
கர்நாடக மாநிலத்தில் காவல் நிலைய ஜெராக்ஸ் மிஷினுக்குள் பாம்பு இருந்தது காவல்துறை அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் வழக்கம்போல் தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல் நிலையத்திற்குள் ஒரு வினோத சத்தம் ஒன்று வந்து கொண்டே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று ஆராயத் தொடங்கினர். அப்போது அங்கிருக்கும் ஜெராக்ஸ் மிஷின் உள்ளிருந்து சத்தம் வருவது கண்டறிந்தனர். ஏதேனும் கோளாறு காரணமா என ஜெராக்ஸ் மிஷின் ஒவ்வொரு பகுதியையும் திறந்து பார்க்கும் பொழுது ஐந்தடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ஜெராக்ஸ் மிஷின் உள் இருந்தது.
அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் நபரான கிரண் என்பவரை அழைத்து வந்து ஜெராக்ஸ் மிஷின் உள் பாம்பு இருப்பதை கூறினர். இதையடுத்து குச்சி மற்றும் கம்பியின் உதவியுடன் பாம்பை ஜெராக்ஸ் மிஷின் இல் இருந்து வெளியில் எடுத்தார் கிரண் அதை அடுத்து பாம்பு வந்ததற்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் கூறினார்.
அதில் எலிகளைப் பிடிப்பதற்கு பாம்பு வந்திருக்கலாம் என்றும் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததன் காரணமாக மெஷினுக்குள் பாம்பு சென்று ஒளிந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.