
இங்கிலாந்து பெண்ணுக்கு இந்து மத வழக்கப்படி திருமணம் கடையநல்லூரில் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச்சார்ந்த இந்திரா உதிரமணி தம்பதியர் இவர்கள் தொழில் நிமித்தமாக தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர்.
இவர்களது மகன் ஸ்டாலின்நாகராஜ் பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரோடு அதே நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்த பார்பராப்ராக்ட்டெஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்

இது குறித்து தனது பெற்றோரிடம் தான் லண்டனைச் சார்ந்த பெண்ணை விரும்புவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது மகனின் ஆசையை நிறைவேற்ற அவர் விரும்பிய பெண்ணையே அவருக்கு மணமுடிக்க சம்மதிதுள்ளனா். பின்னா் இருவீட்டாரும் கலந்து பேசி திருமணம் நிச்சயமானது.
மும்பையில் குடியிருந்தாலும் உற்றார் உறவினர் நண்பர்கள் தமிழ்நாட்டில் சொந்த ஊரில் வைத்துக்கொள்ளலாம் என மணப்பெண்ணின் பெற்றோரிடம் பேசி அவர்களை சம்மதிக்க வைத்துள்ளனா்.
அதனை தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் உள்பட முப்பது பேர் கடையநல்லூர் வந்தனர் பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

திருமணத்தின் சிறப்பம்சமாக மணமக்கள் தமிழக மக்களின் பாரம்பரிய உடையான பட்டு சேலை பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தனர்.
திருமண மண்டபத்தில் இந்து மத வழக்கப்படி அக்னி சாட்சியாக மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி காலில் மெட்டி அணிவித்தார்.
பின்னர் மணமேடையை மூன்று முறை சுற்றி வந்து பெற்றோர் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர் வாதம் வாங்கினர்.

இங்கிலாந்து ஆண்கள் பெண்கள் குற்றாலஅருவியின் அழகை கண்டு கழித்தும் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் அழகைக்கண்டு வியந்து திருமண விருந்தையும் கண்டு மெய்சிலிர்த்தனர்.

திருமணம் என்றால் இவ்வளவு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெறுமா? என்றும் உலகிற்கு ஆன்மீக குருவாக இருந்து வரும் இந்து மதம் குறித்து நாங்கள் கேள்வி பட்ட நிகழ்வுகளை இன்று நேரில் கண்டு வியப்படைகிறோம்.
இந்த திருமணம் எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை தந்துள்ளது.
மேலும் இந்திய பண்பாடு கலாச்சாரம், தமிழர்கள் பழக்க வழக்கங்கள் எங்களை மிகவும் ஆச்சரிய பட வைத்துள்ளது.
இந்த நிகழ்வை நாங்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம் என கூறினா்.



