
2000 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்யப் போகிறது என்று பயம் காட்டி மதுரையைச் சேர்ந்த 6 பேரிடம் 8.80 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூன்று பேரை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்
மதுரையை சேர்ந்த சௌந்தர பாண்டியன் உள்பட 6 பேரிடம் பெரம்பலூரை சேர்ந்த 3 பேர் 2000 ரூபாய் நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளது என்றும், அவற்றை 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் 500 ரூபாயாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளனர் .
இதையடுத்து மதுரையைச் சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 28.8 ரூபாயை 2000 ரூபாய் நோட்டுகளாக இரு கார்களில் எடுத்து வந்துள்ளனர்.
பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே காரை நிறுத்தி பணத்தை மாற்றித் தருவதாக கூறிய கும்பலுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர்
இரவு 11 மணிக்கு வெள்ளை பொலிரோ ஜீப்பில் பெரம்பலூரை சேர்ந்த மூவரும் அங்கு வந்துள்ளனர் உங்களிடம் உள்ள படத்தை பாருங்கள் பாலத்தின் மேற்பகுதியில் எங்களது காரில் பணம் உள்ளது. இந்த பணத்தை வைத்து அங்கிருந்து பணத்தை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
மதுரையை சேர்ந்தவர்கள் 78 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளனர். பணத்துடன் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவர்களின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணத்தை பறி கொடுத்தவர்கள் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் பணத்தை பறித்தது பெரம்பலூர் பாப்பா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
சுரேஷ் ஏற்கனவே ஆன்லைன் மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர் இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



