
தென்காசி மாவட்டம் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்யுமாறு காவல் துறை ஆய்வாளா் கோரிக்கை.! .
தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையில், சிகைதிருத்த தொழிலாளா்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தென்காசி நகர ஹோஸ்டைல் யூனியன் தலைவா் ராஜேந்திரன், நெல்லை மாவட்ட மருத்துவசவரம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட அவைத் தலைவா் சம்போ முருகன், நகரச் செயலா் சபாபதி,பொருளாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில்
காவல் ஆய்வாளா் ஆடிவேல் பேசியது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு சிகைதிருத்தம் செய்யும்போது நாகரிகமான முறையில் சிகைதிருத்தம் செய்ய வேண்டும்.
நவநாகரிகம் என்ற பெயரில் மோசமாக சிகைதிருத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், இதுகுறித்து அனைத்து சிகைதிருத்தும் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பி வைக்கப்படும்.
இளையதலைமுறையினரை நல்வழிப்படுத்தவும், ஒழுக்கமாக உருவாக்கவும் சிகைதிருத்தும் நிலையத்தினரும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
கூட்டத்தில் நகர நிர்வாகிகள் வேல்சாமி, அய்யப்பன், கார்த்திக், குருசாமி, மணி, துரை, செல்வராஜ், ஆறுமுகம், முருகன், அருணாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.



