தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளன்று ப்ளக்சி கட்டவுட் வைத்த அமைச்சர் தலசானி ஶ்ரீனிவாசுக்கு ஜிஹெச்எம்சி அபராதம் விதித்தது.
தெலங்காணா அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவுக்கு ஜிஹெச்எம்சி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அனுமதியின்றி ப்ளக்சியை ஏற்பாடு செய்ததால் அவருக்கு அபராதம் விதித்தது.
பிப்ரவரி 17 முதலமைச்சர் பிறந்த நாள் ஆனதால் வி லவ் கேசிஆர் என்று அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் பெயரில் ஹைதராபாத் நகரத்தில் பல இடங்களில் மிகப் பெரிய கட் அவுட்டுகள் ஏற்பாடு செய்தார்.
ஆனால் இந்த ப்ளக்சிகளுக்கு அனுமதி இல்லாததால் அதிகாரிகள் அபராதம் விதித்தார்கள். ரூ ஐந்தாயிரம் கட்டும்படி அமைச்சர் தலசானிக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.
கேசிஆர் பிறந்தநாளுக்காக ஐமாக்ஸ் அருகில் நாற்கூடலியில் ஜிஹெச்எம்சி கண்காணிப்பில் உள்ள பூங்காவில் ப்ளெக்சி ஏற்பாடு செய்தார். இதில் செடிகள் நடும்படியும் கூட அழைப்பு விடுத்தார். ஆனால் இதற்கு ஜிஹெச்ஏம்சியின் அனுமதி இல்லாததால் அதிகாரிகள் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினார்கள்.
அனுமதியில்லாமல் ஏற்பாடு செய்யும் ப்ளெக்சிகள், பேனர்கள், கட்அவுட்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே முநிசிபல், ஐடி அமைச்சர் கேடிஆர் அதிகாரிளுக்கு கட்டளையிட்டுள்ளார். இதுவரையிலேயே அவ்வாறு அனுமதி இல்லாத ப்ளக்சிகள், கடவுட்கள் ஏற்பாடு செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளார்கள்.
இந்த அபராதங்களை ஏற்றவர்கள் அதிகமாக அதிகாரத்தி லிருக்கும் ஆர்எஸ் கட்சி தலைவர்களாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் புதிதாக அமைச்சருக்கே ஜிஹெச்எம்சி அதிகாரிகள் அபராதம் விதித்தது டிஆர்எஸ் கட்சிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆச்சரியத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேசிஆர் அரசாங்கத்தில் அனைவரும் சமம் என்று மற்றுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். டிஆர்எஸ் கட்சி தலைவரும் தெலங்காணா முதல்வருமான கேசிஆர் பிப்ரவரி 17 அன்று 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன் பிறந்த நாளன்று ப்ளக்ஸி, பொக்கேவுக்கு பதில் செடிகளை நடும்படி கேசிஆர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.