முஸ்லீம்களுக்கான பிரச்சினை மட்டுமே என்றிருந்தால், காஷ்மீரில் 370யை நீக்கும்போதே மோடியின் தலையை துண்டாடியிருப்போம். அமித்ஷாவை அப்போதே கொன்றிருப்போம் என்று- தமுமுக கூட்டத்தில், திருச்சி மாணவரணி மாவட்ட செயலாளர் ஷரீப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக தளங்களில் கருத்துகள் பரவலாக எழுந்துள்ளன. இது போன்ற பேச்சுகள், இஸ்லாமிய சமூகத்தை வன்முறையாளர்களாகவே காட்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்தப் பேச்சுக்காக, பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி போலீஸில் புகார் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து குறிப்பிட்ட போது…
பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்வோம் என்று திருச்சியில் த ம மு க பொதுகூட்டத்தில் பேசப்பட்டது குறித்து தொடர்புடையவர்கள் மீதும்,அந்த இயக்கத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே, நிலுவையில் இருக்கும் எஸ்றா.சற்குணம் மீதான புகாரிலும் மேல்நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சில நாட்களாக இது போன்று பேசுவதை வழக்கமாக்கி கொண்டு வருகின்றனர் சிலர். இதை அலட்ச்சியப்படுத்தாது, கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமே சட்ட ஒழுங்கை பாதுகாக்கமுடியும். தமிழக அரசு இந்த தீய சக்திகளையும், பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கங்களையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியது தமிழக காவல் துறையின் பொறுப்பு. – என்று நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.