December 6, 2025, 4:27 AM
24.9 C
Chennai

இண்டேன் எல்பி.ஜி வாடிக்கையாளர் கவனத்திற்கு….!

indian oil - 2025

இண்டேன் எல்பிஜி வாடிக்கையாளர்கள் நலன்கருதி டிஜிட்டல் பேமென்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இண்டேன் விநியோகஸ்தர்கள், இண்டேன் எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வந்து வழங்குகின்றனர்.

சிலிண்டர் ஒப்படைத்த உடன் வாடிக்கையாளர் கையொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியதாகும்.

இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமென்ட் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் ஐவிஆர்எஸ் மூலம் சிலிண்டர் பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு மெசேஜ் மூலமாக ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் (htpp://payit.cc/L1xxxxxx) அனுப்பி வைக்கப்படும்.

இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள், கேஷ் மெமோவில் குறிப்பிட்டுள்ள தொகையை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ- வாலெட் உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்லைன் பேமென்ட் செய்யலாம்.

இந்த வழிமுறையில் சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

gas 3 - 2025

முதலில் குறிப்பிடப்பட்ட வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாவிட்டால் டெலிவரி பணியாளரை, தங்களிடம் சிலிண்டர் ஒப்படைக்கும் போது டிஜிட்டல் பேமென்ட் பெறும்படி வலியுறுத்தலாம்.

அவர்களை பேமென்ட் பெறும் கருவியை கொண்டு வருமாறு கூறலாம். அந்த கருவியை கொண்டு நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ- வாலெட், பிஎச்ஐஎம், யூபிஐ, கூகுள் பேமென்ட், பேடிம் ஆகியவை மூலமாக பில் தொகையை செலுத்தலாம். பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக் கொள்ளலாம்.

சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் அனுப்பி வைக்கப்பட்டது குறித்து மெசேஜ் அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் சேவை குறித்து கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் நன்றாக சீலிடப்பட்டுள்ளது,

சிலிண்டர் எடை பற்றி சோதித்து காண்பிக்கப்பட்டது, சிலிண்டர் கசிவு உள்ளதா என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது, கேஷ் மெமோவில் உள்ளபடி சிலிண்டர் கட்டணம் வாங்கப்பட்டது, உள்பட ஒட்டு மொத்தமான வாடிக்கையாளர்களின் அனுபவம் பற்றி ரேட்டிங் செய்து சமர்பிக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் நிறுவனம், டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. ஏதேனும் விசாரணைகளுக்கும் வழி காட்டுதலுக்கும் கீழ்க்காணும் வாடிக்கையாளர்களுக்கான சேவை எண்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.15 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை-044 24339235, 24339236, மதுரை-0452 2533956 திருச்சி- 0431 2740066, 2740880, கோவை- 0422 2247396, 2240696 எல்பிஜி குறித்த அவசர சேவை குறித்து 1906 என்ற எண்ணில் 24 மணி நேர சேவையை அணுகலாம். இண்டேன் குறித்த புகார்களுக்கு 1800-2333-555 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories