
சென்னை பள்ளிக்கரணை சாலையில் இன்ஜினியரிங் பட்டதாரி சுபஸ்ரீ சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் உயிரந்தார். இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயகோபாலுக்கும் மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
ஆலந்தூர் நீதிமன்றம் சம்மன் பெற்று ஆஜரான பின், பள்ளிக்கரணை போலீஸில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேகநாதனைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.