
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 6 மாத பெண் குழந்தையை கோயிலில் விட்டுச்சென்ற அவலம்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 6 மாத பெண் குழந்தையை பெற்றோர்கள் கோவிலில் விட்டுச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள காடையூர் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நேற்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்ததுள்ளது.
. இந்நிலையில் மாலையில் கோவிலின் அருகே உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து அந்த கோவிலில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்த ஓரு நபர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அந்த புதர் மறைவில் பிறந்த 6 மாதங்களே ஆன அழகிய பெண் குழந்தை ஒன்று பசியால் அழுது துடித்துக்கொண்டிருந்தது இதனை பார்த்த கோவில் துப்பரவு பணியாளா் அதிர்ந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து உடனே அருகில் இருந்த ஊர்பொது மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையை மீட்ட அந்த ஊர் பொதுமக்கள் குழந்தையின் பசியை தீர்த்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் குழந்தை பத்திரமாக குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் குழந்தையை யார் இங்கு விட்டுச்சென்றது? மற்றும் இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இசச்ம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.



