December 6, 2025, 5:04 AM
24.9 C
Chennai

ப.சிதம்பரத்தை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை?

chidambaram arrested cbi officials - 2025

ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டதற்கு, உள்ளூர திமுக.,வினர் கொண்டாடி வருகின்றனர். சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கை மக்களோ எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. வேட்டி கட்டிய தமிழர்களோ, காங்கிரஸ் கரை வேட்டி தலைவர்களோ… அவரவர் வேலையில் பிஸி ஆகி விட்டனர்.

பிரதமர் ரேஞ்சுக்கு காங்கிரஸார் சிலரால் பேசப் பட்ட சிதம்பரத்தை இப்படி ஏன் யாருக்கும்  பிடிக்காமல் போனது..!?

காரணத்தை அடுக்குகிறார் பலர். அவற்றில் சில… சமூகத் தளங்களில் பரவலாக பகிரப் பட்டவற்றின் தொகுப்பாக…!

1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக் காரனுக்குக் கூட…

2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு!

3. நிதியமைச்சராக இருந்த போது ஊழல்கள் பலவற்றின் ஊற்றுக் கண்! கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்….

4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்…. மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்

5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87 வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர்… ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது.

6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது!

7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது!

8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது.

9. இவரது கடைசி நிதி அமைச்சர்  காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் குரூட் விலை $52-56

10. இவரது நேரடி இடைபடலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது.

11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி.

12. ஐயா அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர்.

13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்!
A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது!
B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்!
C. அடுத்த நாள் 14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்ணிக்கப் படுகிறது!
D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.
இப்போது புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா!

14. இந்திய ரூபாய் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது. ஏற்கனவே கள்ள நோட்டு அடிப்பவனுக்கு வாண்டனா உதவி செய்தது!

15. மும்பாய் தாக்குதல் போது யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யாதது! எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை!

16) அமெரிக்காவை காப்பியடித்து, அதே பெயரில், Counter Terrorism Centre ஏற்படுத்த முயன்று, ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்டது.

17) “எல்லைப் பாதுகாப்புப்படை” ( Border Security Force)/” ரயில்வே பாதுகாப்புப்படை” ( Railway Protection Force) சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, ,மாநில அரசுகளைக் கேட்காமலேயே, மாநிலங்களுக்குள் நுழைந்து, விசாரணை, கைது செய்யலாம் என திருத்தங்களைக் கொண்டு வந்தபோது, ஜெயல்லிதாவில் எதிர்க்கப்பட்டது.

18) ஸ்டெர்லைட் ஆலையின் கம்பெனியான வேதாந்தாவிற்கு, சட்ட ஆலோசகராக, பிறகு இயக்குனராக, இருந்து ஆதரித்தது. தான் நிதியமைச்சர் ஆனதும், மனைவி நளினியை வேதாந்தாவின் சட்ட ஆலோசகராக ஆக்கியது.

19) ” பச்சை வேட்டை” ( Green Hunt) என்ற பெயரில், இந்தியாவின் இதயமான சட்டீஸ்கர், ஜார்கண்ட், பிகார், ஒடிசா, பேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பெயரில், தான் “உள்துறை அமைச்சராக” இருக்கும் போது, ஆதிவாசிப் பழங்குடி மக்களை வேட்டையாடிய கொடுமை.

20) சிவகங்கையில் தோற்று விட்டு வென்றதாக மாற்றியதை, முல்வர் ஜெயல்லிதா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஊடகங்களுக்கி கூறியதால், அவரை பழிவாங்க எடுத்த வழக்கு, தண்டனை, வரை தொடர்ந்த போக்கு.

21) இந்தியாவிற்கு பட்ஜெட் போட்டது போல எங்களுக்கும் போட்டுக் கொடுங்கள் என்று கேட்ட ” செளதி அரேபிய அமெரிக்க சார்பு மன்னருக்கு” 90 ன் தொடக்கத்தில், பட்ஜெட் போட்டுக் கொடுத்து,
அதில் “இந்தியா மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடையாள அட்டைக்கு” 150 ரியால் இருந்ததை, 500 ரியாலாக ஏற்றி விட்ட கொடுமை செய்தவர்…

இப்படி இன்னும் பல…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories