ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! சோதனையில் சிக்கிய செல்போன்கள்!

kiran - 2026

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சிறையிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக சிறைச்சாலையில் நடத்திய அதிரடி சோதனையில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மிரட்டியதாக சிறையிலுள்ள தில்லி நபர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (ஜன.20) மதியம் 1 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய நபர், புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். உடனடியாக இத்தகவல் பெரியகடை, ஒதியஞ்சாலை காவல்துறையினர்க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியகடை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு ஆளுநர் கிரண்பேடியும் இருந்தார். ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. காவல்துறையினர் ஆளுநர் மாளிகை முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதேபோல் ரயில் நிலையத்திலும் ஒதியஞ்சாலை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. ஆனால், இதிலும் எதுவும் சிக்கவில்லை.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

அதேசமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

தமிழக காவல்துறையின் தகவலின் அடிப்படையில் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இருந்து அழைப்பு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி கார் திருட்டு வழக்கில் பெரியகடை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லியைச் சேர்ந்த நித்தீஸ் சர்மா (33) என்பவர் தான் செல்போன் மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரிந்தது.

இவர் ஆளுநர் மாளிகை மட்டுமின்றி, தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் காலாப்பட்டு சிறையில் காவலர்கள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள், சார்ஜர்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories