2ஜி வழக்கில் தண்டனை கோரி… கனிமொழி வீட்டு முன் கோலப் போராட்டம்!

Published:

kolam bjp3 - 2026

2G வழக்கில் கனிமொழிக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரி அவர் வீட்டு முன் கோலம் போடும் போராட்டம் நடத்தப் படவுள்ளதாக பாஜக.,வினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு போட்டிப் போராட்டங்களின் ஒரு பகுதியாக இப்போது கோலப் போட்டியும் போராட்டமும் தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. அதனை திமுக.,வினர் தொடங்கி வைத்துள்ளனர்.

திமுக.,வினருக்கு எதிரான அரசியல் பிரசாரத்தை கோலங்களின் வழியே, அவரவர் வீட்டு முன்னர் கோலங்களை வரைந்து வெளிப்படுத்த பாஜக.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது திமுக., மேற்கொண்ட கோலப் பிரசாரத்தை அடுத்து, திமுக.,வுக்கு எதிரான கோல பிரசாரத்தை பாஜக., தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2ஜி வழக்கில் விரைந்து விசாரணை செய்து கனிமொழி மீது நடவடிக்கை கோரி அவர் வீட்டின் முன் கோலம் வரையும் போராட்டத்தை பாஜக., மேற்கொண்டிருக்கிறது.

முன்னதாக, ஜனநாயக நாட்டில் கோலம் போடுவதில் உரிமை இல்லையா என்று கனிமொழி கேட்டிருந்தார் என்பதும், எனவே, மார்கழி மாதத்தில், தங்களுக்கும் கோலம் போட உரிமை உள்ளது என்றும் பாஜக.,வினர் கூறி வருகின்றனர்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இதை அடுத்து, வரும் நாள்: 31-12-19 அதாவது நாளை, இடம் : சி ஐ டி காலனி முதல் மெயின் ரோடு. நேரம்: காலை 1000 முதல் மாலை 0500 வரை. என்று சொல்லி, முற்றிலும் அமைதியாகவும் அற வழியிலும் கனிமொழி வீட்டின் முன்னே கோலம் மட்டும் போடப்படும். அனைவரும் வந்து ஆதரவளிக்கவும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர் பாஜக.,வினர்.

2G வழக்கில் கனிமொழிக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரி அவர் வீட்டு முன் கோலம் போடும் போராட்டம்.

நாள்: 31-12-19.
இடம் : சி ஐ டி காலனி முதல் மெயின் ரோடு.
நேரம்: காலை 1000 முதல் மாலை 0500 வரை.

முற்றிலும் அமைதியாகவும் அற வழியிலும் கனிமொழி வீட்டின் முன்னே கோலம் மட்டும் போடப்படும்.

அனைவரும் வந்து ஆதரவளிக்கவும்

Related articles

Recent articles

spot_img