அடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..! கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து நீக்கிட்டாய்ங்கன்னாலும்..!?

vathrayiruppu incident - 2026

வெளி உலகத்திற்கு அதிகம் வராத அதிர்ச்சி சம்பவம் இது! ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்றாயிருப்பு வட்டத்தின் அருகே உள்ளது தான் ரெங்கபாளையம் காலணி (சதுரகிரிக்கு செல்லும் பாதை) இங்கிருந்த கிழட்டு ஓநாய்கள் 5 பேர் செய்த காரியம் தான் வாயிலேயும், அச்சிலேயும் ஏற்ற முடியாதது!

இந்தக் காலணியைச்சார்ந்த வெள்ளைச்சாமி, திருவன், கணேசன், இரணியவீரன், இராதாகிருஷ்ணன் என் இந்த ஐந்து கிழட்டு ஓநாய்கள் செய்த காரியம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது!

இந்த ஐந்து கிழட்டு ஓநாய்களும் அங்குள்ள இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அழைத்து தினசரி முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் கடந்த மூன்று மாதமாக! அதுவும் எப்படி தெரியுமா??!! அந்த குழந்தைகளின் வாயிலே இவர்களின் ஆணுறுப்பை திணித்து வாய்வழி பாலுறவு எனப்படும் கீழ்த்தரமான செய்கைகளை செய்துள்ளனர்!

அதுவும் அந்த அப்பாவி குழந்தைகளை அழைத்து அவர்களிடத்தில் அழைபேசியில் உள்ள ஆபாச வீடியோக்களை காண்பித்து இது மாதிரி செய் என வற்புறுத்தி உள்ளனர்! சரியாக அந்தக் குழந்தைகள் செய்யா விட்டால் அந்தக் குழந்தைகளை தலையில் கொட்டு வைத்தும், கன்னத்தில் அடித்தும் கொடுமைப் படுத்தி உள்ளனர்!

இதை எல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என இந்தக் குழந்தைகளிடம் மிரட்டல் வேறு! நாளடைவில் இந்தக் குழந்தைகள்‌‌ மட்டும் உடல் மெலிந்தும், சரியாக சாப்பிடாமலும், மனநிலை பாதித்தவாறும் இருந்ததைக் கண்டுபிடித்த பள்ளி ஆசிரியை திருமதி பழனியம்மாள், குழந்தைகளிடம் விசாரித்த போது வாய் வலி எடுப்பதாகவும், வயிற்று வலி எடுப்பதாகவும் கூற… அவர்களிடம் என்ன நடந்தது என்று துருவித் துருவிக் கேட்டு, நடந்ததை அறிந்துள்ளார் இந்த ஆசிரியர்!

vathrayiruppu incident1 - 2026

குழந்தைகள் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக இந்த விஷயத்தை வெளிக்கொண்ட வந்தார். அதன் பின்னர் தான் இந்தக் கொடூரமே வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது! இதன்பின்னரே அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கே தெரிய வந்துள்ளது! அதனை அடுத்து குழந்தைகளை மருத்துமனைக்கு அனுப்பிய பின்னர், காவல்துறை இந்த ஐந்து கிழட்டு ஓநாய்களையும் கைது செய்து போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது!

இதில் ஒரு கிழடன் பெண்ணிய, குழந்தை பாதுகாப்பு போராளி எனக் கூவும் #வெள்ளைச்சாமி என்பவன். இவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வத்றாயிருப்பு தாலுகா விவசாய அணி செயலாளர்! இதில் மிகப்பெரிய கொடுமை‌‌ என்ன என்றால் ஐந்து கிழட்டு நாட்களில் ஒருவனுக்கு எய்ட்ஸ் நோய்(?!) இருப்பதாகவும் கூறப்படுவதுதான்!

இந்த விவகாரம் நாளிதழ்களில் வெளியான நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராயிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, குழந்தைகளை பெற்றோர் வெகு கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வும் பரவியது. வழக்கம் போல், குழுந்தைகளுக்கு குட் டச் (Good touch) பேட் ட்ச் (Bad Touch) என்ன என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும், குழுந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்கள்… என்றெல்லாம் வழக்கம் போல் அறிவுரைகள். மேலும், குழந்தைகள்‌ இந்த தேசத்தின்‌ வருங்கால தூண்கள் என்பதை மறந்து விட வேண்டாம் எனவே, குழந்தைகள் விவகாரத்தில் கவனம் தேவை என்று பலரும் சமூகத் தளங்களிலும் பகிர்ந்து கொண்டனர்.

04 Sep10 Child abuse - 2026

இவ்வாறு தகவல்கள் பரவிய நிலையில், போக்சோவில் கைதான நபர் கட்சியில் இருந்து விடுவிக்கப் பட்டதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் அறிவித்தார்.

வத்திராயிருப்பில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்து கைதான சிபிஎம் உறுப்பினரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி இருப்பதாக மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வத்திராயிருப்பு ஒன்றியம் ரெங்கா பாளையத்தில் ஒரு சிறுவன் இரு சிறுமிகளை தொடர்ந்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, கணேசன், ரணவீரன், திருவன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போக்சோ சட்டத்திலும் மேலும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் கடுமையான சட்டத்தின் கீழும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோருக்கு பாதுகாப்பு உடல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள் அளிக்க வேண்டும்! மாவட்டத்தில் கொங்கலாபுரம் சிறுமியை வன்முறை செய்து கொலை செய்துள்ளனர்~ தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது!

பாலியல் குற்றங்களுக்கு டாஸ்மாக் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனையை காரணம்! போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க வேண்டும்! குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே வத்திராயிருப்பு பாலியல் வழக்கில் கைதான சிபிஎம் ரெங்கபாளையம் கிளை உறுப்பினர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி சமூக விரோத செயலில் ஈடுபட்டதாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்று தெரிவித்தார்.

என்னதான் கட்சியின் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டாலும், மாட்டிக் கொண்ட பின்னர் வெறுமனே பதவியை விட்டு நீக்கி விட்டால் மட்டும், கட்சியின் பதவியை வைத்து செய்த குற்றங்கள் சரியாகிவிடுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories