பா.ஜ., அரசின், ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி செங்கோட்டையில் பா.ஜ., இளைஞர் அணி சார்பில், மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
பா.ஜ., அரசின், ஐந்து ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பா.ஜ., இளைஞர் அணி, அனைத்து மாவட்டங்களிலும், ஒரே நாளில், மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்தது.
அதன்படி, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க , இளைஞர் அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே நடந்த இந்த பேரணியை நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வலம் வந்து பண்பொழி, வடகரை வழியாக கடையநல்லூர் சென்றடைந்தது.
இதில் பாஜக தலைவர் மாரியப்பன், வாசன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மாசானம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



