
இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள், ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவும் தற்போது பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் இந்திய கடற்படை பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை கொச்சியில் பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், கேரளா முழுவதும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளார்.