Home Blog Page 86

முதல்வர் சொல்வதற்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் எத்தனை வேறுபாடு?!

IMG 20250701 WA0035 - 2026

அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது., என ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பழையூரில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு,
100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு பழையூர் கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதனிடையே, திருப்புவனத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற அஜித்குமார் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி காவல் நிலையமா? கொலை நிலையமா? என்ற பதாதைகளை ஏந்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
முதல்வர் விளக்கம் அளித்த போது விசாரணையின் போது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்கிறார்.
ஆனால் , முதல் தகவல் அறிக்கையில் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதில், கொடுமை என்னவென்றால் முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
18 இடங்களில் காயம் இருப்பதாக நீதியரசர் காயம் இருப்பதாக சொல்லுகிறார் .

முதல் தகவல் அறிக்கையில் தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து கீழே விழுந்து இறந்துவிட்டார் என சொல்கிறார்கள்.

அஜித்குமார் என்ற இளைஞரை அடித்து துன்புறுத்தும் போது அவர் எழுப்பிய அபாய குரலை அங்கு இருக்கும் பொதுமக்களே சொல்கிறார்கள்.
இன்று ஒரு சார்பு ஆய்வாளர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்
பட்டுள்ளது.


வேலியே பயிரை மேய்ந்தது போல அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.


இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி நான்கு பக்கத்தில் இருந்தும் வருகிறது, முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறாரே தவிர எதும் செய்யவில்லை.


இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் ஜூலை 7 ஆம் தேதி முதல் எழுச்சி பயணம் மேற்கோள்ள உள்ளார் .


எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நாட்டின் துயரங்களை எடுத்து சொன்னால் நேரலையை துண்டிக்கிறார்கள், மக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் பேரலையாக வரவேற்பதை முதல்வரால் தடுத்து நிறுத்த முடியாது., நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கண்துடைப்பாகி விட கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.

1000803005 1 - 2026

“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி. அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ. சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி க/பெ. கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38) த/பெ. ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 27) த/பெ. கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த வைரமணி (வயது 32) த/பெ. காந்தி உட்பட 8பேர் உயிரிழந்தனர் .

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்குசாமி (வயது 45), மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜா (வயது 28) ஆகிய 5 நபர்களுக்கு ிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் – கும்பாபிஷேக யாகசாலையில் பூஜைகள் துவக்கம்..

1000803081 - 2026


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும்.வரும்ஜூலை 7ஆம் தேதி வேத நாராயண முறைப்படி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் கோலாலகமாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த அறுபடை வீட்டிற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசிப்பது வழக்கம். 

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 7் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அன்றைய நாள்  6மணி கங்கு துவங்கி காலை 9மணி முதல் காலை 10.30 மணிக்குள் இந்த கும்பாபிஷேக விழா நடக்கிறது. 

குடமுழுக்கு விழா அறிவிப்பு வெளியானது முதலே திருச்செந்தூர் வழக்கத்தை விட கூடுதலாக களைகட்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும். யாகசாலை நடக்கும் இடம் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாகசாலை நடக்கும் இடத்தில் 5 தலை நாகம், முனிவர்கள், நந்தி சிலைகள் போன்ற பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பல  லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலில் நேற்று மூலவரான சுப்ரமணிய சுவாமிக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக நடத்தப்படும் யாகசாலை பூஜை 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாக சாலையில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முருகனை தரிசிப்பதற்கும், அவர்கள் வந்து செல்வதற்கு தோதாகவும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் கடற்கரைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ராஜகோபுரத்தைச் சுற்றி அர்ச்சகர்கள் கலசத்தை மேலே எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக நாளில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் கும்பம் அதாவது கலசம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அனைத்து கலசங்களிலும் புனித நீராக ஊற்றப்படும். குறிப்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் இந்த கலசநீர் ஊற்றப்படும் அந்த நிகழ்வை முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்துள்ளனர். 

கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக அவர்கள் அமரும் வகையில் 2 ஆயிரம் சதுர அடி கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 12 கால யாக பூஜையும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏதுவான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது கலசத்திற்கு ஊற்றப்படும் புனிதநீர் ல்ட்சக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட உள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் கோலாகலம்..

1000802513 - 2026

உலக பிரசித்தி பெற்ற பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூலை.23-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. ஜூலை 1 -ம் தேதி
9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்ரசபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கீழவீதி தேர்நிலையை அடைந்தன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு இருவருக்கும் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

ஆனித்திருமஞ்சன தரிசனம்:

ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜூலை .3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. ஜூலை.4-ம் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவத்து உற்சவம் முடிவடைகிறது

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து-7 பேர் பலி..

1000803005 - 2026

சாத்தூர் அருகே இன்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி 5 பேர் படுகாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள ஐந்து அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளின் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணி செய்ய தொடங்கிய நிலையில் உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வெடிவிபத்தினால் ஐந்து அறைகள் தரைமட்டமாகின இந்த வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்
மீட்பு பணியின் போது மேலும் சில சடலங்கள் கைப்பற்றிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகியதாக தெரியவருகிறது. மேலும் மருத்துவமனைக்குச் சென்ற ஒருவரும் பலியாகிய நிலையில் வலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஏழு பேர் இந்த வெடி விபத்தில் பலியாகியதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து சாதாரண நகர் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் பட்டாசு ஆலையின் மேலாளர் மற்றும் போர்ன் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவத்தில்

மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த வைரமணி

சூலக்கரையைச் சேர்ந்த லட்சுமி

  1. அனுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும்
  2. ராமமூர்த்தி
  3. ஓ கோவில்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மற்றும்
  4. ராமஜெயம் ஆகியோர் பலியாகினர்

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்..

1000801185 - 2026

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 8ந் தேதி நடைபெறும்.அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜூலை 8-ல் நடைபெறும் தேரோட்டத்திற்காக அந்த நாளில் உள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒனன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று திங்கட்கிழமை காலை கோலாகலமாக வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1000801181 - 2026

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பரவசத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, அடுத்த பத்து நாட்களுக்கு மாநகரையே விழாக்கோலமாக்க உள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆனித் திருவிழா நடவடிக்கைகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன

காலை மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, நெல்லையப்பர் கோவிலின் கம்பீரமான கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அழகிய அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணிப் பெரும் திருவிழா தேரோட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்; ஸ்டாலின் அரசுக்கு முற்றும் நெருக்கடி!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, “அவர் என்ன தீவிரவாதியா? தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்  தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. 

இதற்கு, அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா?, தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத போது இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்?  என்று,  எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 24 லாக் அப் மரணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது; அது பற்றிய விவரம் என்ன? என்று, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. இதை ஒரு மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்தது. இதை அடுத்து, இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறக் கூடும் என்று தெரிகிறது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் காரசார அறிக்கைகளை வெளியிட்டன. முக்கியமாக தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை பெரும் கவனம் பெற்றது.

மூடி மறைக்கும் திமுக., : அண்ணாமலை கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.

தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை. – என்று குறிப்பிட்டார் கு. அண்ணாமலை.

நயினார் நாகேந்திரன் கண்டனத்தில் கிளப்பிய சந்தேகங்கள்!

தமிழக பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே, பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்க்காணும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் “காவல்துறை அமைச்சர்” திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.

1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து “உண்மையை” வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?

6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?

9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! – என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட கண்டன அறிக்கை!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதுடன், மிகுந்த கண்டனத்திற்குரிய செயலுமாகும்.

காவல்துறையின் இந்த அராஜகப் போக்கினால் உயிரிழந்துள்ள திரு.அஜித்குமார், திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தற்காலிக ஊழியராக செயல்பட்டு வந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், செல்லும் வழியிலேயே அஜித்குமாரை கடுமையாக தாக்கியதாக அவரது சகோதரர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பாலியல் புகாரளிக்க வந்த பெண்களை இதே காவல் துறையினர் தாக்கியுள்ளார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகிறது. எனில், இந்தக் காவல்துறையினர் என்ன மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அரசு விளக்க வேண்டும். போலி வாக்குறுதிகளும் பொய் புரட்டுகளும் நிரம்பிய இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில், அதிகாரிகளும், காவல் துறையினரும் அதிகாரத்தை தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படுவது மிகப்பெரிய அவலம். பொம்மை முதல்வர் திரு.

@mkstalin அவர்களோ, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய காவல்துறையை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதன் விளைவு, அப்பாவி பொதுமக்கள் காவல்துறையின் துன்புறுத்தலால் உயிரிழக்கின்றனர். தற்போது நடந்துள்ள இந்த மரணத்திற்கு என்ன சொல்ல போகிறார் என்பது முதல்வருக்கே வெளிச்சம். அதேசமயம், காவல்துறை அதிகாரிகளும் சரி, ஏனைய துறை சார்ந்த அதிகாரிகளும் சரி, தாங்கள் அனைவருமே பொதுமக்களுக்கு சேவை புரிவதற்கு மட்டுமே. தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் செல்வாக்கையும், அப்பாவி பொதுமக்கள் மீது அடக்குமுறையாக செலுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்ற நிலை தலைகீழாய் மாறி, காவல்நிலையம் சென்றாலே மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை தற்போது உருவாகி வருவது வேதனை அளிக்கிறது. மேலும், அப்பாவியான திரு.அஜித்குமார் மரணத்திற்கு தமிழக காவல்துறையும், தமிழக அரசும், தார்மீகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென்று முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்..!

ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? : எடப்பாடி பழனிசாமி

சிவகங்கையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரண விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கண்டனத்தில், “ஜெய்பீம் படம் பார்த்தேன்; உள்ளம் உலுக்கியது என சினிமா விமர்சனம் எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்?; நேரடி கட்டுப்பட்டில் உள்ள காவல் துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு கண்டனம். மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும்! : அன்புமணி

    “திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை – மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும்!” என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

    சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது, ’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்.

    திருவேடகம் சதுர்வேத கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம்!

    thiruvedagam mandalabishekam - 2026

    மதுரை, திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து சென்றனர்.

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில். கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    கோவில் முன்பு யாக வேள்வி நடைபெற்று, நந்தி பகவானுக்கு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சதுர்வேத கணபதிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது . தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .

    இதில் ,திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து சென்றனர்.


    ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம்!

    அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்றார்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில்வீடு, கிடை மாட்டுத் தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நேற்று கணபதி பூஜையுடன் முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சியினை தொடங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    நேற்று காலை இரண்டாம் கால யாக நிகழ்ச்சி தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து அதிர் வேட்டுக்கள் மேளதாளம் முழங்க பக்தர்களின் விண்ணதிரும் கரகோஷத்துடன் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவிலின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் அறுசுவை அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தொடங்கி வைத்து உணவு அருந்தினார் மதுரை மேற்கு தெற்குஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    வளர்பிறை பஞ்சமி விழா!

    மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமியை , ஒட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், அர்ச்சணைகள் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கேரளா கொட்டியூர் மகாதேவர் கோயில் உற்சவம் ஜூலை 4இல் நிறைவு

    1000799334 - 2026

    கேரளா பிரசித்தி பெற்ற கொட்டியூர் மகாதேவர் கோயில் உற்சவத்தில் மகம் நாளான நாளை திங்கட்கிழமை மதியம் வரை மட்டுமே பெண்கள் அக்கரே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் 30/06/30ஆ‌ம் மதியம் வரை மட்டுமே பெண்களுக்கு அனுமதி ஜூலை
    நான்காம் தேதி மதியம் வரை ஆண்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.இக்கோயிலில்
    மீண்டும் தரிசனம் செய்ய 11 மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும் அடுத்த வைஷாக மகோற்சவம் வரை என்பது குறிப்பிடத்தக்கது.

    கொட்டியூர் மகாதேவர் கோயில் கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது.உலகளவில் மிக பிரபலமான கோவிலலான இந்த ஸ்தலம்சலசலக்கும் பாவாலி நதிக்கரையில் அடர்ந்த காட்டின் மையத்தில் நடைபெறும் 28 நாள் விழாவான வைஷாக மஹோத்சவம், கேரளாவிற்கு தனித்துவமான ஒரு ஒப்பற்ற அனுபவத்தை வழங்குகிறது.

    கண்ணூர் மாவட்டத்தில், பாவாலி நதிக்கரையில் அமைந்துள்ள கொட்டியூர் கோயில்களான அக்கரே கொட்டியூர் மற்றும் இக்கரே கொட்டியூர் ஆகியவற்றால் நடத்தப்படும் இந்த விழா, கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். முதன்மை இடமான அக்கரே கொட்டியூர் கோயில், ஆண்டுதோறும் திருவிழா நாட்களில் மட்டுமே திறக்கப்படுகிறது, மலையாள மாதமான எடவத்தின் சோதி நட்சத்திரம் முதல் மலையாள மாதமான மிதுனத்தின் சித்திர நட்சத்திரம் வரை, பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வருகிறது.

    பக்தர்கள் ஆற்று கற்களால் ஆன மேடையில் வைக்கப்பட்டுள்ள சுயம்பு லிங்கத்தை (சிவனின் சுயமாக உருவாக்கப்பட்ட சிலை) வணங்குகிறார்கள், இது மணிதாரா என்று அழைக்கப்படுகிறது. வயநாட்டில் உள்ள முத்திரேரிகாவிலிருந்து ஒரு வாளைக் கொண்டு வருவதன் மூலம் நெய்யாட்டம் (நெய் ஊற்றுதல்) மூலம் சடங்குகள் தொடங்குகின்றன. ஒரு வசீகரமான சடங்கு ரோகிணி ஆராதனை, அங்கு பூசாரி சுயம்பு சிவலிங்கத்தைத் தழுவுகிறார். மற்றொரு குறிப்பிடத்தக்க சடங்கு எளநீர் வைப்பு, அங்கு பக்தர்கள் சுயம்பு லிங்கத்திற்கு முன் இளநீர் வழங்குகிறார்கள். திருவிழா எளநீராட்டத்துடன் முடிவடைகிறது, அங்கு தலைமை பூசாரி சேகரிக்கப்பட்ட இளநீர் தேங்காயை சிலை மீது ஊற்றுகிறார்.

    கொட்டியூர் திருவிழா புராணங்களிலும் கலாச்சார மரபுகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. புராணத்தின் படி, பண்டைய தக்ஷ யாகம் நடந்த இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. சிவனின் மனைவி சதி, யாக நெருப்பில் தன்னைத்தானே எரித்துக் கொண்டார், மேலும் அவரது மரணத்தால் கோபமடைந்த சிவன், வீரபத்திரனை உருவாக்கினார், அவர் யாகத்தை அழித்து தக்ஷனைக் கொன்றார். பின்னர், பிரம்மா மற்றும் விஷ்ணு உள்ளிட்ட கடவுள்கள் சிவனை சமாதானப்படுத்தினர், இது யாகம் மீட்டெடுக்கப்பட்டு, ஆட்டின் தலையுடன் உயிர்த்தெழுப்பப்பட்ட தக்ஷனுக்கு மோட்சத்தை வழங்கியது.

    திருவிழாவின் போது மட்டுமே திறக்கப்படும் அக்கரே கொட்டியூர் கோயில், அதன் முறையான அமைப்பு இல்லாததால் குறிப்பிடத்தக்கது, தெய்வம் இயற்கையான கல் மேடையில் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இக்கரே கொட்டியூர் கோயில் ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். சஹ்யா மலைத்தொடருக்கு மத்தியில் உள்ள கோயில்களின் அழகிய அமைப்பும், பாவாலி நதியின் மருத்துவ நீர் வளமும் திருவிழாவின் வசீகரத்தை அதிகரிக்கிறது.

    வைஷாக மஹோத்சவத்தில் ஏராளமான சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன, அவற்றில் முத்திரேரிகாவிலிருந்து வாள் கொண்டு வருதல், பந்தரம் எழுநல்லத் (மனாதன கிராமத்திலிருந்து கொட்டியூருக்கு தங்கம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு செல்வது), இளநீர் வைப்பு மற்றும் இளநீராட்டம் (சிலையின் மீது இளநீர் காணிக்கை செலுத்துதல் மற்றும் ஊற்றுதல்), ரோகிணி ஆராதனை (சுயம்பு சிவலிங்கத்தைத் தழுவும் பூசாரி), மற்றும் எழுநல்லிப்பு (யானைகள் சுமந்து செல்லும் சிவன் மற்றும் பார்வதி சிலைகளுடன் ஊர்வலம்) ஆகியவை அடங்கும். திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக யானைகளுக்கு உணவளிக்கும் ஆணையூத்து உள்ளது.

    மலையாள மாதமான எடவம் & மிதுனம் (மே-ஜூன்) மாதங்களில் கொண்டாடப்படும் வைஷாக மஹோத்சவம், 100,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது, இது கேரள கலாச்சார நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகிறது. ஆன்மீக உற்சாகம், துடிப்பான சடங்குகள் மற்றும் அதன் சூழலின் இயற்கை அழகு ஆகியவற்றின் கலவையான இந்த விழா பக்தர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு தனித்துவமான மற்றும் ஆழமாக வளப்படுத்தும் அனுபவத்தை வழங்குகிறது.

    25 கோடியாக இருந்தது, 2015க்குப் பின்… அரசு நலத் திட்டங்கள் 95 கோடி மக்களை நேரடியாகச் சென்றடைகிறது!

    manadhinkural - 2026
    #image_title

    மனதின் குரல் (123ஆவது பகுதி)
    ஒலிபரப்பு நாள்: 29-06-2025
    தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

    எனதருமை நாட்டுமக்களே! வணக்கம்.  மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள்.  நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!!  இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். 

    பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.  இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் சிறப்பாக, மேலும் விரிவானதாக வளர்ந்து கொண்டே செல்கிறது.  அதிகமானோர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே யோகக்கலையைத் தங்களுடையதாக்கி வருகின்றார்கள் என்பதையே இது அடையாளப்படுத்துகிறது.  இந்த முறை யோகக்கலை தொடர்பான சிந்தையைக் கவரும் பல காட்சிகளைக் காண முடிந்தது. 

    விசாகப்பட்டினத்தின் கடற்கரையில் மூன்று இலட்சம் மக்கள் குழுமி ஒன்றாக யோகம் பயின்றார்கள்.  விசாகப்பட்டினத்தின் மேலும் ஒரு அற்புதமான காட்சியையும் காண முடிந்தது, 2,000த்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள், 108 நிமிடங்கள் வரை, 108 சூரியநமஸ்காரங்களைச் செய்து காட்டினார்கள்.   சிந்தித்துப் பாருங்கள், எந்த அளவுக்கு ஒழுங்குமுறை, எத்தனை அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் அவர்களுக்கு!!  நமது கடற்படையின் கப்பல்களிலும் கூட யோகக்கலையின் பெரிய வெளிப்பாட்டை நம்மால் பார்க்க முடிந்தது.  தெலங்கானாவிலே 3,000 மாற்றுத் திறனாளி நண்பர்கள் ஒன்றாக இணைந்து யோகக்கலை முகாமில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  யோகக்கலையானது எவ்வாறு அதிகாரப்பங்களிப்புக்கான ஊடகமாக ஆக முடியும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். 

    தில்லிவாசிகள் யோகக்கலையை தூய்மையான யமுனை என்ற உறுதிப்பாட்டோடு இணைத்து, யமுனை நதியின் கரைகளுக்குச் சென்று யோகப்பயிற்சியை மேற்கொள்வதன் வாயிலாகச் செய்து காட்டினார்கள்.  உலகிலேயே மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலத்திலும் கூட மக்கள் யோகப்பயிற்சியை மேற்கொண்டார்கள்.  இமயத்தின் பனிமூடிய சிகரங்களும், இண்டோ திபேத்திய எல்லையோர ரோந்துப்படையின் வீரர்களும் எனும் போது அங்கும் கூட யோகக்கலையை இவர்கள் பயின்றார்கள், சாகசமும், பயிற்சியும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்தன.  குஜராத்வாசிகளும் கூட ஒரு புதிய வரலாற்றினைப் படைத்தார்கள்.  வட்நகரில் 2121 மக்கள் ஒன்றிணைந்து புஜங்காசனத்தைச் செய்து புதியதொரு பதிவினை ஏற்படுத்தினார்கள். 

    நியூயார்க், லண்டன், டோக்கியோ, பாரீஸ் என உலகின் அனைத்துப் பெருநகரங்களிலிருந்தும் யோகப்பயிற்சி பற்றிய காட்சிகள் கிடைத்தன, ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தன, நிலைத்ததன்மை மற்றும் சமச்சீர்நிலை.  இந்த முறைக்கான கருப்பொருளும் கூட மிகவும் சிறப்பானது, ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகக்கலை.  இது வெற்றுக் கோஷமல்ல, வசுதைவ குடும்பகம் அதாவது அனைவரும் ஓர்குலம் என்ற உணர்வினை நமக்குக் குறித்துக் காட்டும் ஒரு திசை இது.  இந்த முறை யோகக்கலை தினத்தின் விசாலத்தன்மை, யோகக்கலையை தங்களுடையதாக்கிக் கொள்ள அதிகபட்ச மனிதர்களிடம் உள்ளெழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது. 

    எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான்.  இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது.  இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. 

    இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது.  இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது.  எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.  பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன.  குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள்.  சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.  ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள். 

    நண்பர்களே, நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் புனிதப்பயணம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.  கைலாஷ் மானசரோவர் அதாவது, பகவான் சிவனின் புனிதத்தலம்.  இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் என அனைத்துப் பாரம்பரியங்களைச் சேர்ந்தோரும் கைலாசத்தை, சிரத்தை மற்றும் பக்திக்கான மையமாகக் கருதுகிறார்கள்.  நண்பர்களே, ஜூலை மாதம் 3ஆம் தேதியன்று அமர்நாத் புனித யாத்திரை தொடங்க இருக்கிறது, மழைக்காலப் புனிதமான மாதமும் வெகு தொலைவில் இல்லை. 

    சில நாட்கள் முன்பாக நாம் பகவான் ஜகன்நாதரின் ரத யாத்திரையையும் கண்டு பரவசப்பட்டோம்.  ஓடிஷாவாகட்டும், குஜராத்தாகட்டும், அல்லது தேசத்தின் எந்தவொரு மூலையாகட்டும், இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு என இந்த யாத்திரைகள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் பிரதிபலிப்புகள்.  நாம் சிரத்தை உணர்வோடு, முழு அர்ப்பணிப்போடு, ஒழுங்குமுறையைப் பின்பற்றி நமது புனித யாத்திரைகளை நிறைவு செய்யும்போது, அவற்றுக்கான பலன் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கின்றது.  புனிதப்பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து பாக்கியசாலி பக்தர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  யாரெல்லாம் சேவையுணர்வோடு இந்தப் பயணங்களை வெற்றிகரமாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குவதில் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கும் கூட நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

    எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் இப்போது உங்களோடு தேசத்தின் இரண்டு சாதனைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன், இவை உங்களுக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்தும்.  இந்தச் சாதனைகளைப் பற்றி உலக அமைப்புகள் விரித்துப் பேசுகின்றன.  உலக சுகாதார அமைப்பு- WHOவும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு- ILOவும், தேசத்தின் இந்தச் சாதனைகளைப் பற்றிக் கொட்டி முழக்கியிருக்கின்றன. 

    முதலாவது சாதனை நமது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.  உங்களில் பலர் கண்களோடு தொடர்புடைய நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், இதன் பெயர் ட்ராகோமா.  இந்த நோய் பாக்டீரியாவால் பரவுகிறது.  ஒரு காலகட்டத்தில் இந்த நோயானது தேசத்தின் பல பாகங்களில் பரவலாகக் காணப்பட்டது.  உரியநேரத்தில் இதை கவனிக்கவில்லை என்றால், மெல்லமெல்ல கண்களின் ஒளி மறைந்து போய்விடும்.  இந்த ட்ராகோமாவை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நாம் மேற்கொண்டோம். 

    பாரதத்தை ட்ராகோமாவிலிருந்து விடுதலை அடைந்த நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வது எனக்கு பேருவகையை அளிக்கிறது.  இப்போது பாரதம் ட்ராகோமாவிலிருந்து விடுபட்ட தேசமாக ஆகிவிட்டது.  சற்றும் சளைக்காமல், ஓய்ந்து போகாமல், தொடர்ந்து இந்த நோயோடு போராடி வெற்றிபெற்ற அனைவருடைய, இலட்சக்கணக்கானவர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன் இது.  இந்த வெற்றி நமது சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.  தூய்மை பாரதம் இயக்கமும் கூட இதற்கு முடிவுகட்ட பெரிய அளவில் உதவி புரிந்தது. 

    அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இயக்கமும் கூட இந்த வெற்றிக்குப் பெரும் பங்களிப்பை நல்கியது.  இன்று வீடுகள்தோறும் குழாய்வழி தூய்மையான குடிநீர் கிடைத்துவரும் வேளையில், இப்படிப்பட்ட நோய்களால் அபாயம் குறைந்து வருகிறது.  பாரதம் நோய்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் அவை ஏற்படும் அடிப்படைக் காரணிகளையும் ஒழித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பும் கூட இந்த விஷயத்தைப் பாராட்டியிருக்கிறது.

    mann ki baat manadhin kural - 2026
    #image_title

    நண்பர்களே, இன்று பாரதத்தின் பெரும்பாலான மக்கள் ஏதோவொரு சமூகப் பாதுகாப்பு ஆதாயத்தால் பலனடைந்து வரும் வேளையில், சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முக்கியமானதொரு அறிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது.  இந்த அறிக்கையில் என்ன கூறியிருக்கிறது என்றால், பாரதத்தின் 64 சதவீதத்திற்கும் அதிக மக்கள்தொகைக்கு ஏதோவொரு சமூகப் பாதுகாப்பு ஆதாயம் கிடைத்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது.  சமூகப் பாதுகாப்பு – இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்புகளில் ஒன்று.  இன்று தேசத்தின் சுமார் 95 கோடி மக்கள் ஏதோவொரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள், ஆனால் 2015 வரை, 25 கோடிக்கும் குறைவான பேர்களை மட்டுமே அரசு நலத்திட்டங்கள் சென்றடைய முடிந்தன.

    நண்பர்களே, பாரதத்தில் ஆரோக்கியம் தொடங்கி, சமூகப் பாதுகாப்பு வரை அனைத்துத் துறைகளிலும் செறிவுநிலை என்ற உணர்வை நோக்கி முன்னேறி வருகிறது.  இவை சமூகநீதியின் மிகச் சிறப்பான காட்சிகளாகும்.  இந்த வெற்றிகள் அளித்திருக்கும் நம்பிக்கை, இனிவரும் காலம் மேலும் சிறப்பாக ஆகும், அனைத்து அடியெடுப்பிலும் பாரதம் மேலும் சக்தியுடையதாய் ஆகும் என்பதுதான்.

    எனதருமை நாட்டுமக்களே, மக்கள் பங்களிப்பின் சக்தியின் துணையோடு, பெரியபெரிய சங்கடங்களை எதிர்கொள்ள முடியும்.  நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்கச் செய்கிறேன், இந்த ஒலிக்குறிப்பு சங்கடத்தின் பயங்கரத்தன்மையை உணரச் செய்யும்.  அந்தச் சங்கடம் எத்தனை பெரியது என்பதை அறிய, உணர முதலில் கேளுங்கள், புரிந்து கொள்ளுங்கள்.

    ஒலிக்குறிப்பு….. மொரார்ஜி பாய் தேசாய்

    [இந்தக் கொடுமை ஈராண்டுகள் வரை நடந்தது என்றாலும், 5-7 ஆண்டுகளாகவே இந்தக் கொடுமை தொடங்கி விட்டது.  ஆனால் ஈராண்டுகளில் அது உச்சகட்டத்தை எட்டியது; அப்போது அவசரநிலை மக்களின் மீது திணிக்கப்பட்டது, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன.  மக்களின் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டது, செய்தித்தாள்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இருக்கவில்லை.  நீதிமன்றங்கள் முழுமையாக சக்தியற்றவையாக ஆக்கப்பட்டன.  மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள், இஷ்டப்படியான காட்டாட்சி நடத்தப்பட்டது.  இதற்கு இணையான ஒரு எடுத்துக்காட்டு உலக வரலாற்றில் காட்டுவது கடினமான ஒன்று.]

    நண்பர்களே, இந்தக் குரல், தேசத்தின் முன்னாள் பிரதம மந்திரியான மொரார்ஜி பாய் தேசாய் அவர்களுடையது.  அவர் ரத்தினச்சுருக்கமாக, ஆனால் மிகவும் தெளிவான வகையிலே அவசரநிலைக்காலம் பற்றித் தெரிவித்திருக்கிறார்.  அந்தக் காலகட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை, நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  அவசரநிலைச் சட்டத்தை அமல் செய்தவர்கள், நமது அரசியலமைப்புச் சட்டத்தை மட்டும் படுகொலை செய்யவில்லை, மாறாக அவர்களின் நோக்கம் நீதிமன்றங்களையும் தங்களின் அடிமைகளாக, ஏவல்துறையாக ஆக்குவதுதான். 

    அந்த வேளையிலே, பொதுமக்கள் பெரிய அளவிலே கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள்.  இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன, இவற்றை எப்போதுமே மறக்க முடியாது.  ஜார்ஜ் ஃபர்னாண்டெஸ் ஐயா இரும்புத் தளைகளில் பூட்டப்பட்டார்.  பலர் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள்.  மிசா கொடுஞ்சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும்.  மாணவர்களும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.   கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெறித்துப் போடப்பட்டது.

    நண்பர்களே, அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொடுமைகள் புரியப்பட்டன.  ஆனால் பாரதநாட்டு மக்களின் வல்லமையால், அவர்கள் பணியவில்லை, உடையவில்லை, மக்களாட்சிக்கு எதிரான எந்த அடக்குமுறையோடும் சமரசம் செய்து கொள்ளவில்லை.   முடிவிலே இறைவர்களாகிய மக்களே வெற்றி பெற்றார்கள், அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது, அவசரநிலையைத் திணித்தவர்கள் தோற்றுப் போனார்கள்.  பாபு ஜகஜீவன் ராம் அவர்கள் இதைப் பற்றி மிகவும் சக்திவாய்ந்த முறையிலே தனது கருத்துக்களை முன்வைத்தார்.

    பாபு ஜகஜீவன் ராம் அவர்களின் ஒலிக்குறிப்பு

    [சகோதர சகோதரிகளே, கடந்த தேர்தல், வெறும் தேர்தல் அல்ல.  பாரதத்தின் மக்களுடைய ஒரு மகத்தான இயக்கம்.  அந்த வேளையின் சூழ்நிலைகளை மாற்றக்கூடிய யதேச்சாதிகாரப் போக்கில் திருப்பமேற்படுத்தும், பாரதத்தின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் பேரியக்கம்]

    அடல் அவர்களும் கூட அப்போது தனக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தக் கருத்துக்களை கண்டிப்பாக நாம் கேட்க வேண்டும் –

    அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் ஒலிக்குறிப்பு –

    [சகோதர சகோதரிகளே, தேசத்தில் நடந்தது, வெறும் தேர்தல் என்று நாம் கூறி விட முடியாது.  நடந்தது ஒரு அமைதியான புரட்சி.  மக்கள்சக்தியின் அலையானது, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியவர்களை, குப்பைக்கூடையில் வீசி எறிந்து விட்டது]

    நண்பர்களே, தேசத்தின் மீது அவசரநிலை திணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த தருணம் சில நாட்கள் முன்பு தான் கடந்தது.  அந்த நாளை நாம் அரசியலமைப்புப் படுகொலை நாளாகக் கடைப்பிடித்தோம்.  அவசரநிலைக் காலகட்டத்தின் போது உறுதிப்பாட்டோடு அதை எதிர்கொண்டவர்களை நாமனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  இதிலிருந்து நமது அரசியலமைப்புச் சட்டத்தை சக்தியுடையதாக வைத்திருக்கவும், தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்கவும், கருத்தூக்கம் கிடைக்கிறது. 

    என் மனம்நிறை நாட்டுமக்களே, நீங்கள் ஒரு காட்சியைக் கற்பனையில் கொண்டு வாருங்கள்.  காலையின் சூரியக்கதிர்கள் மலைகளை முத்தமிடுகின்றன, மெல்லமெல்ல வெளிச்சம் திறந்தவெளிகளை நோக்கி முன்னேறுகிறது, அந்த ஒளியோடு கூடவே முன்னேறுகிறது கால்பந்தாட்ட நேசர்களின் கூட்டம்.  சீட்டியொலிகள் கீச்சிடுகின்றன, சில கணங்களிலே மைதானமெங்கும் கரவொலிகளும், கோஷங்களும் எதிரொலிக்கின்றன.  ஒவ்வொரு பாஸ், ஒவ்வொரு கோல் போடப்படுவது கூடவே மக்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.   இது எந்த அழகான உலகம் என்று நீங்கள் யோசிப்பீர்கள் தானே?! 

    நண்பர்களே, அசாமின் ஒரு முக்கியமான பகுதியான போடோலேண்டின் இயல்பான காட்சி இது.  போடோலேண்ட் இன்று தனது புதிய வடிவோடு தேசத்தின் முன்பாக நடைபோடுகிறது. இங்கே இருக்கும் இளைஞர்களின் சக்தி, தன்னம்பிக்கை எல்லாம் கால்பந்தாட்ட மைதானத்தில் அதிக அளவில் காணக்கிடைக்கிறது.  போடோ பிரதேசத்தில், போடோலேண்ட் CEM கோப்பைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 

    இது வாடிக்கையான ஒரு போட்டி இல்லை, இது ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான உற்சவமாக ஆகிவிட்டது.  3,700க்கும் மேற்பட்ட அணிகள், கிட்டத்தட்ட 70,000த்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், இவர்களின் பெரும் எண்ணிக்கையிலே நமது சகோதரிகளின் பங்கெடுப்பு.  இந்தப் புள்ளிவிவரம் எல்லாம் போடோலேண்டின் பெரிய மாற்றக்காதையினை நம் காதுகளில் ஒலிக்கச் செய்கிறது.  போடோலேண்ட் இப்போது தேசத்தின் விளையாட்டு வரைபடத்தில் தனது பளிச்சிடுதலை மேலும் அதிகப்படுத்தி வருகிறது..

    mann ki baat2 - 2026

    நண்பர்களே, ஒரு காலத்தில் போராட்டங்களே இந்தப் பகுதியின் அடையாளமாக இருந்தது.  அப்போது இங்கிருந்த இளைஞர்களுக்கான பாதை குறுகியிருந்தது.  ஆனால் இன்றோ, அவர்களின் கண்களிலே ஒரு புதிய கனவு, இதயங்களில் தன்னம்பிக்கை ஒளிவிடுகிறது.  இங்கிருந்து வெளிவரும் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் இப்போது பெரிய நிலையில் தங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். 

    ஹாலிசரண் நார்ஜாரி, துர்கா போரோ, அபூர்ணா நார்ஜாரி, மன்பீர் பசுமதாரி என்ற பெயர்கள் எல்லாம் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அல்ல –  போடோலேண்டை மைதானத்திலிருந்து தேசிய மேடைக்கு இட்டுச் சென்ற புதிய தலைமுறையினரின் அடையாளங்கள்.   இவர்களில் பலர், குறைவான ஆதாரங்களின் துணையோடு பயிற்சிகளை மேற்கொண்டார்கள், பல கடினமான சூழ்நிலைகளில் தங்கள் பாதையை வகுத்தார்கள், இன்று இவர்களின் பெயர்கள், தேசத்தின் எத்தனையோ இளம் சிறார்களின் கனவுகளின் தொடக்கமாக விளங்குகின்றன.

    நண்பர்களே, நாம் நமது வல்லமையை விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், முதன்மையாக நாம் நமது உடலுறுதி, நல்வாழ்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியாக வேண்டும்.  அதே போல நண்பர்களே, உடலுறுதி எனும் போது, உடல் பருமனைக் குறைக்க என்னுடைய ஆலோசனை உங்களுக்கு நினைவிருக்கிறது இல்லையா!!  உணவில் 10 சதவீதம் எண்ணையைக் குறையுங்கள், உடல் பருமனை விரட்டுங்கள்.  நீங்கள் உடலுறுதியோடு இருந்தால், வாழ்க்கையில் நீங்கள் அதிக வெற்றியை அடைவீர்கள்.

    என் அன்புநிறை நாட்டுமக்களே, நமது பாரதம் தனது பிராந்திய, மொழிசார், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்காக அறியப்படுவதைப் போலவே, கலை, சிற்பம் மற்றும் திறன்களின் பன்முகத்தன்மையும் கூட நமது தேசத்தின் அழகுகளாகும்.  நீங்கள் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்கே ஏதோ ஒரு சிறப்பான, உள்ளூர் பொருளைப் பற்றிய தகவல் உங்களுக்குக் கிடைக்கும்.  நாம் அடிக்கடி மனதின் குரலில் தேசத்தின் இப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பொருள்களைப் பற்றிப் பேசி வருகிறோம். 

    இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் மேகாலயாவின் ஏரி சில்க் – ஏரிப் பட்டு. சில நாட்கள் முன்பு தான் இதற்கு ஜி.ஐ. டேக் – புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.  இந்த ஏரிப் பட்டு மேகாலயாவின் ஒரு மரபுச் சின்னத்தைப் போன்றது.  இங்கே இருக்கும் பழங்குடியினத்தவர்கள் குறிப்பாக காசி சமூகத்தவர்கள், பல தலைமுறைகளாகவே இதை போற்றி வந்திருக்கிறார்கள், தங்களுடைய திறனால் இதை மேலும் வளப்படுத்தி வந்திருக்கிறார்கள். 

    இந்தப் பட்டின் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன, இவை தாம் மற்ற துணிகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகின்றது.  இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இதை உருவாக்கும் வழிமுறை.  இந்தப் பட்டை அடைய உதவும் பட்டுப் புழுக்கள் கொல்லப்படுவதில்லை, ஆகையால் இதை அகிம்சைப் பட்டு என்றும் கூறலாம்.  இப்போதெல்லாம் உலகில் இப்படிப்பட்ட பொருட்களுக்கான தேவை விரைவாக அதிகரித்து வருகிறது, இவற்றிலே வன்முறையோ, இயற்கை மீது எந்த விதமான பாதிப்போ இருக்கக் கூடாது என்பவை அடங்கும்.  ஆகையால் மேகாலயாவின் ஏரிப் பட்டு, உலகச் சந்தைக்கு ஒரு செம்மையான பொருள்.  இதன் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்தப் பட்டு பனிக்காலத்தில் வெம்மையையும், கோடையில் குளிர்ச்சியையும் தரவல்லது.  இதன் இந்தச் சிறப்பம்சம் இதனை அதிக இடங்களுக்கும் அனுகூலமானதாக ஆக்குகிறது.  மேகாலயத்தின் பெண்கள் இப்போது சுயவுதவிக் குழுக்கள் வாயிலாகத் தங்களுடைய இந்த மரபுச் சின்னத்தை மேலும் பெரிய அளவிலே முன்னெடுத்து வருகிறார்கள். 

    ஏரிப் பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தமைக்கு நான் மேகாலயத்தின் மக்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்களும் ஏரிப் பட்டிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பாருங்கள், காதியாகட்டும், ஆங் அப்புறம்……. கைத்தறி-கைவினைப் பொருளாகட்டும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என இவற்றையும் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.  வாடிக்கையாளர்கள் பாரதத்தில் உருவாகும் பொருட்களை வாங்குங்கள், வியாபாரிகளும் பாரதத்தில் தயாராகும் பொருட்களையே விற்பனை செய்யுங்கள், அப்போது தான் தற்சார்பு பாரதம் இயக்கத்திற்கு புதிய சக்தி கிடைக்கும்.

    எனதருமை நாட்டுமக்களே, பெண்கள் வழிநடத்தும் முன்னேற்றம் என்ற மந்திரம் பாரதத்தின் புதிய எதிர்காலத்தைக் கட்டியமைக்கத் தயாராக இருக்கிறது.  நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள், இன்று தங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் புதிய திசையைக் காட்டி வருகிறார்கள்.  தெலங்கானாவின் பத்ராசலத்தைச் சேர்ந்த பெண்களின் வெற்றியைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்கள் மனதும் சந்தோஷப்படும். 

    இந்தப் பெண்கள் முன்னர் வயல்வெளிகளில் கூலிவேலை செய்து வந்தார்கள்.   அன்றாடத் தேவைகளுக்காக நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருந்தது.  இன்று இதே பெண்கள், சிறுதானியங்களைக் கொண்டு பிஸ்கட்டுகளைத் தயாரித்து வருகின்றார்கள்.  பத்ராதி மில்லட் மேஜிக் என்ற பெயர் கொண்ட இந்த பிஸ்கட், ஹைதராபாத் தொடங்கி லண்டன் வரை சென்றுவிட்டது.  பத்ராசலத்தின் இந்தப் பெண்கள், சுயவுதவிக் குழுவில் இணைந்து பயிற்சி பெற்றார்கள்.

    நண்பர்களே, மேலும் ஒரு பாராட்டுக்குரிய செயலை இந்தப் பெண்கள் செய்திருக்கிறார்கள்.  இவர்கள் கிரி சேனிட்டரி பேட்ஸைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  வெறும் மூன்று மாதங்களில் 40,000 பேடுகளைத் தயாரித்து, இவற்றைப் பள்ளிகள் மற்றும் அருகில் இருக்கும் அலுவலகங்களில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள், அதுவும் மிகவும் மலிவுவிலையில். 

    நண்பர்களே, கர்நாடகத்தின் கலபுர்கியைச் சேர்ந்த பெண்களின் சாதனையும் மிகச் சிறப்பானது.  இவர்கள் சோள ரொட்டியை ஒரு ப்ராண்டாகவே மாற்றி விட்டார்கள்.  ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஒவ்வொரு நாளும் 3,000த்திற்கும் அதிகமான ரொட்டிகளை தயாரித்து வருகிறார்கள்.  இந்த ரொட்டிகளின் மணம் இப்போது கிராமத்தோடு மட்டும் தேங்கிவிடவில்லை.  பெங்களூரூவில் ஒரு சிறப்பு முகப்பு ஏற்படுத்தப்பட்டு, இணையவழி உணவுத் தளங்களில் உணவு ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது.  கலபுர்கியின் ரொட்டி இப்போது பெருநகரங்களின் சமையலறைகள் வரை சென்றடைந்து வருகின்றது.  இதன் மிக அருமையான தாக்கம் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்டு இவர்களின் வருவாயும் அதிகரித்து வருகிறது. 

    நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் இந்தச் சம்பவங்களில் பல்வேறு முகங்கள் இடம் பிடித்தாலும், அவர்களின் மினுமினுப்பு ஒன்று போலவே இருக்கிறது.  இது தன்னம்பிக்கையின் மினுமினுப்பு, தற்சார்பின் தகதகப்பு.  இப்படிப்பட்ட ஒரு முகம்தான் மத்திய பிரதேசத்தின் சுமா உயிகே, சுமா அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.  இவர் பாலாகாட் மாவட்டத்தின் கடங்கி தொகுதியில், சுயவுதவிக் குழுவோடு இணைந்து காளாண் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கான பயிற்சியைப் பெற்றார்.  இதன் வாயிலாக தற்சார்புப் பாதையை இவர் வகுத்துக் கொண்டார்.   சுமா உயிகே அவர்களின் வருவாய் அதிகரித்த பிறகு இவர் தனது பணியை விரிவு செய்தார்.  சின்ன முயற்சியிலிருந்து தொடங்கிய இவருடைய பயணம் இப்போது தீதீ கேண்டீன் மற்றும் வெப்ப சிகிச்சை மையம் வரை விரிவடைந்துவிட்டது.  தேசத்தின் பல இடங்களிலிருந்தும் இப்படிப்பட்ட எண்ணற்ற பெண்கள் தங்களுடைய எதிர்காலத்தையும், தங்கள் தேசத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்துக் கொண்டு வருகிறார்கள். 

    என் மனம் நிறை நாட்டுமக்களே, கடந்த நாட்களில், வியட்நாம் தேசத்தைச் சேர்ந்த பலர் பல்வேறு வகைகளில் தங்களுடைய செய்தியை அனுப்பியிருந்தார்கள்.  இந்தச் செய்திகளின் ஒவ்வொரு பத்தியிலும் சிரத்தை இருந்தது, மெய்யின் உணர்வு பிரதிபலித்தது.  அவர்களின் உணர்வுகள் மனதைத் தொடும் வகையில் இருந்தன.  அவர்கள் பகவான் புத்தரின் பவித்திரமான சின்னங்களை தரிசிக்க முடிந்தமைக்கு, பாரதத்திற்குத் தங்களுடைய நன்றிகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  அவர்களின் சொற்களில் இருந்த உணர்வுகள், வாடிக்கையான நன்றிகளைத் தெரிவிப்பதைத் தாண்டியவையாக இருந்தன.

    நண்பர்களே, அடிப்படையில் பகவான் புத்தரின் இந்தப் பவித்திரமான சின்னங்கள், ஆந்திர பிரதேசத்தின் பால்நாடு மாவட்டத்தின் நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்தன.  இந்த இடத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது.  ஒரு காலத்தில் இந்த இடத்திற்கு இலங்கை மற்றும் சீனா உட்பட பல தொலைவான பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருக்கிறார்கள்.

    mann ki baat - 2026

    நண்பர்களே, கடந்த மாதம் பகவான் புத்தரின் இந்தப் புனிதமான அடையாளங்கள் பாரதத்திலிருந்து வியட்நாமிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கே ஒன்பது பல்வேறு இடங்களில் இவை தரிசனத்திற்காக மக்களுக்குக் காட்டப்பட்டன.  பாரதத்தின் இந்த முன்னெடுப்பு, ஒரு வகையில் வியட்நாமின் தேசியப் பெருவிழாவாக மாறியது.  அன்பர்களே, கற்பனை செய்து பாருங்கள்!!  சுமார் பத்து கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் ஒண்ணரை கோடிக்கும் அதிகமானோர், பகவான் புத்தரின் புனிதமான நினைவுச்சின்னங்களைக் கண்டார்கள்.  சமூக ஊடகத்தில் நான் கண்ட படங்களும், காணொளிகளும், சிரத்தைக்கு எந்த எல்லையும் இல்லை என்பதை எடுத்துக்காட்டியது.  குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் உணர்ச்சிவயப்பட்டுப் போனார்கள்.  வியட்நாமின் குடியரசுத் தலைவர், துணைப் பிரதமர், மூத்த அமைச்சர்கள் என அனைவரும் தலைவணங்கினார்கள்.  இந்த யாத்திரை தொடர்பாக அங்கிருப்போரிடம் இருந்த மரியாதை உணர்வு எந்த அளவுக்கு ஆழமானதாக இருந்தது என்றால், வியட்நாம் அரசாங்கம் இந்த தரிசனத்தை மேலும் 12 நாட்கள் நீட்டிக்க வேண்டுகோள் விடுத்தார்கள், பாரதமும் மிகவும் உவகையோடு இதை ஏற்றுக் கொண்டது. 

    நண்பர்களே, பகவான் புத்தரின் கருத்துக்களில் இருந்த சக்தி, தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மக்களை ஓரிழையில் இணைத்தது.   முன்னதாக பகவான் புத்தரின் புனிதமான நினைவுச் சின்னங்கள் தாய்லாந்து, மங்கோலியா ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கேயும் கூட இதே சிரத்தை நிறைந்த உணர்வு வெளிப்பட்டது.  உங்களுடைய மாநிலத்தில் இருக்கும் பௌத்த புனிதத் தலங்களுக்கு அவசியம் யாத்திரை மேற்கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன்.  இது ஒரு ஆன்மீக அனுபவமாக இருக்கும், கூடவே நமது கலாச்சார பாரம்பரியத்தோடு நாம் இணையும் ஒரு அழகான சந்தர்ப்பமாகவும் ஆகும்.

    எனதருமை நாட்டு மக்களே, இந்த மாதம் நாமனைவரும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடினோம்.  உங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான செய்திகள் எனக்குக் கிடைக்கப்பெற்றன.  தன்னந்தனியாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடுபட்ட நண்பர்களைப் பற்றியும், சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பின்னர் எப்படி தங்களையும் அவர்களுடைய முயற்சிகளோடு இணைத்துக் கொண்டார்கள் என்பதைப் பற்றியும் என, தங்களுக்கு அருகேயுள்ள நபர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.  அனைவரின் இந்தப் பங்களிப்பு, நமது மண்ணிற்கு பெரிய பலத்தை அளிக்கிறது.   புணேயின் ரமேஷ் கர்மாலே அவர்களின் செயல்களைப் பற்றி அறிந்தால் உங்களுக்கும் உத்வேகம் பிறக்கும்.  வாரக்கடைசியில் மக்கள் ஓய்வெடுக்கும் போது, ரமேஷ் அவர்களும் அவருடைய குடும்பத்தாரும் மண்வெட்டி-கடப்பாறைகளை எடுத்துக் கொண்டு பயணிப்பார்கள்.  எங்கே தெரியுமா?  ஜுன்னரின் மலைகளை நோக்கி.  வெயிலாகட்டும் அல்லது மலையேற்றமாகட்டும், அவர்களுடைய பயணம் தடைப்பட்டதில்லை.   அவர்கள் புதர்களை அகற்றுவார்கள், நீரைச் சேமிக்கக் குழிகளை வெட்டுவார்கள், விதைகளை நடுவார்கள்.  வெறும் இரண்டு மாதங்களிலே மட்டும் 70 குழிகளை ஏற்படுத்தினார்கள்.  ரமேஷ் அவர்கள், பல சிறிய குளங்களையும் உருவாக்கியிருக்கிறார், பல ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார்.  அவர் ஒரு பிராணவாயு பூங்காவையும் உருவாக்கி வருகிறார்.  இதன் விளைவாக, இங்கே பறவைகள் திரும்ப வர ஆரம்பித்திருக்கின்றன, வன உயிரினங்கள் புதிய சுவாசத்தை சுவாசிக்கத் தொடங்கியிருக்கின்றன.

    நண்பர்களே, சுற்றுச்சூழல் தொடர்பாக மேலும் ஒரு அழகான முன்னெடுப்பு என்றால், குஜராத்தின் அஹமதாபாத் நகரத்தில் காணமுடியும்.  இங்கே நகராட்சியின் ‘Mission for Million Trees’ மில்லியன் மரங்களுக்கான இயக்கம் தொடங்கப்பட்டது.   இலக்கு, இலட்சம் மரங்களை நடுதல்தாம்.  இந்த இயக்கத்தின் ஒரு சிறப்பம்சம் சிந்தூர் வனம்.  இந்த வனச் செயல்பாடு, ஆப்பரேசன் சிந்தூர் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

    சிந்தூரின் மரங்கள், தேசத்திற்காக தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அந்த இராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  இங்கே மேலும் ஒரு இயக்கத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது, அது தான் அன்னையின் பெயரில் ஒரு மரம்.  இதன்படி தேசம் நெடுக, கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டு விட்டன.  நீங்களும் உங்கள் கிராமத்திலோ, நகரத்திலோ நடைபெற்றுவரும் இப்படிப்பட்ட இயக்கத்தில் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.  மரம் நடுங்கள், நீரைச் சேமியுங்கள், பூமியின் சேவையில் ஈடுபடுங்கள், ஏனென்றால் நாம் இயற்கையைப் பாதுகாக்கும் போது, உண்மையில் நாம் நமது வருங்காலத் தலைமுறையினரையே பாதுகாக்கிறோம்.

    நண்பர்களே, மகாராஷ்டிரத்தின் ஒரு கிராமத்தில் மிக அருமையான எடுத்துக்காட்டு காணக் கிடைக்கிறது.  சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தின் ஒரு கிராமப் பஞ்சாயத்து தான் பாடோதா.  இது கார்பன் ந்யூட்ரல், அதாவது கரிக்காற்று உமிழ்வற்ற கிராமப்பஞ்சாயத்தாகும்.   இந்தக் கிராமத்தில் யாரும் தங்களுடைய வீட்டிற்கு வெளியே குப்பையைக் கொட்ட மாட்டார்கள்.  ஒவ்வொரு வீட்டின் குப்பைகளையும் ஒன்றுதிரட்டும் முழுமையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

    இங்கே கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.  சுத்திகரிக்கப்படாத எந்தவொரு நீரும் நதியில் கலக்க அனுமதிக்கப்படுவதில்லை.  வரட்டிகளைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, அந்தச் சாம்பலைக் கொண்டு காலஞ்சென்றவரின் பெயரில் ஒரு மரம் நடப்படுகிறது.  இந்தக் கிராமத்தில் தூய்மைப்பணி  பார்த்துப் பார்த்துச் செய்யப்படுகிறது.  சின்னச்சின்ன பழக்கங்கள் சமூக உறுதிப்பாடுகளாக மாறும்போது, பெரிய மாற்றங்கள் சாத்தியப்படுகின்றன.

    எனதருமை நாட்டுமக்களே, இப்போது அனைவரின் பார்வையும் சர்வதேச விண்வெளி மையத்தின் மீது நிலைபெற்றிருக்கிறது.  பாரதம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது.  நேற்று க்ரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா அவர்களோடு நான் உரையாடினேன்.  நீங்களும் சுபான்ஷுவுடனான என்னுடைய உரையாடலைக் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள்.  இப்போது சுபான்ஷு, மேலும் சில நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருப்பார்.  நாம் இந்தப் பயணத்தைப் பற்றி மேலும் உரையாடலாம் ஆனால், மனதின் குரலின் அடுத்த பகுதியில் தான்.

    இப்போது இந்தப் பகுதியில் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது.  ஆனால் நண்பர்களே, போகும் போக்கில் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளைப் பற்றி நினைவூட்ட விரும்புகிறேன்.  ஜூலை மாதம் முதல் தேதி அதாவது நாளை மறுநாள், நாம் இரண்டு மகத்துவம் வாய்ந்த தொழில்களுக்கு கௌரவத்தை அளிக்கிறோம், மருத்துவர்களுக்கும், பட்டயக் கணக்காயர்களுக்கும்.  இந்த இருவரும் சமூகத்தின் பெரிய தூண்கள், நமது வாழ்க்கையைச் சிறப்பாக்க உதவுபவர்கள்.  மருத்துவர்கள் நமது உடல் ஆரோக்கியத்தின் பாதுகாவலர்கள் என்றால், பட்டயக் கணக்காயர்கள் நமது பொருளாதார வாழ்க்கையின் பாதைகாட்டிகள்.  மருத்துவர்கள்-பட்டயக் கணக்காயர்கள் அனைவருக்கும் எனது ஏராளமான நல்வாழ்த்துகள்.

    நண்பர்களே, நான் எப்போதும் உங்களுடைய ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன்.  மனதின் குரலின் அடுத்த பகுதி உங்கள் அனைவரின் இந்த ஆலோசனைகளால் செறிவானதாகும்.  புதிய விஷயங்களோடு, புதிய உத்வேகங்களோடு, நாட்டுமக்களின் புதிய சாதனைகளோடு மீண்டும் சந்திப்போம்.  பலப்பல நன்றிகள், வணக்கம்.