“எங்களை விட்டு போகாதீங்க டீச்சர்”: கதறிய மாணவிகள்!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
IMG 20191128 WA0006 - 2026

இப்படிப்பட்ட டீச்சரை யார்தான் போக விடுவார்கள்? “போகாதீங்க மேடம்!” மாணவ மாணவிகள் கண்ணீர்!

” மேடம்! எங்களை விட்டுப் போகாதீங்க!” என்று மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறினர். இறுதியில் வருத்தத்தோடு வழியனுப்பினர்.

சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் ‘சி.பண்டபல்லெ ஜட்பி’ உயர்நிலைப் பள்ளியில் தெலுங்கு பண்டிட்டாக டி.வேதவதி மூன்றாண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். தனக்கே உரித்தான சிறந்த செயல் முறை திட்டத்தின்படி பள்ளியில் பாடம் நடத்தி மாணவ மாணவிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அதுமட்டுமின்றி பள்ளிக்கு 6 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறை கட்ட ஏற்பாடு செய்தார். ஏழை பிள்ளைகளுக்கு புத்தகங்கள், சீருடை வாங்கித் தருவதோடு பொருளாதார உதவியும் செய்து வந்தார்.

செவ்வாய் அன்று நடந்த பணியிட மாற்றத்தில் அவர் பணி உயர்வில் விஜயபுரம் மண்டலத்திற்கு மாற்றப்பட்டார்.

தாம் பார்த்துவந்த பணியிலிருந்து விடுவிக்கப் பெறுவதற்காக புதன்கிழமை பள்ளிக்கூடம் சென்றார். அவர் வந்த செய்தியை அறிந்த மாணவிகள் அவரிடம் சென்று “நீங்கள் போக வேண்டாம் மேடம்!” என்று கண்ணீர் விட்டனர்.

அவர்களின் வருத்தத்தைக் கண்ட வேதவதி டீச்சரும் கண்ணீர் விட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.