
இன்று செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் கடைப்பிடிக்கப் பட்டது. இதனை முன்னிட்டு, மாநிலத்தில் பாஜக.,வினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 83வது நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாநில, மாவட்ட, மண்டல மற்றும் பாஜக., தொண்டர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று சமூக வலைத்தளங்களிலும் வ.உ.சி.,யின் நினைவு தினத்தை முன்னிட்டு, வ.உ.சி., குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, அன்னார் நினைவை இளையதலைமுறைக்கு எடுத்துக் கூறினர். அதில் ஒரு கருத்து…

சேகுவாராவை தெரிந்த தமிழனுக்கு வஉசிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினம் தெரியவில்லை ஏனோ?
இன்று அம்மகானின் நினைவு தினம் நாடு நினைவு கூர மறந்தவரை நாம் நினைவு கூர்வோம் !
சுதந்திர போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே #மறதமிழ்_சிங்கம் ! சிறையில் கல் உடைத்த ஒரே சுதந்திர #போர்_மறவன் !!
வேளாளன் சிறை புகுந்தான் எனபாரதியால் புகழப்பட்ட வெள்ளை உள்ள சொந்தகாரன் !!!
இந்தியாவில் முதலில் தொழிலாளிகளுக்காக கோரல் மில்லில் வேலைநிறுத்தம் செய்து முதல் #தொழிற்சங்கம்கண்டு சங்கம்முதலாளிக் கிடையே ஒப்பந்தம் போட்டவர் !!!
காந்திகணக்கு ! காந்தியால் பொருளாதார ரீதியில் ஏமாற்றப்பட்டு ( காந்தி கணக்கு என்று இன்று நாம் கூறுவதற்கு) அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுகொண்ட பொறுமைசாலி!
இறுதிக் காலத்தில் அரிசி விற்றும் மண்ணெண்ணெய் விற்றும் தன் வறுமையை விரட்ட போராடியவர்! இறக்கும் போதும் தான் வைத்திருந்த சில்லறை கடன்களை பட்டியலிட்டு அதை அடைப்பதற்கு உயில் எழுதிவைத்த #கண்ணியவான் !
செக்கை, மாடு போல் இழுத்த #செல்வந்தர்!!
விடுதலைப் போர் செய்து கொண்டே, இடைக்கால பிரிட்டிஷ் அரசில் முதன் மந்திரி “வ.உ.சி-ஜி” ஆகாதவர் !!
இந்த நாட்டு மக்களை நம்பி கப்பல் ஓட்டி கவிழ்ந்து போனவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை!
தேசத்துக்கு உழைத்தவர்களை அவர்களின் நினைவு தினத்திலாவது நினைவு கூர்வோம்



