
பெண்ணை தாக்கி அத்துமீற முயன்றவர்களை காவலன் செயலி மூலம் கைது செய்த போலீசார்
பொதுமக்கள் பாராட்டு.!
பெண் ஒருவரை தாக்கி,வீட்டுக்குள், அத்துமீற முயன்றவர்களை, காவலன் செயலி உதவியோடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் அனிதா சுரானா.
இவர் வீட்டில் இருந்த போது இருவர் வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளதாக கூறியுள்ளனர் .
அனிதாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே , அவர்கள் அனிதாவை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர்
வீட்டிற்குள் இருந்த அனிதாவின் மாமியாரான ப்ரீத்தி, ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்த காவலன் செயலியை உபயோகித்து , காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சில நிமிடங்களிலேயே, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ்காரர்கள் , அனிதாவிடம் பிரச்சணை செய்து கொண்டிருந்த இரு நபர்களையு,ம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாரின் அதிரடியாக செயல்பட்ட காவல் துறைக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனா்.



