
திருச்சியில் தலைவிரித்தாடும் பயங்கரவாதம்..! திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.
பாஜக., பகுதி செயலராக இருந்த விஜயரகு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார் என்றும், பிட் நோட்டீஸ் கொடுத்தார் என்றும் கூறப்பட்டு, அதனால் அவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், போலீஸாரோ விஜயரகுவின் மகளை ஒருதலையாகக் காதலித்து வந்த முகமது பாபு என்ற மிட்டாய் பாபுவை அவர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்து அவரை தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றதாக போலீஸார் கூறியுள்ளனர் சிஏஏ.,வுக்கு ஆதரவான போராட்டத்தால் கொலை என்று சொல்வதைக் காட்டிலும், லவ்ஜிஹாத்-க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை என்ற போலீசாரின் காரணம், தமிழகமும் கேரளத்தைப் போல் மாறிவிட்டதையே காட்டுகிறது.
இதனை பிரதிபலித்து சமூக வலைத்தளங்களில் வரும் கருத்து…
விஜய ரகு …. திருச்சி பாஜக மண்டல செயலாளர் இவரது மகளை ஒருதலையாக முகமது பாபு என்ற மிட்டாய் பாபு காதலித்தானாம்.. ரகுவின் மகளை ரோட்டில் வழிமறித்து தகறாறு செய்தானாம் இதை ரகு தட்டிக்கேட்டு போலீசில் புகார் செய்தாராம் இதனால் ஆத்திரம் அடைந்த முகமது பாபு ரகுவை வெட்டிக் கொன்றான் . எனவே இது தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலை என்கிறது திருச்சி போலீஸ் வட்டாரம்…
சரி இவர்கள் சொல்லும் காரணம் உண்மையாக இருந்தாலும் கூட… என்ன அநியாயம்? இதுவே இந்து ஒருவன் முஸ்லீம் பெண்ணை காதலித்து முஸ்லீம் பெண்ணின் தந்தையை கொலை செய்திருந்தால் முஸ்லீம் சமுதாயம் அமைதியாக இருந்திருக்குமா..?
இந்து பெண்களின் வயிற்றில் முஸ்லீம் கரு வளர வேண்டும் என்பதற்காக லவ் ஜிகாத் என்ற பெயரில் தனி இயக்கமே நடத்துவார்கள். இந்து பெண்களை துரத்தி துரத்தி காதலிப் பார்கள், தட்டிக்கேட்டால் வெட்டிக் கொள்வார்கள். இது தனிப்பட்ட கொலையாம், வெட்கமா இல்லை இதை வெளியிலே சொல்ல..!
கையாலாக தனத்தை மறைக்க என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள். தனது சக போலீஸ் வில்சனை சுட்டுக் கொல்லப்பட்டதையே சாதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள் இதை மட்டும் சீரியசாக எடுத்துக்கொள்வார்களா என்ன..?
இந்துக்கள் நாம் தான் இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் நமது வீட்டிலும் பெண் பிள்ளைகள் வளர்கின்றனர்….. – என்று காட்டமாகப் பதிவிடுகிறார்கள்.
இதனிடையே, கொலைக்கான காரணம் எதுவாயிருப்பினும் போலீஸாரின் உறுதியான நடவடிக்கையே பொதுமக்களுக்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீதான அச்சத்தை ஓரளவாவது சரி செய்யும் என்கிறார் பாஜக, தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் … குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்த, அ.தி.மு.க., – எம்.பி., ரவீந்திரநாத் குமாரின் கார், சமீபத்தில் முஸ்லிம்களால் தாக்கப்பட்டது. அதேபோல், திருச்சி பாலக்கரை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, தீவிரமாக செயல்பட்ட, பா.ஜ., பகுதி செயலர் ரகு, வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவை, வன்மையாக கண்டிக்கத் தக்கவை. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.



