பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு.,!

Published:

u tube - 2026

ஸ்மார்ட் போன்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யூ டியூப் வீடியோக்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் வீடியோ கேம்களையும், வீடியோக்களையும் தான் பெரும்பாலும் காண்கிறார்கள்.

கார்ட்டூன் வீடியோக்களில் மருந்தை அப்படியே குடித்ததும் பெரும் பலசாலி ஆவதும், எதிரியைக் கத்தியால் தாக்குவது போன்ற காட்சிகளைக் காணும் குழந்தைகளின் ஆழ்மனதில் அவை பதிந்துவிடுகின்றன. அதிலும் ஆபாசம், வன்முறை போன்ற வீடியோக்கள் வருவதால் யூ டியூப் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற எதிர்ப்பு கிளம்பியது.

child 1 - 2026
file pic

இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு 13 வயது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக பலன் தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காகவே “யூ டியூப் கிட்ஸ்’ என்ற தனி செயலியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்தச் செயலிலும் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப தரம் பிரித்து வீடியோக்களைபக் காண்பிக்கத் தவறிவிட்டது. அதுமட்டுமின்றி வீடியோக்களைக் காணும் குழந்தைகளின் தரவுகள் சேகரித்து விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

child - 2026

இதன் அடுத்த கட்டமாக தற்போது https://www.youtube.com/kids/ என்ற தனி இணையதளத்தை யூ டியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வீடியோக்கள் என தனித்தனியாக பிரிவுகள் உள்ளன.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

குழந்தைகள் கண்ட வீடியோக்களின் தொகுப்புகளும் இதில் இடம் பெற்றிருக்கும். இந்த வீடியோக்களில் ஆபாசம், வன்முறை, பெரியவர்களின் செயல்பாடுகள் ஆகியவை இருக்காது என்று யூடியூப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

child 2 - 2026

மேலும் பாதுகாப்பான வகையில் இந்த இணையதளத்தைக் குழந்தைகள் பயன்படுத்த மேற்கொள்ள செய்ய வேண்டிய மாற்றங்களை பெற்றோர்கள் தெரிவிக்காலம் என யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்பதால், குழந்தைகளுக்கான பாதுகாப்பான விடியோக்கள் மட்டுமே இந்த இணையதளங்களில் உலவும் என்றும் உறுதியாகக் கூற முடியாது. பெரும்பாலும் குழந்தைகளிடம் போனை கொடுக்காமல் இருப்பது எல்லாவகையிலும் நன்மை தரும்.

Related articles

Recent articles

spot_img