
ரயிலில் பயணித்த பெண் பயணியிடமிருந்து நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு புறப்பட்டது.
அப்போது ரயில் என்ஜின் அருகே உள்ள பொதுபிரிவு பெட்டியில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஒரு பெண். அங்கு பயணியாக அமர்ந்திருந்த மர்ம ஆசாமி திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்தான்.

ரயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அவன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நகையை பறிகொடுத்த பெண் திருடன்.. திருடன் என சத்தம் போட்டார். ஆனால் ரயில் ஈரோட்டிலிருந்து வேகமாக சென்று விட்டது. ரயில் கோவை சென்றதும் அங்கு ரயில்வே காவல்துறையிடம் நகையை பறி கொடுத்த பெண் பயணி புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.