
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி காவல் நிலையம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கோவை சட்டக் கல்லூரிக்கு அருகே உள்ள ஆலமரத்தடி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு மூதாட்டியும் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருப்பதை பார்த்தார்.
உடனே அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் அந்த பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த விசாரணை நடத்தினா் அதில் அவர்கள் இருவரும் கோவை மருதமலை அடிவாரம், பாரதியார் யூனிவர்சிட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய மனைவி வீரம்மாள் (வயது 54), அவருடைய மகன் செல்வராஜ் (வயது 25), என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இன்று இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.



