லாக் டவுனில் ஊருக்கு போகணும்னு… பால் கேனுக்குள் பயணித்த மாணவர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
students cautght travelling inside milk tanker - 2026

கரோனா வைரஸ் லாக்டௌனால் மக்கள் பயணிப்பது ஸ்தம்பித்து உள்ளது. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் படும் கஷ்டங்கள் அத்தனை இத்தனை என்று கூற இயலாது. எவ்வளவோ சிரமப்பட்டு மாநில எல்லை வரை சென்றாலும் கூட அங்கு குவாரண்டினில் சேர்த்து விடுகிறார்கள்.

அதனால் ஆந்திரப் பிரதேச மாணவர்களுக்கு ஒரு ஐடியா வந்தது. அதற்காக பால் வேன் டிரைவரின் உதவியை நாடினார்கள். பால் டாங்கில் அமர்ந்து கொண்டு எல்லையைத் தாண்டி விட வேண்டும் என்று முயற்சித்தவர்களுக்கு போலீசார்கள் எதிர்ப்பட்டார்கள்.

லாக்டௌன் சமயத்தில் தெலங்காணாவில் இருந்து ஆந்திரப் பிரதேஷ் செல்வதற்கு முயற்சித்த மூன்று மாணவர்கள் போலீசாரிடம் சிக்கினார்கள்.
ஹைதராபாத்திலிருந்து பிரகாசம் மாவட்டம் சிங்கராயகொண்டக்குச் சென்ற பால் வேனை மியாலரிகுடாவில் நிறுத்தி மாணவர்கள் அதன் காலி டாங்கில் பதுங்கி அமர்ந்தார்கள்.

காரெஞ்செடு என்ற இடத்தை நோக்கி செல்லும்போது நடுவில் பொந்துகுல என்ற இடத்தில் செக்போஸ்ட் அருகில் வாகனங்களை சோதனையிட்ட ஸ்பெஷல் பார்ட்டி போலீசார் அவர்களை கைது செய்தார்கள். பால் வேன் டிரைவருக்கு பணம் கொடுத்து மாணவர்கள் பிரயாணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.