஆயுதம் கொண்ட மேற்கு ஆசியாவால் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மோதல்கள் வலு பெறும். அத்துடன் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தில் அவையும் தீவிரமாக ஈடுபடும். மேற்கு ஆசியா சீராக இருக்க வேண்டுமானால் ஆயுத கட்டுப்பாடு, மோதல்களை தவிர்த்தல், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை தேவை.
தேர்ந்தெடுத்த ஆவேசமும் வசை பாடுவதும்
பொதுவான புரிதல் கூட இல்லாத போதனைகள், பல நேரங்களில் அரசியல் உள்நோக்கம் கொண்டு சொல்லப்படும் ஆலோசனைகள், இவையெல்லாம் இன்று பரிணமித்து வரும் உலக விசைகளைப் பற்றிய போதிய புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகின்றன.
மேற்கு ஆசியாவின் நிலையற்ற தன்மைக்கு ஈரானும் காரணம் என்பதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது. ஹமாஸ் 2023 அக்டோபர் 7 தேதி இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலை இந்திய அயலகத்துறை அதிகாரிகள் புறந்தள்ள முடியாது. பாலஸ்தீனிய பொது ஜன கட்டமைப்பை ஹமாஸ் தனது கேடயமாக பயன்படுத்தி கொண்டதை கண்டு கொள்ளாமல் அறிக்கை விடவோ நிலைப்பாட்டை மேற்கொள்ளவோ முடியாது.
தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் ஆவேசத்தை வெளிப்படுத்துவது, தார்மீகத்தின் அடிப்படையில் பேசுவதாக திரையிட்டுக் கொண்டு வெப்பமாக பேசுவதெல்லாம், தேச நலனுக்கு எதிரானதாகவே இருக்கின்றன.
பலரும் உணர்ச்சிகரமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அவை சரியான தகவல் இன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்தியா அவற்றை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ராஜதந்திர ரீதியான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். இந்தியாவின் வலுவான, தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் தடைப்படும்.
இந்தியாவின் பக்க சார்பற்ற, சுதந்திரமான ராஜதந்திர நிலைப்பாடுகள் அதன் தெளிவையும் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்துகின்றன. தன் வளர்ச்சி பாதையில் நம்பிக்கையுடன் முன்னேறும் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போதுள்ள இந்தியா, அரசியல் பொதுவெளியில் வெளியிடப்படும் அறிக்கைகளால் உந்தப்பட்டு உலக மோதல்களில் ஒரு பக்க சாய்வை மேற்கொள்ளாமல் , தனக்கென சுயமான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு, இருதரப்பினருடன் உறவாடும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.
வியாச பூஜை என்பதும், சாதுர் மாஸ்ய விரதம் (திங்கட்கிழமை (7.7.25)அன்று இந்த விரதம் ஆரம்பமானது) சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி (இந்த வருடம்: 10.7.2025) வருகிறது. இதையே ‘குரு பவுர்ணமி’ என்றும் சொல்வர். எல்லோருக்குமே இந்த பவுர்ணமி உயர்ந்தது.
ஆஷாட பெளர்ணமியும் மூல நட்சத்திரம் சேர்ந்து வருவது விஷேசமான ஒரு நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது, அடுத்த ஆஷாட பெளர்ணமி மூல நட்சத்திரம் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வருகிறது.
குருப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரா, குரு சாட்சாத் பரப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குரவே நம:
தேஹிமே குரு ஸ்மரணம் தேஹிமே குரு கீர்த்தனம் தேஹிமே குரு தர்ஷணம் தேஹிமே குரு ஸாமீப்யம் தேஹிமே குரு பதஸேவனம் தேஹிமே குரு உபதேசம் தேஹிமே குரு ஸாயுஜ்யம்
குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.
இந்த வியாச பூஜையை முதன் முதலில், துவக்கியவர், வேதவியாச மஹரிஷி அவர்களின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை மன்னர் பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாவார்.
அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீசுகப்பிரம்மரிஷிக்கு ‘வியாச பூஜை’யை, தம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர்மாஸ்ய விரதம்.
ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆஷாட பவுர்ணமி – வியாச பவுர்ணமி என்ற நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டு ‘வியாஸ பூஜை’ நடத்துவது துறவிகளின் பணி.
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது ஆதிசங்கர பகவத்பாதாள் தொடங்கி குரு பரம்பரையில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்களில் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள். .
இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது, இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலகநலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கம்.
இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு வியாச பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது.
பராசரா முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பதாகும். வேதம், மகாபாரதம் மற்றும் பதினெண் புராணங்களை அருளியவரும், வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தவர் இவர்தான்.
இந்து மதத்திற்கு ஆணிவேராக இவர் போற்றப்படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் பெயர் இதில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.
இந்த வியாச பூஜையில் வியாசர் அவரது நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதிசங்கரர் அவரது சீடர்களான பத்மபாதர், ஸுரேச்வர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரும், மவுனகுருவின் சீடர்களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமார் ஆகியோரும் நாரதர், சுகர், கவுடபாதர், கோவிந்த பகவத் பாதர் ஆகிய குருமார்களும், கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப் படுகின்றன.
துறவிகளாலேயே செய்யப்படும் இந்த பூஜையானது முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்ராமமும் வைத்து எலுமிச்சம் பழத்தை ஆங்காங்கு வைத்து முறைப்படி ‘குருபரம்பரை ’ பூஜையாக நடத்தப்பெறுகிறது.
எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் துறவிகளுக்கு – சன்னியாசிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பவுர்ணமி தொடங்கிக் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதகாலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர். மற்ற காலங்களில் பல பகுதிகளிலும் எப்போதும் யாத்திரையிலேயே இருந்து வருவர்.
மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையும் மேலும் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு இம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பர். நான்கு மாதங்கள் இவ்வாறு தங்கியிருக்கும் ‘சாதுர் மாஸ்ய விரத காலத்தில் வேத, வேதாந்த, உபநிஷத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வசிப்பார்கள்.
வியாச பூஜை தினத்தன்று, ஆதி குருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.
இவ்வாறு இந்த சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன் மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பது மிக்க நலம் பயக்கும்.
குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.
சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப் படுவது வழக்கம். சன்யாசிகள் மட்டுமல்லாமல், சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இன்றளவும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
இந்த நன்னாளில், ஆச்சாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, ‘தான்’ எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.
அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்.
குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆச்சாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.
மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும்.
மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களில் சென்று வழிபாடு செய்தல் சிறந்தது.
ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெறுவோம்!!!!!
கெடு நாளுக்கு ((9ஆம் தேதி)) ஒரு நாள் முன்பே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 25% வரிவிதிப்பிற்கு இடைக்கால தடை அறிவித்து அதனை ஆகஸ்டு முதல் நாள் வரை நீடித்து உத்தரவிட்டார்.
கூடுதலாக இம்முறை இந்த கெடு தேதியை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படாது என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சிரிப்பாய் சிரித்து கொண்டு இருக்கிறார்கள் அங்கு. கோமாளி போல் ட்ரம்பை மாற்றி வைத்து பகடி செய்து கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும் அவர் அசரவில்லை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் மூலம் கெடு நாள் நீடிப்பு அறிவித்ததோடு கிட்டத்தட்ட பத்தொன்பது நாடுகளுக்கு தனித் தனியே கடிதமும் எழுதி இருப்பதாக சொல்கிறார்கள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை…….
உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் போன் மேல் போன் கால்கள் செய்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் மன்றாடி கெஞ்சி கேட்டு கொண்டு வருகிறார்கள் என செய்தி தொடர்பாளர் பொது வெளியில் செய்தி அறிக்கை வாசிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஏனெனில் இது என்ன மாதிரியான வெளியுறவு கொள்கை மற்றும் ராஜாங்க நடவடிக்கை என சீற ஆரம்பித்து இருக்கிறார்கள் உலகின் பல நாடுகளில்…. கெஞ்சி கேட்கும் அளவிற்கு அவசியம் என்ன வந்தது எங்களுக்கு…. என வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.
அப்படியே அமெரிக்கா சொல்வது நிஜம் என்றால் எதற்காக கடிதம் எழுதி கேட்ட வேண்டும்…….. நாங்கள் கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்கும் போது…?என கேள்வி கேட்டு அதிரடித்து வருகிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக நீடிக்க லாயிக்கற்றவர். அவரால்….. அவரது நிர்வாக திறமை இன்மையால் பங்கு வர்த்தகத்தில் மூன்று ட்ரில்லியன் டாலர்களை இழக்க நேரிட்டுள்ளது. போதாகுறைக்கு 21 அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் இதுவே பொது ஊரடங்கு போல் காத்தாடி வருகிறது. கனடாவிலோ அமெரிக்க பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதில்லை ….. மீறினால் அந்த வணிக நிறுவனத்தை கனேடிய பிரஜைகள் புறக்கணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
கனடாவில் இருந்து சரக்கு போக்குவரத்து விமானங்கள் கூட வருவதில்லை… இதே நிலை தான் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் விமானச் சேவைகள் வெகுவாக குறைந்து வருகிறது என சுட்டி காட்டி வருகிறார்கள்.
செப்டம்பர் வரையிலான காலத்திற்கான பிஸினஸ் கிளாஸ் முன்பதிவுகள் பெருமளவு கான்சல் செய்து இருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்.
இதை ட்ரம்ப்….. சமீபத்திய நாட்களில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள் என பகடி செய்து கொண்டு நிற்கிறார் அவர்.
காலக் கெடு நீடிப்பு அறிவித்ததோடு சில பல நாடுகளுக்கு உண்டான வரி விகிதங்களில் சம்மந்தா சம்மந்தமில்லாத மாற்றமும் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா, தைவானில் இவரது இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே இவர் பதவிக்கு வந்த சமயத்தில்….. கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்… லாஸ் வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை எந்த ஒரு நிதியுதவியோ அல்லது இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையோ கொடுக்கவில்லை என்கிற ரீதியிலான புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் மழை வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டிடும் போல் உள்ள இந்த சூழ்நிலையில் சரியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை என பலரும் பொரும ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நம் இந்திய தேசம் கடந்த வாரத்திலேயே…. கெடு நாளுக்காக ஏதும் செய்வதாகயில்லை. இந்திய நலனே பிரதானம் என பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிட்டதக்கது.
அந்த வகையில் பார்த்தால்… டொனால்ட் ட்ரம்ப் இறங்கி வந்து இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்து இருக்கிறார் என்பதாக இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்கா இந்தியா இடையேயான இடைக்கால வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் போல் தெரிகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….. ஓவல் அலுவலக செய்தி குறிப்பும் அதையே ஊர்ஜிதம் செய்து இருக்கிறது. இந்தியா, பெரிய அளவில் இறங்கி வரும் வாய்ப்பு இனி இல்லை என்கிறார்கள் அவர்கள்.
டொனால்ட் ட்ரம்ப் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருக்கும் அவரது பிக் ப்யூட்டிபுல் பில்லில் ஏகப்பட்ட வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்தியர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம்.
பிறகு ஏன் இத்தனை அலப்பறை என கேள்வி கேட்டால் ஒருத்தரும் வாயே திறக்கவில்லை.
ஆக செம்மத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டு ட்ரம்ப் வெளிப்பார்வைக்கு வீர வசனம் பேசுகிறார் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆக பிரிக்ஸ், அமெரிக்காவின் அடி மடியிலேயே கைவைத்து அசைத்து பார்த்து இருக்கிறது. இனி ஒவ்வொரு கல்லாய் பெயர்த்து எடுக்க வேண்டியது தான் பாக்கி. நம்மவர் சத்தமில்லாமல் சாதித்து காட்டி இருக்கிறார். அதற்கு இந்த கெடு நாள் நீடிப்பே கண் கண்ட சாட்சி.
வரும் நாட்களில்…. அதாவது இந்த இருபது நாட்களில் இடைக்கால வர்த்தக உடன்படிக்கை பற்றி செய்தி வரும். பின்னர் அது நம் இந்திய தேசத்திற்கு மட்டும் நிரந்தரமாக இருக்கும் போலிருக்கிறது. அமெரிக்க நிர்வாக குளறுபடிகளால் அதன் நட்பு வட்டத்தில் உள்ள நாடுகளே ட்ரம்ப்பை சாட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆக…. கொஞ்சம் கொஞ்சமாக நம் இந்திய தேசத்தின் செல்வாக்கு சர்வதேச அளவில் ஓங்க ஆரம்பித்து விட்டது என இதனை புரிந்து கொள்ளலாம்.
வாழ்க பாரதம். வெல்லட்டும் எட்டு திக்கும், ஓங்கட்டும் அதன் புகழ்.
ஓராண்டுகாலம் திருவாய்மொழியின் ஆழ்பொருளை நம்பெருமாளுக்கு ஸ்ரீ மணவாளமாமுனிகள் விவரித்து அதற்கு நம்பெருமாள் தந்த பரிசான ஸ்ரீசைலேசத் தனியன் அவதரித்தது ப்ரமாதீச ஆண்டு ஆனி மாதம் மூல நக்ஷத்திரத்தில் (9-7-1433). எம்பெருமானாரிடம் ஸச்சிஷ்யனாக நின்று மந்த்ரோப தேசம் பெற்றும், ‘ஸ்ரீவைஷ்ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமம் பெற்று இருந்தும், ஆசார்யனுக்கு குருதக்ஷிணையாக ஒன்றும் ஸமர்ப்பிக்கவில்லையே என்றும், ஆழ்வார் முகேந அருளிச் செய்த திருவாய்மொழிக்கு (பகவத் விஷயம்) வ்யாக்யானங் களை, ஈட்டின் ஸ்ரீஸூக்திகளை கேட்க வில்லையே” என்றும் ஸ்ரீரங்கநாதன் திருவுள்ளத்திலே குறையிருந்தது.
ஆண்டுதோறும் திருவாய்மொழி பாசுரங்களை மட்டும் செவிசாய்த்து ஏற்று மகிழும் ஸ்ரீரங்கநாதன், அக்குறையையும் அர்ச்சாவதாரத்திலேயே தீர்த்துக் கொள்ள, எம்பெருமானாரின் புனரவதாரமாக அவதரித்து ஆசார்யபூர்த்தியுள்ள ‘பொய்யில்லாத மணவாள மாமுனி கள்’ என்கிறபடியே ஜ்ஞாநக்கடலாகவும், வழுவில்லா அநுஷ்டாநபரராயும் உள்ள பெரியஜீயர் (ஸ்ரீமணவாளமா முனிகள்) பக்கத்தில் அர்த்தித்து (யாசித்து) பகவத் விஷய மான ஈடுகேட்டருளத் (செவிசாய்த்தருள) திருவுள்ளங் கொண்டார்.
ஒரு சமயம் பரிதாபீ வருஷத்தில் திருப்பவித்ர உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாற்றுமுறையன்று நம்பெருமாள் புறப்பட்டருளி, திருப்பவித்திர மண்டபத்திலே பாகவதப் பெருங்குழுவோடு எழுந்தருளியிருந்தார். அச் சமயம் அடியார்கள் குழாங்கள் சூழ மணவாளமாமுனிகள் பெருமாளை மங்களா சாஸநம் செய்ய அவ்விடம் எழுந் தருளினார். அணியரங்கன் திருமுற்றத்தடியார்கள், ஆசார்ய புருஷர்கள், ஜீயர்கள், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைத்துக் கொத்துக்கும் அருளப்பாடு ஸாதித்தருளி (அர்ச்சகமுகேந கூவியழைத்தருளி) ஜீயரும் முதலிகளுடன் கூடப் பெருமாளை மங்களா சாஸநம் பண்ணியருளி, திருவாராதநம் முடிந்தபிறகு மணவாளமாமுனிகளைத் தனித்து அருள்பாடிட்டருளி ஸ்ரீசட கோபனையும் ஸாதித்தருளி, “நாளை முதல் நம்முடைய பெரிய திருமண்டபத்திலே (சந்தன மண்டபத்திலே) பெரிய வண் குருகூர்நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப் பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்”, என்ன, ஜீயரும் பெருமகிழ்ச்சியுற்று, மறுநாளே தொடங்குவதாக விண்ணப்பித்து மடத்திற்கு எழுந்தருளினார்.
மறுநாள் நம்பெருமாள் நாச்சிமார்களுடனே புறப்பட்டருளி பெரியதிருமண்டபத்திலே திவ்ய ஸிம்ஹா ஸநத்திலே அமர்ந்து திவ்யகோஷ்டியை போரவுகந்து, அந்த கோஷ்டியை அந்தர்பூதராய் சேர்த்தியை அநுபவிக்கிற, அயர்வறுமமரர்களான திருவனந்தாழ்வான், பெரியதிருவடி (கருடாழ்வார்), ஸேநாபதியாழ்வான் (விஷ்வக்ஸேநர்) என்கிற நித்யயசூரிகளோடும் வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும், நாதமுனி, யதிவரர் முதலான ஆசார்யர்களனைவரோடும் ஸ்ரீரங்க நாராயணஜீயர், திருமலைதந்தபட்டர் தொடக்கமானாரோ டும், அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்களின்பமிகு பெருங்குழுவோடும் கூடப் பேரோலக்கமாக (மஹா ஸபையாக) எழுந்தருளியிருக்க, பெரிய ஜீயராகிய மணவாள மாமுனிகள் எழுந்தருளிக் காலக்ஷேபம் ஸாதித்தருளத் தொடங் கினர். இவ்வாறு பேரோலக்கமாக இருந்து நம்பெருமாள் பத்துமாத காலம் திருவாய் மொழியின் ஆழ்பொருளைக் கேட்டருளினார்.
திருவாய்மொழி விரிவுரை முடிவுற்ற நாளன்று நம்பெருமாள் நாச்சிமார்களுடனும், நித்யசூரிகளுடனும், ஆழ்வார்கள் பதின்மருடனும் கூடிப்பெரிய குழுவாக பெரிய திருமண்டபத்திலே எழுந்தருளியிருக்க சாற்றுமுறையும் நடை பெற்றது. நம்பெருமாளும் ஜீயரிடம் கொண்ட அளவுகடந்த மகிழ்ச்சியால் திவ்யப்பிரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யான வைபவங்களையும் ஜீயருடைய வைபவங்களையும் ப்ரகாசஞ் செய்தருளவேணுமென்றும் தாம் அநுஷ்டித்துக் காட்டவேணு மென்றும் திருவுள்ளமாய் ஜீயருக்கு ஆசார்ய ஸம்பா வனையாக, சில த்ரவ்யங்களும் ஏல லவங்க கர்ப்பூராதிகளும், திருப்பரியட்டங்களும் தாம்பூலமும் பழங்களும் ஸமர்ப் பிக்க, அழகியமணவாளபட்டர் என்ற திருநாமத்தையுடைய அர்ச்சக ருடைய குமாரராய், ஐந்து வயதுடைய ‘ரங்க நாயகம்’ என்கிற திருநாமத்தையுடையரான சிறுபிள்ளை, ஸம்பா வனைத் தட்டுக்களுக்கும் நம்பெருமாளுக் கும் நடுவே வந்து நின்றான். பெரியோர்கள், குழந்தை இடையே நிற்கின்றதே என்று அப்பாற்கொண்டு விட்டனர். அப்பாலே விட விட மறுபடியும் மறுபடியும் அங்கே வந்து நின்றான். கோஷ் டியினர் அக்குழந்தையைப் பார்த்து “நீர் நிற்கிற கார்யமே” தென்ன, அக்குழந்தை மாமுனிகளின் பக்கமாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல் ‘ ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ன, பின்னுமே தென்ன, “யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்” என்று சொல்லி ஓடிப்போக பெரியோர்களெல்லோரும் ஆச்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத் தைப் பட்டோலைக் கொண்டு மஞ்சட்காப்புச் சாற்றி பெரிய பெருமாள் திருவடிகளில் சேர்ப்பித்து ரங்கநாயகத்தை வெகு வாகக் கொண்டாடினர். அழகியமணவாள பட்டருடைய குமாரரான ரங்கநாயகத்திடம் இதுபற்றிக்கேட்க அந்தக் குழந்தை தனக்கேதும் தெரியாதென்று பதிலளிக்க அனை வரும் நம்பெருமாளே ரங்கநாயகனாகிய குழந்தைவடிவில் வந்து இந்தத் தனியனை அருளிச்செய்தாரென்று அறுதி யிட்டனர்.
பெரியபெருமாளும் உகந்தருளி அவரை க்ருபை பண்ணியருளி, வரிசைகளும் ஸாதித்து, உடனே திருமலை, பெருமாள் கோயில் தொடக்கமான திருப்பதிகளுக்கு எல்லாம், ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் – யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்” என்று அநுஸந் தித்துத் தொடங்கவும், ப்ரபந்தம் சாற்றி, “வாழி திருவாய் மொழிப்பிள்ளை” என்று தொடங்கி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று அநுஸந்தித்துத் தலைக்கட்டவும் என்று ஜீயருக்கு ஸம்பாவனையுஞ் செய்தருளி வரிசையுடன் மடத்திற்கு அனுப்பியருளினார்.
583 ஆண்டுகளாக இந்தத் தனியன் அவதார உத்ஸவம் ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறுகிறது. அன்று மாலை ஸந்நிதியில், ஸந்நிதி ஆதீன கர்த்தரால் அப் பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்திரிகை, பரவாதி கேசரியார் அருளிச்செய்த ஸ்ரீ சைல வைபவம் ஆகியவை ஸேவிக்கப்படும்.
ஆனந்த வருடத்தின் கீழ்மை ஆண்டில் (ப்ரமாதீச) அழகான ஆனிதனின் மூலநாளில், பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌரணையின் நாளிட்டுப் பொருந்தி வைத்தே, ஆனந்த மயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்தி, வானவரும் நீர்இட்ட வழக்கே என்ன மணவாள மாமுனிகள் களித்திட்டாரே.
என்று மணவாளமாமுனிகள் விஷயமாக இந்தத் தனியன் அவதரித்த வைபவம், அப்பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
காரியாபட்டி வட்டார விவசாயிகள் தங்களின் முன்னோர் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூலை 9-ல் தாசில்தார் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறதுஎன, காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி வட்டாரத்தில் ,வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகளின் நிலை உடமை விவரங்கள் வேளாண் துறை தோட்டக்கலை துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களால் இணையத்தில் கட்டணம் இன்றி பதிவு செய்யப்படுகிறது.
மேலும், இனிவரும் காலங்களில் மத்திய மாநில அரசு திட்டங்கள் பிரதமரின் விவசாய ஊக்க தொகை பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இப்ப பதிவுகள் அடிப்படையில் வழங்கப்படும்.
தற்போது, விவசாயம் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்களின் நில உடமை விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தவணை பெற முடியும் வேளாண் அடுக்குத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளோர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இதில், பலர் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ளதால், நில உடமை விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை இவர்களுக்காக ஜூலை 9-ல் காலை 10 மணிக்கு காரியாபட்டி தாசில்தார் அலுவலகங்களில் முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள் தேவையான ஆவணங்களை நேரில் கொண்டு வந்து பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தச்சம்பத்து கிராமத்தினர் செய்து வருகின்றனர்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலின் ஆனிப்பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருதேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த ஜூன் 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 7ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் (6ம் தேதி) காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து காலையில் பல்லக்கில் சுவாமி, அம்பாள் (தவழ்ந்த கோலத்தில்) வீதி உலா நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், நடராஜபெருமான் சிவப்பு சாத்தியும் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உட்பிரகாரம் வலம் வருதல் நடந்தது.
தொடர்ந்து 8ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை (7ம் தேதி) காலையில் சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலா வருதலும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்கடாட்சம் வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளிவாகனத்திலும் வீதி உலா நடந்தது. ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று (8ம் தேதி) நடந்தது. இதில் அதிகாலையில் சண்டிகேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் பக்தர்கள் மூலம் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேரில் எழுந்தருளல் நடந்தது. இதைத் தொடர்ந்து சரியாக காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
தேரை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆணி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சிந்தாமணி நாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் மூலஸ்தானத்தில் சிவன் பார்வதி சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகின்றனர் மூலஸ்தானத்தில் காட்சி தரும் ஒரே கோவில் இதுதான் என கூறப்படுகிறது .
இக்கோவில் தேரோட்டத்தை ஒட்டி திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பின்பு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர் .திருத்தோரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் .
இதுபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் சுவாமி கோவிலில் இன்று ஆணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது இக்கோவிலில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றி தினசரி பல்வேறு நிகழ்வுகளுடன் திருவிழா நிகழ்வுகளும் சுவாமி வீதி உலாவும் விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தினர்
பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயார்! வேறு வழியின்றி பாரதத்திடம் கொல்லைப்புறம் வழியாக சரணடைய தயாராகும் பாகிஸ்தான்! ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையும் சிந்து நதி ஒப்பந்த நிறுத்தமும் நல்ல பலனை தரத் தொடங்கி இருக்கிறது.
பாகிஸ்தானின் பூட்டோ பரம்பரை இளவரசரும் சிந்து மாகாணத்தின் அரசியல் முகமாகவும் இருக்கும் பிலாவல் பூட்டோ வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி தரும்போது ஹபீஸ் சையத் மற்றும் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளான். இந்தியாவிற்கு ஒரு நல்ல சைகையாக பயங்கரவாதிகளை நாடு கடத்த நாங்கள் தயாராக இருப்போம் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.
கடந்த வாரம் சரணடைதல் என்ற வார்த்தையே பாகிஸ்தான் அகராதியில் இல்லை என்று வீரவசனம் பேசினானே ? அதே பிலாவல் பூட்டோ தான் இன்று இப்படி அந்தர் பல்டி அடித்திருக்கிறான் .
இதே பிலாவல் பூட்டோ தான் சிந்து மாகாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் விவசாயிகள் மத்தியில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதை ஏற்க முடியாது. பாரதத்திற்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது. ஒன்று பாகிஸ்தானிற்கு சிந்து நதியை திறந்து விட வேண்டும். இல்லையேல் பாகிஸ்தானோடு போரிட்டு வெல்ல தயாராக வேண்டும் என்று பேசினான் .
ஆனால் பாகிஸ்தான் இன்னொரு அடியை பாரதத்திடம் வாங்க இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ராஜ ரீதியாகவும் தயாராக இல்லை என்பதை அங்குள்ள மக்கள் ஓரளவு உணர்ந்து இருக்கிறார்கள். அதனால் இவனது நாடகம் அங்கு எடுபடவில்லை. உண்மை நிலை எங்களுக்கும் தெரியும் என்று அவர்கள் முகத்தில் சாணி அடிக்க தயாராகிறார்கள் .
அதனால் வேறு வழியில்லாமல் சிந்து நதி நீருக்காக பாரதத்திடம் சரணடைய தயாராகிறது பாகிஸ்தான். அதனால் தான் எந்த பிலாவல் பூட்டோவை வைத்து எங்கள் நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை. நாங்கள் மிகவும் யோகியமானவர்கள். எங்களைப்போல் யோக்கிய சிகாமணிகளை நீங்கள் இந்த உலகில் வேறெங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்று நீட்டி முழக்கினான்.
பாரதம்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பாரதத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தான் பாகிஸ்தான் பேரழிவை சந்திக்கிறது என்று கடந்த மாதம் எந்த பிலாவல் போட்டோவை வைத்து பேச வைத்தார்களோ? அதே பூட்டோ வாயாலேயே பரிகாரம் தேடும் வகையில் ஹதீஸ் சையத் மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட அவர்களை நல்லெண்ண நடவடிக்கையாக பாரதத்திடம் ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேச வைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் ஹபீஸ் சையத் – மௌலானா மசூத் அசார் இருவரும் பாகிஸ்தானில் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பாகிஸ்தானின் ராணுவம் உளவுத்துறை கண்காணிப்பில் பாதுகாப்பில் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். இதன் மூலம் பாரதத்தில் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அதை செய்யும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசு இயந்திரம் நேரடியான தொடர்பில் இருப்பதையும் ஒப்புக்கொண்டு உள்ளார்கள்.
இத்தனை காலமும் எவ்வளவோ ஆவணங்கள் சாட்சியங்களை பட்டியலிட்டு அவர்கள் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்கள் என்று பாரதம் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்த போதிலும் இது சொத்தை இது சொல்லை என்று சாக்குப் போக்கின் கீழ் பாகிஸ்தான் இந்த விஷயத்தை தட்டிக் கழித்தது. ஆனால் இன்று தான் வளர்த்த பயங்கரவாத வெறி நாய்களை தன் பாதுகாப்பிற்காக சுயநலத்திற்காக தானே காவு கொடுக்க தயாராகிவிட்டது. அந்த வகையில் இத்தனை காலம் அவர்கள் வளர்த்தெடுத்த பயங்கரவாதத்தில் கூட பாகிஸ்தான் உண்மையான விசுவாசத்தில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.
பாகிஸ்தானை நம்பி பாகிஸ்தானியர்கள் பயங்கரவாதிகளாக மாறுவதும் அவர்களை நம்பி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாத திரளாக மாறியவர்களயுமே தன் குடிமக்கள் தன்னை நம்பிய தங்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்ட ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் என்ற குறைந்தபட்ச விசுவாசம் கூட இல்லாமல் இன்று அவர்களை பலி கொடுத்து தங்கள் தேசத்தை காத்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராகிறது.
எனில் பாகிஸ்தானின் சித்தாந்தத்தை பயங்கரவாத ஆதரவை நம்பி பாரதத்திலிருந்து கொண்டு பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் பாகிஸ்தான் இறையாண்மையை உயர்த்திப் பிடிப்பதும் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டே பாரதத்திற்கு எதிராக அத்தனை சதிகளையும் பாகிஸ்தான் ஆதரவில் செய்பவர்களுக்கும் பாகிஸ்தான் எப்படிப்பட்ட மரியாதையை கொடுக்கும்? அவர்களை எந்த இடத்தில் வைத்து பார்க்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம்.
அதெல்லாம் சரி. இதே பிலாவல் சில தினங்களுக்கு முன்பு சரண் அடைதல் என்ற பேச்சுக்கே இடமில்லை பாகிஸ்தானின் அகராதியிலேயே சரணடைதல் என்ற வார்த்தை கிடையாது என்று சவுடால் விட்டானே? இப்போது ஏன் இப்படி வலிய வந்து பம்மறான் ? என்று சிலருக்கு குழப்பம் நேரிடலாம்.
பயங்கரவாதத்தையும் கைவிட மாட்டோம். பாரதம் எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் நிறுத்த மாட்டோம். பயங்கரவாத உற்பத்தியையும் நிறுத்த மாட்டோம். எங்களிடம் இருக்கும் பாரதம் கோரும் பயங்கரவாதிகளை அவர்களிடமும் ஒப்படைக்கவும் மாட்டோம் என்பதை மிகத் தெளிவாக பாரதத்திடம் சரணடைதல் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை என்று பேசினான். அதாவது பாகிஸ்தான் இராணுவம் உளவுத்துறை பேச வைத்தது.
அதே பிலாவல் தான் இன்று ஹபீஸ் சையத் மசூத் அசாரை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்று சரணாகதி வாக்கு வாக்குமூலத்தை உதிர்க்கிறான். அதாவது பாகிஸ்தான் இராணும் உளவுத்துறை இவனை பேச வைத்து இவன் மூலம் பாரதத்தை ஆழம் பார்க்கிறது.
இதன் பொருள் என்னவெனில் சரணடைதல் என்பதே எங்கள் அகராதியில் கிடையாது என்று அண்ணார் பேசிய பிறகு சொந்த குடும்பத்தின் வரலாற்றை தெரியாத உனக்கு தேசத்தின் வரலாறு மட்டும் எப்படி தெரிய போகிறது? என்று பாகிஸ்தானில் இருக்கும் மூத்த தலைமுறை சார்ந்தவர்கள் அல்லது உண்மையான அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் பாகிஸ்தான் நலன் கருதி இவனுக்கு தனியே பாடம் எடுத்து இருக்கலாம்.
அந்தப் பாடத்தில் தம்பி பூட்டோ அரசியல் செல்வாக்கு இருக்கிறது பாகிஸ்தானில் நமக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று அதிகமாக ஆட்டம் போட வேண்டாம் . உன் தாய் பெனசீர் ஃபோட்டோவின் அரசியல் தான் உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் அவரின் தந்தையாரும் உங்களது தாத்தாவான சுல்பிகர் அலி பூட்டோ வின் காலம் பற்றி உனக்கு தெரியாது.
உன் தாத்தா சுல்பிகர் அலி காலத்தில் தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் இடையே பெரும் உள்நாட்டு யுத்தம் மூண்டது . அதில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானும் இப்போதைய வங்கதேசம் என்று சொல்லப்படும் புதிய தேசம் உருவானது. பாரதத்தின் ராணுவ உதவியால் தான் அது சாத்தியம் ஆனது. அதிலும் வெறும் 13 நாள் யுத்தத்தில் பூகோளத்தை மாற்றி ஒரு புதிய தேசத்தை இந்திய ராணுவம் உருவாக்கியது. அந்த கதை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டிருக்கலாம்.
உலக நாடுகளின் அழுத்தம். அமெரிக்கா பிரிட்டனின் நேரடி எதிர்ப்பு . அரேபிய நாடுகளின் எதிர்ப்பு. அண்டை நாடுகள் எதுவும் உதவாத நிலை. உள்நாட்டில் பெரிய பொருளாதார பலமோ அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. நவீன ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் தளவாடங்கள் எதுவும் கிடையாது. குறிப்பாக அயலக ராஜ்ஜிய பரிபாலனம் வலுவாக கிடையாது. அந்த நிலையிலும் அப்போதைய பாரதத்தின் பிரதமர் இந்திரா என்னும் பெண்மணி அப்போதைய ராணுவ தளபதி மானெக்ஷா வியூகத்தோடு துணிந்து களமிறங்கி வங்கதேசம் என்னும் ஒரு நாட்டையே உருவாக்கினார்.
அதில் பாரதத்தின் வியூகம் இப்படி இருக்கலாம் என்று பாகிஸ்தான் அப்போது நினைத்துக் கூட பார்க்காத அதிரடி வியூகத்தை இந்திய ராணுவம் களம் இறக்கியது. அதன் விளைவாக உலகம் நாடுகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு அளித்த போதிலும் அனைத்தும் பாகிஸ்தானுக்கு எட்டாக்கனியாகி கேவலமான தோல்வியை தழுவியது. அதிலும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும் தங்கள் தேசத்தின் இறையாண்மையை பற்றி எள்ளளவும் நினைக்காத பாகிஸ்தான் ராணுவத்தினர் சுமார் 93,000 ஆயிரம் வீரர்கள் அதிகாரிகள் தங்களது கால் சட்டையை அகற்றிவிட்டு அரை நிர்வாண கோலத்தில் பாரதத்தின் ராணுவத்திடம் முழு சரணாகதி அடைந்தார்கள். உன் தாத்தாவின் அந்த வீர வரலாறு தெரியுமா? என்று கேட்டிருக்கலாம்.
அவர்களை கௌரவமாக நடத்திய பாரதம் வெளிநாடுகளின் அழுத்தம் 93,000 அடிமைகளை கட்டி வைத்து பிரியாணி போட வசதி இல்லாத காரணம் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானிடம் திரும்ப ஒப்படைத்தது.
சரணாகதி என்ற வார்த்தைக்கு பாகிஸ்தானில் இடமில்லை என்று நீ இன்று பேசலாம். ஆனால் பாகிஸ்தானின் வரலாற்றில் இன்னொரு நாட்டிடம் முழு சரணாகதி அடையும் வரலாற்றை தொடங்கி வைத்ததே உன் தாத்தாவின் காலத்தில் தான். அவரது காலத்தில் தான் பாகிஸ்தான் ராணுவம் எந்த காலத்திலும் தலை நிமிர்ந்து வாழ முடியாத பெரும் தோல்வி அவமானத்தை சந்தித்தது.
அதன் விளைவு இன்றளவிலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு உலகில் கௌரவமோ மரியாதையோ கிடையாது. அதனால் சரணாகதி வரலாற்றை தொடங்கி வைத்த வம்சத்தில் இருந்தே பாகிஸ்தான் அகராதியில் சரணாகதி என்ற வார்த்தையே கிடையாது என்ற உன் கேட்கும் போது பாரதியர்களோ சர்வதேச சமூகமும் மட்டும் சிரிக்காது. கொலை வெறியில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கூட வேதனையில் விரக்தியில் சிரிப்பார்கள்.
அதனால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இனி ஒரு முறை சரணாகதி என்ற வார்த்தை பாகிஸ்தானில் கிடையாது என்ற பாரதத்தை கோபமூட்டும் நகைச்சுவையை மறந்தும் செய்யாதே! என்று யாரேனும் புத்திமதி சொல்லி இருக்கலாம்.
பாரதம் அப்பவே அப்படி னா இப்ப எப்படினு? ஆபரேஷன் சிந்தூர்ல் பாத்தோம். அது வெறும் டிரெய்லர் தானாம். மோடி முழு படத்தை ஓட்டினா பாகிஸ்தான் பரலோகம் போயிடுமாம் சாமி. நாம பத்திரமா வெளிநாடு போய் வாழலாம் னு கனவு காணாதீங்க. அப்புறம் மர்ம நபர்களால் மர்ம மரணம்னு காணாம போயிடுவீங்க. உங்க வம்சம் இருக்கனும் னா புத்தியோட பொழைச்சிக்க பாரு பா னு யாராவது நலன் விரும்பிகள் ஆலோசனை சொல்லி இருக்கலாம்.
அதில் மண்டையில் இருந்த குழப்பம் தெளிந்து பாரதத்திடம் சரணாகதி அடைவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் குரலாக பிலாவல் பேசுகிறான்.
இதனால் பாகிஸ்தான் திருந்துவிட்டதாகவோ அல்லது அவர்களின் தவறை உணர்ந்து விட்டதாகவோ அர்த்தம் இல்லை. ஆபரேஷன் சிந்து இன்னும் முடியவில்லை தற்காலிக நிறுத்தம்தான் என்ற பாரதத்தின் நிலைப்பாடு அவர்களை எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் நிறுத்தி இருக்கிறது. உளவியல் ரீதியான இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
மறுபுறம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற்றம் – பாரதம் கோரும் பயங்கரவாதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பது- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடுவது செய்தால் மட்டுமே சிந்து நதியை மீண்டும் பாகிஸ்தானுக்கு வழங்குவது பற்றி யோசிக்க முடியும் என்று பாரதம் கடுமை காட்டுகிறது. சவூதி கத்தார் பஹ்ரைன் அமெரிக்கா பேசியும் பலன் இல்லை. அதனால் இப்போதைக்கு வேறு வழி இன்றி பாகிஸ்தான் முதல் கட்டமாக பயங்கரவாதிகளை பாரதத்திடம் ஒப்படைக்கும் முடிவிற்கு தயாராவது தெரிகிறது.
அந்த வகையில் இத்தனை காலம் பாரதம் எடுத்த ராணுவ நடவடிக்கைகள் துல்லிய தாக்குதல்கள் விட சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் என்ற நதிநீர் தாக்குதல் மிக நல்ல பலனை பாரதத்திற்கு தர தொடங்கி இருக்கிறது. மிகத் தாமதமாக எடுத்தாலும் மிக சரியான நகர்வை பாரதம் கொண்டு போவது பாகிஸ்தானின் இந்த தலைகீழ் மாற்றத்தில் உணர முடிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான இது போன்ற உளவியல் ரீதியான தாக்குதல்கள் பாகிஸ்தான் மக்கள் மூலமாக அவர்களின் ஆட்சியாளர்கள் இராணுவத்திற்கு அழுத்தம் தரும் நடவடிக்கைகளை பாரதம் இன்னும் தீவிர படுத்த வேண்டும். அது மட்டுமே பாகிஸ்தானின் பயங்கரவாத உற்பத்தி – எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரும். பாரதத்தின் உள்நாட்டில் அமைதி நலன் வளர்ச்சி பாதுகாப்பு நிலை பெறும்.
பாரதம் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிக நிறுத்தம் மட்டுமே. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கிறோம் என்று காய் நகர்த்தி காத்திருந்தது போர் நிறுத்தம் நாங்கள் தான் கேட்டோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க தயார் எனும் பாகிஸ்தான் அறிவிக்க வேண்டும் என்ற இந்த தருணத்திற்காக தான் . அது நடந்து விட்டது. பாகிஸ்தான் அல்ல அது டெரரிஸ்தான் என்று பேசி வரும் ஜெய் சங்கர் ஜீ இனி பாகிஸ்தானை போகும் இடமெல்லாம் பஞ்சர் ஆக்குவார். இனி மோடி ஆடும் மங்காத்தா ஆட்டத்தில் பாகிஸ்தான் பாக்கிஸ்தான் ஆவது உறுதி.