
திருமலையில் கரோனா பாதிப்பினால் அவசரத் தீர்மானங்கள்.
மார்ச் 19 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகாயாகம் நடத்துவதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்கம் திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மீது கூட விழுந்துள்ளது.
திருமலையில் வசந்தோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் பிரத்தியேக பூஜைகள் தற்காலிகமாக ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.
சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் கூட தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் காத்திருப்பது அவசியம் இல்லாமல் தரிசனம் ஏற்படுத்தித்தர வேண்டுமென்று டிடிடி தீர்மானித்துள்ளது.
டோக்கன் வழிமுறைப்படி ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்படுத்தித் தர ஏற்பாடு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் டோக்கன் எடுத்துக் கொண்ட பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்பாடு இருக்கும்.
கரோனா நிவாரணத்திற்காக தன்வந்திரி யாகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். மார்ச் 19 முதல் மார்ச் 21ம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகா யாகம் நடத்தப்படுகிறது.
அதேபோல் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒன்டிமிட்ட சீதாராம ஆலயத்தில் சீதாராம கல்யாணத்தைக் கூட திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக மும்பையில் உள்ள ஸ்ரீவாரு ஆலய நிர்மாண பூமி பூஜையை ஒத்திவைத்துள்ளது.
விசேஷ பூஜை, சஹஸ்ர தீபாலங்கரண சேவை, வசந்தோற்சவம் சேவைகளுக்கு முன்பாக புக் செய்து கொண்ட பக்தர்களுக்கு தேதியை மாற்றி தருவதற்கு வாய்ப்பு அல்லது பிரேக் தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு டிடிடி ஏற்படுத்தி தருகிறது.
கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பின்னணியில் அதிகம் பேர் ஒரே இடத்தில் குழுமி இருப்பது நல்லதல்ல என்பதால் இது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி டி டி டி ஈஓ அனில்குமார் சிங்கால் விவரங்களை தெரிவித்தார்.
இந்தியாவிலும் மாநிலத்திலும் வைரசின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வைரஸ் பரவுவதை நிரந்தரமான தடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடுவது நல்லதல்ல. இதனால் விரைவில் வைரஸ் பரவும். திருமலையில் செக்டார் செக்டாராகப் பிரித்து சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அறைகளை காலி செய்த உடனே முழுவதாக சுத்தம் செய்த பின்பே மற்றொருவருக்கு ஒதுக்குகிறோம். சந்தேகத்துக்கிடமானவர்களை அலிபிரி நடைபாதையில் அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம்.
கரோனா வைரஸ் தாக்குதலினால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு சேர்ந்திருப்பது நல்லதல்ல. அதனால் ஒன்டிமிட்ட சீதாராம கல்யாணம் ரத்து செய்து லைவ் வழியாக கல்யாணம் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம்.
செவ்வாய்க் கிழமையிலிருந்து டிடிடி ஏற்பாடு செய்த சமயத்தில் மாத்திரமே தரிசனத்திற்கு வரவேண்டும். பக்தர்கள் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



