
தமிழர்களின் தற்கால விருப்பத்திற்குரிய முக்கிய உணவாக இருக்கும் புரோட்டா தயாரிக்க, புரோட்டா பயிற்சி மையம் ஒன்றை மதுரையை சேர்ந்த ஒருவர் துவக்கி உள்ளார்.
மதுரையில் புரோட்டா கடைகள் மிகவும் புகழ்பெற்றது. சந்து பொந்தெல்லாம் அங்கு புரோட்டா கடை இருக்கும்.

எனவே புரோட்டா மாஸ்டர்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதை அறிந்த மதுரையைச் சேர்ந்த ஒருவர் புரோட்டா பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்
ஒரு மாதம் நடக்கும் இந்த பயிற்சி மையத்தில் சேர ரூபாய் ஆயிரம் பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

புரோட்டா மாஸ்டர் பணிக்கு ரூபாய் 1000 முதல் 2000 வரை தினசரி சம்பளம் கிடைப்பதால் மாதம் ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை மிக எளிதாக சம்பாதிக்கலாம் என்று பலர் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து புரோட்டா தயாரிக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்

இந்த பயிற்சி மையத்தில் சாதாரண புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகை புரோட்டாக்களும் தயாரிக்க ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி புரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ளும் சால்னா தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது
இந்த பயிற்சியில் சேர பட்டதாரி இளைஞர்கள் உட்பட பல இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது



