பிரதமரின் முயற்சி! வேகமாய் முன்னேறிய இந்தியா! உலக வங்கி பாராட்டு!

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
World Bank 1 - 2026

உலகில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் 2020ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிட்டுள்ளது உலக வங்கி. இதில் இந்தியா 14 இடங்கள் தாண்டி 63வது இடத்திற்கு வந்துள்ளது.

உலக நாடுகளில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலை வருடா வருடம் உலக வங்கி வெளியிட்டு வருகிறது.

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது.

தற்போது 2020ம் ஆண்டிற்கான பட்டியலில் மேலும் 14 இடங்கள் தாண்டி 63வது இடத்தை பிடித்துள்ளது. பிரதமரின் அந்நிய முதலீட்டு ஈர்ப்பு, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களால்தான் இந்தியா இந்த உயர்வை அடைந்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும் இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா முதல் 50 நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Posts by Suprasanna Mahadevan:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =