பகீர் தகவல்… எஸ்.எஸ்.ஐ வில்சன் அந்த பயங்கரவாதிகளை ஏன் தடுத்தார் தெரியுமா?!

Published:

kalikavalai - 2026

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

வில்சன் ஏன் அந்த பயங்கரவாதிகளை தடுக்க முற்பட்டார்? சாதாரணமாக தடுத்ததற்காக ஒரு காவலரை இவ்வாறு துப்பாக்கியால் சுடுவார்களா?

அப்படி என்றால் ஏதோ மர்மம் இருக்கிறது என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன!

இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஏன் அந்த பயங்கரவாதிகளை தடுத்தார் என்ற பின்னணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது ஆயுதங்களை கடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்துள்ளனர். இது வில்சனுக்கு தெரியவந்துள்ளது.

கடமை தவறாத காவலராக, இஸ்லாமிய மத வெறி பிடித்த பயங்கரவாதிகளை, சோதனைச் சாவடியில் வில்சன் தடுத்துள்ளார். இதனால், பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், உடனே அவர்கள் அருகில் இருந்த மசூதி கட்டடத்தை நோக்கியே ஓடி தப்பிக்க முயன்றுள்ளனர். மசூதி கட்டடத்துக்குள் பதுங்கி அங்கிருந்து வேறு ஏதோ வழியில் அவர்கள் தப்பித்துள்ளதால், அந்த மசூதிக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

மேலும், அவர்கள் வந்த வாகனம் என்ன ஆனது? அப்போது ஆயுதங்களை கடத்தினார்களா? வில்சன் எதைக் கண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனை போட்டார்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப் பட்டு வருகின்றன.

ssi shotmurder - 2026

தமிழகத்தில் எங்கும் இல்லாத வேலையாக தென் மாவட்டங்களில் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்கள், கட்சிகள் பெயரில், பொதுமக்களுக்கான ஆம்புலன்ஸ் என்ற பெயர்களில், போலீஸாரின் கண்காணிப்பில் இருந்தும், சோதனைகளில் இருந்தும் தப்பிக்க பயன்படுத்தி வருகிறார்களோ என்ற சந்தேகத்தை அண்மைக் கால நடவடிக்கைகளைக் கண்டு இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எழுப்பி வருகின்றனர்.

தற்போது, கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிடிபட்டு, பெங்களூருல் வைக்கப்பட்ட தெளபிக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடியரசு தினத்தன்று தில்லி மற்றும் குஜராத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 17 பேர் அடங்கிய குழுவுடன் மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அவர்களிடம் நடத்திய விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.

இவ்வாறு தாக்குதல் நடத்த அமைக்கப் பட்ட 17 பேரில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதால், தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

வழக்கம் போல், இத்தனை ஆண்டு காலம் பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி பயங்கரவாத கட்சியாகவே மாறிக் கொண்டிருக்கும் திமுக., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், வேல்முருகன் போன்றவர்கள் இனி தமிழக மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக தமீம் அன்சாரி போன்றவர்கள், மார்க்க பெயரைப் பயன்படுத்தாமல் தமிழன், தமிழ் உணர்வு ஆகிய பெயர்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்த ஆடியோ இதற்கு சான்று!

தமிழகத்தில் வெகு காலமாகவே ஜிஹாதி மார்க்கக் கொலைகளை பயங்கரவாதிகள் ஒரு புறம் நடத்திக் கொண்டிருக்க, அவர்களைப் பாதுகாக்க இது போன்ற அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர்களாக வைத்திருக்க, திமுக., போன்ற கட்சிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்க, ஊடகங்கள் அவர்களுக்கும் ஆதரவாக வாய் மூடி மௌனிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… தமிழகம் இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

Related articles

Recent articles

spot_img