Home Blog Page 84

நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் இவர்கள் பங்கேற்கவில்லையாம்!

madurai auto - 2026
#image_title

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநிலத் தலைவர் மணலி த. மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…

நாளை 9.7.25 அன்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டது. ஒருதலைப்பட்சமானது. இதனை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம்போல நமது சேவை தொடரும்.

இடதுசாரிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக விலைபோனது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக சீர்கேடு குறித்து இவர்கள் பேசியதில்லை. போக்குவரத்து, கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை என பல துறைகளும் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால், மலிவான அரசியலால் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. எந்த பெரிய தொழில் நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் படித்த மாணவர்களுக்கு எந்த எதிர்காலம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உள்ளது. உள்கட்டமைப்பு மிகவும் பலகீனமாக உள்ளது.

மேலும் வருகின்ற தேர்தலை கணக்கில் கொண்டு, வெற்று அரசியல் காரணங்களுக்காக இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி தேசியத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக மக்களை திசைத்திருப்ப தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தொழில், சேவை வரியான ஜி.எஸ்.டி. என்பது தனித்து இயங்குவது, அதில் எல்லா மாநில நிதி அமைச்சர்கள் நிதி செயலாளர்கள் இடம்பெறுகிறார்கள். இவர்கள் கொண்டு வரும் கருத்துகள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு பெட்ரோல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பரிந்துரைக்கலாமே? அது குறித்து இந்த கம்யூனிஸ்ட்கள் ஏன் பேசுவதில்லை.

கம்யூனிஸ்ட்கள் தந்திரமானவர்கள், அவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கான காரணங்களில் ஒன்றில் கூட தமிழக மாநில அரசின் செயல்பாடு குறித்து எந்த விமர்சனங்களும் இல்லை.

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடுகிறார்கள். தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்டோ கட்டணம் சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆட்டோ தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு வாரியம் செய்ய வேண்டிய நல திட்டங்கள் குறித்து இதில் வலியுறுத்தவில்லை. மாறிவரும் சூழலால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டவில்லை.

எனவே, இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள். வருகின்ற தேர்தலில் மக்களை திசைத்திருப்பி அரசியல் லாபம் பெற தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை தொழிலாளர்கள் உணர வேண்டும். இந்த தேவையற்ற வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

நாளை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மக்களுக்கான சேவை தொடரும். அதற்கு தக்க பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள், காவல்துறையினர் உறுதிபடுத்த வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி இந்து ஆட்டோ முன்னணி சங்கம் செயல்படும், அதற்கு மக்களின் நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் நவீன பெட்டிகள்; பயணிகள் வரவேற்பு!

IMG 20250708 WA0001 - 2026

கொல்லம் – செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம், கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் எல்ஹெச்பி ரேக்காக மாற்றப்பட்ட எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர். பயணிகள் சங்கத் தலைவர் அட்வ. என். சந்திரமோகன் மற்றும் புரவலர் என்.பி. ராஜகோபால் ஆகியோர் புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் லோகோ பைலட்டுகளுக்கு ஹரபர்பணம் வழங்கி, ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

சங்க நிர்வாகிகள் திபு ரவி, அஜிஷ் புன்னாலா, எஸ். லீ, சுமேஷ் எஸ், ரமேஷ் அவனூர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வரவேற்புக்கு தலைமை தாங்கினர்.

கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் வழக்கமான ரயிலில் எல்ஹெச்பி ரேக் பெறுவது இதுவே முதல் முறை.

மீட்டர் கேஜ் காலத்தில் கொல்லத்திலிருந்து நாகூர் வரை தினமும் இயக்கப்பட்ட இந்த ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் இந்த புதிய பெட்டிகளுக்கு வரவேற்பு தெரிவித்தனர். 07.07.25 இரவு முதன்முதலாக LHB பெட்டிகளுடன் செங்கோட்டைக்கு வந்த எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயிலை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க சார்பில் பொருளாளர் & DRUCC உறுப்பினர் சுந்தரம் PRO ராமன் உறுப்பினர் சங்கர் ஆகியோர் வரவேற்று லோகோ பைலட் அசிஸ்டண்ட் லோகோ பைலட் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

சாதுர்யமான சதுரங்க ஆட்டம்!

modi in brics - 2026

பிரமாண்ட இந்திய முன்னெடுப்புகள்!

பாரதப் பிரதமராக திரு நரேந்திர மோடியின் இந்த மூன்றாவது பதவி காலத்தில் யாராலும் கற்பனை செய்ய இயலாத விஷயங்களை முன்னெடுத்து வருகின்றார் அவர்.

தனது ராஜதந்திர ராஜாங்கம் மூலம் ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே கடிவாளம் போட நினைக்கிறார். டாலர் தேசத்தின் மூக்கனாங்கயிறு நம் இந்திய தேசத்திடம் வர இருக்கிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து அவர் இந்திய நலனை தாண்டி, தன் நலன் கருதி மிக சாதுர்யமாக காய் நகர்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் நம் தேசத்தை கொண்டு வர எத்தனிக்க… நம் இந்திய தரப்பில் ஆரம்ப காலத்தில் திணறினாலும் சமாளித்து கொண்டு எதிர் வினையாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

இது இவ்வாண்டு பட்ஜெட்டில் நன்றாக வெளிப்பட்டது. அமெரிக்க அதிபராக அவரது முன்னெடுப்புகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப வரி வருவாய் இனங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஆன போதிலும் ட்ரம்ப் விடாப்பிடியாக உணவு பொருட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட FMCG பிராடக்டிற்கு இந்திய சந்தையை திறந்த விட்டால் தான் ஆயிற்று என ஒற்றை காலில் நிற்க….. நம் இந்திய நிர்வாகம் தீர்த்து சொல்லி இருக்கிறார்கள்.

இந்திய நலனே பிரதானம் என அழுத்தம் திருத்தமாக சொல்லி விட… ட்ரம்ப் தனது முசட்டு தனத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் இதனை.

அவர் ஏற்கனவே அறிவித்திருந்த 25% சதவிகித வரிக்கு இடைக்கால தடை வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைய … இன்னமும் இருதரப்பிலும் இறுதி ஒப்பந்தம் ஏதும் கையெழுத்து ஆகவில்லை.

நம் இந்திய தேசம் வரையறுக்கப்பட்ட
தேதியை வைத்து என்ன செய்வது… நாங்கள் கேட்கும் எதற்கும் செவி சாய்க்காத போது….. என்கிறார்கள். போதாக்குறைக்கு உலக வர்த்தக மையத்தை தொடர்பு கொண்டு புகார் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள். இது டொனால்ட் ட்ரம்பை ஏகத்திற்கும் சீண்டி விட்டு இருக்கிறது என்கிறார்கள்.

நம் இந்திய தேசம், இப்படி தடாலடியாக சட்டத்திற்கு புறம்பாக வரி திணிப்பை வளர்ந்து வரும் தேசத்தின் மீது பிரயோகிப்பது எவ்வகையில் சரி என கேள்வி கேட்டு அதிரடித் திருக்கிறார்கள். இந்த வாதம் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

இருண்டு போன ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக பத்து சதவீத வரி என அறிவித்திருக்கிறார். இது அமெரிக்காவில் ஏகப்பட்ட புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறது.

போதாக்குறைக்கு எலான் மஸ்க் அவர் ஏற்கனவே அறிவித்திருந்த படி தனி கட்சி ஒன்றை தொடங்கி அதில் முக்கிய பதவியில் இந்தியர் ஒருவரை நியமிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் கிரிப்டோ கரன்சியை தவிர்த்து டிஜிட்டல் கரன்சியை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் பதவியேற்ற சமயத்தில் கிரிப்டோ கரன்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி பேசி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும்.

அடுத்ததாக ரஷ்யாவுடனான வர்த்தகம் மற்றும் நல்லுறவை மறுபரிசீலனை செய்ய அவசியம் என்ன வந்தது என கேள்வி கேட்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆனால் அதேசமயம் ரஷ்யாவின் S500 மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்க விருப்பம் இல்லை என்று தடாலடியாக அறிவித்தும் விட்டார்கள்.

எங்கள் தேவை பட்டியலில் இது இல்லை என்கிறார்கள். அமெரிக்கா அறிவித்த 500% வரி பற்றி கவலை இல்லை என்றும் சொல்லிவிட… ட்ரம்ப் புலம்ப ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

அதாவது இந்தியா, தனது தேவை மற்றும் தேச நலனுக்கு மாத்திரமே முன்னுரிமை என வெளிப்படையாக அறிவித்திருப்பதாக பலரும் இதனை அவதானிக்கிறார்கள்.

மேற்சொன்ன இவையெல்லாம் ஒரு புறம் இருக்க….. இந்திய தேவைகளை அமெரிக்கா பூர்த்தி செய்து கொடுக்க.. அது சொல்வதை இந்தியா கேட்க வேண்டும் என விரும்புகிறது.

அதற்கு வாய்ப்பு இல்லை ராசா என நம்மவர்களும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அது தான் பொறுக்கவில்லை அதற்கு.

அப்படி என்ன இந்தியாவிற்கு அது செய்து கொடுக்க…. அல்லது துணை நிற்க விரும்பியது…????

இதற்கு நம் இந்திய தேசத்தின் நகர்வுகளை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட கால நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் ஒன்று….. தலாய் லாமாவின் கோரிக்கை. பல தசாப்தங்களாக இது தொடர்கிறது.
நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவராக அவர் இருக்கிறார். திபெத்திய லாமாக்களின் தலைவராகவும் அவரே நீடிக்கிறார்.

தீபெத் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக நம்ப வைக்க பட்டாலும் அது சீனாவின் வல்லாதிக்கத்தின் கீழ் இயங்குகிறது என்பதே நிஜம்.
இவரது தொன்னூறாவது வயது பூர்த்தியை கடந்த வாரத்தில் உலகமே கொண்டாடியது.

இவரது கோரிக்கையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்….. அதற்கு பதிலாக அக்ஷை சின் பிராந்தியத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஆளாளுக்கு யோசனை சொல்லிக் கொண்டு நிற்கிறார்கள்.

நம் இந்திய தரப்பில் இதற்கான முன்னெடுப்புகள் நீண்ட கால நோக்கில் செயல்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.

இந்த இடத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்து திபெத் தன்னாட்சிப் பிரதேசம் என்பதாக ஏற்றுக் கொண்டதாக தலாய் லாமாவே அதன் தலைவர் என்பதாக ஒப்புக் கொண்டதாக கூறி சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை வாசித்திருக்கிறார்கள்.

இது வெளிப்புற பார்வையில்…..
உள்ளூர அங்கு முகாமிட நோட்டம் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள். இந்தியா இதற்கு மசியவில்லை.

காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் நம் இந்திய தேசத்திற்கே சொந்தம் என்பதை ஆவணங்கள் அடிப்படையில் நிரூபித்து விட…. பாகிஸ்தான் வசம் அவர்கள் ஆக்ரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்டெடுக்க அமெரிக்க உதவி தேவைப்படும் என சகுனம் பார்த்து நிற்க…… அதெல்லாம் அப்படி ஒன்றும் தலைபோகிற அவசரம் இல்லை சடுதியில் பின் வாங்கி இருக்கிறார்கள் நம்மவர்கள்.

ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் குறைந்த பட்சம் இந்த இடங்களையாவது நாம் மீட்டெடுத்து இருக்க வேண்டும் என நம் தேசத்து மக்கள் பலரும் விரும்பியதாக புலனாய்வு தகவலும் அரசுக்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும் நம் இந்திய அரசு அவசரப் பட வேண்டாம் என்கிற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்றனர்.

அதற்கு காரணம் அமெரிக்க தலையீடு தான். பாகிஸ்தான் உடைந்தால் அதன் கடன் சுமையை நம் இந்திய தேசம் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

தவிர ஐநாவின் கண்காணிப்பில் அவர்களின் கூட்டு ராணுவம் மிச்ச சொச்சம் இருக்கும் பகுதியில் நிலை நிறுத்தப்படும் என்றனர்.

இது தேவையற்ற செலவினங்களை கொண்டு வரும் என்பதால் நம் இந்திய தரப்பில் ஏற்கவில்லை என்கிறார்கள்.

இவையெல்லாம் தாண்டி…….
விண்வெளியில் சீனா சர்வதேச நிலையத்தை கட்டமைப்பதோடு உலகின் அதி உணர் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை நிலை நிறுத்த முழு மூச்சாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள்…. இது மேற்கு உலக நாடுகளை பதைபதைக்க வைத்திருக்கிறது.

இன்று இல்லாவிட்டாலும் நாளை நம் இந்திய தரப்பில் இருந்து சீனாவிற்கோ அல்லது ஆப்பிரிக்க நாடுகளுடனோ வர்த்தகம் வலுப்பெற்று மேற்கு உலக நாடுகளில் தலைமை பீடமாக விளங்கும் அமெரிக்கா தனிமை பட நேரிடுமே என இப்போதே பயப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.

இதற்கு நம் இந்திய தரப்பில் இருந்து ஒரு நகர்வு தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தியா…… ஐந்தாம் தலைமுறை விமானங்களில் ஆர்வம் காட்ட வில்லை. ஆனால் அதி நவீன ஏவுகனை தொழில்நுட்ப பண்புகளில் முன்னோடியாக விளங்குகிறார்கள்.
அதுபோலவே வான் பாதுகாப்பு சாதனங்களில் பட்டையை கிளப்புகிறார்கள்.

இவை இரண்டுமே இந்திய தேசத்தை பல மடங்கு பலமுள்ளதாக மாற்றி இருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தவே விமானங்கள் மற்றும் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காதிருக்க அதி நவீன போர் விமானங்கள் தேவை. ஆனால் இவற்றையெல்லாம் இந்திய தரப்பில் அதி நவீன ஏவுகணைகள் கொண்டே சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு உலக அளவில் அதி நவீன அதி உச்ச தொழில்நுட்ப பண்புகளை கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை கனமான குண்டு வீச்சு விமானங்களில் கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் நடைமுறை சாத்தியம் மட்டுமே இருக்க…… இந்தியா மாத்திரமே அதனை ஏவுகணை கொண்டு செலுத்தும் தொழில்நுட்ப பொறிமுறையில் வெற்றி கண்ட ஓரே நாடாக விளங்குகின்றது.

இது நம்மில் பலருமே அறிந்திராத விஷயம்.

இவையெல்லாம் வல்லரசு கனவு கண்டு கொண்டு இருக்கும் அமெரிக்கர்களுக்கு ஏற்கவில்லை.

நம்மவரோ விடாமல் சுழன்று சுழன்று பதம் பார்த்து வருகிறார்.

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த பத்திரிகை துணுக்கு செய்தி ஒன்றில்..
சீனா இந்தியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்….. என்கிற தொனியில் கார்டூன் வரைபடம் ஒன்று மீண்டும் உலா வர ஆரம்பித்திருக்கிறது. பார்க்க படம் கீழே……

அதனை ஒட்டியே உலக நடப்புகள் இருப்பதாக மேற்கு உலக நாடுகளில் பலரும் வெளிப்படையாக புலம்பவே ஆரம்பித்து விட்டார்கள்.

டொனால்ட் ட்ரம்பே இருந்த பெயரை தக்க வைக்க முடியுமா என விட்டதை அவ்வப்போது முறைத்து பார்த்து கொண்டு வருகின்றார் என்கிறார்கள் அவரது அமைச்சரவை சகாக்கள்…..

மாறாக மறுமுனையில் நம் இந்திய தேசம் அனைத்திலும் ஆழமான வேர் பிடித்து வளர எத்தனித்து வருகிறது .
ஆம்…… இன்று உள்ள நிலையில் உலக அளவில் சீனாவின் அதிநவீன தொழில்நுட்ப பண்புகளை தொட்டுவிடும் தூரத்தில் இல்லை…. துரத்தி பிடிக்கும் தூரத்தில் ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கொண்டு விடுவோம்.

  • ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

இன்று முதல் LHB கோச்சிங் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி..

IMG 20250627 WA0501 1 - 2026

இன்று முதல் சிவப்பு நிற அதிநவீன LHB பெட்டிகளுடன் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி (16361/16362)! தனது பயணத்தை புது பொலிவுடன் துவக்கியுள்ளது.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவுவண்டி (16361/16362) வழி கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபத்தூர் சிவகாசி 07.07.2025 இன்று முதல் பல்வேறு வசதிகளுடன் கூடிய LHB பெட்டிகளுடன் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16361/16362) இயக்கப்படுகிறது.

மலை வழியாக முதன் முதலாக அதிநவீன எல்ஹெச்பி பெட்டிகள் இயக்கப்படுகிறது இதுவே முதல் முறையாகும்.இதுவரை மலை வழியாக சுற்றுலா ரயில் மற்றும் தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயில் மட்டுமே இந்த ரக பெட்டிகளும் இயக்கப்பட்டது. கேரளா ரயில் நிலையங்களில் நடை மேடை நீளம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிகள் முடிந்ததும் 22பெட்டிகளுடன் எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் தினசரி ரயிலாக‌இயக்க வாய்ப்பு உள்ளது என கேரளா எம்பி கொடி குன்னில் சுரேஷ் தெரிவித்திருந்தார்.

பயணிகள்தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்து உள்ள நிலையில் இதே போன்று கொல்லம் சென்னை கொல்லம் வழி புனலூர் செங்கோட்டை மதுரை ரயில் செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில்களிலும் LHB பெட்டிகள் இணைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லம் – செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம், கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் எல்ஹெச்பி ரேக்காக மாற்றப்பட்ட எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று வரவேற்றனர். பயணிகள் சங்கத் தலைவர் அட்வ. என். சந்திரமோகன் மற்றும் புரவலர் என்.பி. ராஜகோபால் ஆகியோர் புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலின் லோகோ பைலட்டுகளுக்கு ஹரபர்பணம் வழங்கி, ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

சங்க நிர்வாகிகள் திபு ரவி, அஜிஷ் புன்னாலா, எஸ். லீ, சுமேஷ் எஸ், ரமேஷ் அவனூர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வரவேற்புக்கு தலைமை தாங்கினர்.

கொல்லம் – செங்கோட்டை வழித்தடத்தில் வழக்கமான ரயிலில் எல்ஹெச்பி ரேக் பெறுவது இதுவே முதல் முறை.

மீட்டர் கேஜ் காலத்தில் கொல்லத்திலிருந்து நாகூர் வரை தினமும் இயக்கப்பட்ட இந்த ரயிலை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்..

FB IMG 1751872354532 - 2026

உலகளவில் மிகவும் பிரபலமான முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் இன்று திங்கட்கிழமை காலை மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் பகல் 2மணி முதல் தரிசனம் செய்ய நிர்வாகம் அனுமதிக்கிறது. குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, வானில் கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டு கோயிலின் ராஜகோபுரத்தின் மீது வந்து அமர்ந்தது. இது அங்கிருந்த பக்தர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. முருகனே வந்ததாக பரவசமடைந்தனர். கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதை தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. மேலும் இது ஒரு தெய்வீக நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்தனர்.

முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.

திருக்​கல்​யாண மண்​டபத்​தில் நேற்று முன்​தினம் மாலை முதல் பெரு​மாளுக்கு தனி​யாக 5 ஹோம குண்​டங்​கள் வைத்​து, பட்​டாச்​சா​ரி​யார்​கள் தலை​மை​யில் யாக​சாலை பூஜை தொடங்​கியது. இன்று (ஜூலை 7) அதி​காலை 4 மணிக்கு 12-ம் கால யாக​சாலை பூஜைகள், மகா தீபா​ராதனை நடை​பெறுகின்​றன. பின்​னர், யாக​சாலை​யில் இருந்து கும்​பங்​கள் கோயில் கோபுர விமான கலசங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டது.

இன்று காலை 6 30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது

அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷே க நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் பங்கேற்று தரிசனம் செய்தார். முன்னதாக சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று திருச்செந்துார் வந்தடைந்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் தரப்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா மஹாலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜையை அவர் நடத்தினார். பின்னர், கீழரதவீதியில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்ற சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

கும்பாபிஷேக விழாவை கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, வானில் கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டு கோயிலின் ராஜகோபுரத்தின் மீது வந்து அமர்ந்தது. இது அங்கிருந்த பக்தர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. முருகனே வந்ததாக பரவசமடைந்தனர். கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதை தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. மேலும் இது ஒரு தெய்வீக நிகழ்வாக கருதப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பகல் 2மணிக்கு பிறகு மூலஸ்தானத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சங்கராசார்யர், ஆதினங்கள் பங்கேற்க, பக்தர் திரளில் திருச்செந்தூர் கும்பாபிஷேகம் கோலாகலம்!  

tiruchendur murugan temple kumbabishekam - 2026

முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் ஜூலை 7 திங்கள் இன்று காலை 6 30 மணி அளவில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில், சிருங்கேரி சங்கராசார்யர், சைவ ஆதினங்கள் கலந்து கொள்ள, தமிழகம் மட்டுமல்லாது பிற இடங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்று தரிசித்தார்கள். 

ஜூன் 26 அன்று, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஜூலை 1 மாலை யாகசாலை பூஜைகள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில்  தொடங்கி  நடைபெற்றன. இதற்காக யாகசாலை ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டது.  இந்த யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன. 

திருச்செந்தூர் சீரலைவாய் ஆலயத்தில் சயனித்த கோலத்தில் அருளும் செந்தில் கோவிந்தர் சந்நிதிக்காக, திருக்​கல்​யாண மண்​டபத்​தில் நேற்று முன்​தினம் மாலை முதல் தனி​யாக 5 ஹோம குண்​டங்​கள் வைத்​து, பட்​டாச்​சா​ரி​யார்​கள் தலை​மை​யில் யாக​சாலை பூஜைகள் நடைபெற்றன. 

இந்நிலையில், இன்று அதி​காலை 4 மணிக்கு 12-ம் கால யாக​சாலை பூஜைகள் நடைபெற்று, மகா தீபா​ராதனையுடன் நிறைவுற்று யாக​சாலை​யில் இருந்து தீர்த்த கும்​பங்​கள் கோயில் கோபுர விமான கலசங்​களில் அபிஷேகத்துக்காக எடுத்​துச் செல்​லப்​பட்டன. தொடர்ந்து இன்று காலை 6 30 மணி அளவில் சண்முகர், ஜயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கப் பெருமான், நடராஜர், உள்வெளி பரிவார மூர்த்தி ஸ்வாமிகளின் சந்நிதிகள் உள்பட அனைத்து சந்நிதிகள், ராஜகோபுரம் ஆகியவற்றில் உள்ள கலசங்களில் பூஜிக்கப்பட்ட நன்னீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்த கும்பாபிஷேக வைபவத்தில் சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள், சைவ ஆதினங்கள் ஆகியோர் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பாபிஷேக விழாவினைக் காண கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டிய கடற்கரையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் எங்கும் முழங்க கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது. 

முன்னதாக, இந்தக் கும்பாபிஷேக வைபவத்தைக் காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12 மணிக்குப் பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வைக் காண நகர் முழுதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. 

கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Ind Vs Eng Test: இளம் படையின் சாதனை வெற்றி

Ind vs eng test - 2026

இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட், பர்மிங்ஹாம், ஜூலை 2 முதல் 6 வரை


முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்தியா முதல் இன்னிங்கிங்க்ஸ் (151 ஓவர்களில் 587, ஷுப்மன் கில் 269, ஜதேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாஷிங்க்டன் சுந்தர் 42, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, ஷோயப் பஷீர் 3/167, வோக்ஸ் 2/81, ஜோஷ் டாங் 2/119, கார்சே 1/83, ஸ்டோக்ஸ் 1/74), இரண்டாவது இன்னிங்க்ஸ் (83 ஓவர்களில், 427/6 டிக்ளேர்ட், ஷுப்மன் கில் 161, ஜதேஜா 69, ரிஷப் பந்த் 65, கே.எல் ராகுல் 55, ஜெய்ஸ்வால் 28, கருண் நாயர் 26, ஜோஷ் டாங் 2/93, ஷோயிப் பஷீர் 2/119, கார் சே 1/56, ஜோ ரூட் 1/65)

இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (89.3 ஓவர்களில், ஜேமி ஸ்மித் 184, ஹாரி ப்ரூக் 158, ஜோ ரூட் 22, க்ராவ்லி 19, முகமது சிராஜ் 6/70, ஆகாஷ் தீப் 4/88) இரண்டாவது இன்னிங்க்ஸ் (68.1 ஓவர்களில் 271 ஆல் அவுட், ஜேமி ஸ்மித் 88, கார்சே 38, ஸ்டோக்ஸ் 33, பென் டக்கட் 25, ஓலி போப் 24, ஹாரி ப்ரூக் 23, ஆகாஷ் தீப் 6/99, முகமது சிராஜ் 1/57, பிரசித் கிருஷ்ணா 1/39, ஜதேஜா 1/40, சுந்தர் 1/28). இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அற்புதமானதொரு வெற்றிபெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது அதுவும் SENA நாடொன்றில் வெற்றி பெறுவதென்பது மகழ்வான விஷயம்தான் SENA நாடுகள் என்றால் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை. இவை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுபவை. அதுவும் இந்திய அணியில் முன்னனி பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் நம் அணி சாதித்துதான் இன்னுமே என்னால் நம்ப முடியாமல் ஆச்சர்யமான விஷயம். 

டாஸ் வென்று இங்கிலாந்து, இந்தியர்களை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழக்க ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 87 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்து கருண் நாயர் 31 ரன்கள் எடுக்க, அடுத்து விரிந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு அற்புதமான நிகழ்வு. இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில்லின் இரட்டைச் சதம். என்ன ஒரு அருமையான பேட்டிங். ஆர்பாட்டமில்லாத அமைதியான ஆனால் எதிர் அணியின் பந்துவீச்சு முதுகை மொத்தமாக முறித்து போட்டதொரு பேட்டிங் இது. 269 ரன்கள். ஜடேஜாவின் அற்புதமான 89 ரன்கள் மற்றும் சுந்தரின் 42 ரன்களுடன் இந்தியா 587 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜின் அற்புதமான பந்து வீச்சில் வெறும் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, ஸ்மித் (184 ரன்கள்) மற்றும் புரூக்ஸ் (158 ரன்கள்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங்னால் தான் 407 ரன்களையாவது எடுக்க முடிந்தது. சிராஜ் (6 விக்கெட்டுகள்) மற்றும் ஆகாஷ் தீப் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் அற்புதமான பந்து வீச்சு இங்கிலாந்தின் பேட்டிங்கை ஊதி தள்ளியது.

180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுல் 51 ரன்கள் அடிக்க ஷுப்மன் கில் மீண்டும் தன்து அற்புதமான தொரு பேட்டிங்கை வெளிப்படித்தி 169 ரன்கள் அடித்தார். பந்த் 65 ரன்கள் மற்றும் ஜதேஜா இந்த இன்னிங்ஸிலும் அருமையாக ஆடி 69 ரன்கள் அடிக்க இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 427 ரன்கள் அடித்து 607 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளர் செய்தது. 

608 ரன்கள் என்கிற கடுமையான இலக்கை நோக்கிய இங்கிலாந்தின் பேட்டர்கள் நல்ல தொடக்கம் கிட்டியும் தொடர்ந்து சீரான இடைவெளியில் அவுட்டாக, அந்த அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SENA நாடு ஒன்றில் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது உண்மையிலேயே அற்புதமான விஷயம். ஆகாஷ் தீப் அற்புதமாக பந்து வீசி, இரண்டாவது இன்னிங்க்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எந்தவித வேரியஷனும் இல்லாத அருமையான ரோடு போல இந்த பிட்சும் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித உதவியும் அளிக்காத பிளாட் பிட்ச்சில் பும்ரா இல்லாத இந்திய வேகப் பந்துவீச்சு சாதித்தது உண்மையிலேயே பெருமையான விஷயம். இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது அளித்தது மிக சிறப்பானதொரு தேர்வு. ஆகாஷ் தீப் இந்த போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் எடுத்தது சிறப்பானதொரு விஷயம்.

ஒரே சமயத்தில் இந்திய அணி, இந்தியா ஏ அணி, இந்திய 19 வயதிற்குட்டோர் அணி, இந்தியப் பெண்கள் அணி என நான்கு அணிகள் இங்கிலாந்தில் பயணம் செய்கின்றன. ஒவ்வொரு அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. ஜூலை 4ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடந்த ஒரு டி20 போட்டியில் ஒந்திய பெண்கள் அணி இங்கிலாந்து பெண்கள் அணியை,  16.1 ஓவரில் 146 ரன் எடுத்திருந்த அணியை, 20 ஓவருக்குள் 171/9 என்ற ஸ்கோருக்குள் அடக்கினர். இது ஒரு உலக சாதனையாகும். 25 பந்துகளில் 7 விக்கட்டுகள் எடுத்தது ஒர் சாதனை. ஆனால் அந்த டி20 ஆட்டத்தில் இந்தியப் பெண்கள் அணி தோல்வியைச் சந்தித்தது. 

ஜூலை 5ஆம் தேதி நடந்த 19 வயதிற்குட்பட்டோர் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்துகளில் 143 ரன்கள் அடித்தார். இவர் 52 பந்துகளில் சதம் கடந்தது ஓர் உலக சாதனை. அவருடன் இணைந்து விஹான் மல்ஹோத்ரா 121 பந்துகளில் 129 ரன் அடித்து இரண்டாவது விக்கட்டிற்கு 219 ரன் சேர்த்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இவ்வாறு இந்திய அணிகள் இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு..

பிரசித்தி பெற்ற முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை காலை நடைபெற உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணியோடு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.நாளை கும்பாபிஷேகம் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்க ட்ரோன் ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 20 இடங்களில் பெரிய அளவிலான ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது.

1000812341 - 2026

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடக்கிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணியோடு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 இடங்களில் மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்

கும்பாபிஷேகம் நடக்கும்போது முக்கிய பிரமுகர்கள் உட்பட 1,200 பேர் மட்டுமே கோவிலுக்கு மேல் பகுதியில் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கோவில் வளாகத்தில் இருந்து அய்யா கோவில் வரை கடற்கரையோரம் பக்தர்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1000812331 - 2026

கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுவது வழக்கம். இந்த முறை ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மொத்தம், 20 இடங்களில் பெரிய அளவிலான ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது. நீர் நிரப்பப்பட்ட ட்ரோன் கொண்டு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருச்செந்தூர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை ஜூலை 7..

1000812342 - 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்காக 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு

கோவிலில் திருமண மண்டபம், கலை அரங்கம், பூங்கா போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் சீரமைப்பு, பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து நாளை திங்கட்கிழமை ஜூலை மாதம் 7 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

300 கோடியில் புரணமைப்பு பணிகள்
இந்த குடமுழுக்கு விழாவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிக்கு வேதபாராயணம் மற்றும் திருமுறை விண்ணப்பம் பாடப்படும். மேலும் நாதசுர இன்னிசை கச்சேரியுடன் பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் பாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கந்தர் அனுபூதி உள்ளிட்டவை செந்தமிழ் வேதங்கள் நிகழ்வு நடைபெற உள்ளாதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.பொதுவாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வழக்கமான நாட்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

குறிப்பாக சஷ்டி தைப்பூசம் விசாகம் கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழக்கினை காண பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதற்காக தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு இணை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பாதுகாப்பு வசதிக்காக சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

அவசர சிகிச்சைக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர்கள் உணவருந்து வகையில் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் உணவுகள் அமைக்கும் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.சுமார் இந்த குடமுழுக்கு விழாவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக திருச்செந்தூருக்கு வரும் ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் ஜூலை எட்டாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எந்தவித சிரமமின்றி கோவிலுக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.

சாத்தூர் அருகில் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஒருவர் பலி..

1000812243 - 2026

சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 16க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்று பட்டாசு ஆலை விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலையில் இன்று சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. மேலும் இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

1000812244 - 2026


இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 16க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ளது.
இருவர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் கால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி யாரேனும் உயிரிழந்து உள்ளன என்பது குறித்து சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையா அல்லது பணி ஏதும் நடைபெற்றதா பட்டாசு வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு / தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசுத் தொழிலில் ஆபத்தான வெடி மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக 10× 10 விஸ்தீரணம் உள்ள அறையில் 4 வாசல்கள் அமைத்து 4 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும்.

இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குந்தவைக்குக் கொடுத்த ரூ பத்து லட்சத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி அற்றவர்களையும், 4 பேர் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையும் இத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். பயிற்சி அற்றவர்கள் செய்யும் தவறுகளும், சிறிய அறைகளில் பன்மடங்கு பணியாளர்கள் பணி செய்வதும் எளிதாக விபத்து ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் சின்னக் காமன்பட்டியில் ஏற்பட்ட விபத்தில் பத்து பேர் இறந்துள்ளனர்; இன்று ஏற்பட்ட விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள 32 அறைகள் தரைமட்டமாகி உள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்கிறது; அதனால் உயிரிழப்புகள் தொடர் நிகழ்வுகள் ஆகின்றன. இதனால் சிவகாசி நவீனக் கொலைக்களமா? எனக் கேள்வி எழுகிறது. பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வரையிலும் முறையான இழப்பீடுகள் வழங்கப்படாமல் பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒரு சில லட்சங்கள் பெறுவதே மிகக் கடினமாக உள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் பட்டாசு ஆலைகள் உண்டு. அந்நாடுகளில் சட்ட விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதால் விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால், நமது தேசத்தில் தொழிலாளர்களைப் பாதுகாக்க விதிமுறைகளை அமலாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுத் துறை அதிகாரிகள் ஊழலில் ஊறித் திளைப்பதால் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் போய் விடுகின்றன. எனவே இனிமேல் இது போன்ற விபத்துக்களைத் தடுக்க விதிமுறைகள் அமலாக்காத அதிகாரிகளைப் பொறுப்பாக்கி, கைது செய்து அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்; பட்டாசுத் தொழில்களும் பாதுகாக்கப்படும்.

இந்த நிலையில் இன்று சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார்.